இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மாநிலத் தலைவர் சகோதரர் திரு.சைதை ராஜ்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மாநிலத் தலைவர் சகோதரர் திரு.சைதை ராஜ்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
எனக்கு மகள் பிறந்தற்க்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி
நாலாயிரம் பதிவுகள் கண்ட சகோதரர் சைலேஷ் பாசுவிற்கு வாழ்த்துக்கள்
நமது திரியின் மூத்த பங்களிப்பாளர் திரு லோகநாதன் அவர்களின் தாயார் மறைந்தற்க்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்
திரு cs குமார் அவர்களின் பதிவு பிரமிக்கவைக்கிறது மக்கள்திலகத்தின் திரி 15 ஆரம்பிக்கபோவது நீங்கள் தான் என்று நினைக்கிறேன் ?
http://i59.tinypic.com/r7rtqq.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வேங்கையன் விஜயம்.
10/04/2015 முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான "'அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள்.
தமிழ் புத்தாண்டு வெளியீடு.
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
நண்பர் திரு. ரவி. அவர்களின் வழக்கத்திற்கு மாறுபட்ட பதிவு என்பது வித்தியாசமானதும், வரவேற்கத் தக்கதும் ஆகும்.
Creater is one, but creativities are many.
We are all created by the grand designer called great lord.
ராமனின் நாமத்தை 3 முறை உச்சரித்தால், அது 1000 தடவை விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொன்ன பலன் கிடைக்கும் .
நண்பர் திரு. ரவி அவர்களின் பதிவிற்கு, நம் அனைவரின் சார்பாக அருமையாக
விளக்கமும், விமர்சனமும் பதிவிட்ட நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு
பெருத்த நன்றி.
ஆர். லோகநாதன்.
திரு கலைவேந்தன்
உங்கள் விளக்கம் - ரகு -- மான் --- கான் மிகவும் சமயோசிதமானது - மிகவும் அருமை - இதுவரை நான் அறியாத ஒன்று - உங்கள் பதில் பதிவு மூலம் உங்களுடன் எந்த துறையிலும் - ஆன்மிகம் , மதுர கான இசை , மற்றவர்களுக்கு , ஆணித்தரமாக அதிலும் வெப்பமான வார்த்தைகளை தவிர்த்து சொல்லும் விதம் , இப்படி சொல்லிகொண்டே போகலாம் - எதிலும் உங்களுடன் போட்டி போடுவது மிகவும் கடினம் - ஆன்மிகத்தை அதிகமாக அசை போடாத திரியினில் இப்படி எழுதுகிறோமே , என்று மிகவும் தயங்கி , தயங்கி , என் மனம் போன போக்கில் கிறுக்கினேன் - அதற்க்கு , உங்கள் புகழ்ச்சி மிகவும் அதிகம் . சாதரணமாக பதில் போடுங்கள் - "சார்" என்ற வார்த்தையோ , என்னை உயர்த்தும் வார்த்தைகளோ வேண்டாமே ! ஏற்க்கனவே சில ஜந்துக்கள் நான் புகழ்ச்சிக்கு அடமையானவன் , சில வார்த்தைகளால் புகழ்ந்து விட்டால் மிகவும் சுலபமாக விலைக்கு வாங்கிவிடலாம் என்று பேத்திக்கொண்டு திரிகிறார்கள் - என் மன திருப்திக்கும் , என் பதிவுகள் மூலம் நல்லவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள் - நாம் தான் பூனைபோல கண்களை மூடிக்கொண்டு ஒரு சின்ன வட்டத்திற்குள் சுற்றி கொண்டுருக்கின்றோம் - வெறும் வார்ததைகளால் , அதில் வடிக்கும் வெப்பத்தால் பிறரை வீழ்த்தி விடலாம் என்று நினைப்பது தவறு - உண்மையால்,அன்பினால் எல்லோரையும் நண்பர்களாக ஆக்கிக் கொள்ள முடியும் என்பதை நீருபித்து காட்டவே இங்கு என்னுடைய சில எண்ணங்களை பதிவிடுகிறேன் - என்னை பொருத்தவரை நல்லவர்களில் பிரிவுகள் கிடையாது - கெட்டவர்களில் , மோசமானவர்களில் பல பிரிவுகள் உண்டு . நான் சொன்னதுபோல - creator ஒருவர்தான் - creativities பல - நீங்கள் மக்கள் திலகத்தை தெய்வமாக - ஒரு creativity யை வழிபடுகிண்டீர்கள் - நாங்கள் , இன்னும் ஒரு creativity யான நடிகர் திலகத்தை போற்றி புகழ்கிறோம் - ஆனால் உண்மையில் இரு creativity க்கும் சொந்தக்காரர் ( creator ) ஒருவர்தான் - அவரை நாம் கலைத்தாய் என்று சொல்கிறோம் - எவரை வழிப்பட்டாலும் , நாம் உண்மையில் வழிபடுவது அந்த கலைத்தாயைத்தான் - இப்படி நாம் எடுத்துக்கொண்டு பழகினால் நமக்குள் என்றுமே எதிரிகள் என்ற எண்ணம் தோன்றாது - நாம் என்றுமே பிரிய வாய்ப்பே இல்லை - இரண்டு வேறுப்பட்ட திரிகளுக்கு வேலையே இல்லை -
இருவருமே , தங்கள் துறைகளில் பல சாதனைகளை புரிந்தவர்கள் - வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் - இவர்கள் மூலம் பலன் அடைந்தவர்கள் , இன்னும் அடைந்து கொண்டு இருப்பவர்கள் பல்லாயிரம் - மக்களுக்கு தன் திறமைகள் மூலம் பல நல்ல விஷயங்களை சொன்னவர்கள் - இந்த நாட்டுக்கும் , தமிழகத்திற்கும் பல பெருமைகள் இவர்களால் இன்னும் வந்து கொண்டுருக்கின்றது - அவர்களின் பெருமைகளை நாம் அடுத்த தலைமுறைக்கும் நம்மால் முடிந்த வரை எடுத்து சென்று கொண்டிருக்கின்றோம் - தெய்வமாகி விட்ட இருவரையும் நாம் இன்னும் இருவர்களாக பிரித்து பிரித்து - அவர் உயர்ந்தவர் - அவர் சாதனைகளை இன்னும் யாரும் முறித்ததில்லை - வசூலில் இன்னும் இவர்தான் சிறந்தவர் சொல்லிக்கொண்டு நம்முள் இன்னும் பகைமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமா ? அப்படி செய்தால் தெய்வமான அந்த இருவரையும் நாம் நிந்திப்பதாக ஆகாதா ?( points to ponder )
அந்த இராமருக்கு எதிரிகளே கிடையாது - இராவணை கொல்ல அவராக ஆசைப்பட்டதில்லை - சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவனை கொல்ல ஏதுவாகின - மாற்றான் மனைவியிடம் ஆசை வைத்தது மிகப்பெரிய தவறுதான் - ஆனாலும் அவன் சீதையை திருப்பி தந்துவிட்டால் அவனை மன்னிக்கவும் இராமர் தயாராக இருந்தார் - இராவனணனும் சாதரணமானவன் இல்லை - அவனை போன்ற இசை ஞானம் , பக்தி உள்ளவனை இறைவனே பார்த்ததில்லை - கைலாய மலையையே தூக்கும் அளவிற்கு அவனுடைய பக்தியின் வலிமை இருந்தது
அப்படிப்பட்ட பெருமைக்குரிய இராமனின் பெயரை தன்னுள் அடக்கிக் கொண்ட ஒரு புனிதனின் பாதையில் நடக்கும் உங்கள் எல்லோருக்கும் கூட எதிரிகள் இருக்க கூடாது என்பதுதான் என் ஆசை , விருப்பம் - நண்பர்களாக இருப்போம் - வேறுபாடுகளை கலைப்போம் - வாழும் நாட்கள் மிகவும் குறைவு - அதற்குள் ஏன் பகைமையையும் வாழவிட வேண்டும் ?
இதைத்தான் நான் சொல்ல வந்தேன் - சொல்லிவிட்டேன் - நல்ல முறையில் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்ட உங்கள் எல்லோருக்கும் எனது பணிவான வணக்கங்கள் .
எனக்கு விளக்கமாக எடுத்து கூற இன்னுமொரு வாய்ப்பு கொடுத்த - உங்கள் பதிவுக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .
அன்புடன்
ரவி
இனிய நண்பர் ரவி சார்
ஆன்மிகம் - ராமாயணம் - இராவணன் இதிகாசங்களுடன் தாங்கள் மேற்கோள் காட்டி எழுதிய தகவல்கள் அருமை .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் உங்களின் ஆக்கபூர்வமான பதிவுகள் வரவேற்கப் படுகிறது .தொடர்ந்து பதிவிடவும் .
அன்புக்குரிய திரு.ரவி அவர்களுக்கு,
தங்கள் பெருந்தன்மையான பதிலுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. இருந்தாலும் நான் அவற்றுக்கு தகுதியில்லாதவன். கற்றது கையளவு, கல்லாதது உலகளவு. எங்கள் திரியில் பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் அதிகம் படித்தவர். அவரது பெயருக்கு பின்னே ஏ.பி.சி.டி....யில் பாதி எழுத்துக்களை போட்டுக் கொள்ளும் தகுதி உண்டு. திரு.எஸ்.வி., திரு.சி.எஸ்.குமார், திரு.லோகநாதன், திரு.சைலேஷ் பாசு, திரு.கலியபெருமாள், திரு.ரவிச்சந்திரன், திரு.ராமமூர்த்தி, திரு.ஜெயசங்கர், திரு.ரூப்குமார், திரு.தெனாலிராஜன், திரு.யுகேஷ் பாபு, திரு.சத்யா, திரு.சுஹராம் உட்பட திரியில் எல்லாருமே சமூகத்தில் ஒரு அந்தஸ்தில், பொறுப்பான பதவிகளில், சமூகத்துக்கு பயனுள்ள தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள். அறிவில் சிறந்திருந்தாலும் எல்லாரும் அடக்கமாக இருப்பவர்கள். மக்கள் திலகத்துக்கு புகழஞ்சலி செலுத்துவதை தங்கள் கடமையாக, பாக்கியமாக கருதுபவர்கள்.
நீங்கள் கூறியிருப்பது போல, எங்களுக்கு யாருமே எதிரிகள் இருக்க வேண்டாம். சமீபத்தில், திரு. கலியபெருமாள் அவர்கள், என் மீது அக்கறையும் நல்லெண்ணமும் கொண்டு விவாதம் வேண்டாம் விட்டு விடுங்கள் என்று கூறினார். நான் ‘நமக்கு எதிரிகள் யாரும் இல்லை. நம்மை எதிரிகளாக நினைப்பவர்களிடம் சும்மா விளையாடி ஆசுவாசப்படுத்துகிறேன்’’ என்று கூறினேன். திரு.சைலேஷ் பாசு கூட, நகைச்சுவையாக ‘‘அப்படி யாராவது இருந்தால் அவர்களை சந்தித்து நாங்கள் உங்களுக்கு எதிரிகள் இல்லையென்று சொல்லிவிட்டு வரலாம்’’ என்று கூறினார். எல்லாரோடும் நட்போடு இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். இன்று கூட திரு.யுகேஷ் பாபு நடிகர் திலகம் திரியில் அரிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் நீங்கள் கெய்ரோ சென்றபோது, அங்கே ஒரு வீட்டில், காசியில் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் புனிதமான மதக் கடமைகளை செய்தபோது எடுத்த புகைப்படத்தை மாட்டியிருந்ததையும் அந்த வீட்டில் இருந்தவர்கள் அவரைப் பற்றி சொல்லியதையும் கூறி, உயர்ந்தவர்களை உயர்ந்தோரே புரிந்து கொள்வார்கள் என்று கூறியிருந்தீர்கள்.
அதன்படி, நீங்கள், திரு.ராகவேந்திரா சார், திரு.வாசு சார், திரு.கிருஷ்ணா சார், திரு.ஆர்.கே.எஸ்., சின்னக் கண்ணன், கல்நாயக் போன்ற நல்ல உள்ளங்களை நாங்கள் எல்லாரும் புரிந்து கொண்டிருக்கிறோம். அடிக்கடி வாருங்கள். நன்றி.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்