vinodh sir congratulations for 9000 posts
Printable View
vinodh sir congratulations for 9000 posts
மக்கள்திலகம் திரியின் கேப்டன் திரு வினோத் சார் அவர்களின் 9000 பதிவுகள் மிகவும் அருமை அதை அடைய அவர் ஆற்றிய பணிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
http://i59.tinypic.com/2en5je1.jpg
அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
14-07-1961 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் "சபாஷ் மாப்பிளே" .... முதல் நாள் திரையரங்கில் விற்கப்பட்ட ஒரிஜினல் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம்:
http://i61.tinypic.com/27x08li.jpg
குறிப்பு : பின் அட்டையில், ராகவன் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கப்படும் தங்களின் அடுத்த சமூக ஹாஸ்ய சித்திரம் பற்றிய விளம்பர அறிவிப்பு காணப்படுகிறது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்” வாழ்ந்த ராமாவரம் தோட்டம்..
காது கேளாத, பேச முடியாதோர் சிறப்பு பள்ளியான கதை
--------------------------------------------------------------------------------------
" அமெரிக்காவில் சிகிச்சை முடிச்சு வந்தப்போ சரியாப் பேச முடியாத காரணத்தினால... அதிகமாக தனிமையை நாடினார்.
அந்த நாட்களில் திடீர் திடீர்னு படுக்கையைவிட்டு எழுந்து... என்னை, இல்லேன்னா மாணிக்கத்தை (எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டு இன்று ஜானகி அம்மாளுடன் இருக்கும் ஒரே பழைய மனிதர்) அழைச்சு, கையைப் பிடிச்சுக்கிட்டு தோட்டத்தைச் சுத்திச் சுத்தி வந்து பெருமூச்சுவிடுவார்.
அப்போ ஒருநாள், இங்க வேலை பார்த்துட்டு இருந்த ஒரு பெரியவரோட மகள், தன் எட்டு வயசுப் பேத்தியைக் கூட்டிட்டுத் தோட்டத்துக்கு வந்திருந்தா. அந்தப் பேத்தி வாய் பேச முடியாத பொண்ணு. முறையா டாக்டர்கிட்ட காண்பிக்காம - காண்பிக்க வசதி இல்லாமதான் இந்த நிலைமைக்கு ஆளாயிருக்குன்னு சொல்லி அந்தப் பெரியவர் அழுததைக் கேட்டார்.
உடனே தனக்கு ட்ரீட்மென்ட் தந்துட்டு இருந்த டாக்டர்களைக் கூப்பிட்டு, அந்தப் பொண்ணுக் கும் சிகிச்சை செய்யச் சொன்னார். ஆச்சர்யப் படற அளவுல அந்தப் பொண்ணுக்கு எட்டாவது வாரமே ஓரளவு பேச வந்திட்டுது. அன்னிக்கு அவர் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
அதுல இருந்தே அவர் கொஞ்சம் மனசு லேசான உணர்வுல இருந்தார்னு சொல்லலாம். அப்போ தான் சொத்துக்கள் பத்தி இப்படி ஒரு நல்ல முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். இந்த ஏழரை ஏக்கர் நிலத்துல இந்த வீடு இருக்கிற இடம் போக, மீதி இருக்கிற எல்லா இடத்தையும், வாய் பேச இயலாத, காது கேட்கும் திறன் குறைஞ்ச குழந்தைகளுக்கான ஸ்கூல் ஆரம்பிச்சு நடத்தணும்னு உயில்ல எழுதிவெச்சிட்டாரு.
அப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியையும் இதுல சேர்ந்து படிக்கிற பிள்ளைகளையும் பார்க்கிறப்போ, என் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குது.''
(1993-ம் ஆண்டில் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அமரர் எம்.ஜி.ஆரின் மனைவி, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜானகி அம்மையார் அளித்த பேட்டி )
l
" சிரித்து வாழ வேண்டும் " படப்பிடிப்பின் போது ..... பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில், உபசரிக்கும் நம் பொன்மனச்செம்மல்.
http://i61.tinypic.com/28kpnhz.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
" பரமபிதா " படத்துக்காக ....... ஒப்பனையில் நம் மக்கள் திலகம்.
http://i62.tinypic.com/2ujo4eh.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நம் தலைவரின் இந்த கள்ளம் கபடம் இல்லாத என்ன ஒரு உண்மையான சிரிப்பு நன்றி திரு இரவிச்சந்திரன் சார் இதுவரை நான் காணாத பதிவு சார்
http://i60.tinypic.com/55110l.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Fans experience in netru indru nalai fdfs
1974ம ஆண்டு இதே நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் திருநெல்வேலி பார்வதி திரையரங்கில் மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை வெளியானது.வீட்டில் என் மாமாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு காலையிலே தியேட்டர்க்கு சென்றால் மக்கள் வெள்ளம் அலைமோதிக் கொண்டு இருந்தது ரசிகர் மன்ற டிக்கெட்டுகளை வாங்க வசதியில்லாத வயதில் கூட்டத்தில் தரை டிக்கெட் கியூவில் நின்றேன் மேட்னி காட்சிக்கு .அன்றைய தரை டிக்கெட் 40 காசுகள்.மதியம் வரை கியூவில் நின்றது தான் வீண் கடைசி நேர தள்ளு முள்ளில் தாக்கு பிடிக்க முடியாமல் மூச்சு திணறி வெளியே வந்து விட்டேன்.ஹவுஸ் புல் ஆனவுடன் மீண்டும் அப்படியே மாலைக் காட்சிக்கு நின்றேன். மீண்டும் மாலை காட்சி நேரம் நெருங்க நெருங்க தலைக்கு மேல் எல்லாம் ஆட்கள் ஏறி நடந்து கூட்டத்தில் குதித்து டிக்கெட் வாங்க தொடங்கினார்கள். 11 வயது சிறுவனான என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. டிக்கெட் கவுண்டரை நெருங்கும் போது டிக்கெட் தீர்ந்து விட்டது, மிகவும் சோர்ந்த நிலையில் வீடு திரும்பி திட்டு மழையில் நனைந்தேன்.நெல்லை பார்வதியில் 16 வாரங்கள் நேற்று இன்று நாளை ஓடியது.
Courtesy net
மக்கள் குறையை நேரில் கேட்கும் மக்களின் மகத்தான தலைவர்.
http://i62.tinypic.com/ie40b7.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரைக்கு வர முடியாமல் போன " நாடோடியின் மகன் " படத்திலிருந்து ஒரு காட்சி. மக்கள் திலகத்துடன் தோன்றுவது நடிகை ஜி.சகுந்தலா.
http://i58.tinypic.com/2a6lgmu.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்