EARTH DAY 2015
https://youtu.be/XObyqQ50I1c
Printable View
EARTH DAY 2015
https://youtu.be/XObyqQ50I1c
கண்ணன் என் காதலன்
எங்கிருந்தோ ஒரு பியானோ இசை , புல்லாங்குழலுக்கும் இல்லாத அந்த இனிமை காற்றில் மிதந்து வந்தது - இசைப்பது யார் - கண்ணனா ? ஆமாம் - கண்ணனே தான் - யாதவ குலத்தை கலக்கிய கண்ணன் அல்ல - இந்த கண்ணன் வெண்ணையை திருடவில்லை - பல இதயங்களை திருடியவன் - அந்த வகையில் இவனும் ஒரு திருடனே ! மக்கள் அவனை தங்களது நெஞ்சம் என்ற சிறையில் கட்டி தண்டித்தார்கள் - தவறு தவறு ---ஆராதனை செய்தார்கள். அந்த கண்ணனை பற்றியும் அவனை காதலித்த அந்த இரண்டு கோபிகளை பற்றியும் அழகாக எடுத்துச்சொல்லும் படம் இது - சற்றே மாறுப்பட்ட கதை , நடிப்பு - மக்கள் திலகம் தனது தனிப்பட்ட முத்திரையைத் தாண்டி நடித்தபடம் - பாடல்கள் தொடாத தொட்டி பட்டிகள் மிகவும் குறைவு
திரு ஹைதராபாத் ரவி
கண்ணன் என் காதலன் - உங்கள் பாணியில் மிகவும் ரசித்து , நடு நிலையோடு விமர்சனம் எழதிய உங்களுக்கு என் அன்பு பாராட்டுகளை தெரிவிக்கிறேன் . ராமபிரானின் ஆசீர்வாதம் தங்களுக்குஎப்போதும் உண்டு .
மதுரை - ராம் திரை அரங்கில் தற்போது
மக்கள் திலகத்தின் ''நான் ஏன் பிறந்தேன் '' நடை பெறுகிறது .
தகவல் - திரு கே. சாமி . மதுரை
சகோதரர் திரு. ஹைதராபாத் ரவி அவர்களுக்கு,
மக்கள் திலகத்தின் காவியம்
http://i62.tinypic.com/902175.jpg
http://i58.tinypic.com/23pv6r.jpg
"கண்ணன் என் காதலன்" பற்றிய தங்களின் தொகுப்பு வெகு அருமை.
1968 ஏப்ரல் மாதம் 25ம் தேதி யன்று வெளியான இந்த காவியத்துக்காக, அப்போது சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்த நானும், என் நண்பர்கள் திருவாளர்கள் எம். ரங்கராஜன் (DPI யில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்), ரவிக்குமார், ( சொந்த ஊர் குடியாத்தம்), கே. என். ரங்கராஜன் ( IOB யில் பணியாற்றியவர்) பார்த்தசாரதி (தற்போது உயிருடன் இல்லை) மற்றும் மீர்சாகிப்பேட்டை பகுதியில், சொந்த தொழில் செய்து வரும் டி. சந்திரசேகரன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான STAR ஒன்றை மூங்கில் பத்தைகள் மற்றும் வண்ணத்தாட்கள் கொண்டு உருவாக்கி அதில், அதற்கு முன்பு வந்த "குடியிருந்த கோயில்" காவியத்தில், பொன்மனச்செம்மல் தோன்றும் வண்ண, கருப்பு-வெள்ளை STILL களை ஒட்டி, அதனை "ஸ்டார்" திரையரங்கில் கட்டி தொங்கவிட்டு அழகு பார்த்த அற்புத காட்சி நினைவுக்கு வருகிறது. மேலும், மக்கள் திலகத்தின் மூத்த ரசிகர்கள் பலர் தோரணம் கட்டி, கையால் வரையப்பட்ட அக்கால பேனர்களில், வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். உருவத்துக்கு மாலையலங்காரம் செய்த பணிகளில் அவர்களுக்கு உதவியாக இருந்ததும் என்னை அசை போட வைக்கிறது.
"நடிக மன்னன்" எம். ஜி. ஆர். அவர்களின் வண்ண மற்றும் கருப்பு-வெள்ளை STILL கள் அப்போது வெளியான "பொம்மை", "பேசும் படம்", ஆகிய மாத பத்திரிகைகளிருந்தும், "திரை உலகம்" பத்திரிகையிலிருந்தும் CUT செய்து சேகரித்து வைப்போம்.
பள்ளியில் படிக்கும் போதே, "எம். ஜி. ஆர். ரசிகர்கள் பட்டாளம்" ஒன்றை, எங்களுக்குள் ஏற்படுத்தி, அவரது சாதனைகளை சொல்லி மகிழ்வோம்.
இன்றும் என் பள்ளி நண்பர்கள் பலருடன் என் தொடர்பு இருந்து வருகிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்வதில் ஆனந்தம் கொள்கிறேன். இந்த தொடர்பில் மேலும் சில பள்ளி தோழர்கள் (இதில் பெரும்பாலனவர்கள் எம். ஜி. ஆர். ரசிகர்கள் மற்றும் பக்தர்களே) இணைந்து, தற்போது, இந்த நட்பு வட்டாரம் பரந்து விரிந்து காணப்படுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை சந்தித்து, மக்கள் திலகத்தின் படங்களுக்காக உழைத்ததை பெரும் பாக்கியமாக கருதி, அந்த நாள் இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேரின்பம் அடைவோம். நண்பன் பார்த்தசாரதி மட்டும் இல்லையே என்ற கவலை, எங்கள் கலந்துரையாடலில் இருக்கும்.
இனிய நினைவுகளை மீண்டும் அசை போட வைத்தமைக்கு நன்றி !
மக்கள் திலகத்தின் காவியங்கள் பற்றிய தங்களின் அடுத்த தொகுப்பினை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
பின் குறிப்பு :
படத்தில் சில குறைகள் என்று
1. கண்ணன் ஏன் மல்லிகாவை வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை ? இது ஒரு புரியாத புதிர் .
2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுக்கின்றன
என்று கூறியுள்ளீர்கள்.
1. குடும்ப மருத்துவராக நடிக்கும் அசோகனை முழுமையாக நம்பிய காரணத்தினால், மல்லிகாவை கண்ணன் வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை.
2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுப்பது உண்மைதான். ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.