Originally Posted by saradhaa_sn
சுதா, நீங்க சொல்வது முற்றிலும் உண்மை...
கோர்ட்டில் அவ்வளவு போலீஸ் காவல் இருந்தும், கண்ணெதிரே சுட்டு விட்டு ஓடும் இரண்டு கொலைகாரர்களை (அட்லீஸ்ட் அதில் ஒருத்தனையாவது) பிடிக்க முடியலைன்னா, பின்னே என்னத்தே கோர்ட்டில் '"பலத்த காவல்"' போட்டாங்க..???.
இன்னொரு வேடிக்கை, ஒரு கமிஷனரே ஏதோ சப்-இன்ஸ்பெக்டரைப்போல ஆதியின் வீட்டுக்கே போய் விசாரணை நடத்துவதும், அதற்கு ஆதி என்னமோ இந்த கேஸுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லாதது போல பேசுவதும்.
ஆஸ்பத்திரியில் இருக்கும் போலீசாரிடம், தொல்காப்பியனை எப்படியும் பிடிக்க வேண்டும் என்று கமிஷனர் சொல்லி விட்டுப்போயிருக்க, தொல்ஸ் ஆஸ்பத்திரியில் திருவேங்கடத்தோடும், மனோவோடும் பப்ளிக்காக அவ்வளவு பெரிய சண்டை போட்டு விட்டுப் போகும் வரை ஒரு போலீஸையும் அங்கே காணோம்.
அபியின் அம்மாவும் மற்றவர்களும் தொல்ஸ் மீது அவ்வளவு பெரிய பழியை சுமத்தும்போது எல்லாவற்ரையும் தெரிந்து கொண்டிருக்கும் கிருஷ்ணன் அங்கே இருந்தும் வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன்...?. "வேறொரு ஆஸ்பத்திரியிலிருக்கும் சரோஜாவின் இன்னொரு தம்பிக்கு கொலையைப்பற்றி எல்லா விவரமும் தெரியும்" என்று கிருஷ்ணன் சொல்லியிருக்கலாமே.