Originally Posted by
esvee
எம்ஜியார் என்ற தனி மனிதனின் புகழும் , செல்வாக்கும் ,ஓர் இரவில் வந்தது அல்ல . 11 ஆண்டுகள் கடுமையான உழைப்பில் 1947ல் துவங்கி 1977 வரை
அவரது படங்கள்
அவரது கட்சி பணிகள்
அவரது மனித நேயம்
அவரது கொடை தன்மை
அவரது கொள்கை
மக்களிடையே நேரிடை தொடர்பு
கோடிக்கணக்கான உலக ரசிகர்கள்
இதுதான் அவரது சொத்து .
1977- உலக அரசியல் அரங்கில் மகத்தான சக்தியாக 1987 வரை
ஆட்சியில் ஆளுமை .
சொந்த வாழ்க்கையில் மூன்று முறை மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு திரும்பியவர் .
நம்மைவிட்டு திரை உலகில் பிரிந்து 36 ஆண்டுகள் கடந்தாலும்
நம்மை விட்டு பூவுலகில் பிரிந்து 25 ஆண்டுகள் ஆனாலும்
அவரது நினைவுகள் என்றென்றும் நம்மோடுதான் வாழும்.
அவரது படங்கள் - நமக்கு ஒரு பாடம் .
அவரது நடிப்பு - நம்முடைய விழிகளுக்கும் ,செவிக்கும் ,இதயத்திற்கும் தித்திக்கும் விருந்து .
மக்கள் திலகம்
சாதனை படைத்தார்
சரித்திரம் ஆனார் .
அறிவு கண்களுக்கு நிச்சயம் தெரியும் .
ஆத்திரம் - கோபம் - இயலாமை - வருத்தம் -பொறாமை
சகிப்புத்தன்மை இல்லாமை - நிராசை -எரிச்சல் -ஆணவம்
படித்திருந்தும் படியாமை - அறியாமை - கல்லாமை
இந்த எதிர்மறை சிந்தனைகள் - ஒருவர் புகழை உயர்த்த உதவாது .