http://i57.tinypic.com/6tcj68.jpg
Printable View
Courtesy- face book
வாத்தியார் பாடசாலையில் கல்வி மூன்றாம் வகுப்புவரையில் படித்திருந்தாலும், வாழ்க்கைப் பள்ளியில் நிறையவே படித்தவர். ஒருவரால் அவரைப் போல் உயர்ந்த நிலைக்கு வர முடியுமென்றால், இறந்த இத்தனை வருடங்களின்பின்னரும் மக்களின் மனதில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்க முடியுமென்றால் அது ஒன்றும் சாதாரண விடயமல்ல.
வாத்தியாரின் செயற்பாடுகளிலுள்ள + கள் மற்றும் - களுடன் அவரை அணுகுவது என் வழக்கம். உதாரணமாக நடிப்பில் மிகுந்த ஆளுமையுடைய கமலகாசன் , சிவாஜி கணேசன் போன்றவர்கள் எவ்வளவு உருக்கமாக 'இரத்தத்தின் இரத்தமே' என்று அழைத்தாலும் அசையாத, மக்களை குண்டடிபட்டுச் சீரழிந்த குரலுடன் வாத்தியார் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற இரண்டு வார்த்தைகள் அசைத்துவிடுவதொன்றும் சாதாரணவிடயமல்ல.
நியூயார்க் மருத்துவ நிலையத்தில் இருந்துகொண்டு தேர்தலில் வெல்வதென்பதொன்றும் சாதாரண விடயமல்ல. அவரது சத்துணவுத்திட்டம், இறந்தபின் தன் சொத்துக்களை குருடர், செவிடர் நல்வாழ்வுக்காக ஒதுக்கிய பண்பு, ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவர் காட்டிய கரிசனை.. இது போன்ற பல விடயங்கள் முக்கியமானவை. அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் வாழ்வின் முன்னேற்றத்திற்கான கருத்துகள் இவையெல்லாம் முக்கியமானவை.
1st Paragraph...and 3rd Paragraph are absolutely true ! I think it is something god given for Late Sri.MGR !! Not everybody is destined to achieve this !
2nd Paragraph - at the same time, as usual shows, how much "ஆளுமை" NT too has whenever any topic related to Late Sri. MGR is spoken by anybody across the world .
NT - Anybody can like him, Anybody can dislike him BUT NONE can ignore him ! - One more definition of "ஆளுமை"
RKS
'' எம்.ஜி.ஆர். ஆட்சி; கலைஞர் ஆட்சி; ஜெயலலிதா ஆட்சி; யாருடைய ஆட்சி பொற்கால ஆட்சி? மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்? ''
''இந்த மண்ணுக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது;
சுய மரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியது;
இந்திக்கு இங்கே இடம் இல்லை என அகற்றியது;
எள் முனை அளவு ஊழல் குற்றச்சாட்டுக் கும் இடம் இன்றிப் பணி ஆற்றியது; எதிர்க் கட்சியினரை உயர்வாக மதித்து, ஜனநாய கத்தைப் போற்றியது...
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; மேடைகளில், ஏடுகளில், பாமர மக்கள் மனங்களில், தமிழுக்கு மகுடம் சூட்டிய அண்ணா அவர்களின் ஆட்சிதான், தமிழரின் பொற்கால ஆட்சி என்பேன்.
பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு அரசின் ஏற்பு அளித்தது; தனக்கென்று எதையும் சேர்க்காதது, தியாகச் சுடர் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைக் கோடானுகோடிக் குடும்பங்களின் பிள்ளைகளுக்குச் சத்து உணவுத் திட்டமாக ஆக்கியது; தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு தளம் அமைத்துக் கொடுத்தது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மாண்புகள் ஆகும். மற்ற இருவர் ஆட்சியைப் பற்றிய மதிப்பீட்டை, இப்போது நான் செய்ய விரும்பவில்லை. அதை விரிவாக விளக்க வேண்டும் ! "
- விகடன் மேடையில் வைகோ ( 27 - 12 - 2011 )
கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்.,
எழுதியது
என் வாழ்க்கையில், நான் அடைந்த
அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச்
சார்ந்த நண்பர்களுக்காகவும்
எடுத்துக்கூற விரும்புகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்,
சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர்,
அண்ணா சாலையில் இருந்தது.
அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்'
என்ற படம் திரையிடப்பட்டது. அதில்
கதாநாயகனாக, "இந்திய மேடைப்
புலி' என்ற பட்டம் பெற்றிருந்த
கே.பி.கேசவன் நடித்திருந்தார்.
நாடக மேடையிலும், சினிமாவிலும்
நடித்து, மிகப் பெரும்
புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும்,
வேறு சிலரும், அந்த படத்தை காண
அன்று சென்றிருந்தோம்.
இடைவேளையின் போது, அவர்
வந்திருப்பதை அறிந்த மக்கள்,
அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர்
பெயரைக் கூவி, கூச்சலிடத்
தொடங்கினர். அந்த படத்தில்
ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய
வேடங்களில் நடித்திருந்த நான்,
இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே.,
அவர்களையே பார்த்துக்
கொண்டிருந்தேன்.
"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில்
நாம் உட்கார்ந்திருக் கிறோமே...'
என்ற பெருமை கூட
எனக்கு உண்டாயிற்று. படம்
முடிவதற்குள், வெளியே வந்து விட
வேண்டும் என்று, நாங்கள்
புறப்பட்டோம். அதற்குள் மக்கள்
வெளியே வந்து விட்டனர். நாங்கள்
மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட
கஷ்டமாகி விட்டது.
நான் மற்றவர்களை பிடித்து தள்ளி,
மக்களிடமிருந்து
கே.பி.கே.,வை விலக்கிச் சென்று,
காரில் ஏற்றி அனுப்பினேன்.
அன்று மக்களுக்கு என்னை யார்
என்றே தெரியாது.
இந்த சம்பவம் நடந்து, பல
ஆண்டுகளுக்கு பின்,
சென்னை நியூ குளோப், (முன்பிருந்த
அலங்கார்)
தியேட்டருக்கு கே.பி.கேசவனும்,
நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க
போனோம். அப்போது, நான் நடித்த,
"மர்மயோகி' படம் வெளிவந்து சில
மாதங்களே ஆகியிருந்தன.
இடைவேளையின் போது, நான்
வந்திருப்பதை அறிந்த மக்கள்,
எழுந்து கூச்சல் போட்டனர்.
எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன்
அமர்ந்திருந்தார். அவரை யார்
என்றே படம் பார்க்க வந்தவர்கள்
கவனிக்கவில்லை. படம்
முடிந்து வெளியே வந்தோம். மக்கள்
கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என்
பெயரையும், "மர்மயோகி' படத்தில்
எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்'
என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர்.
மக்கள் கூட்டத்தின் நெரிசல்
அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த
ரசிகர்களிடமிருந்து என்னைக்
காப்பாற்றி, டாக்சியில்,
(அப்போது எனக்கென்று சொந்தக்கார்
எதுவும் கிடையாது)
ஏற்றி அனுப்பி விட்டார்.
நான் புறப்படும் போது, அந்த மக்கள்
கூட்டத்தில் அவரும் ஒருவராக
நின்று கொண்டிருந்தார்.
அவரது நடிப்பு திறமை, எந்த
வகையிலும்
குறைந்து விடவில்லை என்பதோடு,
நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது,
அவர் அதிகமாகவே பெற்றிருந்தார்
என்பதுதான் உண்மை.
மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப்
இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால்
புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்'
வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த
நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட,
இதே கே.பி.கேசவன் அவர்கள்,
தங்களோடு இருக்கிறார் என்பதை,
பாவம், அந்த மக்களால்
அப்போது புரிந்து கொள்ள
இயலவில்லை.
என்னால் உச்சநிலையில் இருப்பதாக
நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான்
உச்சநிலையில் இருப்பதாக கருதும்
வாய்ப்பை, அதே மக்கள்
அவருக்கு அனுபவ
முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக
நானே அனுபவித்த பின், இந்த
போலியான
உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக்
கொள்வது... நம்புவது?
கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த
நிலை என்பதெல்லாம், மக்களால்
தரப்படும் மயக்க நிலை;
அவ்வளவுதான்.
இதை நம்பி ஏமாந்து விடுவோமானால்,
நாம் மற்றவருக்கு பண்பு, பாசம்,
பகுத்தறிவு முதலியவற்றை தரும்
கடமை கலைஞனாக இயங்க முடியாது.
கலைஞனைப் பொறுத்தவரையில்,
அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது.
சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும்.
அது பிற மக்களின் மனதில் தோன்றும்
முடிவு!
ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த
நேரத்திலும் பொறாமையின்
தாக்குதலுக்கு இரையாக்காமல்,
மனிதாபிமானத்தோடு கலைத்
தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக்
கொள்ளச் செய்தால், அந்த
உணர்வுக்கு தோல்வியே கிடையாது.
மற்றவர்கள் முன், அவன்
தோல்வியடைந்தவனாகத்
காட்சியளித்தாலும், கலைஞனுடைய
நல் உணர்வுள்ள மனதின் முன், அவன்
வெற்றி பெற்றவனாவான். —
courtesy net
வெற்றியின் வேந்தனாய் இப்பூஉலகில் மலர்ந்தார், தன்னை அறிந்தார் - தான் யார் என்பதை உணர்ந்தார், வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்,
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா.
தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா.
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா.
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று - போற்றிப் புகழ வேண்டும்.
http://i58.tinypic.com/30vi1af.jpg
கோடிகளை மதிக்காதவர் மக்கள் திலகம் எம்ஜிஆர், கடைக்கோடி மனிதர்களின், கஷ்டங்களை உணர்ந்தவர்,அதனால்தான் கோடானகோடி ஏழைமக்களின் மனங்களில் வாழ்கிறார்.
http://i1170.photobucket.com/albums/...psb3aad10c.jpg
Vinod Sir thank you for uploading song book covers.
Happy to hear that Veerangan's second innings in Kovai Tirupur Ravichandran Sir.
இன்றைய தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் படங்கள் .
எங்கள் தங்கம் - சன் லைப் - 7 pm
தாய் சொல்லை தட்டாதே - முரசு - 7.30 pm
இந்த வார படங்கள் .
நாடோடி மன்னன் - கோவை
வேட்டைக்காரன் - மதுரை
ஆயிரத்தில் ஒருவன் - சென்னை .
இந்த வார ஆனந்த விகடனில் தமிழக சட்டசபையில் மக்கள் திலகம் அவர்களின் திறமையான பதில்கள்
எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பற்றிய விமர்சன கட்டுரை அருமை .
நாடோடி மன்னன் - 56 ஆண்டுகள் தொடர்ந்து மறு வெளியீடு செய்யப்பட்டு வருவது மூலம் மக்கள் திலகத்தின் படங்களின் செல்வாக்கினை அறிய முடிகிறது
.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் .மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பு .புரட்சிகரமான கதை - வசனம்
பாடல்கள் - பிரமிக்க வைக்கும் காட்சிகள் - இனிமையான பாடல்கள் .மக்கள் திலகத்தின் எதிர்காலத்தை 1958லே
நிலை நிறுத்திய படம் .19 ஆண்டுகளின் எம்ஜிஆரின் உழைப்பு - 1977ல் மிகப்பெரிய வெற்றியை தந்தது .
உலக வரலாற்றில் ஒரு நடிகர் செய்த சாதனை - நாடோடி மன்னன் நாடாளும் மன்னனாக வலம் வந்தது .
60 காணும் வைரமுத்துவிடம் 60 கேள்விகள். அவசரத்திலும் அசராத பதில்கள்; அசாதாரணமான பதில்கள். இதோ...
1. ''இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார்த்த படம் எது?''
'''நாடோடி மன்னன்’. சினிமா என்ற பிம்பத்தை ஆறு வயதில் எனக்குள் கட்டி எழுப்பிய முதல் படம். இன்றும் ரசிக்கிறேன். 60-ல் இருந்து 6-க்குப் பயணப்படுகிறேன்!''
நாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
முனுசாமி – மாணிக்கம்
மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!
முனு: எதுக்கடா?
மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.
முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?
மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!
முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?
மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.
முனு: ரொம்பப் பெரிய படமாமே?
மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!
முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?
மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!
முனு: கத்திச் சண்டை உண்டா?
மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!
முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?
மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.
முனு: காமிக் இருக்குதா?
மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!
முனு: என்ன தம்பி சொல்றே?
மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!
நான் சொந்தத்தில் இப்படத்தை ஏன் ஆரம்பித்தேன்?
எத்தனையோ படங்கள் காத்திருக்கும் இந்த நேரத்தில், அவைகளை முடித்துக் கொடுத்தாலே வாழ்க்கைக்குத் தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாமே; அதைவிடுத்துப் பணத்தை செலவழித்துக் கடும் உழைப்பை ஏற்று ஏன் இப்படிச் சொந்தப்படம் எடுக்க வேண்டும்? ? இப்படிப் பல கேள்விகளை எனது நல்வாழ்வை விரும்பியவர்களும், என்னைக் கேலி செய்ய விரும்பியவர்களும் கேட்டார்கள்.
மேகலாவில் பங்குதாரனாக இருந்து ?நாம்? என்ற படத்தை வெளியிட்ட பிறகு, வேறு வழியில்லாத நிலையிலும் எனது விருப்பப்படி முழு பொறுப்புடன் படம் எடுக்க வேண்டுமென்று ஆசையுடன் எம்.ஜி.ஆர் புரொடக்*ஷன்ஸ் என்ற பெயரில் கம்பெனியொன்றைத் துவக்கினேன் (துவக்கினோம் நானும் தமையனார் எம்.ஜி.சக்கரபாணி அவர்களும் சேர்ந்து). அதற்கு கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் கதை, வசனம் எழுதித் தருவதாக இருந்து ?விடிவெள்ளி? என்று பெயரும் இடப்பட்டுக் கதையும் எழுதத் துவங்கினார். இங்கு இப்போது வெளியிடக் கூடாத பல காரணங்களால் தாமதமாயிற்று. எதிர்பாராதவிதமாகக் கலைஞர் அவர்கள் கல்லக்குடிப் போராட்டத்தில் சிறையில் தள்ளப்படவே, எம்.ஜி.ஆர் புரொடக்*ஷன்ஸ் என்ற நிர்வாகத்தை நிறுத்தி வைத்து, எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைத் துவக்கினோம்.
அன்று தோன்றிய எண்ணம் எப்போதும் என் மனதைவிட்டு அகன்றதே இல்லை. ?ஓடு மீன் ஒட உறுமீன் வருமளவும்? என்ற படி காத்திருந்தேன். அந்த விருப்பத்தை இப்போது நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. எப்படி இழந்துவிட முடியும்? மனதிலே ஏற்பட்ட புண்ணை அந்த மனதிலே ஏற்படும் ஆறுதலால்தான் ஆற்றிக் கொள்ள முடியும்....
எனது உள்ளத்திலே ஏற்பட்ட புண்ணை நாடோடி மன்னன் என்ற படத்தால் தான் ஆற்றிக்கொள்ள முடிந்தது.
அதற்குள் எனக்கேற்பட்ட சோதனைகள் தான் எத்தனை !
?இவனுக்கு எப்படியோ கொஞ்சம் புகழ் வந்துவிட்டது. அதற்குள் கிடைத்ததை வைத்து கொண்டு வாழ வகையறியாதவன் ? இது ஒரு வகை....
?டைரக்டராமே டைரக்டர்... என்ற திமிர் !? ? இதுவும் ஒரு வகை.
?லாட்டரி அடிக்கப்போகிறான்; நம் கண்ணால் காணப்போகிறோம்? ? இப்படி விரும்பியது ஒரு கூட்டம். (நான் கஷ்டப்பட்ட வாழ்க்கையிலிருந்தபோது இவர்கள் தான் என்னைக் காப்பாற்றியவர்கள் என்று எண்ணம் போலும்!)
?இப்படிச் செலவு செய்தால் இவன் எங்கே படத்தை முடிக்கப் போகிறான்... தனது விருப்பத்தை வேறு விதமாகக் கூறும் புத்திசாலிகள்.
?எதை எதையோ எடுக்கிறான் ; திரும்பத் திரும்ப எடுக்கிறான் ; பாவம் மாட்டிகொண்டு முழிக்கிறான்?
- எனது நிலையைக் கண்டு மனதிலே உள்ள மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் வெளியே வரும் வார்த்தைகள்.
?சீர்திருத்தமாம் சீர்திருத்தம்; அங்கே போய்விட்டு வரட்டும். ஒண்ணும் இருக்காது (தணிக்கைக் குழுவினரைப் பற்றிப்பேசும் வார்த்தை).
?இவ்வாறெல்லாம் பேசுவதை என் காதுகளாலேயே கேட்டேன். அப்போதெல்லாம் எனக்கு ஏசுவின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன.
?தான் செய்வது இன்னதென்றறியாத அப்பாவிகள்? ? இவ்வாறு எண்ணி நான் அவர்களைப் பார்த்துச் சிரித்தேன். அவர்களும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்.
ஒருவேளை என்னைப் பைத்தியக்காரன் என்று சிரித்தார்களோ, அல்லது என்னை?அப்பாவி? என்றெண்ணித்தான் சிரித்தார்களோ...எப்படியோ அவர்கள் அத்தனை பேரும் சிரித்தார்கள். படம்வெளியிடப்பட்டு, பத்திரிகைகள் புகழ்ந்து பாராட்டியதைக் கண்டு பாவம், அப்போது என்னைப் பார்த்துச் சிரித்தவர்கள் அழுதார்கள். அவர்களில் சிலர் இன்னும் அழுது கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன? நான் தோல்வி அடைவதற்குப் பதிலாகத் தப்பிப் பிழைத்து விட்டேனே என்பதற்காக.... இவர்கள் இவ்வாறு தொல்லைப்படுவதற்கு, நடக்கக் கூடாதது என்ன நடந்துவிட்டது.. தணிக்கைக்குழுவினர் ஒரு சிறு துண்டுகூட வெட்டவில்லையாமே ! படத்தை முடித்து வெளியிட்டு விட்டானே ! நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்களே.... மிக நன்றாக வசூல் ஆகிறதாமே..... நூறு நாட்களுக்குமேல் பல ஊர்களிலும் நடை பெறுகிறதாமே ! எங்கும் பாராட்டு விழாவாமே !
அடுத்த படம் பொன்னியின் செல்வனாமே ! ....
இவைகள் தான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்திற்கும் துக்கத்திற்கும் காரணம் !
இதற்கு நான் என்ன செய்ய முடியும்.....
எனக்குத் தெரிந்ததை என்னுடைய மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரிய நண்பர்களின் துணை கொண்டு நிறைவேற்ற முயன்றேன். அது வெற்றி பெற்றதென்றால் இதற்கு யார் காரணம் , இந்த வெற்றி யாருக்கு?
உண்மைக்கும், உழைப்புக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும், அன்புக்கும், ஆர்வத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். வெற்றியென்ற பதம் இதற்குப் பொருத்தம் தானென்றால் அந்த வெற்றி தனிப்பட்ட எவர்க்கும் சொந்தமானதல்ல.....
கலைத் தொழிலாளர்கள் (லைட்பாய் என்றழைக்கப்படுகிறவர்கள் முதல் எல்லோரும்) நாடோடி மன்னனுக்காக உழைத்த உழைப்பு அளவிடற்கரியது. அவர்கள் எதனை எதிர்பாத்தார்கள்? அவர்களுக்கு என்ன தான் கிடைத்தது ? இதுவரை ஒன்றுமே இல்லை. ஆனால் அவர்களின் கடமை உணர்ச்சி அவர்களைத் தூண்டி அரும்பாடுபடச் செய்தது. அதன் விளைவுதான் இப்போது கூறப்படும் வெற்றி.....இப்படிச் சொல்லிக் கொண்டே போனால் உண்மையில் இந்த ?வெற்றி யாருக்கு??
படம் எடுக்கப்படுகிறதே யாருக்காக?...
பட உரிமையாளரின் இரும்புப்பெட்டியை நிரப்ப...நட்சத்திரங்கள் பணம் சேர்க்க....
சிலர் புகழ்பெற.....இப்படிப் பதில் வரும் சிலரிடமிருந்து,
மக்களுக்கு வாழ்வின் இலட்சியத்தை எடுத்துக்காட்ட,
மக்களை ஒன்றுபடுத்த,
நாட்டுப்பற்றை உண்டாக்க ? அதிகப்படுத்த, இல்லாத சுதந்திரத்தைப் பெற, காப்பாற்ற!
இப்படிப் பதில் கூறுவார்கள் இலட்சியப்பற்றுடைய மக்கள் கலைஞர்கள்.
இப்படிப் பேசும் கலைஞர்களைக் கேலி பேசுவோர்களும் உண்டு.....
?இது ஜனநாயக உலகம். யாருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கின்றனவோ அவர்கள்தான் நாட்டை ஆளுவார்கள். நமது நாடு ஏழைகள் நிறைந்த நாடு, எழுதப்படிக்கத் தெரியதாவர்களைப் பெரும்பான்யினராகக் கொண்டது நமது நாடு....
இவ்வாறு விளக்கம் தருகிறார்கள் பெரும் பெரும் தேசத் தலைகள் எல்லாம்.
இலட்சக்கணக்கான ரூபாய்களுக்குச் சொந்தக்காரரான ஒரு படமுதலாளி, ?முதலாளி ஒழியவேண்டும், முதலாளிகள் ஏழைத் தொழிலாளியின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை போன்றவர்கள். என்றெல்லாம் நம்புகிற ஒரு எழுத்தாளரையோ, ?ஏழை ? முதலாளி என்பது வேறு நாட்டிலும் கூட இருக்கிறது, நாடு விடுதலை பெற்றாலன்றி, இன உணர்ச்சி தோன்றி ஒன்றுபட்டாலன்றி, பகுத்தறிவு ஏற்பட்டு, சமுதாயச் சீர் கேடு ஒழிந்தாலன்றி, சமூகத்திற்கோ, ஏழைகளுக்கோ விமோசனமில்லை? என்ற கொள்கையைக் கொண்ட ஒரு எழுத்தாளரையோ அழைத்துப் பணம் கொடுத்து அவரவர் கொள்கைக்கேற்ப கதை, வசனம், பாடல்கள் அமைத்துப் படம் எடுத்து வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அந்தப்படத்தை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து, அதிலே சொல்லப்படும் கருத்தைப் புரிந்து, அதன்படி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்று நினைத்தால் அந்த மக்களுடைய ஓட்டுக்கள், அவர்கள் ஆசைப்படும் ஆட்சியை ஏற்படுத்த யார் விரும்புகிறார்களோ அவர்களுத்தான் கிடைக்கும். அப்படிப் பெரும்பான்மையான ஓட்டுக்கள் பெற்று ஆட்சி பீடத்திலே அமருகிறவர்களுடைய திட்டப்படி சட்டம் கொண்டு வந்தால் லட்சக் கணக்காகப் பணம் சேர்த்து சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியா செய்யும்.
இதை உணராதவர்கள் தான் பணத்தைப் பெருக்கப் பட முதலாளிகள் ஏதேதோ கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று கூறுவார்கள். அவர்கள் என்ன நினைத்துப் படம் எடுத்து வெளியிட்டாலும் பலன் மக்களுக்கு ? குறிப்பாக ஏழைகளுக்கு நன்மை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வகையில் ?நாடோடி மன்னன்? அதிக நாட்கள் ஓடி நிறைய வருமானம் கிடைத்தப் பல வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் லாபமடைந்திருக்கலாம். ஆனால் நாடோடியின்....(என்னுடைய) ஆசை நிறைவேறுகிறது. மக்களுக்கு எதைச் சொல்ல விருப்பமோ அதைச் சொல்லிவிட்டேன்.
மக்களுடைய எண்ணத்தைச் சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை ?நாடோடி மன்னன்? மூலம் மக்கள் சொல்லுகிறார்கள். ஆகவே எல்லாத் தரப்பினரின் ? எல்லா மக்களின் எண்ணத்தை நாடு முழுவதும் சொல்ல வைத்த மக்களின் வெற்றிதான் இது என்று குன்றேறிச் சொல்லலாம். மக்களுக்குப் பிடிக்காவிடில் வெற்றி பெற்றிருக்காது. (படம் பல நாட்கள் ஓடியிருக்காது.) ஆகவே மக்களின் எண்ணம் மன்னனின் வாயிலாக ஒலிக்கப்பட்டது என்று பொருள். மக்களின் குரல் ஏகோபித்துப் பாராட்டப்படுகிறது என்றால் இது யாருக்கு வெற்றி என்ற கேள்விக்கு, மக்களின் வெற்றி நமது நாட்டின் வெற்றி ? நமது இனத்தின் வெற்றி ? இன்பத் திராவிடத்தின் வெற்றி....என்று பெருமையோடு தலை நிமிர்ந்து கூறி, மக்கள் வாழ்க ! மக்களுக்காக வாழும் மக்கள் கலைஞர்கள் வாழ்க எனத் துணிந்து கூறுகிறேன். வணக்கம், வாழ்க திராவிடம் !
நன்றி !
* நாடோடி மன்னன் வெற்றி விழா மலர்
1958 ல் அதிக வசூல் பெற்று சாதனை புரிந்த காவியம்
"திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும்! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100 நாள் கண்ட முதல் காவியமும் இதுவே! அரங்கு கிருஷ்ணா 113 நாள்).
"சிறந்த இயக்குநர் விருது "சினிமாகதிர்" புரட்சி நடிகருக்கு வழங்கியது.
"லண்டன்" தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.
"சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிகையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.
மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.
1958ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.
"லண்டன்" மாநகர் திரையங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே!
முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் (தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம்! நாடோடி மன்னனே!
"இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 "சவரன்" தங்க வாள் பேரறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்டது. பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.
சீர்காழியில் "இன்பக்கனவு" நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டொக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த 'தாய் மகளுக்கு கட்டிய தாலி' படம் வெளிவந்தது. ஆகையால் 1959 ம் ஆண்டும் 'நாடோடி மன்னன்' தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.
ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராகயிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாக்க தந்தவர் புரட்சி நடிகரே.
நடிகை அபிநய சரஸ்வதி பி. சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். பி. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.
"பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.
அதிக நேரம் ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.
"தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல் (தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துக்கள் உணர்த்தும் பாடல்கள் அமைந்த ஒரே காவியம்.
அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும்- பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கெமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி.
மன்னன் "ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களில் இடம்பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ்க் காவியம்.
"10-க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கு ரகசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.
"கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் துள்ளாக உடைந்து சிதறுவது போல ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.
"அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்க பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.
"கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்டு செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி, ஒரு பணிப் பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது.
மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்டமான் இறந்து கிடப்பது போல காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம் இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.
தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் 'இந்தியன் மூவி நீயூஸ்' என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.
தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.
தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.
3 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது.
ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.
"வசனத்தில் புதுமை புரட்சி கருத்துக்கள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல், அன்பு, சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.
முதலில் "அரசியல் கட்சி கொடியை ஆரவாரத்துடன் பறக்க விட்டு வெளிவந்த காவியம் இது!
http://i62.tinypic.com/11w9729.jpg
தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 1960 முதல் 1969 வரை வெளியான படங்கள், அவற்றில், முன்னணி நடிகர்கள் நடித்த படங்களைப் பற்றிய ஒரு கணக்கு இதோ:
இந்த காலக்கட்டத்தில் ஏழு முன்னணி நடிகர்கள் கோலோச்சினார்கள் (எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்).
இந்த 10 வருடங்களில், சிவாஜி 75 படங்களிலும், எம்.ஜி.ஆர் 59 படங்களிலும் நடித்துள்ளார்கள். ஜெமினி கணேசன் 44, 1965-ல் அறிமுகமான ஜெய்சங்கர் 5 வருடங்களில் 41. இரு வாரங்களுக்கு ஒரு முன்னணி நடிகரின் படம் வெளியானது.
வெளியான படங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் 40 முதல் 85 சதவீதம். அதனால் மக்கள் கூட்டம் எப்போதும் அரங்கங்களில் இருந்தது. பல படங்கள் 100 நாட்களும், 175 நாட்களும் ஓடின.
courtesy - the hindu
தமிழ் திரை உலகின் பொற்காலம் - 1960-1969
************************************************** **********
பல தமிழ் படங்கள் - சாதனைகள் புரிந்த வரலாற்றில் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய தொகுப்பு
பிரமாண்ட வெற்றி - 200 நாட்கள் மேல் ஓடி 7 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடி வசூலில் சாதனை
புரிந்த படம் - எங்க வீட்டு பிள்ளை - 1965.
வெள்ளி விழா ஓடிய படம் .
*************************************
அடிமைப்பெண் - 1969
20 வாரங்கள் மேல் ஓடிய படம் .
*******************************************
அன்பே வா - 1966
ஒளிவிளக்கு - 1968
நம்நாடு - 1969
http://i60.tinypic.com/25kucqs.jpg
100 நாட்கள் ஓடிய படங்கள்
********************************
பாக்தாத் திருடன்
தாய் சொல்லை தட்டாதே
திருடாதே
தாயை காத்த தனயன்
பெரிய இடத்து பெண்
நீதிக்கு பின் பாசம்
வேட்டைக்காரன்
பரிசு
பணக்கார குடும்பம்
தெய்வத்தாய்
படகோட்டி
ஆயிரத்தில் ஒருவன்
முகராசி
பெற்றால்தான் பிள்ளையா
காவல்காரன்
ரகசிய போலீஸ் 115
குடியிருந்த கோயில்
****************************
4 அரங்கில் வெளிவந்து 4 அரங்கிலும் தொடர்ந்து 100 காட்சிகள் என்று 400 காட்சிகள் நிறைந்த படம்
அடிமைப்பெண் - 1969.
10 அரங்கில் மேல் 100 நாட்கள் ஓடிய படங்கள்
************************************************** *******
எங்க வீட்டு பிள்ளை
குடியிருந்த கோயில்
அடிமைப்பெண் .
பொற்கால சாதனை துளிகள்
**************************
திருடாதே - சமுதாய சீர்திருத்த படம் .1961
பாரத பிரதமர் - மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிக மன்றத்தை அந்தமானில் துவக்கி வைத்தது .1966
மக்கள் திலகம் இலங்கை சுற்று பயணம் .-1966
1967ல் மரணத்தை வென்று திமுகவை ஆட்சியில் அமர்த்தி தானும் சட்ட மன்ற உறுப்பினராக
தேர்ந்தேடுக்கபட்டது .
மக்கள் திலகத்தின் 100 வது படம் - ஒளிவிளக்கு - 1968
மாநில அரசின் சிறந்த படம் - சென்னை சினிமா ரசிகர்கள் சங்க சிறந்த படம் - பிலிம் பேர் விருது
எங்கவீட்டு பிள்ளை - படகோட்டி - அன்பே வா - பறக்கும் பாவை - ஆயிரத்தில் ஒருவன்
ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - அடிமை பெண் - நம்நாடு .
வண்ணப்படங்கள் ரசிகர்களின் மாபெரும் ஆதரவு பெற்றது .
1963- 1966 இரண்டு வருடங்களில் 9+9= 18 படங்களில் எம்ஜிஆர் நடித்தார் .
பொற்கால தமிழ் சினிமாவின் பொற்கால சிற்பி மக்கள் திலகம் .
http://i1170.photobucket.com/albums/...ps362f383b.jpg
தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்?
தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், ‘கருணாநிதி, கருணாநிதி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்&தான். ‘கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது’ என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.
இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், ‘உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, ‘நான் ஆண்டவன்தான்’ என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்-கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்து-கொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்து-கொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும்.
courtesy junior vikatan kalukar pathilgal
பொற்கால சிற்பியின் படங்கள் 1960-1969 ஒரு வரி விமர்சனம் .
பாக்தாத் திருடன் - ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளை அடித்தவன் .
ராஜா தேசிங்கு - செஞ்சி வரலாற்றை கண் முன் நிறுத்திய படம் .
மன்னாதி மன்னன் - மக்கள் இதயங்களில் நிறைந்தவன் .
அரசிளங்குமரி - சின்ன பயலே ..சின்னபயலே ஒரு பாடல் போதுமே ..
திருடாதே - சமுதாய சீர்திருத்த படம்
சபாஷ் மாப்பிளே நகைச்சுவையில் மக்கள் திலகம் ஜொலித்தார் .
நல்லவன் வாழ்வான் - வாழ்ந்து காட்டினார் .
தாய் சொல்லை தட்டாதே தேவருக்கு மறு வாழ்வு . எம்ஜிஆருக்கு தொடர் வெற்றிகள் .
மாடப்புறா - மனதில் கொண்ட ஆசைகள் - மறந்துபோய் விட்டது
ராணி சம்யுக்தா - சரித்திர படம் - நினைவில் நிற்கும் படம் .
தாயை காத்த தனயன் தேவரின் ஹாட்ரிக் படம் .
குடும்ப தலைவன் அருமையான படம் .
பாசம் எம்ஜிஆரின் நடிப்பு - பலரது கண்களை திறந்தது .
விக்கிரமாதித்தன் சற்று வித்தியாசமான படம் .எம்ஜிஆரின் பல மொழி பேசிய ஆற்றல் .
பணத்தோட்டம் இன்னிசை சித்திரம் .
கொடுத்து வைத்தவள் எம்ஜிஆரின் நடிப்பு பிரமாதம் .
தர்மம் தலை காக்கும் மும்முறை காத்தது .
கலை அரசி புதுமையான படம் .
நீதிக்கு பின் பாசம் குடும்ப கதையில் மீண்டும் மக்கள் திலகம் .
ஆனந்த ஜோதி பிரகாசம்
காஞ்சித்தலைவன் பல்லவனின் பெருமை .
பரிசு விலை மதிப்பில்லாதது .
பெரிய இடத்து பெண் மக்கள்விரும்பினார்கள் .
வேட்டைக்காரன் பலரை வென்றான்
என்கடமை பல தடங்கல்கள் .
பணக்கார குடும்பம் ராமண்ணாவின் அமுத சுரபி
தெய்வத்தாய் மாறன் - வெற்றி மாறன்
தொழிலாளி உழைப்பாளி
படகோட்டி மீனவ சமுதாயத்தின் நண்பன்
தாயின் மடியில் பாசமிக்கவன்
எங்க வீட்டு பிள்ளை அன்றும் - இன்றும் - என்றும்
பணம் படைத்தவன் ஆடம்பரம் இல்லாதவன் .
ஆயிரத்தில் ஒருவன் அகிலமே கூறியது ...நீ ஆயிரத்தில் ஒருவன் .
கலங்கரை விளக்கம் மக்களுக்கு என்றென்றும்
கன்னித்தாய் ஏற்று கொண்டார்கள்
தாழம்பூ நல்ல நறுமணம் .
ஆசைமுகம் கோடிக்கணக்கான ரசிகர்களின் ...
அன்பே வா உயர்தர உன்னத காவியம் .
நான் ஆணையிட்டால் 1977 என்றது காலம் .
முகராசி உலகமே வியக்கிறது .
நாடோடி சிறந்த காதல் கதை
சந்திரோதயம் உதயாமனது
தாலிபாக்கியம் புதுமையான கதை
தனிப்பிறவி உண்மை /.
பறக்கும் பாவை சிறந்த பொழுது போக்கு படம் .
பெற்றால்தான் பிள்ளையா உணர்வுபூர்வமான படம்
தாய்க்கு தலைமகன் மீண்டும் ஒரு குடும்ப படம்
அரசகட்டளை ஏற்று கொண்டார்கள்
காவல்காரன் கெட்டிக்காரன்
விவசாயி பாராட்டுக்குரியவன்
ர.போலீஸ் 115 ஜாலியான படம்
தேர்த்திருவிழா கொண்டாட்டம்
குடியிருந்த கோயில் ரசிகர்களின் உள்ளங்களில்
கண்ணன் என் காதலன் காவியமானவன்
கணவன் கண்ணியமானவன்
புதியபூமி சகாப்தம் படைத்து .
ஒளிவிளக்கு சுடர் விட்டு எரிகிறது
காதல் வாகனம் காதலர்களுக்கு ..
அடிமைப்பெண் அகிலமே வியந்தது
நம்நாடு நானிலம் போற்றியது .
சைலேஷ் சார்
தியாகத்தின் வெற்றி என்ற படத்தின் துவக்க நாள் அன்று எடுக்கபட்ட ஸ்டில் .
http://i61.tinypic.com/2mzf5mf.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
துடிப்பான நடிகரின் மிடுக்கான தோற்றம் ரகசிய போலீஸ் 115
http://i61.tinypic.com/256v5op.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/287qkns.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
மக்கள்திலகத்தின் போஸ்டர் ஓட்டுபவர் திரு ஹரி கிருஷ்ணன் அவர்கள்
http://i61.tinypic.com/9k1g8z.jpg
http://i60.tinypic.com/1z6r53q.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
வடஆற்காடு மாவட்ட மக்களதிலகம் எம்ஜிஆர் கலைக்குழு அவர்களால் 1965 & 1966 காலகட்டங்களில் நம் தலைவனின் records திருவண்ணாமலையில் செய்த சாதனை உங்கள் பார்வைக்கு
http://i58.tinypic.com/2yljy89.png
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 "சவரன்" தங்க வாள் பேரறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்டது. பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.
வினோத் சார் அந்த வீரவாள் பரிசாக தாய் மூகாம்பிகை கோயிலுக்கு தலைவர் அவர்களால் வணங்கப்பட்டது போன வருடம் அலுவல் காரணமாக மங்களூர் சென்றபொழுது நான் மூகாம்பிகை கோயிலுக்கு போய்ட்டு வந்தேன் அப்பொழுது தான் தலைவர் அவர்களால் வழங்கிய அந்த வீர வாள் முலஸ் தானத்திற்கு பக்கத்தில் குறிப்போடு வைக்கப்பட்டுள்ளது மேலும் கோயிலின் ஸ்தல வரலாற்று புத்தகத்திலும் இந்த வீரவாள் பற்றிய குறிப்பு உள்ளது . மேலும் தலைவர் உயிரோடு இருக்கும் காலம் வரை அங்கு தினம் அன்னதானம் செய்ய பட்டுள்ளது .
கோவை மாநகர நாடோடிமன்னன் மறு வெளியிடு சாதனைகள்
fun சினிமாஸ் தினமும் இரவு காட்சி 22.03.13 to 28.03.13
18.03.2011 கோவை மாநகரில் 18.03.2011 to 24.03.2011
http://i1170.photobucket.com/albums/...psae6bd454.jpg
http://i1170.photobucket.com/albums/...ps9d923d21.jpg
http://i1170.photobucket.com/albums/...psf349fed8.jpg
1960,1970 களில் நான் பிறந்ததில்லை அதனால் அப்பொழுது சாதனைகள் படித்தது உண்டு ஆனால் 2014 நம் தலைவரின் திரைக்காவியம் 100 மேற்பட்ட தியேட்டர் களில் திரையீடுவதை கண்டு அக் காலகட்டத்தில் நம் தலைவரின் காவியங்கள் வசூலில் சுனாமியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
ஆயிரத்தில் ஒருவனின் இந்த மறு வெளியீடு சாதனை முறியடிக்க யாரால் முடியும் நம் தலைவரால் மட்டும் முறியடிக்க முடியம்
http://i1170.photobucket.com/albums/...ps8418145b.jpg
http://i58.tinypic.com/2d2jbbs.jpg
FORWARDED BY MR.MALARAVAN, DINDUGAL