நினைப்போம்.மகிழ்வோம்-66
"பலே பாண்டியா."
"அத்திக்காய்" பாடல்.
தேவிகா பாடப் பாட, கட்டில்
விளிம்பில் தலை சாய்த்துப்
படுத்துக் கொண்டு, வாய் கோண, லயித்து, கட்டிலில் தாளம் போடும் அழகு.
Printable View
நினைப்போம்.மகிழ்வோம்-66
"பலே பாண்டியா."
"அத்திக்காய்" பாடல்.
தேவிகா பாடப் பாட, கட்டில்
விளிம்பில் தலை சாய்த்துப்
படுத்துக் கொண்டு, வாய் கோண, லயித்து, கட்டிலில் தாளம் போடும் அழகு.
நினைப்போம்.மகிழ்வோம்-67
"வீரபாண்டிய கட்டபொம்மன்".
போருக்குக் கிளம்புகையில்
மனைவியிடம் விடைபெறும்
போது, பல பக்க வசனங்கள்
விளக்க வேண்டிய வீரத்தை,
"சர்ர்ர்...ட்ட்" என்று தனது
குறுவாளை உறைக்குள்
செலுத்துவதில் காட்டி விடுவது.
நினைப்போம்.மகிழ்வோம்-68
"பாகப் பிரிவினை."
"தாழையாம் பூ முடிச்சு" பாடல்.
"தன்னன்னா"வுக்குப் பிறகு
வரும் துவக்க இசைக்கு, ஊனம்
மறந்து துள்ளும் சந்தோஷத்
துள்ளல்.
நினைப்போம்.மகிழ்வோம்-69
"ராமன் எத்தனை ராமனடி."
தன்னைப் பார்த்துக் கண்ணடித்த கே.ஆர்.விஜயாவுக்குப் பதிலுக்குக்
கண்ணடிக்க அவர் வீட்டுக்குப்
போய், குழாய் வழியே மேலேறி,
கே.ஆர்.விஜயாவின் அறை
என்று நினைத்து அவர் அண்ணன் நம்பியாரின்
அறைக்குள் குதித்து விட,
அங்கே உறங்கும் நம்பியாரைப்
பார்த்து வெலவெலத்துப் போய்
நடுங்குவது.
(இதை சமீபமாக எங்கோ
பார்த்தோமே என்று யோசித்தால்... "சந்திரமுகி"
பேய் வீட்டில் மாட்டிக் கொண்டு
வடிவேலு நடுங்குகிறார்... அதே மாதிரி)
நினைப்போம்.மகிழ்வோம்-70
"சுமதி என் சுந்தரி".
"ஓராயிரம் " பாடல்.
காதலில் மகிழ்ந்து கலைச் செல்வி பாடி, ஓடி வர...
தேயிலைத் தோட்டத்தில்,
கடுமையான வெறுப்பில்,
நமக்குப் பக்கவாட்டில் முகம்
காட்டி, ஏதேதோ புலம்பிக்
கொண்டு நடப்பது.
நினைப்போம்.மகிழ்வோம்-71
"திருவிளையாடல்".
மீனவனாய் வந்திருப்பது ஈசன்தான் என்பதை அறியாமல், "அந்த ஈசனருள்
உங்களுக்குப் பரிபூரணமாக
கிடைக்கட்டும்" என்று ஈசனிடமே சாவித்திரி சொல்ல..
வெகு கிண்டலாக, "ஈசனருள்..
எனக்கா..? கிடைக்கட்டும்.
கிடைக்கட்டும்.." என சிரித்துக்
கொண்டே சொல்வது.
நினைப்போம்.மகிழ்வோம்-72
"கலாட்டா கல்யாணம்."
"மெல்ல வரும் காற்று" பாடல்.
பாடலின் இடையிசைக்கு,
கீழிருந்து எடுக்கப்பட்ட அந்த
காட்சியில், அழகாகப் புன்னகை
சிந்தி, தலையசைத்தபடியே
நடந்து வருதல்.
நினைப்போம்.மகிழ்வோம்-73
"படித்தால் மட்டும் போதுமா?"
மனைவியால் வெறுக்கப்பட்ட
வேதனையுடன் தான் மட்டும்
வீடு திரும்புவார்.
மகனுடன்,மருமகளைக் காணாத வியப்போடு தாய்
"மீனா வரலையாப்பா?" என்று
கேட்பாள்.
விரக்தியில், ஏதோ சிந்தனையில்.. தாய் கேட்டதை
கவனிக்காதவர்.. "ம்ம்? "எனும்
ஒலியையே பதில் கேள்வியாக்குவாரே?
நினைப்போம்.மகிழ்வோம்-74
" டாக்டர் சிவா".
"மலரே குறிஞ்சி மலரே" பாடல்.
சின்னஞ்சிறிய கோயிலின் முன் மனைவியுடன் அமர்ந்திருக்கையில், அந்த
முகத்தில் நாமுணரும்
தெய்வீகமான சாந்தம்.
நினைப்போம்.மகிழ்வோம்-75
"ராமன் எத்தனை ராமனடி".
கே.ஆர்.விஜயாவிடம், "உங்களுக்காக நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க. இந்த கையை வெட்டிக்கணுமா?"
என்று தனது வலது கையைக்
காட்டுகிறவர், வேகமாய்ச்
சுதாரித்துக் கொண்டு இடது
கையைக் காட்டுவார்.
வலது கை இல்லையென்றால்
சாப்பிட முடியாதே?