பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று அடிக்கபட்டுள்ள போஸ்டர்கள்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...58195073_o.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Printable View
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று அடிக்கபட்டுள்ள போஸ்டர்கள்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...58195073_o.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று தியேட்டர் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...5fa72eab56be0d
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று தியேட்டர் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...47093629_o.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் படத்தின் வசூல் விபரத்துடன் தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...75da9b2ad17dbd
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
http://i818.photobucket.com/albums/z...psxvfptyg4.jpg
மலர்ந்தும் மலராத அந்த காலைப்பொழுதில் பத்திரிகை படிப்பதில் சற்றே கவனம் செலுத்தினேன் - மேலே உள்ள படம் என் மனதை கசக்கி பிழிந்தன - அடிக்கடி நடக்கும் விஷயங்கள் என்றாலும் - படிக்கும் போது வரும் கண்ணீரை தடுத்துக்கொள்ள முடியவில்லை . விவசாயத்தை பற்றியும் விவசாய்களின் முக்கியத்துவத்தை பற்றியும் எவ்வளவு பாடல்கள் - நடிகர் திலகத்தின் ஒவ்வொரு பாடல்களும் ஏழை விவசாயியை எழுப்பி நிறுத்தின - தன்னம்பிக்கையை ஊட்டின - பாடல்களை கேட்ட விவசாயி ஏரையும் , கலப்பையையும் உறுதியாக நம்ப ஆரம்பித்தான் - வாழ்வின் வளத்தை பெருக்கினான் - வாழ்வை முடித்துக்கொள்ள மரங்களை தேட வில்லை - கிருஷ்ணாயில் வீட்டில் இருந்தது அவன் உடம்பில் அல்ல ; தீக்குச்சிகள் அவன் வீட்டில் விளக்கேற்றி வெளிச்சத்தை தந்தன - அவன் உடலை ருசிக்க விரும்பவில்லை ... அன்று மரணம் அவன் அறியாத ஒன்று - தற்கொலைகளை அவன் விற்க விரும்பவில்லை - தன்மானத்தை பெருக்கிகொண்டான்
இந்த பாடல்களை கேட்டும் பொழுது - திருவள்ளவர் என் வீட்டில் நின்று "post " என்று கூறுவது காதில் விழுந்தது - அவர் போட்ட போஸ்டை பார்த்தேன் - எழுதின திருக்குறள் என்னை பார்த்து சிரித்து " துப்பார்க்கு துப்பாய ------ தூவும் மழை " - இந்த மழைக்கு ஏன் இன்னும் புரியவில்லை - அறுவடை சமயத்தில் வந்தால் , பலரின் வாழ்வுகள் துப்ப படும் என்று !! துப்பப்பட்ட உடல்களின் மீது மலர்கள் மலர முடியாமல் தவித்தன --- ஒரு விவசாயின் தற்கொலையில் பல அரசியல் வாதிகள் சிரிப்பதை கண்டேன் - அவன் சிரித்த பொது தெரிந்த தெய்வம் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டது
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் - ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும் - போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்
( ஆரோடும் மண்ணில் )
மண்ணிலே தங்கம் உண்டு , மணியும் உண்டு , வயிரம் உண்டு
கண்ணிலே காணச்செய்யும் கைகள் உண்டு , வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் கொண்டு பாசம் கொண்டு , பசுமை கொண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராடும் வலிமை உண்டு
சேராத செல்வம் இங்கு சேராதோ , தேனாறு நாடில் எங்கும் பாயாதோ
( ஆரோடும் மண்ணில் )
பச்சை வண்ண சேலை கட்டி , முத்தம் சிந்தும் நெல்லமா
பச்சை வண்ண சேலை கட்டி , முத்தம் சிந்தும் நெல்லமா
பருவம் கொண்ட பொன்னை போலே நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா----
அண்ணன் தம்பி நால்வர் உண்டு என்னவேண்டும் கேளம்மா - அறுவடை காலம் உந்தன் திருமண நாளம்மா -
திருமண நாளம்மா -
போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்
( ஆரோடும் மண்ணில் )
கைகட்டி சேவை செய்து , கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு , பொய் சொல்லி பிச்சை கேட்டால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது , பேர் சொல்லும் புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது
போர் செய்யும் வீரன் ஏது ?
போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்
( ஆரோடும் மண்ணில் )
நடிகர் திலகத்தின் நம்பிக்கை ஊட்டிய பாடல்கள்
ஏரு பெரிசா - இந்த ஊரு பெருசா - சொல்லடி நெல்லு பெரிசா ,பயங்க சொல்லு பெரிசா ?
-------
நீரோட்டம் இல்லையென்றால் ஏரோட்டம் நின்று போகும் - ஏரோட்டம் நின்று போனால் வயத்திர்க்கு சோறோட்டம் என்னவாகும் ??
விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்றால் அது விவசாயி பிரச்சனை :
ஆனால்
அடுத்த தலைமுறைக்கு விவசாயியே இல்லை என்றால் அது யார் பிரச்சனை ?
பழைய கஞ்சியை உண்டு பிரியாணி அரிசியை அறுவடை செய்கிறான் விவசாயி
அவனை அறுவடை செய்கின்ற காலம் மாறவேண்டும் - மாற்றுவோம் , மாறும் காலம் !!
மன வேதனையுடன்
ரவி
இந்த பதிவை மக்கள் திலகத்தின் திரியில் உற்ச்சாகமாக பதிவுகள் போடும் திரு சைலேஷ் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - வீடியோ லிங்க் யை எனக்கு அனுப்பியதற்காக மட்டும் அல்ல , பாடலையும் விட நடிகர் திலகத்தின் நடிப்பை மனமுவந்து ரசித்து பாராட்டினதற்க்காகவும் - நீங்கள் சொன்னது உண்மை திரு சைலேஷ் - பராசக்தியில் உலகத்தை தட்டி எழுப்பிய அவரின் நடிப்பு , இன்றும் உலகத்தை புரிந்து கொள்ளாமல் உறங்கி கொண்டுருப்பவர்களை தட்டி எழுப்பிக்கொண்டுதான் இருக்கிறது - பாடலை பாருங்கள் - 5 வினாடியில் 1000 உணர்ச்சி வெளிப்பாடுகள் - விவேகானந்தராக , இஸ்லாமிய நண்பராக , போலி சாமியாராக - பாடலின் அழகை பாருங்கள் - ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி காட்டியுள்ளார் - இன்றும் போலி சாமியார்களைத்தானே அதிகமாக நம்பி கொண்டிருக்கின்றோம் - அவர்களால் மிகவும் சுலபமாக நம்மை emotional blackmail பண்ண முடிக்கின்றது - இந்த பாடல்கூட இவருக்கு தேவை இல்லை - 5வினாடியில் body language மூலம் இந்த உலகம் உள்ளவரையில் தேவைப்படும் நீதி போதனைகளை தந்திருப்பார் - the irony is , பாடல்களை மட்டுமே நாம் ரசிக்கின்றோம் - நீதி போதனைகள் காற்றில் கரைந்து விடுகின்றன ....
மீண்டும் என் நன்றிகள்
அன்புடன் ரவி
https://youtu.be/1sFvW14cCas
இன்று ஏற்பட்ட நில நடுக்கம் பல அப்பாவி உயிர்களை பரித்துக் கொண்டது - மனித நேயம் - பார்க்காத முகங்கள் , பேசிஇருக்காத உறவுகள் - நம்மிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டன - அந்த இனம் தெரியாத ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் . இரு திலகங்களுக்கும் , நேப்பாளுக்கும் என்றுமே ஒரு உறவு உண்டு - அந்த உறவின் அடிப்படையில் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கு பதிவிட்டுக்கொள்கிறேன் .
அன்புடன்
ரவி
ANANDAVIKATAN - 12th APRIL 1959
http://i501.photobucket.com/albums/e...psrlwmfqvz.jpg
MADHI OLI - 07-02-1975 - - CONTRIBUTION FOR DRAUGHT RELIEF, RAMANATHAPURAM
http://i501.photobucket.com/albums/e...psgd7ukc5s.jpg
திலக சங்கமம்
http://upload.wikimedia.org/wikipedi...tha_methai.jpg
பொம்மைக் கல்யாணத்திற்குப் பிறகு சற்றே நீண்டு விட்ட இடைவெளி... எஸ்.எம்.சுப்பய்யா நாயடு, ஜி.ராமநாதன், டி.ஜி.லிங்கப்பா, எஸ்.ராஜேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராம மூர்த்தி, எஸ்.வி.வெங்கட்ராமன், டி.ஆர்.பாப்பா, என பல இசையமைப்பாளர்கள் நடிகர் திலகத்தின் படங்களில் பணிபுரிந்தனர். சுமார் 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இணைந்த நடிகர் திலகம் கே.வி.எம். கூட்டணி, அதன் பிறகு திரும்பிப் பார்க்க்வேயில்லை. தொடர்ந்து பல்வேறு படங்களில் இணைந்தனர். அதற்கு பலமான அஸ்திவாரமாய் அமைந்தது பாலா பிக்சர்ஸ் படிக்காத மேதை. விஸ்வநாதன் -ராமமூர்த்தியுடன் நல்ல chemistryயுடன் பணிபுரிந்து வந்த பீம்சிங் அவர்கள் முதன் முதலாக கே.வி.எம். இசையமைக்க நடிகர் திலகம் படத்தை இயக்கினார்.
படிக்காத மேதை - அனைத்துத்துறையிலும் முத்திரை பதித்த உன்னதத் திரைக்காவியம்.. குறிப்பாக திரை இசைத்திலகத்தின் பணி இப்படத்தில் மிகவும் குறப்பிட்டுப்பாராட்ட வேண்டிய ஒன்று.
இதில் நடிகர் திலகத்திற்காக டி.எம்.எஸ். பாடிய இப்பாடல் என்றென்றும் அவருடைய குணத்தை சித்தரிப்பது போல் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இப்பாடலின் காணொளி இங்கே..
https://www.youtube.com/watch?v=K1I3c64ieBs
பாவமன்னிப்பு 51 - பாகம் 7
43. சென்னை சாந்தி திரையரங்கில் வெளியான முதல் சிவாஜி படம் என்கின்ற பெருமையைப் பெரும் இக்காவியம் இங்கே வெள்ளிவிழாக் கொண்டாடியது. தவிர, சென்னை மற்றும் தென்னகமெங்கும் 14 திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்தது. முதல் வெளியீட்டில் சற்றேறக்குறைய 40 பிரிண்டுகள் போடப்பட்ட இக்காவியத்தின் கிட்டத்தட்ட அனைத்து பிரிண்டுகளும் 50 நாட்களைக் கடந்தது. அயல்நாடான இலங்கையிலும் 100 நாள் விழாக் கொண்டாடியது.
44. "பாவமன்னிப்பு" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 177 நாட்கள்
2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா - 127 நாட்கள்
3. சென்னை - ராக்ஸி - 107 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் - 141 நாட்கள்
5. சேலம் - ஓரியண்டல் - 127 நாட்கள்
6. திருச்சி - ராஜா - 120 நாட்கள்
7. கோவை - கர்னாடிக் - 100 நாட்கள்
8. காஞ்சிபுரம் - கண்ணன் - 100 நாட்கள்
9. வேலூர் - ராஜா - 100 நாட்கள்
10. நெல்லை - ராயல் - 101 நாட்கள்
11. நாகர்கோவில் - பயோனீர்லக்ஷ்மி - 101 நாட்கள்
12. ராமனாதபுரம் - சிவாஜிடூரிங் - 100 நாட்கள்
13. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 133 நாட்கள்
14. பெங்களூர் - ஆபெரா - 133 நாட்கள்
15.திருவனந்தபுரம் - பத்மனாபா - 100 நாட்கள்
16. கொழும்பு - கிங்ஸ்லி - 115 நாட்கள்
45. உலக சினிமா வரலாற்றில், ஒரு டூரிங் டாக்கீஸில் 100 நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் "பாவமன்னிப்பு" [ராமனாதபுரம் - சிவாஜி டூரிங்].
46. தமிழ்த் திரைப்பட வரலாற்றில், ஒரு ஏர்கண்டீஷண்ட்(ஏசி) டீலக்ஸ் திரையரங்கில், வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் திரைப்படம் "பாவமன்னிப்பு". [அரங்கம் : சென்னை - சாந்தி]
47. சிங்காரச் சென்னை மாநகரின் வரலாற்றில், முதன்முதலில், ஒரு தமிழ்த் திரைப்படம், அதன் முதல் வெளியீட்டில், மொத்த வசூலாக ரூ.10,00,000/- ஈட்டியது இந்தப்படத்தில் தான். சாந்தி(177), ஸ்ரீகிருஷ்ணா(127), ராக்ஸி(107) என வெளியான மூன்று திரையரங்குகளிலும் மொத்தம் ஓடிய 411 நாட்களில் இக்காவியம் அள்ளி அளித்த மொத்த வசூல் ரூ.10,51,697-10பை. [இன்றைய பொருளாதார நிலையில் இத்தொகை பற்பல கோடிகளுக்குச் சமம்.]
48. 1961-ம் ஆண்டின் தலைசிறந்த, ஈடு இணையற்ற வசூல் சாதனைப் படமாக - Box-Office Himalayan Record படமாக - ஒரு புதிய வசூல் புரட்சியை ஏற்படுத்திய படம் "பாவமன்னிப்பு".
49. நடிகர் திலகத்தின் திரைப்பட பாக்ஸ்-ஆபீஸ் சாதனைகள் வரலாற்றில், சென்னை மாநகரில் மட்டும் அவருக்கு மொத்தம் 10 படங்கள் வெள்ளிவிழாக் கொண்டாடியுள்ளன. அவரது சென்னை மாநகர வெள்ளிவிழாப் பட்டியலுக்கு பிள்ளையார்சுழி போட்ட படம் "பாவமன்னிப்பு".
50. "பாவமன்னிப்பு", மதங்கள் மனங்களை பிரிக்கக்கூடாது, அவை இதயங்களை இணைக்கும் பாலங்களாக இருக்க வேண்டும் என்கின்ற உயர்ந்த தத்துவத்தை உறுதியோடு வலியுறுத்திய காவியம். 'அனைத்து ஆயுதங்களையும் விட அன்பே சிறந்த ஆயுதம்' எனும் மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையை போதித்த உன்னத சித்திரம். மதஒற்றுமையை, ஒருமைப்பாட்டை வலியுறுத்தி அதற்கு என்றென்றும் தலைசிறந்த எடுத்துக்காட்டாக திகழும் திரைஓவியம்.
51. 16.3.2011 புதன்கிழமையன்று "பாவமன்னிப்பு" திரைக்காவியம் தனது பொன்விழா ஆண்டினை நிறைவு செய்து 51வது ஆண்டில் மிக மிக வெற்றிகரமாக பீடு நடை போடுகின்றது. எக்காலத்தையும் வெல்கின்ற, எந்தத் தலைமுறையையும் ஈர்க்கின்ற தலைசிறந்த காவியமாக மென்மேலும் பற்பல விழாக்களை இக்காவியம் காணப் போவது திண்ணம்.
நன்றி பம்மல் R. சுவாமிநாதன்
(நிறைவு)
இது நான்கு வருடங்களுக்கு முன்பு சுவாமி எழுதியது. எத்தனை வருடங்கள் கடந்தாலும் பாவ மன்னிப்பு பற்பல வெற்றிகளை கொண்டாடி பல்வேறு விழாக்களை காணும் என்று சொல்லியிருந்தார். அது முக்காலும் உண்மை எனபதற்கு அடையாளமாகத்தான் மதுரை சென்ட்ரலில் இப்போது வெற்றி முரசு கொட்டுகிறது பாவ மன்னிப்பு.
அன்புடன்
பாவ மன்னிப்பு - மதுரை சென்ட்ரல் – இன்று – 25.04.2015
இரண்டாம் தினமும் சாதித்தார் ரஹீம். பொதுவாக இன்றைய காலகட்டத்தில் தமிழக நகரங்களில் வெள்ளியன்று மறு வெளியீடு காணும் படங்கள் இரண்டாம் நாள் சனிக்கிழமையன்று டல் அடிப்பதுதான் பதிவு. அந்த எதிர்மறை சூழலிலும் மதுரை சென்ட்ரலில் மறு வெளியீடு படங்களின் இரண்டாம் நாள் வசூலில் முதலிடம் பிடித்திருக்கிறது பாவ மன்னிப்பு.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்..
அன்புடன்
Naan Svaasikkum Sivaji - Book Review in today's (26.04.2015) edition of Dinamalar
http://epaper.dinamalar.com/PUBLICAT...15_409_045.jpg