http://i65.tinypic.com/14syvih.jpg
Printable View
திண்டுக்கல் மாநகரில் சென்ற ஞாயிறு (01/04/18) அன்று மனிதநேய மாணிக்கம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை சார்பில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 101 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக பழனி சாலையில் உள்ள இந்திரா கம்யூனிட்டி ஹாலில் சுமார் காலை 11 மணியளவில் துவங்கியது
திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு.மலரவன் மற்றும் திரு.குமரவேல் (பொருளாளர் ) ஆகியோர் மேடையில் உள்ள பேனருக்கு கற்பூர
ஆராதனைகள் , பூஜைகள் செய்த பின் , எம்.ஜி.ஆர். கீதம் இசைக்கப்பட்டது .(திரு.சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் தயாரிப்பு )
பின்னர் 11.15 மணியளவில் திரு.மலரவன் அவர்களின் வேண்டுகோளின்படி, அரசியலை தவிர்த்து, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் புகழ், பெருமைகள், அவருடன் இருந்த தொடர்பு, உறவு , நட்பு, அனுபவங்கள் போன்றவற்றை மட்டும் மேடையில் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க கீழ்கண்டவர்கள் முறையே பேசினார்கள் .
திருவாளர்கள் : சென்றாயன் பெருமாள் (திண்டுக்கல் ), ரோசய்யா (அரக்கோணம் ),
தினமலர் எஸ்.எஸ். ராமகிருஷ்ணன் , முருகு பத்மநாபன் (பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் ), கா.நா. பழனி (பெங்களூரு ), கலீல் பாட்சா (திருவண்ணாமலை ),காளியப்பன் (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் , சினிமாவில் பல நடிகர்களுக்கு கார் சேசிங் டிரைவராக பணியாற்றியவர் -கோவை ), லோகநாதன்,
(ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி -சென்னை ),
சுகுமாரன் (அரியலூர்), புருஷோத்தமன் , திருமதி ஜனனி சந்திரன் ,(சென்னை)
பிற்பகல் 2 மணிக்கு உணவு இடைவேளையின்போது அன்னதானம் சுமார் 200பேர்களுக்கு உணவளிக்கப்பட்டது .
பின்னர் 3 மணிக்கு மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். (விஜய் டிவி ) தடம் பதித்தவர்கள் (வேந்தர் டிவி ) ஆகிய நிகழ்ச்சிகள் சிறிய திரையில் பக்தர்களுக்காக காண்பிக்கப்பட்டது
மாலை 5 மணிக்கு தேநீர் இடைவேளைக்குப்பின்னர் திரு.தமிழ் நேசன் (மதுரை ),திரு.சம்பங்கி (சாமராஜ்பேட்டை ,பெங்களூரு )திரு.சந்திர சேகரன் (சென்னை ) , திரு.கோவை குமார் , திரு.எம்.ஜி.ஆர். வல்லரசு, நடிகர் சக்கரவர்த்தி ,திரு,ஹுசேன் ,திரு.மணிலால் (சென்னை ),,திரு.பூமிநாதன் ஆண்டவர்,(மும்பை) திரு.சிரஞ்சீவி அனீஸ் (தின இதழ் ஆசிரியர் ) ஆகியோர் உரையாற்றினார்கள் .
திரு.முருகு பத்மநாபன் (பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை, தலைவர் )பேசும்போது அனைத்து எம்.ஜி.ஆர். விசுவாசிகளை ஒன்றிணைத்து மாவட்டங்கள் தோறும், மாநிலங்கள் தோறும் விழா கமிட்டிகள் குழு தயார் செய்த பின்னர் வெகு விரைவில் சென்னையில் அநேகமாக ஜூலை மாதத்தில் , உலக எம்.ஜி.ஆர். மாநாடு கொண்டாட உள்ளதாகவும், அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்கள், விசுவாசிகள்
ஒத்துழைப்பு இதற்கு அவசியம் என்று கூறினார் .
இரவு 7 மணியளவில் திண்டுக்கல் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது . இரவு 8 மணிக்கு இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது .