Thanks madhu ! You are right. Corrected!
Printable View
வாசு சார்
உத்தரவின்றி உள்ளே வா..
ஏராளமான புதிய தலைமுறை ரசிகர்களை பாலுவிற்கு உண்டாக்கிய பெருமை படைத்த பாடல்.
குறிப்பாக மாதமோ ஆவணி அந்தக் காலத்தில் பல இளம்பெண்களை பாலாவின் ரசிகர்களாக மாற்றியதை நான் பார்த்திருக்கிறேன்.
உத்தரவின்றி உள்ளே வா வெளியான சென்னை சித்ரா தியேட்டரில் பாவாடை தாவணியுடன் பல கல்லூரி மாணவிகள் பகல் காட்சியில் இந்தப் பாடல் முடிந்தவுடன் எழுந்து போய் விடுவார்கள்.
எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் படங்களோடு இரு துருவம் படமும் தீபாவளிக்கு வெளிவருவதாயிருந்தது. அது தள்ளிப்போய் உத்தரவின்றி உள்ளே வா படத்தோடு வெளியானது. சுமதி என் சுந்தரி வரும் வரையில் சித்ராவில் உத்தரவின்றி உள்ளே வா திரையிடப்பட்டது என நினைவு.
அந்தப் பொங்கலில் நமக்கு ஒரே சமயத்தில் மவுண்ட் ரோட்டில் மூன்று தியேட்டர்களில் தலைவரின் படங்கள் - சாந்தியில் எங்கிருந்தோ வந்தாள், அதற்கு அடுத்த தியேட்டரான தேவி பேரடைஸில் சொர்க்கம், வெலிங்டனில் இருதுருவம்.
மறக்க முடியாத நாட்கள்.
இப்போது படத்திற்கு வருவோம். காலேஜ் ஹாஸ்டலில் மதிய வேளையில் கிராமஃபோன் ரிக்கார்டுகளில் பாடல்களைப் போடுவார்கள். சில நாட்கள் சாப்பிடக் கூட மறந்து விடுவேன். நேராக ஹாஸ்டலுக்கு போய் பாட்டுக் கேட்பது தான் முதல் வேலை. ஒரு மணி நேரம் போவது தெரியாது. அதில் தான் ஏராளமான பாடல்கலைக் கேட்டு ரசித்திருக்கிறேன். அதில் உத்தரவின்றி உள்ளே வா பாடலுக்கு தனியிடம் உண்டு. அதுவும் அந்த பகல் வேளையில் இந்த மாதமோ ஆவணி பாடலைக் கேட்டால் அப்படியே உண்ட களைப்புடன் பல நண்பர்கள் தூங்கியே விடுவார்கள். அப்படி ஒரு சொக்க வைக்கும் பாடல். உத்தரவின்றி உள்ளே வா பாடலை எப்போது கேட்டாலும் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்து விடுகின்றன. அப்படி ஒரு சூப்பர் ஹிட் மியூஸிகல் திரைப்படத்தின் முதல் பாடலை அட்டகாசமாக எழுதியிருக்கிறார்கள்.
தங்களுக்கு பாராட்ட சொல்வதற்கும் எங்களுக்கு நீங்களே பாடம் எடுத்து விடுங்கள். மொழியில் வார்த்தைகள் தெரியாமல் தவிக்கிறோம்.
//தங்களுக்கு பாராட்ட சொல்வதற்கும் எங்களுக்கு நீங்களே பாடம் எடுத்து விடுங்கள். மொழியில் வார்த்தைகள் தெரியாமல் தவிக்கிறோம் // ட்ரூ.. ஒரு விஷயம் எழுதறதோ ஒரு கவிதை கதை கட்டுரை எழுதறதோ எனக்கு க் கொஞ்சம் மெனக்கெட்டா வந்துடும்.. அதாவது வந்தது போலக் காண்பிக்கும்..ஆனா ஒரு பாட்டு ந்னு ஒண்ணு எடுத்து..
அதை சின்சியரா அனலைஸ் பண்ணி(அதுக்காக குப்பையாய் இருந்தாலும் படத்தைப் பார்த்து) ஒவ்வொருவரி, ஒருவாயசைப்பு,லொக்கேஷன் டைமிங்க்ஸ் எல்லாம் சொல்றதுங்கறது கொஞ்சம் கஷ்டம் தான் (அதுவும் நகைச்சுவை கலந்து) இதுல பக்கெட்-ஃப்ரோஷன் ஷாட் எடுத்து அதைப் போடுவது- பின் கலர் கலர் எழுத்துக்களுக்கு ஃபாண்ட் கலர்னு கமெண்ட் கொடுத்து..
பின் வரிவரியா ஸ்பெல் செக் பண்ணிப் போடறதுங்கறது க்ரேட் தான்..எதுக்காக இந்த மாதிரி பண்ணனும்..
நம் போன்ற நண்பர்களுக்காகவா.. படிக்கும் வாசகர்களுக்காகவா..
ஆமாம் என்றாலும் இன்னொன்றும் உண்டு..எதை எழுதுவதானாலும் சுவாரஸ்யமாக இ ருக்க வேண்டும், இன்னிக்கு மட்டும் படிச்சுட்டு யர்ரும் மறந்துடக் கூடாது -பின்னால பலவருஷம் கழிச்சுப் படிச்சாலும் நமக்கும் சுவாரஸ்யமா இருக்கவேண்டும்- பிறருக்கும் இருக்க வேண்டும் என மனதுக்குள் தோன்றிய சின்சியாரிட்டி -எழுத்து ஒரு தவம்..அதை இனிதே செய்யவேண்டும் என்ற எண்ணம் -இது எல்லாருக்குமே சுலபத்தில் வாய்க்காது- வாசுவிற்கு ஆரம்ப முதலே வாய்த்திருக்கிறது..எனில் கலக்கிக் கொண்டிருக்கிறார்..ருப்பார்..
வாழ்த்துக்கள் வாசு..நன்றி.. உம்மைத் தெரிவது இனியது :) உம்மைத் தெரிந்தது இனியது எம் வாழ்க்கையில் :)
மிஸ்ஸம்மா (தெலுங்கு)
மிஸ்ஸியம்மா (தமிழ்)
மிஸ் மேரி (ஹிந்தி மற்றும் மலையாளம்)
மலையாளத்தில் பிரேம் நசீர்
ஏ.ஆர்.ரகுமானின் தந்தை திரு ஆர்.கே.சேகர் இசை
எனையாளும் மேரி மாதாவிற்கு இணை
நீ எண்டே வெளிச்சம் இசையரசியின் குரலில். வரிகள் ஸ்ரீகுமாரன் தம்பி
https://www.youtube.com/watch?v=nxaESMvOjkw
பிருந்தவானமும் நந்தகுமாரனும் பாடலின் இணை
மணிவர்ணன் இல்லத்த விருந்தாவனம்
https://www.youtube.com/watch?v=OgH6BhbnpyE
ஜமுனாவின் வேடம் நம் ஜெயாவிற்கு
குமார சம்பவம் திரையில் தேவராஜனின் இசையில் லீலாம்மா மற்றும் ராதா ஜெயலெக்*ஷ்மியின் குரல்களில் மிகவும் கடினமான பாடல்
ஆடல் : ராஜஸ்ரீ மற்றும் ஸ்ரீவித்யா
https://www.youtube.com/watch?v=-v_gM-V1TmM
அடேங்கப்பா!
'உத்தரவின்றி உள்ள வா' படத்துக்கும், அதன் பாடல்களுக்கும்தான் எவ்வளவு ரசிகர்கள்! எத்துணை ரசிப்புத்தன்மை!
பாலா தொடரின் பதிவைப் பாராட்டிய அத்தனை பேருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி!
ஜி, மதுண்ணா, சித்தூரார், வினோத் சார், ராகவேந்திரன் சார், கோபு சார், சின்னா, ஆதிராம் சார் அனைவருக்கும் நன்றிகள்.
ராகவேந்திரன் சார்!
கொன்னுட்டீங்க! சுவையான தகவல்கள். 'உத்தரவின்றி உள்ளே வா' ரிலீஸ்... அவ்வமயம் வெளியான நடிகர் திலகத்தின் 'இரு துருவம்' பற்றிய குறிப்புகள்... (1971 பொங்கலில் நமக்கு ஒரே சமயத்தில் மவுண்ட் ரோட்டில் மூன்று தியேட்டர்களில் நீங்கள் சொன்னபடி தலைவரின் 3 படங்கள் - சாந்தியில் 'எங்கிருந்தோ வந்தாள்', அதற்கு அடுத்த தியேட்டரான தேவி பேரடைஸில் 'சொர்க்கம்', வெலிங்டனில் 'இருதுருவம்'. உத்தரவின்றி உள்ளே வா மற்றும் இருதுருவம் படங்களின் பொங்கல் ரிலீஸின் போது (1971 ஜனவரி 14) சொர்க்கமும், எங்கிருந்தோ வந்தாளும் வெற்றிகரமாக 78 ஆவது நாட்களை தொட்டிருந்தன. இதற்கு முன்னம் நடுவில் நவம்பர் 11-ல் (1970) எனக்கு மிக மிகப் பிடித்த, எங்கள் கடலூரில் ஷூட்டிங் எடுக்கப்பட்ட தலைவரின் 'பாதுகாப்பு' படமும் வெளியாகியிருந்தது அல்லவா! இது போதாது என்று தொடர்ந்து பிப்ரவரி 6 ம்தேதி 'தங்கைக்காக' வேறு ரிலீஸ்.) இளைஞிகளையும் கவர்ந்த 'உத்தரவின்றி உள்ளே வா' பாடல்கள்....ஹாஸ்டலில் பாடல் கேட்டு மகிழ்ந்த அனுபவங்கள்... என்று இனிக்க இனிக்க பசுமையான அன்றைய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு பெருமகிழ்ச்சியில் அனைவரையும் ஆழ்த்தி விட்டீர்கள்.
பதிவுகளுக்கான மேலதிக தகவல்கள் தருவதில் தாங்கள், ஆதிராம் சார், முரளி சார், நமது கார்த்திக் சார் இவர்கள் நால்வரையும் அடித்துக் கொள்ளவே முடியாது.
நான் சிட்டியில் இல்லாததால் இந்த விவரங்களெல்லாம் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. கடலூரோடு கட்டுண்டது என் சினிமா வாழ்வு. பின் 'ஞான ஒளி' தேடித் தேடி பல ஊர்கள். சென்னை நிகழ்வுகளைப் பற்றி நீங்களும், கார்த்திக் சாரும் உங்கள் நினைவலைகளை எழுதும் போது 'அடடா! நாம் சென்னையில் இல்லாது போய் விட்டோமே...இருந்திருந்தால் இவர்களைப் போல பல விஷயங்களை எழுதி அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாமே' என்று சற்று பொறாமை கூட உங்கள் இருவரின் மேல் ஏற்பட்டதுண்டு. ஆனால் சென்னை நிகழ்வுகள், சின்னா, முரளி சாரால் மதுரை நினைவுகள், கிருஷ்ணா சாரால் நெல்லை நினைவுகள் என்று எனக்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டம்தான். அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றி!
ரவியின் 'உத்தரவின்றி உள்ளே வா' நமது இன்னொரு 'சுமதி என் சுந்தரி' என்று சொன்னால் மிகையில்லைதானே?
ஆதிராம் சார்,
'சுடரும் சூறாவளியும்' படத்தின் பாலா பாடல் பதிவைப் படித்துப் பாராட்டியதற்கு நன்றி.
'சுடரும் சூறாவளியும்' பற்றி ரிலீஸ் சமயத்தில் குகநாதன் கூறியதை நன்கு நினைவு வைத்து தக்க தருணத்தில் அதைப் பதிவிட்டு பாலா தொடரின் பதிவைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள். நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. ஜெயா என்றாலே குகநாதன் சொக்கிப் போவார்.:)
குகநாதன் தயாரித்து கதை வசனம் எழுதிய 'தெய்வக் குழந்தைகள்' படத்தில் ஜெய் ஜோடி இவர்.
இந்தப் படத்தில்
'நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லோ
வண்ணங்கள் சூடும் செண்டல்லோ
மின்னலை வீசும் கண்ணல்லோ
வா வா'
என்ற மிக மிக அருமையான பாடல் ஒன்று ஜெயாவுக்கு சுசீலா குரலிலும் சி.ஐ.டி சகுந்தலாவுக்கு ஈஸ்வரி குரலிலும் ஒலிக்கும். என் உயிரான பாடல் இது.
இதே ஜெயா கொஞ்சம் குண்டடித்து 'கிரஹப்பிரவேசம்' படத்தில் சிவக்குமாரின் ஜோடியாக வருவார்.
அருமையான தகவல்களுக்கு நன்றிகள் ஆதிராம் சார்.
தாங்க்ஸ் ராகவ்ஜி... அதிமதுரா அனுராகா பாட்டு ரெண்டு படத்திலும் வருதே ! அதனால் அப்படி நினைத்தேன். அப்படின்னா அது ரீமேக்கா ?
விக்கியில் பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் கன்னடம், தமிழ் இருமொழிகளிலும் எடுத்த படம் என்று கொடுத்திருக்காங்க...
இதில்தானே நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் ? ( பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஆசிரியரைக் காக்கும் மாணவனாக )
இதே கதை மீண்டும் ஜெமினி, சௌகார் நடித்து ஸ்கூல் மாஸ்டராக வந்ததோ ?
ஜி!
மிக அருமையாக 'குட் மார்னிங் சிஸ்டர்' ஞாபகப்படுத்தி ரமாபிரபா நினைவலைகளை தட்டி எழுப்பி விட்டீர்கள்.
ரமாபிரபா
http://i.ytimg.com/vi/Er4ARez4pGk/hqdefault.jpg
http://i1087.photobucket.com/albums/..._004379350.jpg
'லில்லி லல்லி ஜிம்மி ஜிப்பி ரோஸி ரோஸி ராணி' என்று நாய்க்குட்டிகளோடு கொஞ்சி அவைகளை மேய்த்து மகிழும் இளம் அரைப்பைத்திய, சகஸ்வரநாமத்தின் செல்லப் பெண்ணாக, வாரிசுக்காக செல்வத்தின் இரண்டாந்தரமாக கட்டி வைக்க பெரிசுகளால் ஜோதிட முடிவு செய்யப்பட்ட நேரத்தில் 'வாரிசுக்காகத்தான் உங்களை கல்யாணம் செய்துக்கிறேன்...வாரிசு பெற்றுக் கொடுத்ததும் நான் எங்காவது போய் விடுவேன். அப்புறம் நீங்களும், வள்ளி அக்காவும் சுகமாக வாழலாம் ' என்று நம் 'செல்வ'த்தின் மேல் அக்கறை காட்டும் வெகுளி முறைப்பெண் ரத்னாவாக.
http://i1087.photobucket.com/albums/..._000766756.jpg
அக்காள் முறை ஏழை வாணிஸ்ரீ அம்மா சுந்தரிபாயால் கொடுமைப் படுத்தப்படும் போது அவருக்காகப் பரிந்து பேசி, பார்ப்பவர்களையெல்லாம் 'குட் மார்னிங் சிஸ்டர்...குட்மார்னிங் பெரியப்பா...குட்மார்னிங் மம்மி' என்று சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்து கிராக்குத்தனமாய் 'இருளும் ஒளியும்' புரியாத ரமாவாக.
http://i1087.photobucket.com/albums/...61/avasara.jpg
'சூரக்கோட்டை இளையராஜா' என ஜோராக புருடா விடும் திகிடுதத்த ஏமாற்றுப் பேர்வழி நாகேஷிடம் ஏமாந்து மனதையும் பறி கொடுத்து, வெண்மை உடையில் அவருடன் 'வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்' பாடி, இறுதியில் நாகேஷின் களவாணித்தன உண்மை தெரிந்து கலங்கும், இதயங்களைத் தேடி அலையும் பணக்கார பரிதாப மனைவி கமலாவாக.
https://i.ytimg.com/vi/XC-7SeeGYfk/hqdefault.jpg
அறிந்தும் அறியாத, இரண்டுங்கெட்ட வயசு ஸ்கூல் பெண்ணாக டீச்சர் காஞ்சனாவுடன் ஊர் சுற்றி, நாகேஷை விவரம் புரியாமல் 'சாந்தி நிலைய'த்தில் காதலித்து 'கண்கள் தேடுவது...உள்ளம் நாடுவது...மெல்லப் பேசுவது...ஒன்று சேருவது' எனப் பாட்டுப் பாடி மகிழும் பாவாடை சட்டை அணிந்த இளம் பெண் கீதாவாக.
http://padamhosting.me/out.php/i84187_uiuv7.png
'நாதா... நாதா' என்று சர்வசதா காலமும் நாகேஷின் உயிர் எடுக்கும் பூர்வ ஜென்மப் பைத்தியமாக 'உத்தரவின்றி உள்ளே வந்த' மோகினியாக.
https://image.tmdb.org/t/p/original/...A0KK7KYhAB.jpg
'காசேதான் கடவுளடா' கும்பலில் கேட்ட பொருள் கேட்ட மாத்திரத்தில் கிடைக்காத பட்சத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசி துவம்சம் செய்து, தாண்டவம் ஆடி, மயங்கி விழுந்து, பின் தெளிந்து எழுந்து, 'இங்கே என்ன நடந்தது?' என்று அப்பாவியாய் கேள்வி கேட்கும் பைத்திய கேஸ், நாயகி லஷ்மியின் பெயரை தன் பெயராகக் கொண்டு குழப்பம் ஏற்படுத்தும் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் ரமாவாக.
http://i1087.photobucket.com/albums/...55061/vasa.jpg
வி.கே.ஆர். நாகேஷ் இரு 'குக்' களிடம் மாற்றி யாரைக் காதலிப்பது என்று குழம்பி, பெரிய அடுக்கு சாப்பாட்டுக் கேரியரில் நாகேஷ் சதி வேலையால் வி.கே.ஆர் மாற்றிக் கொடுக்கும் பச்சை மீன், முட்டை, கோழி என்று ஏமாந்து, அதையே,சமைத்த வாக்கில் நாகேஷ் தரும் போது ஆனந்தமாய் சாப்பிட்டு மகிழ்ந்து,
(நாகேஷ் ஒவ்வொரு கிண்ணமாக சாப்பாட்டுக் கேரியரை ரமாபிராபாவிடம் திறந்து காட்டும்போது
'இது என்ன சொல்லு?'
எனக் கேட்க அதிலுள்ள அவித்த முட்டையைப் பார்த்து ரமாபிரபா,
'முட்டை' என்று ஆனந்தமாகக் கூற,
அதற்கு நாகேஷ் தரும் பதில்
'ஆமாம்! கோழியே வச்சது':)
எப்படி சிரிக்காமல் இருப்பது?)
நாகேஷின் 'ஜகஜகா'வுக்கு அர்த்தம் புரியாமல் 'என்ன?' என்று கேட்க, நாகேஷ் அதற்கான பதிலை காதில் கிசுகிசுக்க 'ச்சீ ! இவ்வளவுதானா?' என்று அலட்சியம் காட்டி நம்மை அலற வைக்கும் 'வசந்த மாளிகை' ஜமீனின் சராசரி வேலைக்காரி முத்தம்மாவாக.
கணவன் நாகேஷ் (பட்டாக்கத்தி பைரவனின் கைத்தடி) கொஞ்சம் ஜொள்ளுப் பேர்வழி என்று தெரிந்து இரவில் அவனை ஊர் சுற்ற விடாமல் கால்களை கயிற்றால் பிணைத்து கண்காணிக்கும் குழந்தை பெற்ற 'பச்சை உடம்புக்கா(ரி)ர பொசஸிவ் மனைவியாக.
http://i1087.photobucket.com/albums/...7%20natkal.jpg
பாரிஸில் கணவனிடம் மாட்டிக் கொண்டு தப்ப முடியாமல் '47 நாட்கள்' சித்ரவதை அனுபவிக்கும் சிவசங்கரியின் ஜெயபிரதாவை அவனுடன் ஒரு ஹோட்டலில் கண்டு, அவள் நிலைமை புரிந்து, அவனறியாமல் நைஸாக சுண்டு விரல் நீட்டி, அவளிடம் சைகை காட்டி, ஜெயப்பிரதாவை பாத்ரூம் வரச் சொல்லி, அந்தப் பெண்ணின் கதை கேட்டு, பரிதாபப்பட்டு, அவள் தாய்நாடு திரும்ப டாகடர் சரத்பாபு (நிஜ வாழ்க்கையில் ஒரிஜினல் கணவர்) மூலம் உதவி செய்யும் மனிதாபிமானமுள்ள, வாயில் சிகரெட் புகைய, ஜீன்ஸும், ஷர்ட்டும், தொப்பியுமாக கலக்கும் தமிழ் பேசும் நடுத்தர வயதுப் பெண்மணியாக.
இப்படி பலதரப்பட்ட வேடங்களில் சிறப்பாக நடித்து, ஆரம்பத்தில் லூஸுத்தனமான ரோல்களில் நடித்தாலும் அதிலும் வித்யாசம் காட்டி, தெலுங்கிலும் கொடி கட்டிப் பறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை ரமாபிரபாவை மறக்க முடியுமா?
ஜி வணக்கம்
யெஸ் யெஸ் ரமாபிரபா .. மனோரமா, சச்சு இவர்களுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல. தமிழ் தெலுங்கு இரண்டிலும் நன்றாக பேசக்கூடியவர் மிகவும் அற்புத கலைஞர்
ஏனோ தமிழில் இன்னும் நன்றாக பயன்படுத்திக்கொண்டிருக்கலாம் என்பது என் கருத்து ..
வெண்ணிலா நேரத்திலே வேணுகானத்தை மறக்கமுடியுமா ரமாவையும் மறக்க முடியுமா
இப்படி ரமாப் ப்ரபா அனலிஸிஸ் நன்னாயிட்டுப்பண்ணிட்டீங்களே வாசு(என்னோட ஃபேவரிட்- காசே தான் கடவுளடா..மாட்டேன்னு சொல்லாதீங்க அம்புட்டு தான்..:) )
*
வழக்கம் போல மறதி என்னை ஆக்கிரமிச்சுடுத்து.. யோசிச்சாலும் யார் அந்த ஹீரோயின்னு நினைவுக்கு வரலை..அதனாலென்ன பாட் போட்டுடலாம்..
எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ
https://youtu.be/WXElzxBUM9I
இன்னொரு பாட் அதுலயே
மலரைப் போன்ற பருவமே..விழிகள் காட்டி நடப்பதேன்..
https://youtu.be/ZTKHm9Ry6EQ
மெட்ராஸ் டு பாண்டிச்சேரி பார்த்ததில்லை..
கல்பனா தெரியாதா ? ஐயகோ சிக்கா...
ராஜேஷ்... தர்மதேவின்னு சொல்லிட்டீங்க... ஓகே... "நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்" என்று சுசீலாம்மா பாடும் கட்டிலா தொட்டிலா பாட்டுக்கு நடித்தவர் என்றும் சொல்லலாம்.
ஆனால் அந்த மலரைப் போன்ற பாட்டு அந்தக் காலத்து தேசிய கீதமாக இருந்தது.... நினைவுக்கு வருதே!....
இன்னும் கூட அந்த ஃபீலிங்ஸ்...யெஸ்.... அந்த ஃபீலிங்ஸை மிஞ்ச வேற பாட்டு கிடையாது. ! ரவி அண்ட் டி.எம்.எஸ் ராக்ஸ் ! இன்னமும் !
A video clip on MKT:
http://www.youtube.com/watch?v=mt3QY7ifOUA
I will post the songs featured in this clip and also the MKT songs I sing, one at a time ! :)
மதுண்ணா!
http://www.thehindu.com/multimedia/d...LD_257965f.jpg
இந்த 'ஸ்கூல் மாஸ்டர்' படம் அனைவருக்கும் குழப்பத்தை உண்டு பண்ணக் கூடியது. இந்தி, கன்னடம், தமிழ், மலையாளம் என்று வெவ்வ்வேறு கால கட்டத்தில் வந்ததாலும், மொழி மற்றும் டப்பிங், ரீமேக், நடிகர்கள் சம்பந்தமாய் அனைவருக்கும் சந்தேகம் வருவது இயற்கையே.
அதனால் எனக்குத் தெரிந்தவரை இந்த 'ஸ்கூல் மாஸ்டர்' சந்தேகம் பற்றிய விளக்கங்களை இங்கே தருகிறேன். இதோ விவரங்கள்.
http://i1087.photobucket.com/albums/...355064/new.jpg
'ஸ்கூல் மாஸ்டர்' கன்னடத்தில்தான் முதலில் தயாரிக்கப்பட்டது. வெளியானது 1958-ல். (பிறகு தான் இந்தியில்... 1959-ல்) தமிழில் 'டப்' செய்யப்படாமல் நேரிடையாக 'எங்க குடும்பம் பெரிசு' என்ற பெயரில் தமிழில் அதே ஆண்டில் வெளியானது. கன்னடத்தில் நடித்த அதே நடிகர்களே தமிழிலும் நடித்திருந்தனர். கன்னட வாடையாகவே இருக்கக் கூடாதே என்று தமிழில் 'குல தெய்வம்' ராஜகோபாலை காமெடிக்கு போட்டிருப்பார்கள். (கன்னடத்தில் அந்த மொழி நகைச்சுவை நடிகர்) சரோஜாதேவியும் தமிழுக்கு அப்போது பரிச்சயம்.
http://i1087.photobucket.com/albums/...5065/sdfgh.jpg
இதே 'ஸ்கூல் மாஸ்டர்' 1959-ல் இந்தியில் (கரண்திவான், ஷகீலா, சரோஜாதேவி, பந்துலு ) பந்துலு தயாரிப்பில் வெளிவந்த போது இதே ரோலை நடிகர் திலகமே இந்தியிலும் செய்திருந்தார். அப்போது ஒல்லியாக இருப்பார். ('மாஸ்டர்' ரோல் பந்துலுவிற்கே).
1964-ல் மலையாளத்திலும் வெளிவந்த 'ஸ்கூல் மாஸ்டர்' படத்தில் கௌரவ நடிகராக நடித்திருந்தார் சௌகார் ஜோடியுடன். மலையாளத்தில் 5 வருடங்கள் சென்று இப்படம் வந்ததால் இதில் திலகம் சற்று குண்டாகத் தெரிவார். 'ஸ்கூல் மாஸ்டர்' ரோல் 'திக்குரிச்சி சுகுமாரன் நாயருக்கு. இந்தப் படம் வெளிவந்த அதே தேதியில்தான் நடிகர் திலகத்தின் 'பச்சை விளக்கு' படமும் வெளிவந்ததாக நினைவு.
'ஸ்கூல் மாஸ்டர்' மலையாளத்தில் நடிகர் திலகம் நடிப்பு பற்றி.
http://i1087.photobucket.com/albums/...1355063/sm.jpg
இறுதியில் தன் பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஸ்கூல் மாஸ்டர் 'திக்குரிச்சி'யை ரயில்வே ஸ்டேஷனில் கண்டு, வேண்டுமென்றே சிறை பிடித்து, மாஸ்டரின் இழந்த வீட்டிற்கு திரும்ப வரவழைத்து, தான்தான் மாஸ்டரின் சீடன் என்று காட்டிக் கொள்ளாமல் கழுத்தில் அங்கவஸ்திரத்துடன் வேட்டி சட்டை அணிந்து, 'இது நம் வீடுதான்' என்று திகைத்து நிற்கும் மாஸ்டர் தம்பதிகளை மிரட்டுவது போல பாவனை செய்து, சொந்தக் குரலில் மலையாள மொழியை அவ்வளவு அழகாகப் பேசி கலக்கி விடுவார் நடிப்பின் ஆசான்.
'திக்குரிச்சி'யிடம் 'போலாம்' என்று சொன்னவுடன் அவரும் வெளிக் கிளம்ப 'அவிடல்லா' என்று மிரட்டி 'Sit down' என்று சேரில் அமர வைத்து அவர் கையில் ஒரு பேப்பர் தந்து
'இனி ஈ வீடு விட்டுப் போவில்லன்னு எழுதணும்'
என்பார் படுகம்பீரமாக பின்னே கைகள் கட்டியபடி. 'திக்குரிச்சி' சுகுமாரன் நாயர் எழுத பேனா தேடியவுடன்,
'எந்தா...பேனா இல்லே ஹேய்! வல்லிய ஸ்கூல் மாஸ்டர்! (என்ன ஒரு நக்கல்!) ஒரு பேனா இல்லா. ம்...என்ட பேனா'
என்று மாஸ்டர் சிறு வயதில் தனக்கு ஞாபகார்த்தமாகக் கொடுத்த பழைய பேனாவை அவரிடம் நீட்டுவார்.
பின்,
'எழுதணும்... ஈ பேனா வச்சோடு .(என்ன அழகான எக்ஸ்ப்ரெஷன்) எண்ட ஓர்மைக்காயிது கலையாது சூச்சிக்கணும்'
(தப்பாய் இருந்தால் எல்லோரும் ஷமிக்கணும். ஞான் மலையாளம் அறியில்லா.):-D
என்று அந்தப் பேனாவை தன்னிடம் தரும் போது மாஸ்டர் சொன்ன அதே வார்த்தைகளை அவரிடம் சொல்வார்.
அதை வைத்து மாஸ்டர் அது தன்னுடைய மாணவன் ஜோனி என்று தெரிந்து எல்லையற்ற பாசத்தில் நடிகர் திலகத்தைக் கட்டிப் பிடித்து ஆனந்தப்பட, நடிகர் திலகமும் அது 'தான்'தான் என்பதை அமைதியாக தலையாட்டுதல் மூலம் கண்கள் கலங்கிய நிலையில் உணர்த்தி கொஞ்சமாக அழுதபடி மாஸ்டரை தழுவிக் கொள்வாரே!
என்ன உணர்ச்சிமயமான ஒரு காட்சி!
நடிகர் திலகம் ஏற்ற இறக்கங்களுடன் தந்து சொந்தக் குரலிலேயே மலையாளம் பறையும் போது மெய் சிலிர்த்துப் போகிறது. ரொம்ப ஆச்சர்யமாகவும், புதுமையாகவும் இருக்கிறது.
இப்போது நான் மேலே தந்துள்ள 'ஸ்கூல் மாஸ்டர்' இந்தி, மற்றும் மலையாளத் திரைப்படங்களின் நடிகர் திலகத்தின் ஸ்டில்களைப் பாருங்கள். உருவ வித்தியாசத்தை முதலில் உணரலாம். பின் ஒரே காட்சியில் நடிகர் திலகம் இரு மொழிகளிலும் தரும் முக பாவனைகளிலும் வித்யாசம் உணரலாம்.
இதுவல்லாமல் ஜெமினி 'ஸ்கூல் மாஸ்டரா'க நடிக்க, அவருடன் சௌகார் இணைய, தமிழில் மீண்டும் 'ஸ்கூல் மாஸ்டர்' தயாராகி 1973 ல் வெளிவந்தது.
http://i.ytimg.com/vi/dvIQFMz771Q/hqdefault.jpg
'பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ'
'தன்னந் தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே'
போன்ற காலத்தால் அழியாத புகழ் பெற்ற பாடல்கள்.
இந்தி, மலையாளம், கன்னட 'ஸ்கூல் மாஸ்டர்' களில் நடிகர் திலகம் ஏற்றிருந்த கௌரவ ரோலை தமிழில் நடித்திருந்தவர் முத்துராமன்.
இதே 'ஸ்கூல் மாஸ்டர்' பெயரில் விஷ்ணுவர்த்தன், சுஹாசினி, அவினாஷ் நடித்து கன்னடத்தில் 2010 ல் இன்னொரு படம் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
http://2.bp.blogspot.com/_fKMLChf_W0...annada+(1).jpg
அப்பாடி!
hindi bhagbanum school master than
மதுண்ணா!
நான் 'you tube' ல் அப்லோட் செய்த (Sep 7, 2011) 'ஸ்கூல் மாஸ்டர்' ஹிந்தி படத்தில் 'நடிகர் திலகம்' சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் வீடியோ காட்சி.
https://youtu.be/q8vxKpQy2RM
அப்பாடா... வாசுஜி உதவியால் ஸ்கூல் மாஸ்டர் பற்றிய விவரம் தெரிஞ்சு போச்..
நன்றி... நன்றி.. நன்றி....
அந்தக் கர்ணன் எந்தத் தடையுமின்றி அள்ளி அள்ளிக் கொடுத்தான்.Quote:
சிக்கா சொல்ற "கர்ணன்" படமெல்லாம் வேற..வேற..வேற... ( நான் எஸ்கேப்... நீங்களும் ஓடிடுங்கோ )
இந்தக் 'கர்ணன் எவ்வளவு கொடுக்க' நினைத்தாலும் தடையுள்ளதே..
ஸ்கூல் மாஸ்டர் சந்தேகம் வந்தாலும் வந்தது ஜி வந்து மாஸ்டர் கணக்கா பாடம் எடுத்துட்டாரே .. வாசு ஜி போய் மாஸ்டர் ஆயிட்டார் டும் டும் டும் :)
வாசு சார்,
ஸ்கூல் மாஸ்டர் மற்றும் ரமாப்ரபா தகவல்கள் நன்றாக இருந்தன.
அதே போல் நவாப் நார்காலி, பட்டணத்தில் பூதம்
நாய்க்கு பேரு வைச்சியே சோறு வைச்சியா
ஆதிராம் சார்.
அதிர்ச்சியே அடைய வேண்டாம்.:)
வில்லி வேடம் அப்படிங்கிறதாலே தள்ளி விட்டுட்டேன். (நிஜ வாழ்க்கையிலும் சரத்பாபுவுக்கு வில்லி மனைவிதான்) எழுதனது எல்லாமே அவர் அப்பாவியாய் நடித்த வேடங்கள். இன்னும் இருக்கே. இதுக்கே ஒவ்வொரு டிவிடியா தேடி போட்டோ எடுக்க நேரம் ஆயிடுச்சி.
ஆமாம்! அது என்ன பெரிய புராணம் சேக்கிழார் புராணம் மாதிரி ரமாப்ரபா புராணம். ஜாலியாக ரசித்தேன்.:)
இந்தக் 'கர்ணன் எவ்வளவு கொடுக்க' நினைத்தாலும் தடையுள்ளதே..[/QUOTE]
As per the wish of Mr VR sir we can remove Mr C K from the post so that everyone will enjoy the Karnan series without
any cut.
அடுத்த இலைக்கு பாயசம் வைக்கலியேன்னு என்னா கவலை அல்லாருக்கும்....
வாசு சார்
நாசமா நீ போனயா....
இருங்க இருங்க... இது நவாப் நாற்காலி வசனமோன்னோ அதான்...
Courtesy: Tamil Hindu
சினிமா எடுத்துப் பார் 33: எங்க வீட்டுப் பிள்ளை!
எஸ்பி. முத்துராமன்
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒவ்வொரு திருப்பம் ஏற்படும். அந்தத் திருப்பம் உயர்த்தியும் விடும், சமயத்தில் கீழே தள்ளியும் விடும். அப்படி ஒரு சூழ்நிலை எனக்கும் ஏற்பட்டது. என் தாய் வீடான ஏவி.எம் ஸ்டுடியோவில் எடிட்டிங் அப்ரண்டீஸ் ஆக சேர்ந்து உதவி எடிட்டராகி, உதவி இயக்குநராகி, துணை இயக்குநராகி 16 ஆண்டுகாலம் வேலை பார்த்தேன். என் குடும்பத்தினருடன் இருந்த நேரத்தைவிட ஏவி.எம் ஸ்டுடியோவில்தான் அதிக நேரம் இருந்திருக்கிறேன்.
அப்படி ஒரு காலகட்டத்தில் சித்ராலயா கோபுவின் ‘காசேதான் கடவுளடா’ நாடகத்தை ஏவி.எம். செட்டியார் அவர்கள் பார்த்தார்கள். சிறப்பான அந்த நாடகத்தை வாங்கி படமாக எடுக்க முயற்சித்தார்கள். நாடகத்துக்கு கதை, வசனம் எழுதிய சித்ராலயா கோபுவை வைத்தே, படத்தையும் இயக்க முடிவெடுக்கப்பட்டு அவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
படத்தை எடுக்கும் பொறுப்பை ஏவி.எம். செட்டியார் அவர்கள் தன் மூத்த மகன் முருகன் சாரிடம் ஒப்படைத்தார். ஒரு நாள் முருகன் சார் என்னை அழைத்து ‘‘இந்தப் படத்தில் சித்ராலயா கோபுவுக்கு உதவி இயக்குநராக பணி புரியுங்கள்’’ என்று கூறினார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நானும், கோபுவும் சமகாலத்தில் வேலை பார்த்த வர்கள். நான் சீனியர் இயக்குநர்கள் பலரிடமும் உதவியாளராக பணிபுரிந் திருக்கிறேன். ஆனால், கோபு அவர்களுடன் உதவி இயக்குநராக வேலை செய்வது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. முருகன் சார் சொன்னதைக் கேட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினேன். அடுத்த நாள் முழுவதும் யோசித்துப் பார்த்தேன். எப்போதும் முழு ஈடுபாட்டு டன் வேலை பார்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருப்பவன். ஆனால், இந்தப் படத்தில் என்னால் அப்படி செய்ய முடியுமா என்ற சந்தேகம் வந்தது.
அடுத்த நாள் திங்கள்கிழமை. ஏவி.எம்.செட்டியார் அவர்களுக்குப் பணிவுடன் ஒரு கடிதம் எழுதினேன். அதில் ‘‘இவ்வளவு காலம் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை வைத்திருந் ததற்கு நன்றி. வெளியே சென்று படம் இயக்க அனுமதி கொடுக்க வேண்டும்’’ என்று எழுதியிருந்தேன். அதை செட்டியார் அவர்கள் படித்துவிட்டு, ‘‘அவனுக்கு ரொம்ப நாட்களாக வாய்ப்பு கொடுக்கணும்னு இருந்தோம். அதைக் கொடுக்கலை.
வெளியே படம் பண்ணப் போறேன்னு சொல்கிறான். அவனுக்கு முறையே என்னென்ன செய்ய வேண்டுமோ செய்து முழு திருப்தியோடு அவனை அனுப்புங்கள்’’ என்று மகன்களை அழைத்து சொன்னார். ஸ்டுடியோவில் எல்லோரிடமும் பிரியா விடை பெற்று, கடைசியாக சரவணன் சாரைப் பார்க்கப் போனேன்.
‘நீங்கள் யாரை பின்பற்றுகிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்டால் நான் அப்போ தும், இப்போதும், எப்போதும் சொல்கிற ஒரே வார்த்தை ‘ஏவி.எம்.சரவணன் அவர்களை’ என்பதுதான். அவர்தான் என் வழிகாட்டி. அவரைப் பார்த்துதான் வெள்ளை உடை அணிந்தேன். லைட் பாய் தொடங்கி தொழிலபதிபர் வரைக்கும் யார் வீட்டு விஷேசம் என்றாலும் கண்டிப்பாக வாழ்த்துச் சொல்ல சென்று வர வேண்டும் என்று அவரிடம் கற்றுக் கொண்டுதான் இன்றளவும் பின்பற்றி வருகிறேன்.
பத்திரிகையாளர்களை, ஊடக நண்பர்களை அவர் மதிக்கும் பாங்கை பார்த்து மதித்து நடக்கிறேன். கோபத்தை தவிர்க்கிறேன். அனைவரிடமும் அன்பு காட்டுகிறேன். இப்படி நான் அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இருவரும் அன்று சந்திக்கும்போது ஒருவித ‘சோகம்’. இருவர் கண்களிலும் கண்ணீர்.
‘வீரத்திருமகன்’ படப்பிடிப்பின்போது, ‘‘ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேமராவில் என்ன லென்ஸ் போடுவது என்பதை கேமரா மூலம் பார்த்துதான் முடிவு செய்ய வேண்டியிருந்தது. அந்த சமயம் டைரக்டர் வியூ ஃபைண்டர் வந்தது. இதில் பார்த்தால்போதும் கேமராவில் பார்க்க வேண்டியதில்லை. அதனை வாங்குமாறு இயக்குநர் ஏ.சி.திருலோக சந்தர் அவர்கள் சரவணன் சாரிடம் கூறினார்கள். சரவணன் சார் என்னை அந்தக் கடைக்கு அனுப்பினார். கடையில் இரண்டு வியூ ஃபைண்டர் மட்டுமே இருந் தன. சரவணன் சாரிடம் சொன்னேன். ‘‘அந்த இரண்டையுமே வாங்கி வந்து விடுங்கள்’’ என்றார். வாங்கி வந்தேன்.
அந்த இரண்டில் ஒன்றை இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரிடம் சரவணன் சார் கொடுத்தார். இன்னொன்றை அவரே வைத்துக்கொண்டார். ‘‘நீங்கள் என்றைக்காவது ஒருநாள் இயக்குநராக வருவீங்க என்று எனக்குத் தெரியும்’’ என்று கூறி எனக்கு அந்த வியூ ஃபைண்டரை பரிசாக அளித்தார். அத்தனை ஆண்டுகாலம் அதை அவர் எனக்காக பாதுகாத்து வைத்திருந்தார் என்று நினைக்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. நான் இயக்கிய எல்லா படங்களுக்கும் அந்த வியூ ஃபைண்டரைப் பயன்படுத்தினேன். என் லெட்டர் பேடு, முகவரி அட்டை அனைத்திலும் அந்த வியூ ஃபைண்டரைத் தான் முத்திரையாக வைத்திருக்கிறேன். அந்த அடையாளங்கள்தான் சரவணன் சாருக்கு நான் தெரிவிக்கும் நன்றி. எனக்கு சரவணன் சார்தான் பலம்!
அந்தச் சூழலில்தான் வி.சி.குகநாதன் அவர்கள் ‘‘நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வைத்திருக்கிறேன். அந்த ஸ்கிரிப்ட்டை நீங்கள் இயக்குங்கள்’’ என்று வாய்ப்பளித்தார். அவர் எனக்குக் காலத்தினாற் செய்த உதவி அது. அந்தப் படம் ‘கனிமுத்து பாப்பா’. இந்தப் படத்தில் ஜெய்சங்கர், முத்துராமன், லட்சுமி, ஜெயா, குழந்தை நட்சத்திரமாக தேவி நடித்தார்கள். இசையமைப்பாள ராக ராஜு. என் முதல் ஐந்து படங் களுக்குப் பாடல்களை பூவை செங்குட்டு வன்தான் எழுதினார்.
நான் பெரிய படங்களை இயக்குவதற்குச் சென்ற காலத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. அதில் எனக்கு இப்போதும் வருத்தம்தான். அண்ணா சொன்னதுபோல் சூழ்நிலைக் கைதியாக ஆனதால் அவரைத் தொடர்ந்து பாடல் எழுத வைக்க முடியாமல் போனது. ‘கனிமுத்து பாப்பா’ நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததோடு வெற்றிப் படமாகவும் பெயர் பெற்றது.
சுப்ரமணிய ரெட்டியார்தான் ‘கனி முத்து பாப்பா’ படத்துக்கு நிதி உதவி செய்தார். அவரைப் பற்றியும் இங்கே சொல்ல வேண்டும். படங்களைத் தயாரிப் பதற்கு முன் படப்பிடிப்பு நடக்கும் சினிமா ஷூட்டிங்களுக்கு சென்று என்னென்ன செலவுகள் எப்படி ஆகிறது என்பதை கற்றுக்கொண்டவர். கிட்டத்தட்ட 6 மாதங்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களையே சுற்றி சுற்றி வந்து எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு சினிமா தொழிலுக்கு வந்தார்.
என் இரண்டாவது படம் ‘பெத்த மனம் பித்து’. அது பெண்கள் படம். திரையரங்கில் காலை 11 மணி காட்சிக்கு 75 சதவீதம் பெண்கள் இருப்பார்கள். பெண்கள் மத்தியில் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம். நடிகையர் திலகம் சாவித்ரியின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டுமா? 100 நாட்கள் ஓடி விழா கொண்டாடப்பட்டது.
ஏவி.எம்.செட்டியார் அவர்கள் தலைமையில், கலைஞர் கருணாநிதி விருது வழங்க 100-வது நாள். விழா மேடையில் ஏவி.எம்.செட்டியார் அவர்கள், ‘‘இந்தப் படத்தை இயக்கிய முத்துராமன் எங்க வீட்டுப் பிள்ளை’’ என்று பாராட்டினார். அடுத்து பேசிய கலைஞர் அவர்கள், ‘‘என்னோட தொண்டருக்கும் தொண்டன் அண்ணன் இராம.சுப்பையாவின் பையன் முத்துராமன். அவர் எங்களுக்குத்தான் முதல் சொந்தம்’’ என்றார். அன்றைக்கு இருவரும் என்னை உரிமை கொண்டாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. படம் 100 நாள் ஓடியதால் எங்கள் குழுவுக்குத் திரையுலகில் நல்ல குழு என்ற பெயர் வந்தது. அடுத்த கட்டம் என்ன?
- இன்னும் படம் பார்ப்போம்...