திருமாவளவனுக்கு எம்.ஜி.ஆர் விசுவாசிகளின் எச்சரிக்கை!
மாமண்டூரில் நேற்று(10-04-2016) மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் மது விற்பனையை பெருகச் செய்த குடிமகன்களின் கூட்டம் கூடிய இடத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பேசிய போது, “நடிகனாய் இருந்து முதல்வரான எம்.ஜி.ஆரை விடவும், ஜெயலலிதாவை விடவும் மிகச் சிறந்த பண்பு நலன் கொண்டவர் விஜயகாந்த், எனவே அவர் தமிழக முதல்வராக வேண்டும்” என பிதற்றியுள்ளார்!
எம்.ஜி.ஆரை விடவும் விஜயகாந்த் பண்பானவர் என்று சொன்னால் அதைவிட பெரிய நகைச்சுவை இந்த நூற்றாண்டில் எதுவும் இருக்க முடியாது. விஜயகாந்த் கூட்டணியில் சேர்ந்ததிலிருந்தே திருமாவளவன் முகம் சரியில்லை! பேச்சு சரியில்லை!– அதற்காக எம்.ஜி.ஆரை இழுத்திருக்கக் கூடாது.
எம்.ஜி.ஆர் மதம், சாதிக்கு அப்பாற்பட்டவர். அவர் பெயரை சொல்லி விமர்சிக்க இன்று எவருக்கும் தகுதியில்லை. சாதியின் பெயரால் கட்சி நடத்தும் திருமாவளவன் இதுவரை தி.மு.க, அ.தி.மு.க, ப.மா.க என்று சேராத கூட்டணியே இல்லை. இலங்கையின் கொடுங்கோலன் ராஜபக்சேயை வெட்கமின்றி சந்தித்து ‘பெட்டி’ வாங்கியது முதல், கட்டப் பஞ்சாயத்து மூலம் ஏராளமான கோடிகளை சம்பாதித்து, பல பெண்களின் கண்ணீர் கதைகளுக்கு காரணமான ‘பாலியல் வன்முறை வளவன்’ என்று ஏராளமான துர் நடத்தை விபரங்களை தனது பின்ணணியாக கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவன் என்று கூறிக் கொண்டு அந்த மக்களை தாழ்ந்த நிலையிலேயே வைத்திருக்கும் திருமாவளவனை இனியும் மக்கள் நம்பினால் அதோ கதி தான். அந்த கட்சியிலுள்ள எம்.ஜி.ஆர் விசுவாசிகள் யாரும் இந்த முறை திருமாவளவன் கட்சிக்கோ, சார்ந்துள்ள கூட்டணிக்கோ வாக்களிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
எம்.ஜி.ஆர் விசுவாசிகள் அனைவரும் மக்கள் மத்தியில் இந்த கருத்தை கொண்டு செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
இதயக்கனி.எஸ்.விஜயன்.
courtesy net