விரைவில் எதிர்பாருங்கள்
அன்று கண்ட முகம்
நாலும் தெரிந்தவன்
Printable View
விரைவில் எதிர்பாருங்கள்
அன்று கண்ட முகம்
நாலும் தெரிந்தவன்
நீ வரவேண்டும் என்று எதிர் பார்த்தேன் ,நினைத்தேன் வந்தாய் நூறு வயது ....
மினி விமரிசனங்கள் விரைவில்.....
நிலவுக்கே போகலாம் ... இந்தப் பாடல் டிவிடியில் இல்லை. வேஸ்ட்... நரி ஒன்று சிரிக்கின்றது ... ஆறுதல்...
அன்று கண்ட முகம்... படம் முழுக்க பிரிண்ட் சரியில்லை... அங்கங்கு எகிறுதல்... குறிப்பாக வழக்கொன்று தொடுத்தேன் பாடலை ரசிக்க முடியவில்லை.
இதயம் பொல்லாதது .... மாமாவின் one of the masterpieces .
கண்ணதாசன், வாலி உட்பட அத்தனை கவிஞர்களும் விரும்பிய ஒரே இசையமைப்பாளர் கே.வீ.மகா தேவன் தான் என்று அடித்து கூற முடியும். மற்றவர்களை போல மேட்டருக்கு மீட்டர் ,மீட்டருக்கு மேட்டர் என்ற பெனாத்தல் (இதை ஒரு இசை மேதை வாரா வாரம் மெகா டிவி யில் இன்னொரு .......உடன் உட்கார்ந்து பேசும் விதம் குமட்டல்)இன்றி ,கட்டுரை எழுதி கொடுத்தாலும் எந்த வித மேலை கலப்புமின்றி தரமான இசை கொடுப்பாராம். அதனால் தன் தயாரிப்பில் உருவான வானம்பாடி படத்தில் கண்ணதாசன் ,மாமாவையே இசையமைக்க வைத்தார் தன் உயிர் நண்பரை தவிர்த்து. ஆனால் உயிர் நண்பரோ வாலியை கொம்பு சீவி விட்டு பழியை நன்றாக தீர்த்து கொண்டார்.
Ravichandran 2nd innings - Neeya/Kavarimaan/oomai vizhaigal/sattam oru sathurangam/amman koil kizhakala
3rd or 4th innings -grand father role in aadu puli/kanden kadhali
Neeya jodi - deepa a disco song "oru kodi inbangal oruvagum sorgangal asaindhadum aazhagu kolangal" music by shankar ganesh
Hindi remake of Naagin - (who did this role in hindi)
இது ரவிச்சந்திரன் திரியா அல்லது விஸ்வநாதனை வசைபாடும் திரியா என்பது தெரியவில்லை.
எம்.எஸ்.வி யிடம் உள்ள பெரிய குறை அவர் தனது பாடல்கள் எல்லாம் கூட்டு முயற்சி, கூட்டு முயற்சி என்று சொல்லி தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு உரிய கிரடிட்டைக்கொடுத்ததுதான். "சில" இசையமைப்பாளர்கள் போல 'நான் செய்தேன், என்னுடைய உழைப்பு, என் மூளையில் உதித்த இசை' என்றெல்லாம் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச்சொல்லாமல் இருக்கும்போதே இந்தக்காய்ப்பு காய்ச்சுகிறார்கள்.
எத்தனையோ இந்தி படங்களின் ரீமேக் படங்களுக்கு இசையமைத்தும் அவற்றின் ட்யூன்களை இடது கையால்கூடத் தொடாதவர் எம்.எஸ்.வி. சொந்தமாக தன்னுடைய பாணியில் இந்திப்படங்களுக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாத ஆனால் தரத்தில் சிறந்த பாடல்களைத் தந்தவர்.
ராமமூர்த்தியை விட்டுப் பிரிந்தபின், ஒரு வருடத்துக்கு 26 படங்களைத் தந்தவர் எம்.எஸ்.வி. ஆனால் தனியாக மொத்தமே 26 படங்களைத் தந்தவர் ராமமூர்த்தி. அவற்றில் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் அதிகம் போனால் ஆறு. என்ன பெரிய வெரைட்டி?. உண்மையில் ஆள் பார்த்து இசையமைத்தவர் ராமமூர்த்திதான். ராமண்ணா படங்களுக்கு மட்டுமே (நான், முன்றெழுத்து, தங்க சுரங்கம்) நல்ல இசையைத் தந்தவர். மற்றவர்களை முடிந்தவரை ஏமாற்றியவர். நீலகிரி எக்ஸ்ப்ரஸில் வரும் 'திருத்தணி முருகா தென்னவர் தலைவா' எல்லாம் குன்னக்குடி அல்லது சூலமங்கலம் சகோதரிகள் அடித்து தூள் கிலப்பக்கூடியவை.
கே.வி.எம். மாமாவைப்பொருத்தவரை, ஒரு லக்கில் வண்டி ஓட்டியவர். பணமா பாசமா, அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன் எல்லாம் அவர் இசையால் வென்றவை அல்ல. தேவரின் தாய்சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், தர்மம் தலை காக்கும், குடும்பத்தலைவன், நீதிக்குப்பின் பாசம் படங்களின் பாடல்களை படத்தின் பெயரை மாற்றிப்போட்டால் கூட யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு "வெரைட்டி" ???????????????? யைத் தந்தவர் மாமா.