SUPER STILL FROM ADIMAIPEN
COURTESY - MALAR MALAI -1 THIRU PAMMALAR SIR
http://i57.tinypic.com/21afuo7.jpg
Printable View
SUPER STILL FROM ADIMAIPEN
COURTESY - MALAR MALAI -1 THIRU PAMMALAR SIR
http://i57.tinypic.com/21afuo7.jpg
தமிழகத்தில் தல என அழைக்கப்படும் நடிகர் அஜித்துக்கு இன்று பிறந்த நாள். உழைப்பாளர் தினமான மே 1ந் தேதி பிறந்து உழைப்பால் தமிழ் திரையுலகில் சாதனை படைத்துவரும் அஜித்துக்கு மாலை மலர். காம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அஜித், ஆசை படத்தில் நடித்த போது இளசுகளின் இதயத்தில் இடம்பிடித்தார். தொடர்ந்து காதல் கோட்டை, வான்மதி, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் திரில்லர் படங்களில் தனது இன்னிங்ஸை துவக்கிய அவர் வாலி, தீனா, அமர்க்களம் ஆகிய படங்களில் நடித்து சாதனை படைத்தார். வரலாறு மற்றும் வில்லன் ஆகிய படங்களில் நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளார்.
தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது, எம்.ஜி.ஆர். திரைப்பட விருது, பிலிம்பேர் விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். எந்த வேடத்தையும் சவாலாக ஏற்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். போல் சிறப்பாக நடிப்பதில் வல்லவர். 'தல' அஜித்தும் புரட்சித்தலைவரின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது தனது ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்த அஜித், பின் அவரை திருமணம் செய்துகொண்டார். தனது ரசிகர்கள் ரசிகர் மன்றங்களை தொடங்கக்கூடாது என்றும் முதலில் அவர்கள் தங்கள் தாய் தந்தையரை பார்க்கவேண்டும் என்று அவர்களை நல்வழிப்படுத்தியவர். தன்னிடம் வேலை செய்பவர்கள் கூட நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் அவர்களுக்கு நிலமும் வாங்கிக்கொடுத்து அதில் வீடும் கட்டி கொடுத்த பரந்த மனம் கொண்டவர்.
யார் உதவி என்று கேட்டாலும் அதை பற்றி விளம்பரப்படுத்தி கொள்ளாமல் அவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வருபவர். எந்த சமயத்திலும் யாரையும் காயப்படுத்தக்கூடாது என்ற மன உறுதி கொண்டவர். புரட்சித்தலைவரை போல் தனது அழகான சிரிப்பால் அனைவரும் நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் 'தல' நூறாண்டுக்கு மேல் வாழ வாழ்த்துவோம்.
Courtesy Malaimalar
அஜீத் 43
எம்ஜிஆர் - ரஜினி ரசிகர் பள்ளி நாட்களில் தீவிர எம்ஜிஆர், ரஜினி ரசிகராகத்தான் சினிமாவைப் பார்த்தார் அஜீத். இவர்களின் எந்தப் படத்தையும் அவர் பார்க்காமல் விட்டதில்லை.
Read more at: http://tamil.oneindia.in/movies/spec...ay-199714.html
mr.vinod, ravichandran, yukeshbabu - documents, evidences are so cute... always in time... every time increase of our bharat-ratna MGR., name... keep it up...
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் புரட்சி படைப்பான "அடிமை பெண் "46 வது
ஆண்டு துவக்கம். வெளியான தேதி 01/05/1969.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடிமைப்பெண் படம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை.
------------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 2 வது சிறப்பான படைப்பு.
2.ஆரம்பத்தில் நடிகைகள் சரோஜா தேவி மற்றும் கே.ஆர். விஜயா ஆகியோர்
நடித்த பகுதிகள் புரட்சி தலைவர் குண்டடி பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டும் நடிக்க வந்த போது நீக்கம்.
3.செல்வி ஜெயலலிதாவுக்கு இரட்டை வேடங்கள் . இந்த படத்தில்தான் விலையுயர்ந்த நகைகள் -/ஆடைகள் அணிந்துள்ளார்.
4.ராஜஸ்தானின் முக்கிய நகரங்களான ஜெய்பூர், உதய்பூர் ,ஜோத்பூர் ,ஜெய்சால்மர்
தார் பாலைவனம் போன்ற இடங்களில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்.
5.தகவல் தொழில்நுட்பம், நவீன வசதிகள், கணிப்பொறி ,போக்குவரத்து மற்றும்
இதர வசதிகள் இல்லாத காலத்திலேயே படமாக்கப்பட்ட உன்னத படைப்பு.
6.படம் முழுதும் ஒளிப்பதிவாளர் ராமமுர்த்தியின் கைவண்ணம் , கடின உழைப்பு
பட வெற்றிக்கு ப்ளஸ் பாய்ன்ட்
7.பாடல்கள் அருமை.இனிமை. திரை இசை திலகம் கே.வி. மகாதேவன்
இசையில் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் முழக்கமிட்டன.
8.எப்போது எந்த அரங்கில் திரையிட்டாலும் , ஆரம்ப காட்சியில் கூனனாக
நடந்து வரும் காட்சியில் அரங்கம் அதிரும் வகையில் கை தட்டல் வாங்கும்
புரட்சி நடிகரின் இயல்பான நடிப்பு .
9.இளமை துள்ளலோடு தார் பாலைவனத்தில் புரட்சி நடிகர் ஓடி வருவது
கண் கொள்ளா காட்சி.
10.சண்டை காட்சிகள் அதிகம். ஆனாலும் எத்தனை முறை பார்த்தாலும்
சலிக்காத, தெவிட்டாத வகையில் படமாக்கப்பட்ட விதம் புரட்சி நடிகருக்கே
உரித்தான திறமை.
11. ஆரம்பத்தில் அசோகனுடன் வலையின் மீது (ஒற்றைக்காலில் ) செய்யும்
சண்டை காட்சிகள். இறுதியில் சிங்கத்துடன் மோதும் சண்டை காட்சிகள்
மெய் சிலிர்க்க வைப்பவை.
12. தாயில்லாமல் நானில்லை - தாய் பாசத்தை வெளிப்படுத்திய சிறந்த பாடல்.
13. காலத்தை வென்றவன் - புரட்சி நடிகரின் குணாதிசயங்களை வெளிபடுத்திய பாடல்.
14. ஏமாற்றாதே - எதிரிகளுக்கு பாடம் புகட்டும் பாடல்.
15. ஆயிரம் நிலவே வா. - அருமையான காதல் பாடல்.-எஸ்.பி.பிக்கு பெரும்
புகழ் தந்த பாடல். -முதல் நாள் பாடல் பதிவின்போது காய்ச்சலால் அவதிப்பட்ட எஸ்.பி.பி பூரணகுணம் அடைந்ததும் சில மாதங்கள் கழித்து
மீண்டும் பாட அழைக்கப்பட்ட போது புரட்சி நடிகரின் மனித நேயம் கண்டு
நெகிழ்ந்து போனதோடு நன்றியும் தெரிவித்து கொண்டார்.
16.உன்னை பார்த்து - அரசியல் எதிரிகளுக்கு சவால் விடும் பாடல்.
17.முதல் வெளியீட்டில் அட்வான்ஸ் புக்கிங் , 4 அரங்கில் தொடர்ந்து 100 அரங்கு
நிறைந்த காட்சிகள் , 14 அரங்கில் 100 நாட்கள். மதுரையில் வெள்ளிவிழா ,
வசூலில் சாதனை புரட்சி. மறுவெளியீடுகளிலும் சாதனை. தொடர்கிறது.
18.ஸ்ரீகிருஷ்ணாவில் 2 வது வாரம் இரவும் காட்சியில் தான் முதன்முறையாக
பார்த்தேன். அந்த காலத்தில் ஒரு காட்சி நிறைந்துவிட்டால் மறு காட்சிக்கு
உண்டான மக்கள் கூட்டம் அரங்கத்தின் வெளியே காத்திருக்கும். கா வ ல்துறையின் தடியடி ஒரு பக்கம் இருக்கும் . அதை வேடிக்கை பார்க்க
எங்களை போன்ற கூட்டமும் இருக்கும்.
19.ஸ்ரீ கிருஷ்ணாவில் வெள்ளிவிழா ஓடி இருக்க வேண்டிய படம். நல்ல வசூலுடன் எடுக்கப்பட்டது. சத்யா மூவிஸ் தயாரிப்பான ' கன்னிப்பெண்
படத்திற்காக ஆர். எம்.வீ வேண்டுகோளின்படி .
20. 2- ஆம் வெளியீட்டில் சக்கை போடு போட்ட படம். எங்க வீட்டு பிள்ளையின்
வசூலை 4 ஆண்டுகள் கழித்து பல அரங்குகளில் முறியடித்த ஒரே படம்.
ஆர். லோகநாதன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி நண்பர்கள் அனைவருக்கும்
----------------------------------------------------------------------------------------------------
மே தின வாழ்த்துக்கள்.
--------------------------------------
உழைப்பே உயர்வு தரும் என்கிற கொள்கையின்படி, கலையுலகிலும், அரசியல்
உலகிலும் எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற்ற
நமது உன்னத தலைவரின் , உழைப்பை பற்றிய சீரிய கருத்துக்களை
நினைவு கொள்வோமாக !
நன்றி.
தொலைகாட்சியில் மே தின சிறப்பு திரைப்படங்கள்.
------------------------------------------------------------------------------------------
சன்லைப் - காலை 11 மணி - உழைக்கும் கரங்கள்.
இரவு 7 மணி - தொழிலாளி.
ஆர். லோகநாதன்.