ரஜினியை இயக்குவது எப்போது? - கேவி ஆனந்த் பதில்
ரஜினியை இயக்குவது என் கனவு என்றும், அது எப்போது சாத்தியமாகும் என்று தெரியவில்லை, என இயக்குநர் கே வி ஆனந்த் தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியை நீங்கள் இயக்குவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் மறுத்தீர்கள். இப்போது மீண்டும் அதுகுறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றனவே என்று அவரிடம் கேட்டபோது, "ரஜினி சார் மிக எளிமையான, அருமையான மனிதர். அவரைப் போல ஒருவரை சினிமாவில் மட்டுமல்ல, உலகிலேயே பார்க்க முடியாது. அவருடன் பணியாற்றுவது குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கில்லை...
படம் குறித்து ரொம்ப நாள் முன்னாடி ரஜினி சார் என்னிடம் பேசினார். ஆனால் அதுபற்றி இப்போது எதுவும் சொல்லும் நிலையில் இல்லை.
ரஜினியை இயக்க வேண்டும் என்றால் சரியான கதை வேண்டும். அந்தக் கதை அவருடைய ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி இருக்க வேண்டும்," என்றார்.