http://i58.tinypic.com/m8mxsj.jpg
Printable View
VIDEO--THANKS- SAILESH SIR
http://youtu.be/bovmijc_foY
இன்று (20/02/2015) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ), புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வெற்றிப்படமான "குமரிக்கோட்டம் " தினசரி 3 காட்சிகள்
திரையிடப்பட்டுள்ளது. அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i62.tinypic.com/wilpi1.jpg
வரும் ஞாயிறு அன்று (22/02/2015) பிற்பகல் 2.30 மணியளவில் , சென்னை
ராஜா அண்ணாமலை மன்றத்தில், ஷாநாஸ் ஸ்ருதி அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு
புரட்சி தலைவரின் பாடல்கள் இடம் பெறும்.
அதன் சுவரொட்டி நண்பர்களின் பார்வைக்கு.
http://i57.tinypic.com/20trl6q.jpg
http://i1170.photobucket.com/albums/...ps927ae304.jpg
which year anybody guess?
நண்பர் திரு.வேலூர் ராமமூர்த்தி அவர்களின் முகராசி 100 வது நாள், விருதுநகர் 3 வது வாரம் -ஆங்கிலத்தில் , 40-க்கு மேற்பட்ட சென்டர்கள் விவரம் பதிவுகள் கண்டு ஆனந்தம். நன்றி.
நண்பர் திரு. முத்தையன் அவர்களின் பறக்கும் பாவை, அன்பே வா, பெரிய இடத்துப் பெண் ஸ்டில் தொகுப்பு பிரமாதம்.
நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் மன்னாதி மன்னன் கட்டுரை அருமை.
தங்களின் விமர்சனங்கள், பாராட்டுக்களுக்கு நன்றி.
நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்கள் பதிவிட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகைப்பட தொகுப்பு , அரிய பொக்கிஷம். மிகவும் நன்றி. சில படங்கள் இதுவரை பார்த்திராதவை.
நண்பர் திரு. வினோத் அவர்களின் புள்ளி விவரங்கள், விமர்சனங்கள் வரவேற்கத் தக்கது.
நண்பர் திரு. செல்வகுமார் அவர்களின் பதிவான தினகரன் பத்திரிகையில் வெளியான புரட்சி தலைவர் புகைப்படம், செய்தி இருட்டடிப்பு பற்றி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தாங்கள் அளித்த பதிலுக்கு நன்றி.
நண்பர் திரு. சத்யாவின் பதிவுகள், கற்பனை நயமிக்கவை, எவராலும் பதிவிட
முடியாதவை. கனத்த நன்றி.
நண்பர் திரு. தெனாலிராஜன் அவர்களின் கவிதைகள் அனைவரின் கண்களை
கவரும் விதமாக உள்ளது.
ஆர். லோகநாதன்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூல் வெளியீட்டு விழா - தொடர்ச்சி....
------------------------------------------------------------------------------------------------------------
திரு. மு. தாண்டவன் (துணை வேந்தர், சென்னை பல்கலை கழகம் ):
நம் அனைவருக்கும் வாத்தியார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பற்றிய
நூல் இன்று வெளியிடப்பட உள்ளது. அவரது நடிப்பு, பாடல்கள், அரசியல் உலகில்
செயல்பாடு ஆகியன பற்றி மிக அழகாக ஆசிரியர் எழுதியுள்ளார்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து , நான் டாக்டரேட்
பட்டம் வாங்கியுள்ளேன். 1979-80ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை கருப் பொருளாக வைத்து ஆராய்ச்சி செய்தேன். அப்போது பல பேர் ஏசினர், கேலியும்,
கிண்டலும் செய்தனர். எம்.ஜி.ஆர். பற்றி ஆராய்ச்சியா ? என கேள்வி எழுப்பினர்.
நான் என்னுடைய பிறவிப்பயனாக கருதி ஆராய்ந்து, முடித்து வெற்றி பெற்றேன்.
1983ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது.
எனக்கும் அதே வருடம் டாக்டர் பட்டம் கிடைத்தது.குறித்து மிக்க மகிழ்ச்சி.
ஆரம்ப காலத்தில், நடிகர் எம்.ஆர். ராதா அவர்களின் ரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு
தலைமை தாங்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வந்தபோது 2 பர்லாங்கு
தூரத்தில் இருந்து பார்த்து பக்தனாக ரசித்தேன். இப்போது நான் துணை வேந்தர்
ஆனாலும், அப்போது போலவே , இப்போதும் அவரது பக்தன் தான்.
தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களில் யார் பாடல் எழுதினாலும், பாடினாலும், இசை அமைத்தாலும்,வசனம் எழுதினாலும், ஒளிப்பதிவு செய்தாலும், இயக்கினாலும்,
சண்டை காட்சிகள் அமைத்தாலும் , அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
திறமை, ஈடுபாடு, ஆர்வம், யோசனை, பங்களிப்பு, போன்றவற்றால்தான்.
அதனால்தான் அன்றும், இன்றும், என்றும் அவரது படங்கள் ரசிகபெருமக்களால்
பெரும் ரசனையோடு ரசிக்கப்படுகிறது.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தன் சிறு வயது காலத்தில், தாய் வெளியே சென்று
வீட்டுக்கு திரும்ப நேரமாகிவிட்டால், பசியால் துடிக்கும்போது பெரியவர் (அண்ணன் ) கொண்டுவந்து தரும் கஞ்சியை பருகுவார். அதாவது சிறு வயதில்
தன் தந்தையை இழந்ததால், அண்ணனை தந்தையாகப் பார்த்தார்.
இருவரும் நன்கு வளர்ந்தபோதும் அந்த பாசப் பிணைப்பு தொடர்ந்தது.
பெரியவருக்கும், தன் தம்பி மேல் அளவிட முடியாத பாசம் இருந்தது.
ராஜா சந்திரசேகர், எம்.கே. ராதா, என்.எஸ். கிருஷ்ணன், ஆகியோர் தான் , நான்
சினிமாவில் முன்னுக்கு வர காரணமாக இருந்தனர் அவர்களுக்கு நான் மிகவும்
நன்றி கடன்பட்டுள்ளேன்., என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எழுதிய
"நான் ஏன் பிறந்தேன் " புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அ. தி. மு. க. கட்சியை தோற்றுவித்த சமயத்தில் தன் கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம் என்று அறிவித்தார்.
அதாவது, காந்தியிசம், ஹியுமணிசம் ,சோசியலிசம் , கம்யுனலிசம்
சேர்ந்த கலவைதான் அண்ணாயிசம்.
முதல் உலகத் தமிழ் மாநாடு, மலேசியாவில் நடைபெற்றது. 2 வது உலகத்
தமிழ் மாநாடு, சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் நடைபெற்றது. மதுரையில், உலகத் தமிழ் மாநாடு, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
தலைமையில், பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் நடைபெற்றது.
இப்போதைய அ. தி. மு. க. ஆட்சியில், மதுரையில் தமிழ் சங்கத்தில், தமிழன்னை
சிலை 100 அடி உயரத்தில் வைக்கப்பட உள்ளது.
துணைவேந்தர் பொறுப்பில் உள்ள நான், இந்த நூலை முதல் நபராக வாங்கிட
பெருமைப்படுகிறேன்.
தொடரும் ...!!!!!