http://i1170.photobucket.com/albums/...ps7b923e5d.jpg
Printable View
சத்யராஜ் இப்போது `தங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கூறியதாவது:-
"பெரியார்", "ஒன்பது ரூபாய் நோட்டு" படங்களில் நடித்த பிறகு இனி புதுசாக என்ன நடித்துவிடப்போகிறீர்கள் என்று என்னிடம் கூட நண்பர்கள் கேட்டார்கள். சமீபத்தில் இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் என்னை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சேர்ந்திருந்ததால் ஏற்பட்ட கேள்வி இது. எல்லாவித நடிப்பிலும் தன்னை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்பவனே நல்ல கலைஞன்.
இதை மனதில் வைத்து "வேலை கிடைச்சிடுச்சு" மாதிரியான கதைப் பின்னணியில் காமெடி இணைத்து டைரக்டர் கிச்சா சொன்ன "தங்கம்" படத்தில் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் கவுண்டமணி அண்ணனும் என்னுடன் காமெடிக் கூட்டணி போடுகிறார்.
படத்தில் நாங்கள் பண்ணும் ஒவ்வொரு காமெடி அலம்பலுக்கும் ரசிகர்கள் வெடிச்சிரிப்பில் குலுங்கப் போகிறார்கள். `கரகாட்டக்காரன்' படத்தில் இடம் பெற்று இன்றைக்கும் பேசப்படும் "வாழைப்பழ காமெடி" மாதிரி இந்தப் படத்திலும் ஒரு காமெடி இருக்கிறது. இந்தக் காட்சியில் நடித்த போது எங்களாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தப் படத்தில் இன்னொரு ஸ்பெஷலாக எம்.ஜி.ஆரின் "நினைத்ததை முடிப்பவன்" படப்பாடலான "பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த" பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். கெட்டப்பிலேயே நடிக்கிறேன். கதைப்படி, தங்கை மீது உயிரையே வைத்திருக்கிற நான், தங்கையின் திருமணம் சிறப்பாக நடப்பதாக காணும் கனவே இந்தப்பாட்டு. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். மேக்கப்பில் வர அவர் நடித்த காலங்களில் பயன்படுத்திய அதே வகை பான்கேக்கை பயன்படுத்தி மேக்கப் போட்டேன். பொருத்தமாக அமைந்தது மேக்கப். பாடல் காட்சியிலும் "நினைத்ததை முடிப்பவன் எம்.ஜி.ஆரை" பார்க்க முடியும்.
நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அந்த உரிமையில் அவர் பாடிய பாடலுக்கு அவர் தோற்றத்தில் நான் ஆடுவதை எனக்குக் கிடைத்த பெருமையாகவே உணர்கிறேன்.
நடிப்பை பொறுத்தவரையில் ரசிகர்கள் விரும்புகிற நடிகனாக நடிப்பேன்; நீடிப்பேன் என்ற நம்பிக்கை எப்போதுமே எனக்கு உண்டு."
உற்சாகமாகவே சொல்கிறார், சத்யராஜ்.
watch the clippings from 5.00 to 6.30
http://www.dailymotion.com/video/x4a...-tk_shortfilms
இன்றைய (30/06/2014) மக்கள் குரல் தினசரியில் வெளியான செய்தி.
--------------------------------------------------------------------------------------------------------------------
http://i58.tinypic.com/2e24jdx.jpg
http://i58.tinypic.com/2qwh1g9.jpg
http://i57.tinypic.com/29ndul2.jpg