http://i66.tinypic.com/29zeo7b.jpg
Printable View
http://i63.tinypic.com/200wrx3.jpg
From the face-book of Janaki Muthaiyan. - Thanks for the Rare Image.
ஆலயங்களில் மக்கள் மனப்பூர்வமாக கடவுளை நினைக்கிறதில்லை. ஆஸ்பத்திரியிலேதான் நினைக்கிறாங்க...”
எவ்வளவு அரிய உண்மை...!
அனுபவபூர்வமாக உணர்ந்த ஒருவர்தான் இதை கூறியிருக்க முடியும்...!
ஆம்...சொன்னவர் எம்.ஜி.ஆர்.!
சொன்னது...விஜயா ஹாஸ்பிடல் உரிமையாளர் நாகிரெட்டியிடம் ..!
இதோ..எம்.ஜி.ஆரை சந்தித்தது பற்றி நாகிரெட்டி சொன்ன வார்த்தைகள் :
“அமெரிக்கா சென்று திரும்பிய எம். ஜி. ஆரை , நான் அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
அப்போது அவர் என்னிடத்தில், "உலகத்துலே பிறந்தோம்... இருந்தோம்.... இறந்தோம் என்று இல்லாமல் எப்போதும் நிலைத்து இருக்கும்படியாக ஏதாவது செய்ய வேண்டும்... நான் எத்தனையோ ஆஸ்பத்திரிகளுக்குப் போயிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஓர் உண்மை தெரிந்தது. ஆலயங்களில் மக்கள் மனப்பூர்வமாக கடவுளை நினைக்கிறதில்லை. ஆஸ்பத்திரியிலேதான் நினைக்கிறாங்க...
ரெட்டியார்... அமெரிக்காவில் நான் பெற்ற சிகிச்சை...மறக்க முடியாதது. வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. நான் முதலமைச்சராக இருந்ததால் அப்படிப்பட்ட சிகிச்சையைப் பெற முடிந்தது. ஆனால் சாதாரண மனிதர்களுக்கும் அந்த சிகிச்சை தேவைப்படும்போது என்ன செய்வது?
அதனால், நீங்கள் ஒரு ஹெல்த் சென்டர் கட்டுங்கள். ஆஸ்பத்திரி மாதிரி இல்லாமல் ஒரு ஹெல்த் ரிசார்ட் மாதிரி வேண்டும். எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர்...”
# ஆஹா...ஐடியா கொடுப்பது பெரிதல்ல..! அதற்கேற்ற பணமும் தருகிறேன் என்று சொல்கிறாரே ..அதுவல்லவா பெரிது..?
சரி..எத்தனை லட்சங்கள் கேட்டார் நாகிரெட்டி..?
அதையும் அவரே சொல்கிறார் :
"கடவுள் கிருபையால் பணத்துக்குக் குறைவில்லை. உங்கள் வாழ்த்துகள் ஒன்றே போதும்... விரைவில் கட்டுகிறேன்'' என்றேன்.”
# ஆச்சரியப்பட்டுப் போன எம்.ஜி.ஆர். , மனம் நிறைந்த ஆசிகளை அள்ளி வழங்கி இருக்கிறார்...அவர் ஆசைப்பட்டபடியே 1987ஆம் ஆண்டு விஜயா கார்டனில் ஹெல்த் சென்டர் ஒன்றை கட்டி விட்டார் நாகிரெட்டி ..
சரி..இதற்கு யார் பெயரை வைப்பது..?
நாகிரெட்டியார் :
“தான் பெற்ற நல்ல சிகிச்சையை நாட்டு மக்களும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர். பெயரையே சூட்டலாம் என்று முடிவெடுத்து, அவரிடம் சொன்னேன். ஆனால்...அதை மறுத்த எம்.ஜி.ஆர். , மறைந்த என் மூத்த மகன் பிரசாத் பெயரை வைக்கச் சொன்னார். அதற்கு மேல் நான் அவரை வற்புறுத்தவில்லை...”
பிரசாத் மெமோரியல் என்ற பெயரில் அந்தப் புதிய ஹெல்த் சென்டரை, எம்.ஜி.ஆரை வைத்தே திறக்க ஆசைப்பட்டிருக்கிறார் நாகிரெட்டியார் ...!
ஆனால்...அதற்குள்...எம்.ஜி.ஆர். மறைந்து போனார்..!
மனதுக்குள் எம்.ஜி.ஆருக்கு கண்ணீருடன் நன்றி சொன்ன நாகிரெட்டி , மனம் திறந்து சொன்ன வார்த்தைகள் :
“மருத்துவமனையின் ஒரு பகுதிக்கு எம். ஜி. ஆர். விருப்பப்படி பிரசாத் மெமோரியல் என்றும், இன்னொரு பகுதிக்கு நான் விரும்பியபடி எம். ஜி. ஆர். மெமோரியல் என்றும் நுழை வாயிலில் வளைவுகள் அமைத்து அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்தேன்.”
# இந்த செய்தியைப் படித்தபோது எம்.ஜி.ஆர். – நாகிரெட்டி ..
இருவரில் எவருக்கு அதிக நன்றி சொல்வது எனத் தெரியவில்லை..!
“வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்”
http://i1170.photobucket.com/albums/...ps2pxucjzq.jpg
எம்ஜிஆர் பக்தர்கள்
லாபம் பார்த்தோ
அரசியல் பார்த்தோ
பதவி பார்த்தோ
பணம் பார்த்தோ
எம் ஜி ஆர் ரை பூஜிக்க வில்லை
ஆண்டும் பலகடக்கலாம் எம் ஜி ஆர் சக்தி யுகங்கள் தாண்டும்
விலாசம் இல்லாமலேயே தமிழகம் வந்தார் இன்று தமிழகமே இவர் விலாசம்
தன் உடமை தன் உழைப்பு தன் சக்தி
தன் பொருள் தன் செல்வாக்கு ஏன் தன்னையே தமிழர்க்கும் தமிழகத்துக்கும் எனவாழ்ந்த எம் ஜி ஆரின் பக்தர்கள் புகழ் வாழ்க வளர்க
courtesy net