http://i62.tinypic.com/34z163o.jpg
Printable View
உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கற்பக விநாயகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா
சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் மண்டபத்தில் கடந்த ஞாயிறு (23/11/2014)
அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் , உயர்நீதிமன்ற நீதிபதிகள்
கோகுலகிருஷ்ணன், அருணாசலம், ராமசுப்ரமணியம், சென்னை மற்றும் புதுடெல்லி வழக்கறிஞர்கள் , முன்னாள் அமைச்சர் ஆர். எம்.வீரப்பன், தினமணி ஆசிரியர்
திரு. வைத்தியநாதன், திரு. ராணி மைந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
திரு. எஸ். பி. முத்துராமன் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன்
நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் திரு. கற்பக விநாயகம் என பேசினார்.
உயர்நீதிமன்ற நீதிபதி கோகுலகிருஷ்ணன் அவர்களும் , திரு. கற்பக விநாயகம்
அவர்கள் இந்த நிலைக்கு வருவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் முன்னாள்
முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் என பாராட்டி பேசினார்.
தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன் பேசும்போது , மனித சமுதாயத்திற்கு
நல்வழி காட்டுவதுபோல் , தன் திரைப்படங்களில் பல நல்ல கருத்துக்கள், பாடல்கள்
மூலம் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்.
தன்னம்பிக்கைக்கு அர்த்தம் என்னவென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள்தான் என்பதற்கு மறு பேச்சுக்கு இடமில்லை.அப்படிப்பட்டவரின் மடியில்
தவழ்ந்த செல்ல பிள்ளைதான் திரு. கற்பக விநாயகம் அவர்கள் என்று புகழாரம்
சூட்டினார்.
http://i62.tinypic.com/wr046.jpg
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேலு மிலிடரி ஓட்டலின் உரிமையாளர் எம்.ஜி.ஆர். பேரவை செயலாளர் .
ஓட்டலின் உள்ளே வைக்கப்பட்டுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்
நமது நண்பர்களின் பார்வைக்கு
http://i62.tinypic.com/30rkyv9.jpg
தினமணி நாளிதழ் 24/11/2014 அன்று வெளியிட்ட செய்தி
http://i60.tinypic.com/2gxid5y.jpg
இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளேட்டில் 24/11/2014 அன்று பிரசுரம் ஆன செய்தி.
http://i57.tinypic.com/2uorl1s.jpg
டியர் ரவிQuote:
அன்புள்ள திரு கலை வேந்தன் - MT திரியில் பதிவு போட என்னை அழைத்தற்கு மிகவும் நன்றி . உங்கள் கை வண்ணத்தில் தொடங்கி உள்ள 12வது பாகம் பல வெற்றி பாதைகளை கடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - ஒரு சமயம் நான் நினைப்பதுண்டு - இரு பெரும் தலைவர்களும் இன்று நம்மிடையே இல்லை - மனம் நிறைந்து வாழ்கிறார்கள் என்பது வேறு விஷயம் -- ஆனால் இன்னும் எவ்வளவு நாட்கள் தான் போட்டியும் , பொறாமையுடன் , வேண்டாத விருந்தாளிகளாக வாழப்போகிறோம் ? - இருவரும் திரை உலகை பல ஆண்டுகள் ஆண்டவர்கள் - பல வெற்றிகளை சந்தித்தவர்கள் , ஒற்றுமையை கடை பிடித்தவர்கள் - ஆனால் இன்னும் நமக்கு ஏன் அந்த பக்குவம் வரவில்லை? நாம் வாழ்வது தமிழ் நாடு என்பதினாலா ? அவர்கள் இருவரிடமும் இருக்கும் பல நல்ல திறமைகளை இரண்டு திரிகளிலும் பகிர்ந்து கொள்ளலாமே பிறர் மனம் நோகாமல் ------ இது ஒரு சின்ன வேண்டுகோள் மட்டுமே - உடனே நடக்க வேண்டும் என்று சொல்லவில்லை - நடந்தால் நான் அடையும் மகிழ்ச்சிக்கும் அளவு இருக்காது - பல திறமையானவர்கள் MT திரியில் இருப்பதை உணர்கிறேன் - எல்லோரும் ஒன்று சேர்ந்தால் பல திறமையான பதிவுகளை எல்லோருக்கும் வழங்கலாமே - நமக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது இந்த வசூல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே - அதை தவிர்த்து பார்த்தால் இருவரை பற்றி சொல்வதற்கு ஒரு கோடி விஷயங்கள் உள்ளன ---- மதுரகானத்தில் நான் போட்ட இந்த பதிவை பார்த்து இருக்க மாட்டீர்கள் - உங்களுக்காகவும் , இன்னும் சந்திக்காத MT திரியின் பல நண்பர்களுக்கும் இதை இங்கே பதிவிடுகிறேன் - எல்லோருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்
அன்புடன்
ரவி
====
தங்களுடைய பதிவிற்கு முதலில் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி தோல்வி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அமைவது. அந்தந்த நிலைகளில் ஒரு தலைவர் எடுக்கும் முடிவுகள் மக்களிடம் வரவேற்புப் பெறவில்லை என்பதற்காக அவர் தலைவரில்லை என்றோ, அவருக்கு செல்வாக்கில்லை என்றோ அனுமானித்து விடமுடியாது.
நான் முன்னரே கூறியது தான். இருந்தாலும் மீண்டும் கூற விரும்புகிறேன்.
சிவாஜி எம்.ஜி.ஆர். இருவருமே சினிமாவைத் தாண்டி பொது வாழ்க்கையிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். தங்கள் ரசிகர்களுக்கு வழி காட்டியவர்கள். இயக்கத்தை அடையாளம் காட்டியவர்கள். நல்வழிப்படுத்தியவர்கள். இன்று வரையிலும் இருவர் செல்வாக்குமே குறையவில்லை என்பதே உண்மை. அரசியலில் தைரியமாக இறங்கி வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தங்கள் ரசிகர்களை வழி நடத்தி, தங்களுக்குப்பின்னரும் அவர்களைத் தங்கள் வழியில் நடக்க வைத்துள்ள மிகப் பெரும் தலைவர்கள். வருவேனா மாட்டேனா என்றெல்லாம் ரசிகர்களின் மேல் அவநம்பிக்கையோடும் அரைகுறை மனதோடும் சஸ்பென்ஸ் வைக்காமல் தைரியமாக இரு பெரும் இயக்கங்களுக்கு ஆதரவளித்து அரசியலில் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கொண்டு சென்றவர்கள்.
தங்களுக்குப் பின்னரும் தங்கள் வழியில் தங்கள் தொண்டர்களை தக்க வைத்துக் கொண்டு பின்பற்றவும் வைத்துள்ள இந்தியாவின் இரு பெரும் தலைவர்கள் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் மட்டுமே.. இந்தப் பெருமை வேறெந்தத் தலைவருக்கும் கிடையாது, பெருந்தலைவர் பெயர் சொல்வோராகட்டும், பேரறிஞர் பெயர் சொல்வோராகட்டும், இவர்கள் பெயர்கள் சொல்லப்படுவதோடு சரி. பின்பற்ற யாருமில்லை என்பதே இன்றைய நிலை.
இந்த அடிப்படையில் யார் உயர்ந்தவர் என்ற தர்க்கத்திற்கு இடமில்லாமல் இருவருமே சமம் என்கின்ற மனப்பான்மையோடு சிவாஜி எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தொடர்ந்து பரஸ்பரம் கருத்துப் பரிமாறிக்கொண்டால் என்றுமே அது நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.
திரியின் ஒவ்வொரு பாகத்தையும் அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய பங்களிப்பில் வெற்றிகரமாக கொண்டு செல்லும்அனைத்து எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.