http://i1077.photobucket.com/albums/...pswsw59xzn.jpg
Printable View
உயிரோசை மாத இதழ் -மார்ச் 2017
http://i1077.photobucket.com/albums/...psqahopojv.jpg
http://i65.tinypic.com/14sjm9s.jpg
நேற்று (10/03/2017) முதல் மதுரை மீனாட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"புதிய பூமி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2yuwz9w.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
தங்கள் கட்சி கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் வராவிட்டாலும் எப்படியாவது பணம் கொடுத்தாவது கூட்டம் சேருங்கள் என்று சொல்லுவது அரசியல்வாதிகளின் வழக்கம். ஆனால், என் வருகையை ஏன் அறிவித்தீர்கள்? சின்ன தெருவில் மக்கள் கூடினால் அவர்களுக்குத்தான் சிரமம் என்று மக்கள் மீது அக்கறையோடு புரட்சித் தலைவர் கூறியிருக்கிறார். அதனால்தான் அவர் மக்கள் தலைவராக விளங்குகின்றார் என்பது தெளிவாகிறது.
சென்னையில் ஆயிரத்தில் ஒருவன் ஒருவாரத்தில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வசூலோடு 2 வது வாரம் தொடர்வது சந்தோஷமான செய்தி. (அடிக்கடி தியேட்டர்களிலும் தொலைக்காட்சியிலும் திரையிட்டும்)
கோயம்புத்தூரில் புதுமைப் பித்தன் இரண்டாவது வாரமாக ஓடுகிறது. மகிழ்ச்சியாக உள்ளது.
புரட்சித் தலைவருக்கு சாதனைகளே சரித்திரம்.
http://i67.tinypic.com/1eknck.jpg
சந்திரோதயம் படத்தின் இப்பாடல் படப்பிடிப்பின்போது நடைபெற்ற ஒரு அபூர்வ நிகழ்ச்சி.'புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக' என்ற பாடலின் படப்பிடிப்பிற்ககாக ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன.
காட்சியில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கும்.
குடிசையில் உள்ள ஏழை மக்கள் அவர்களின் குழந்தைகள் வீடுகள் மழையில் அடித்து செல்லப் பட்டு.எம்.ஜி.ஆர் அவர்களை எம்.ஆர்.ராதா கார் ஷெட்டுக்கு தங்க வைக்க ஏற்பாடு செய்வார்.எம்.ஆர்.ராதாவோ காஸ்ட்லி கார்கள் உள்ள அந்த இடத்தில் அந்த மக்கள் தங்க கூடாது என கூறி விடுவார்.எனவே எம்.ஜி.ஆர்., அவர்களை மழையில் நனைந்துக் கொண்டே வேறு இடத்துக்கு அழைத்து செல்கையில் இந்த பாடல் காட்சி இடம் பெறும்.
நடிக்க வேண்டிய குடிசைவாசிகள்,அவர்கள் குழந்தைகள் எல்லாம் ஏற்பாடு செய்தாகிவிட்டது.செயற்கை மழை பெய்விக்கவும் ஏற்பாடுகள் தயார். அப்போது எம்.ஜி.ஆர்.இயக்குநர் சங்கரை கூப்பிட்டு சொன்னாராம்" பாவம் இந்த குழந்தைகள் இந்த காட்சிக்காக எவ்வளவு நேரம் மழையில் நனைவார்கள்.காய்ச்சல் வந்து விடாதா? நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன்.அவ்வாறு செய்ய ஏற்பாடு செய்யுங்கள்" என கூறினாராம்.அவர் சொன்ன யோசனை என்ன தெரியுமா!!!
செயற்கை மழையில் குளிர்ந்த நீருக்கு பதிலாக இளம் சூடான நீர் பொழியுமாறு ஏற்பாடு செய்ய சொன்னாராம்.எம்.ஜிஆர். சொல்லிய பிறகு அப்பீல் ஏது? அவ்வாறே செயற்கை சுடுநீர் மழை அக்காட்சியில் பொழிந்ததாம்.இப்பவும் அக்காட்சியில் குழந்தைகள் குளிரில் நடுங்குவதாக காட்சியில் தெரியாது.மகிழ்ச்சியுடன் நடந்து வருவார்கள்.
எந்த ஒரு நடிகரும் தன் காட்சியில் நடித்து முடித்துவிட்டு தன் வேலையைப் பார்க்க போய் விடுவார்.எம்.ஜிஆருக்கு மட்டும் ஏன் மற்றவர்களின் மீது அக்கறை? ஏனெனில் அவர் நடிகர் மட்டுமல்ல.சிறந்த மனிதாபிமானம் கொண்டவர்.மற்றவர்கள் வாடுவதைப் பொறுக்க மாட்டார்.அதனால்தான் நூறாண்டுகள் கடந்தும் அவர் இன்றும் மக்களின் மனதில் அழியாப் புகழுடன் வாழ்கிறார்.
நன்றி - வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகநூல்.
மதுரை மாநகரில் , சென்னை கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி திரு.கே.ஈ .பாஸ்கரன் அவர்களின் குமாரர் திருமணம் கடந்த 09/03/2017 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது . சென்னை, மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரளாக வந்திருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர் .
அப்போது செல் காமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் பதிவு நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/2hhdetc.jpg
சமீபத்தில் பி.எஸ். என்.எல் நிறுவனத்தில் இருந்து பணி ஒய்வு பெற்ற , மதுரை பக்தர் திரு. தமிழ்நேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து , நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்ட கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை பக்தர்கள் மற்றும் சென்னை நகர பக்தர்கள் சிலர்
http://i63.tinypic.com/16by0b4.jpg
ரிஷி மூவிஸ் உரிமையாளர் திரு. திண்டுக்கல் சாய் நாகராஜன் அவர்கள் அளித்த
டைரியின் தோற்றம்
http://i64.tinypic.com/9pno1d.jpg
http://i65.tinypic.com/1zf30i9.jpg
..கடந்த வாரம் செங்கோட்டை ஆனந்தில் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெற்றது .
http://i64.tinypic.com/2ztlk7k.jpg
தகவல் உதவி : திரு. எஸ். எம்.மோகன்குமார், வழக்கறிஞர்,
கடந்த வாரம் தென்காசி தாய்பாலாவில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின்
"ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகள் நடைபெற்றது .
http://i67.tinypic.com/2cs8bgm.jpg
தகவல் உதவி : திரு. எஸ். எம்.மோகன்குமார், வழக்கறிஞர் .
தினமலர் /வாரமலர் -12/03/2017
http://i64.tinypic.com/2mpwrhu.jpg
http://i65.tinypic.com/spxg7m.jpg
http://i64.tinypic.com/intix5.jpg
டைரி எழுதும் பழக்கம் இருந்த ( ஆம்... கடந்த ஓராண்டாக எழுதுவதில்லை... ) நான் போன வருடம் இதே நாளில் நடந்த ஒரு சம்பவத்தை நேற்று இரவு டைரியை புரட்டும் போது பார்த்து நெகிழ்ந்தேன்... இனி அது உங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும்...
இன்று அஸ்வத்துக்கு கதை சொன்னேன்... சிங்கம் புலி மான் என விலங்குகளுடன் மட்டுமல்ல... மனிதர்களுடன்...
அப்போது அவன்...
"அப்பா நான் ஒரு கதை சொல்லவா....?"
"ம்ம்...சொல்லு..."
"ஒரு ஊருல ஒரு மாடு இருந்துச்சு... அது ஒரு நாள் ஊருக்கு போச்சு... அங்க அதுக்கு பயங்கரமா பசிச்சுச்சு...அப்போ...ஒரு வீடு இருந்துச்சு... அங்க போய் கதவ தட்டுச்சு... கதவு தொறந்தா... அங்க யாரு தெரியுமா...?"
கொஞ்சம் தூக்க அசதியில் இருந்த நான்... "என்ன இவன் கதை சொல்லும் போதே கேள்வி வேற கேக்குறான்...? " என சுதாரித்து...
"கதை உன்னோடது... உனக்கு தானே தெரியும்... அங்க யாருன்னு...?"
- இது நான்...
அசால்டாக சொன்னான்... "வேற யாருமில்லப்பா... நம்ம தலைவர் எம்.சி.ஆரு...??? "
படுத்து இருந்த நான் ஆச்சரிய துள்ளலில் எழுந்தேன்...
சில குழந்தைகள் நம்மை நைஸ் பண்ணும்... ஏதாவது வேண்டும் என்றால்... ஆனால்... இவன் அப்படி செய்து நான் பார்த்தது இல்லை... அவன் தேவை என்னவோ அதை நானே பார்த்து பார்த்து செய்தே வந்தேன்... இந்த பழக்கம் எங்கிருந்து வந்தது... எல்லா குழந்தையும் போல இவனும் மாறி விட்டானா...? இப்படி ஒரு குழப்ப முகத்தில் நான் அவனை பார்க்க...
"என்னப்பா... படுக்கலையா...? "
"படுக்கிறேன்... ஆமா... இந்த கதையில எப்படி எம்.ஜி.ஆர். வந்தாரு...?"
அவன் சொன்ன பதில்... அவன் தூங்கிய பின்... டைரியில் எழுத வைத்து விட்டது... ஈர விழிகளுடன்...
"என்னப்பா... தலைவரு எம்.சி.ஆருதானே... பசிக்கிதுன்னா சோறு போடுவாரு..."
http://i65.tinypic.com/2zird7c.jpg
நாலரை வயதில் இவனது கற்பனை உலகில் எப்படி ஊடுருவினார்... அந்த மக்கள் திலகம்... அதனால் தான் அவரை அற்புத மஹா சக்தி... என நான் ஆராதிக்கிறேன்...
ஆம்... நான் விலங்குகளுடன்... மனிதர்களை மட்டுமல்ல... மனிதத்தையும் சேர்த்தே கதை சொல்லி வந்துள்ளேன் போல...???!!!
நேற்றிரவு படித்து விட்டு சற்று நெகிழ்ச்சியின் உச்சத்தில் உறங்கி போனேன்...
- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
http://i1273.photobucket.com/albums/...psde423439.jpg.
புரட்சி தலைவர் எம்ஜிஆர் சகாப்தம் தொடர்கிறது .
தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள் தொடர்ந்து நடை பெற்று கொண்டு வருகிறது .
இரண்டு நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் சரோஜாதேவி, லதா, வெண்ணிற ஆடை நிர்மலா போன்றவர்கள் கலந்து கொண்டு மக்கள் திலகத்துக்கு புகழ் மாலை சூட்டியுள்ளனர்.
இது சம்பந்தமான வீடியோ காட்சிகளை வாட்ஸ் அப் நண்பர் மலேசியாவைச் சேர்ந்த அப்துல் ரகீம் எனக்கு அனுப்பி உள்ளார். வீடியோ பதிவிடுவதற்கான வசதிகள் முடக்கப்பட்டுள்ளதால், திரியில் அதை பதிவிட முடியவில்லை. ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தது சிறப்பு அம்சம். சென்னையில் மகளிர் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது.
பெங்களூரிலும் சென்ற மாதம் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. எம்.ஜி.ஆர். மன்றங்கள் சார்பாகவும் வேறு அமைப்புகள் சார்பாகவும் விழாக்கள் நடந்தன. இன்னும் நடைபெற இருக்கின்றன.
திரைப்படத் துறையிலும் மக்கள் திலகத்தின் ஆதிக்கம் இன்றும் உள்ளது.
பெங்களூரில் சமீபத்தில் ஒளி விளக்கு ரிலீஸாகி நல்ல கூட்டத்துடன் ஒருவாரம் ஓடியது. . அடிமைப் பெண் டிஜிட்டல் திரைப்படம் பெங்களூரிலும் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.
சென்னையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது வாரம் ஓடுகிறது. திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்துக்கு விநியோகஸ்தர் பங்காக இதுவரை 50 ஆயிரம் லாபம் கிடைத்துள்ளது என்று தகவல் வந்துள்ளது.
கோவை நகரில் மக்கள் திலகத்தின் புதுமைப்பித்தன் கடந்த வாரம் வெற்றிகரமாக ஓடியுள்ளது .
கலங்கரை விளக்கம் படம் சென்னை கிருஷ்ணவேணி அரங்கில் ஓடுகிறது.
மார்ச் - 31-ம் தேதி அடிமைப் பெண் திரைப்படம் தமிழகம் முழுவதும் டிஜிட்டலில் ரிலீஸாகிறது.
ஏப்ரலில் டிஜிட்டலில் நினைத்ததை முடிப்பவன் ரிலீஸ் விளம்பரம் வந்துள்ளது.
எங்க வீட்டுப் பிள்ளையும் டிஜிட்டல் வெளியீடாக வருகிறது என்று 2 வாரங்கள் முன் விளம்பரம் வந்தது.
நாடோடி மன்னன் முழுவதும் வண்ணமாக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.
சமீபத்தில்செ ன்னை அருகே திருநின்றவூரில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலை திறக்கப்பட்டது . பெங்களூர், ஆந்திரா, கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் மக்கள் திலகத்துக்கு பக்தர்கள் எழுப்பிய சிலைகள் உள்ளன.
http://i1273.photobucket.com/albums/...pst3nvmmto.jpg
தமிழகம் எங்கும் தலைவர்களின் சிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், பெருநகரங்கள், சிறிய ஊர்கள், கிராமங்கள் உட்பட அதிக எண்ணிக்கையில் சிலைகள் இருப்பது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குத்தான் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.
அதிமுக உடைந்துவிட்டது. எம்.ஜி.ஆர். சகாப்தம் முடிந்துவிட்டது’ என்று அந்தக் காலத்தில் இருந்தே மக்கள் திலகம் மீது இனம் தெரியாத வெறுப்பு கொண்டிருப்பவர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
ஏமாற்றமே அவர்களின் மூலதனம். விரக்தியே அவர்களுக்கு லாபம்.
எதிரிகளுக்கு தோல்வியை பரிசளித்தே பழக்கப்பட்டவன் நான்’ என்று ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மக்கள் திலகம் கூறுவார். எம்.ஜி.ஆர். சகாப்தம் முடிந்துவிட்டது என்று கூறுபவர்களுக்கும் தோல்வியையே பரிசாக மக்கள் திலகம் வழங்குவார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழுக்கு என்றுமே முடிவே இல்லை .
மக்கள் திலகத்தின் 125வது ஆண்டு விழாவை 2042ல் அகிலமெங்கும் கொண்டாடுவார்கள் . இது உறுதி .
Makkalthilagam, Only one Any Time Emperor many Movies - Kaaviyams coming soon Digital Format likely so Happy...
கல்கி வார இதழ் -19/03/2017
http://i63.tinypic.com/esn6tt.jpg
http://i64.tinypic.com/2h2qe5s.jpg
மாலை முரசு -14/03/2017
http://i67.tinypic.com/10sb4fk.jpg
http://i65.tinypic.com/2zgvnye.jpg