-
Vaannila Vijayakumaran
" சிலர் மட்டும்தான், அதுவும் ஓரிருவர் இல்லை; ஒருவர் மட்டும்தான் - கொஞ்சம் அதிகமாக நடிப்பதாகச் சிலர் பேசினாலும்கூட தனக்கென்று முத்திரை பதித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் என்பதை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும்.
.......தனக்கென்று ஒருபாணி அமைத்துக்கொண்ட சிவாஜிகணேசனைப்போல் யாராவது பின்பற்ற முனைந்தால் அவர்கள் தோற்றுப் போவார்கள் ; ஏமாந்து விடுவார்கள்.
அது அவருக்கு மட்டும் வந்த கலை; கைவந்த கலை; அவருக்கு மட்டுமே சொந்தமான கலை.
எப்போது இந்த சினிமாதுறையைவிட்டு விலக அவராக முடிவு செய்கிறாரோ அதுவரைக்கும் மட்டுமல்ல - அதற்குப் பிறகும்கூட - பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும்கூட - சிவாஜி கணேசனுடைய அந்த இடம் அவருக்கு மட்டுமே இருக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறேன் "
*****16:08 1987 அன்று சிறந்த கலைஞர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் அன்றைய தமிழக முதல்வர் திரு. எம்.ஜி. ஆர் அவர்கள் பேசியது...( பொம்மை மாத இதழ் -அக்டோபர் 1987)
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...12&oe=5A42BF7E
-
-
-
-
Vaannila Vijayakumaran
ஒரு சமயம் 'கண்ணே பாப்பா' என்ற படத்தை எடுத்த ஜே.ஆர்.மூவிஸ் பட நிறுவனத்தார் நடிகர்திலகத்தை வைத்து படமெடுக்க எண்ணி வசனகர்த்தா பாலமுருகனிடம் கதை கேட்க, அவரும் சொல்ல, அவர்களுக்கும் பிடித்துப்போக, நேராக ஐயனைச் சந்திக்க திருச்சிக்கு விரைந்தனர்.நடிகர்திலகம் தங்கியிருந்த ஓட்டலில், அவரது ஆருயிர் நண்பர்களான ஞானராஜும், அடைக்கலராஜும் உடனிருந்தனர். ஜே.ஆர் மூவிஸ் முதலாளிகளான சங்கரன், ஆறுமுகத்தோடு பாலமுருகனையும் பார்த்ததும் எதற்காக தன்னைத்தேடி வந்தார்கள் என்ற ஆச்சர்யம் ஐயனுக்கு... திருச்சியி...ல் சொந்தவீடு இருக்கும்போது, ஓட்டலில் ஏன் தங்கியிருக்கிறார் என்ற குழப்பம் இவர்களுக்கு. வழக்கமானன உபசரிப்புகள் முடிந்ததும், ' என்ன விசயமாக வந்தீர்கள்? என்று ஐயன் கேட்க, ' சும்மா உங்களைப் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்' என்று பாலமுருகன் சொல்ல, 'நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை தெரியுமா? 'என்று ஐயன் சொல்ல, 'அப்போ எப்படி பொழுது போகும்? நடிக்காமல் சும்மா எப்படி இருப்பீர்கள்?' என்று பாலமுருகன் கேட்க, அதான் எனக்கும் தெரியல...ரொம்ப போரடிக்குது' என்றார் நடிகர்திலகம்.' அப்போ நான் ஒரு கதை சொல்றேன்.கேக்குறீங்களா? ' என்று பாலமுருகன் கேட்க, 'சொல்லு' என்றார். சொல்லி முடித்ததும், ஒரு புதுமுக நடிகன் போல, 'ரங்கசாமியைக் கூப்பிட்டு விக் ரெடி பண்ணணச் சொல்லு. ராமகிருஷ்ணனைக் கூப்பிட்டு டிரஸ் ரெடி பண்ணணச் சொல்லு... எப்போ பூஜை வச்சிருக்கே? என்று பரபரத்தார் நடிகர் திலகம்.'அடுத்த வாரம் பூஜை' என்று ஆறுமுகம் சொல்ல, ' என்ன சாமி விளையாடறீங்களா! அடுத்த வாரம் பூஜையை அங்க வச்சுக்கிட்டு நான் இங்க இருந்து என்ன பண்றது? புறப்படுங்க.. நானும் வந்துடறேன்.' என்று நடிகர்திலகம் சென்னைக்குப் புறப்படத் தயாரானார். 'கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இனி நடிக்கவே மாட்டேன்னு சொன்னீங்க... அதுக்குள்ள உங்க மனசு எப்படி மாறிடுச்சு? ' என்று பவ்யமாக பாலமுருகன் கேட்க, அதற்கு நடிகர்திலகம், 'உன் கதையும், அந்தக் கதாப்பாத்திரமும்,என் மனசை மாத்திடுச்சி' என்றார் ஐயன். அந்தக் கதைதான் " MANNAVAN VANDHANADI"
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7c&oe=5A76CEA0
-
Vaannila Vijayakumaran
1957- ம் ஆண்டு நடிகர்திலகம் திமுகவை விட்டு ஒதுங்கி, மாற்று முகாமிலிருந்த காலகட்டத்தில், அண்ணாவின் நாடகக்குழுவில் நானொரு நடிகனாக இருந்தேன். அண்ணாவின் வீட்டிலேயே தங்கியிருந்தேன்.
ஒருநாள் இரவு 11 மணிக்கு நான் அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். என்னை யாரோ எழுப்பினார்கள்.
விழித்தால், அண்ணா அவர்கள் பனியனுடன் நின்று கொண்டிருந்தார்.நான் பதறித் துடித்து எழுந்தேன். அவர், ' தூக்கம் வரவில்லை. சினிமாவுக்குப் போகலாமா?' என்றார். நான் அவருடன் சென்றேன்.
தன்னை அடையாளம் தெரிந்தால் கூட...்டம் கூடிவிடும் என்று தலையில் துண்டைக் கட்டிக்கொண்டார் அண்ணா. நானும் அவரும் தியேட்டருக்குள் சென்றோம்.
படம் ஓடிக் கொண்டிருந்தது.
அதில், நடிகர்திலகம் ஒரு நடனம் ஆடினார்.அதைப் பார்த்த அண்ணா அவர்கள் " நடிகன் என்றால் சிவாஜிதான் நடிகன் " என்று பாராட்டினார்.
சிவாஜி தனது இயக்கத்தில் இல்லாமல் இருந்தாலும், அஅவரைப் புகழ்ந்து சொன்ன வார்த்தைகள் தனித்தன்மையையும், நடிகர் திலகத்தின் ஒப்பு உவமையில்லா நடிப்பையும் எனக்கு உணர்த்தியது.
அந்தப்படம் 'ராணி லலிதாங்கி'.
( பின் குறிப்பு... இத்தகவலை வண்ணத்திரை வாரஇதழில் 35 ஆண்டுகளுக்குமுன் குறிப்பிட்டிருந்தவர் பிரபல கதை வசனகர்த்தா திரு.பாலமுருகன் அவர்கள்.)
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...82&oe=5A41D211
-
-
-
இலங்கையில் 3 திரை அரங்குகளில் 100 நாட்களை கடந்து
வெற்றிவாகை சூடிய படங்கள் 2 மட்டுமே
அவை இரண்டும் அசைக்கமுடியாத வசூலில் இமயம்கண்ட
நடை அழகன் கலைக்குரிசில்
சிவாஜி கணேசனின் படங்கள் மட்டுமே
12 .5 . 1978 உத்தமன் கொழம்பு சென்ட்ரல் 203 நாட்கள்
யாழ்நகர் ராணி 179 நாட்கள்
மட்டுநகர் விஜயா 101 நாட்கள்
22 .12 . 1978 பைலட் பிரேம்நாத் கொழும்பு கெப்பிட்டல் 186 நாட்கள்
கொழும்பு சவோய் 106 நாட்கள்
யாழ்நகர் வின்சர் 222 நாட்கள்
-
Sekar Parasuram
இன்று விஜய் டிவியில் நடிகர் திலகம் தொடர்பான "நீயா நானா" நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்,
கடந்த மூன்று நாட்களாக காயச்சலால் அவதிப் பட்டு. வந்ததினால் என்னால் உறுதி படுதிக் கொள்ள முடியாமலேயே இருந்தது, இதனால் முன்னரே தகவல் பரிமாரிக் கொள்ள முடியாத சூழல்,
இன்று நடிகர் திலகம் புறப்பட வைத்து விட்டார்,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...4d&oe=5A3E35D6
-
sivajiperavai chennai
நண்பர்களுக்கு வேண்டுகோள்:
ஒரு ரூபாய் கொடுத்து நூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடிக்கொண்டவர்களை கொடைவள்ளல் என்றும், சத்தமில்லாமல் சமுதாய பணிகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்த நடிகர்திலகத்தை கஞ்சன் என்றும் அவதூறு பரப்பியவர்கள் இன்று நாம் கொடுக்கும் ஆதாரப்பூர்வ தகவல் மற்றும் செய்திகளால் திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் கர்ணனாக வாழ்ந்திருக்கிறார் சிவாஜி என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.
இப்போது, அடுத்த கட்டமாக அரசியலில் சிவாஜி ராசி இல்லாதவர் என்ற அவதூறை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடியாகவும், மக்கள் உணரவும், தந்தி தொலைக்காட்சியின் இந்த வீடியோவை முடிந்த மட்டும், WhatsApp, Facebook குழுக்கள் மூலம் பரப்புங்கள்.
https://external.fybz1-1.fna.fbcdn.n...DtAdEsFIVEFcwo
Sivaji Sentiment Reason behind CM's denial to Inaugurate Sivaji Manimandapam
சிவாஜி ராசியில்லாதவரா ? விளாசும் சிவாஜி…
youtube.com
-
Nagarajan Velliangiri
இன்று விஜய் டீவியில் நடைபெறும் நீயா நானா நிகழ்ச்சிப் பதிவில் அன்பு நண்பர்கள் அப்துல் ரஜாக், சேகர் பரசுராம், M.L.கான் மற்றும் சிவாஜி சமூக நலப்பேரவை சந்திரசேகர் ஆகியோர்.படப்பிடிப்பு தளத்தில் இருந்து நேரடியான போட்டோ.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...5c&oe=5A7411D1
-
-
நீயா நானா நிகழ்ச்சியில்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...65&oe=5A807975
.................................................. ..........................
B K Kalyanasundaram
நண்பர்களே
உண்மை என்ன வென்றால் இந்த ஷோ கோபி இஷ்ட ப்படி தான் நடக்கும். எவ்வளவு விவரங்களை நம் நண்பர்கள் அள்ளி விட்டாலும் அதை அவருடைய ஈகோ ஏற்று கொள்ளாது.பேசும்போதே குறுக்கிடுவார்.என் நண்பர் கள் சென்று அனுபவித்திருக்கிறார்கள்.
இதில் ஆபோசிட் குரூப் வேற. சண்டை வர வாய்ப்பு கள்உண்டு.நான் முன்பு ஓரு சானல் செலக்ஷ்னில் நேரிடையாக பார்த்திருக்கிறேன்.
நண்பர்கள் வந்தால் தான் தெரியும். உங்கள் கருத்துக்கள் சரியானது.
.................................................. ..................................
Chandrasekaran Muniyandiapillai
நீங்கள் கூறுவதுதான் உண்மை. திரு.கோபி ஒரு எம்ஜிஆரிஸ்ட். அதையும் தாண்டி வாதிட்டு நம் குழுவினர் சாதிக்க வேண்டிய நிர்ப்பந்த்தில் உள்ளனர் என்பதே நிஜம்.
.................................................. ............
TsRajendran Mcom
கோபிநாத் - பாண்டே இருவரும் முதலிலே தன்னை தயார் படுத்திக் கொண்டு அவர்களின் தயாரிப்புக் கேற்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை பேசத் தூண்டி தங்களை மேதாவிகளாக காட்டிக் கொள்வார்கள் இவர்களின் வழிக்கு வராமல் பேச்சை வேறு திசையில் கொண்டு சென்று அவர்களின் புத்திசாலித்தனத்தை காட்ட ஆரம்பித்தால் இடையில் குறுக்கிட்டு பேச விடாமல் செய்து விடுவார்கள் இந்த இரு மா(ட்டு) மேதை......
................................................
-
Nagarajan Velliangiri
நிகழ்ச்சி இப்போதுதான்( மாலை 5.45) நிறைவு பெற்றுள்ளது.
வந்த செய்திகள் இனிப்பும் கசப்பும் கலந்துதான் இருக்கின்றன.
முதல்பகுதியில் நம் அணி சற்றே சுரத்துக் குறைவாகவே இருந்ததாம். முதல்பகுதி கிட்டத்தட்ட குத்துப்பாட்டு நிகழ்ச்சி போலவாம்.பாட்டுக்குப் பாட்டு போல அமைந்து விட்டதாம்.
... அடுத்த பகுதியில் நம் அணியினர் அட்டகாசமாக ஆர்த்தெழுந்து விட்டார்களாம். காரணம் இப் பகுதி முழுவதும் அன்பு, பாசம், குடும்பம் போன்ற உயர்வான விசயங்களைப் பற்றி இருந்ததாம்.
ஏற்கெனவே நாம் எண்ணியபடி, எதிரணிக்குத்தான் அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டதாம். நம்மவர்களை அதிகம் பேச விடாமல் பேச்சுக்கள் பாதியிலேயே இடைமறிக்கப்பட்டு திசை மாற்றப்பட்டதாம்.
ஒருகட்டத்தில் நம்மவர்கள் பொறுக்க இயலாமல் பொங்கி எழுந்து, ஒரு காரசாரமான நிலை உருவாகி, அதன் பின்னரே நிலைமை ஒரு சுமுகமான நிலைக்கு வந்திருக்கிறது.
இது முதல் சுற்றுச் செய்திதான். ஓரிரு நிமிடங்களில் விவரங்கள் அவசரமாகப் பெறப்பட்டது. முழு விவரமும் போகப் போகத்தான் தெரிய வரும்.
நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் பற்றிய அறிய விவரம் எதுவும் இன்று அறிவிக்கப்படவில்லையாம்.
.................................................. ..........
Comments
Uma Sridhar
Ippadithaan irukkum enru ninaithen......................................... .
Thilagam Senguttuvan
ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் செய்தி ஊடகங்களே தங்கள் பொறுப்பு மறந்து பாரபட்சமாக இயங்கும் போது பொழுதுபோக்கு ஊடகமான விஜய் டிவி யிடம் இதற்கு மேல் நாம் எதிர்பார்ப்பது கடினம்தான்.ஆனால்
நமது நடிகரின் புகழ் காலம் கடந்தும் நிற்பது உறுதி............................................. ...........
Seyed Abbas
தெரிந்தது தானே
முதலிலே
திரைக்கதை அமைத்து விட்டு
படம் இயக்கிய கதைதான் இந்த நிகழ்ச்சி
.................................................. .............................
Ghovi Veer
அது அவங்க இஷ்டத்துக்கான நிகழ்ச்சி.
..............................................
Seyed
உண்மை
..............................................
Baskaran Ratnasabapathy எதிர்பார்த்தது தானே.
உண்மை வெல்லும். மிகுதியை முகநூலில் பதிவு செய்வோம்
-
-
Sukumar Shan shared Cine Museum's photo.
நடிகர் திலகம் பற்றி ஏ.வி. எம். சரவணன் அவர்கள் ! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்த் திரையில் அறிமுகமான படம், பராசக்தி. இப்படத்தை, பி.ஏ.பெருமாளுடன் இணைந்து தயாரித்தவர் ஏ.வி.மெய்யப்பன். ஏ.வி.எம்., மகனும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.சரவணன், சிவாஜியுடன் நெருங்கிப் பழகியவர்; சிவாஜியின் பிறந்த நாளை ஒட்டி, அவரைப் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை, வாரமலர் இதழுக்காக பகிர்ந்து கொண்டார். அது:
கடந்த, ஏப்., 9, 1958ஐ என்னால் மறக்க முடியாது. அன்று தான், ஏ.வி.எம்., ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு பொறுப்பாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். ஸ்டுடியோ நிர்வாகியான ரங்கஸ்வாமி அய்யங்கார், ஸ்டுடியோவில் இருந்தோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது, ஸ்டுடியோவின் ஐந்தாவது தளத்தில், தெய்வப் பிறவி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு தான் முதன் முதலில் சிவாஜியைச் சந்தித்தேன். அவருடைய நல்வாழ்த்துக்களுடன் என் சினிமாப் பயணம் துவங்கியது.
எங்கள் குடும்பத்தின் நல்ல நண்பர் சிவாஜி. என்னை எங்கு எப்போது சந்தித்தாலும், 'நல்லா இருக்கிங்களா?' என்று மனதார கேட்பார். அத்துடன், 'உங்க மனைவி லட்சுமி, பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா...' என்று பாசத்தோடு கேட்பதுடன், 'மறக்காமல் உங்க மனைவி லட்சுமிகிட்டே நான், அவங்களை விசாரிச்சேன்னு சொல்லுங்க...' என்பார். அடுத்து, எப்பவாவது என் மனைவியை சந்திக்கும் போது, 'என்னம்மா லட்சுமி... நான் உங்களை விசாரிச்சேனே... உங்க வீட்டுக்காரர் சொன்னாரா?' என்று, 'கன்பர்மேஷனு'க்கு கேட்டு விடுவார்.
என் தந்தையிடம் மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர் சிவாஜி. அவரது மகள் சாந்தியின் திருமணத்தின் போது, என் தந்தைக்கு தான் முதல் பத்திரிகை கொடுத்தார். எங்கள் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், சிவாஜியை முதல் வரிசையில் உட்கார வைப்பார் என் தந்தை.
அதேபோன்று, தன் அமெரிக்க நண்பர்களிடம், சிவாஜியை அறிமுகம் செய்யும் போதெல்லாம், 'தமிழகத்தின் அதிர்ஷ்டம், சிவாஜி கணேசன் இங்கு பிறந்திருக்கிறார்; அமெரிக்காவின் துரதிருஷ்டம், அவர் அங்கு பிறக்கவில்லை...' என்று கூறுவார்.
சிவாஜி சிறந்த நடிகர் மட்டுமல்ல; நல்ல குடும்பத் தலைவர். சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் என்று கூட்டுக் குடும்பமாக, ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர்.
இப்படத்தின் ஐம்பதாவது ஆண்டை, ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்று மிகவும் விரும்பினார் சிவாஜி. ஆனால், துரதிருஷ்டவசமாக விழா எடுக்க அவர் இல்லை. அப்படத்திற்காக எடுக்கப்பட்ட முதல் காட்சியில், 'சக்ஸஸ்...' என்று சொல்வார் சிவாஜி. அக்காட்சி, ஸ்டுடியோ தளத்திற்குள் எடுக்கப்படாமல், ஏ.வி.எம்.,மில் வெளிப்புற காட்சியாக எடுத்திருந்தனர். அதே இடத்தில், அவரது நினைவு சின்னம் ஒன்றை வைத்தோம். சிவாஜியின் மகன்கள் ராம்குமாரும், பிரபுவும், 'நினைவுச் சின்னம் திறப்பதற்கு நடிகர் கமலை கூப்பிடலாம்; அது தான் பொருத்தமாக இருக்கும்...' என்றனர். தன் கலை வாரிசு என்று, சிவாஜியால் அறிவிக்கப்பட்ட கமல், அக்.,19, 2002ல், சிவாஜி சிலையை திறந்து வைத்தார்.
அகில இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு என்னை தலைவராக தேர்ந்தெடுத்தனர். அதைத்தொடர்ந்து சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற உலக அமைப்பிற்கு, ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற ஆசிய நாடுகளின் பிரதிநிதியாகவும், சர்வதேச சங்கத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். அதன் தலைமை செயலகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது. இந்த பொறுப்பு எனக்கு கிடைத்ததற்காக, சிவாஜி தன்னுடைய தலைமையில் எல்லா நடிகர்களையும் அழைத்து, எனக்கு பாராட்டு விழா நடத்தினார். அத்துடன். தனிப்பட்ட முறையிலும், தேனீர் விருந்தும் கொடுத்தார். அவர், என் மீது கொண்டிருந்த பாசத்தை நினைத்தால், இன்னும் மெய் சிலிர்க்கிறது.
சிவாஜி நடித்த, 125வது படம் ஏ.வி.எம்.,மின், உயர்ந்த மனிதன். உத்தர் புருஷ் என்ற வங்காள மொழி படத்தை, தமிழில் தயாரிக்க முடிவு செய்தோம். அப்படத்தை சிவாஜிக்கு போட்டு காண்பித்தோம். படத்தை பார்த்ததும், அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.
உத்தர் புருஷ் படத்தின் கதைக் கருவை ஒட்டி எடுக்கபட்ட, உயர்ந்த மனிதன் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதிய ஜாவர் சீதாராமனிடம், சிவாஜியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக எழுதும்படி கேட்டுக் கொண்டோம். கிருஷ்ணன் - பஞ்சு இயக்குனர்கள். இப்படத்திற்கு சிவாஜி முன்பணமோ, வேறு தொகையோ வாங்கிக் கொள்ளவில்லை. படம் வெளியான பின் தான் அவருக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டார்.
கலைத்துறைக்கு சிவாஜி ஆற்றியுள்ள அளப்பரிய சேவையைப் பாராட்டி, பிரஞ்சு அரசு, மிக உயர்ந்த, 'செவாலியே' விருதை அளித்து கவுரவித்தது. அதை ஒட்டி சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சத்ரபதி சிவாஜி குதிரையில் அமர்ந்திருப்பது போன்று வெள்ளியில் செய்யப்பட்ட (தோட்டா தரணி உருவாக்கியது) சிலையை, தமிழ்த் திரை உலக சார்பில், சிவாஜிக்கு வழங்கினேன்.
ஒரு முறை, திருலோகசந்தர் டைரக்ட் செய்யும் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தேன். அங்கு, படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை பார்த்து, 'ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள், உடம்பு சரியில்லையா?' என்று கேட்டேன். 'உடம்பைத் தொட்டுப்பார்...' என்றார். தொட்டுப் பார்த்தால், உடம்பு அனலாக கொதித்துக் கொண்டிருந்தது. 'உடம்பு கொதிக்கிறதே... ஓய்வு எடுத்துக்க வேண்டியது தானே?' என்று கேட்டேன்.
'நாளை, 'வியட்நாம் வீடு'ன்னு ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்றேன்; அதிலே எனக்கு ஒரு பிராமணர் கேரக்டர். அதை சிறப்பாக செய்யணுமேன்னு டென்ஷன்; அதனால் தான் ஜுரம்...' என்றார் சிவாஜி.
'பிராமணர் கேரக்டரிலே நடிக்கிறது உங்களுக்கு ஒன்றும் சிரமமானது இல்லையே...' என்றேன்.
'அது, சாதாரண பிராமணர் ரோல் இல்லை; பிரஸ்டீஜ் பத்மநாபன் என்ற எமோஷனலான கேரக்டர். அந்த சீரியசான கேரக்டரிலே நடிக்கிறபோது, ஏதாவது தப்பா போயிட்டா மக்கள் காமெடியா நினைச்சு சிரிச்சுடுவாங்க...' என்றார்.
அவர் அழைத்ததை அடுத்து, மறுநாள் மியூசிக் அகாடமியில் நடந்த, 'வியட்நாம் வீடு' நாடகத்தின் அரங்கேற்றத்திற்கு போயிருந்தேன்; திரை விலகியது... நான் அங்கே சிவாஜியைப் பார்க்கவில்லை; பிரஸ்டீஜ் பத்மநாபனைத்தான் பார்த்தேன்.
ஒரு முறை கமல்ஹாசன், சிவாஜியைப் பற்றி கூறும் போது, 'ஒருவர் தன் நூறாவது படத்தில் நடிக்கிறபோது கிடைக்கிற பர்பெக் ஷனை தன் முதல் படத்திலேயே கொடுத்தவர் சிவாஜி...' என்று குறிப்பிட்டார். 'சிவாஜியிடம் என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கப் பிடிக்கும்?' என்று கேட்டால், 'நடிக்க, 'ஸ்கோப்' இருக்கிற கேரக்டர்களில்...' என்று சொல்வார்.
நடிப்பில் ஈடு இணை இல்லாத நடிகராக இருந்த போதும், கடைசி வரை சிறந்த நடிகருக்கான, 'பாரத்' விருது அவருக்கு தரப்படவில்லை என்பது வருத்தமான விஷயம். முதல் மரியாதை படத்துக்காக அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய விருது கூட நழுவி, ஒரு வங்காள நடிகருக்கு போய்விட்டது.
எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய, 'பால்கே சாகிப்' விருது கூட, அரசியல் காரணமாக தள்ளிப்போய், 1997ல் தான் கிடைத்தது. அவருக்கு விருது அளித்ததற்காக, அப்போதைய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஜெயபால் ரெட்டியை சந்தித்து, நன்றி சொன்னேன். 'இந்த விஷயத்தில் நான் தலை இடவே இல்லை; அவார்டுக்குரிய தேர்வு கமிட்டி அவரை தேர்ந்தெடுத்தது; எனவே, எனக்கு எதற்கு நன்றி சொல்கிறீர்கள்...' என்று கேட்டார். 'ஒரு கமிட்டியை போட்டு, அதில் எந்தத் தலையீடுமின்றி சுதந்திரமாக தகுதியான நபரை தேர்ந்தெடுத்து, கவுரவிக்க வாய்ப்பு தந்ததற்காகவே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்...' என்றேன் பதிலுக்கு!
சிவாஜி - சினிமாவுக்கு, சினிமா ரசிகர்களுக்கு கிடைத்த வரம்!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...e4&oe=5A73C8A1
-
Sundar Rajan.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...9c&oe=5A7FC591
Sundar Rajan
அன்பிற்குரியரிய சிவாஜியவாதிகளே,நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் கலையுலகிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் என்பது அனைவரும்... அறிந்ததே.
கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்து தான் தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாக பல முறை சொல்லி இருக்கிறார்
நமது நடிகர்திலகம்.
பின்னாளில் திரையில் உச்சம் தொட்ட போதும் கட்டபொம்மன் நாடகத்தை நடத்தியுள்ளார் நமது நடிகர்திலகம்.
கட்டபொம்மன் திரைப்படமாக்கபட்டு் மாபெரும் வெற்றியும், பல சாதனைகளையும் நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல், உலகளவில் தமிழின் பெருமையையும், தமிழனின் பெருமையையும் உயர்த்தியது.
திரைப்படமாக வந்த பின்னரும் பலமுறை நாடகம் நடத்தி அதன் மூலம் கிடைத்த வருவாய் ரூபாய் 25 இலட்சத்தை கல்விக் கூடஙகளின் வளர்ச்சிக்கு கொடுத்து உதவியவர் உண்மை கர்ணன் சிவாஜி அவர்கள். இன்றைய மதிப்பு 100 கோடிக்கு மேல் இருக்கும்.
மதுரையில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் கலர் படம் கட்டபொம்மன், மதுரை வந்த நடிகர் திலகம் மதுரை நகராட்சியால் சிறப்பு விருந்தினராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழகத்தில் ஒரு அரசு சார்ந்த அமைப்பின் சார்பாக கௌரவிக்கப்பட்டவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்.
1960-ல் கெய்ரோவில் நடந்த ஆசியா -ஆப்ரிக்கா திரைப்பட விழாவில் கலந்து சரித்திர சாதனையாக சிறந்த படத்திற்கான விருதை வீர பாண்டிய கட்டபொம்மன் படமும் சிறந்த நடிகர் விருதை பெற்றவர் சரித்திரநாயன் சிவாஜி அவர்கள்.
இன்றும் கட்டபொம்மனை இன்றை சமுதாயத்திற்கு நினைவுபடுத்திக் கொண்டிருப்பவர் நமது நடிகர்திலகம்.
கட்டபொம்மனின் நினைவுநாளில் கட்டபொம்மனை வணங்குவோம்.
மக்கள்தலைவரை போற்றுவோம்.
-
Udaikumar Rangayan to nadigar thilagam sivaji visirigal · 58 mins ·
சுமதி என் சுந்தரி சன்லைப் சேனலில் தற்போது
https://images-na.ssl-images-amazon....7L._SY445_.jpg
https://upload.wikimedia.org/wikiped...En_Sundari.jpg
-
கலைத் தெய்வத்தின் 1 வது வெற்றிச்சித்திரம்
பராசக்தி வெளியான நாள் இன்று
பராசக்தி 17 ஒக்டோபர் 1952
65 வருடங்கள்
http://i67.tinypic.com/1mbsl.jpg
http://i66.tinypic.com/2zpp4kp.jpg
http://i65.tinypic.com/2s6jw9i.jpg
-
Sivaji Palanikumar
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6f&oe=5A7FA43C
https://www.facebook.com/md.kamal.31...8200798698751/
நடிகர் திலகத்தின் நூறு நாட்கள் படம் பட்டியல்
இன்று மூன்று நாட்கள் ஓடினால் சூப்பர்
ஏழு நாட்கள் ஓடினால் பிளாக் பாஸ்டர் மூவி . விளம்பரங்களாலேயே வண்டியேட்டும் இன்றைய நிலை
சத்தமில்லாமல் 100 நாட்கள் கடந்த நடிகர் திலகத்தின் சாதனை.
-
Murali Srinivas
சங்கம் - தங்கம் - சிங்கம்
இன்றைக்கு சரியாக 65 ஆண்டுகளுக்கு முன் (17.10.1952) அன்று உதயமான இரண்டு வரலாற்று அடையாளங்களில் ஒன்றைப் பற்றிய ஒரு பதிவு
இரண்டு வருடங்களுக்கு முன்பு சரியாக சொல்ல வேண்டுமென்றால் 17.09.2015 அன்று காலை ரயிலில் மதுரைக்கு சென்று இறங்குகிறேன். அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி. ரயில் நிலையத்திலும் வெளியில் வந்தவுடனும் முதலில் தென்பட்டது ஒரு பெரிய விளம்பரம். இன்று முதல் கோலாகல ஆரம்பம். சென்னை சில்க்ஸ்-தங்கம் தியேட்டர் வளாகத்தில் என்ற வரிகள் பளிச்சிடுகின்றன.
அன்று மாலை மற்றொரு அலுவல் காரணமாக தங்கம் தியேட்டர் அமைந்திருக்கூடிய மேல பெருமாள் மேஸ்திரி வீதி வழியாக செல்ல நேர்ந்தது. அரங்க முகப்பே முற்றிலும் மாற்றபப்ட்டு வெள்ளமென மக்கள் கூட்டம். முந்தைய காலங்களில் கூட்டம் மிக அதிகமாக இருந்தால் பின் பக்க கேட் என அழைக்கப்பட்ட வாசல் வழியாக அதாவது தியேட்டருக்கு பக்கவாட்டில் அமைந்திருக்கும் காக்கா தோப்பு தெரு என்று அழைக்கப்படும் வீதியில் மக்கள் வெளியே வருவார்கள். இப்போதும் மக்கள் புது துணிகளை வாங்கிக் கொண்டு கூட்டம் கூட்டமாக அந்த வாசல் வழியாக வெளியே வந்துக் கொண்டிருந்தார்கள்.
வெகு நாட்களுக்கு பின் மதுரை வந்த சந்தோஷம் நிறைந்திருந்த மனதில் சட்டென்று ஏதோ குறைவது போல் தோன்றியது. உற்சாக பலூனில் சின்ன துளையிட்டது போல். முந்தைய தலைமுறையை சேர்ந்தவர் அதிலும் சினிமாவை நிரம்ப நேசித்த மனிதர்கள் அனைவருக்குமே திரையரங்குகள் என்பது அவர்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிப் போயிருக்கும்.
இதற்கு முன்பும் பல திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அப்போதும் மனதில் சோகம் வந்தது. ஆனால் தங்கம் தியேட்டர் மூடப்பட்டு விட்டது எனும்போது மட்டும் ஏன் கூடுதல் சோகம் வர வேண்டும்? இத்தனைக்கும் அந்த அரங்கம் ஏதோ முதல் நாள் வரை செயல்பட்டுக் கொண்டிருந்த தியேட்டரும் அல்ல. 1994-லியே தங்கம் தியேட்டர் தன இயக்கத்தை நிறுத்திக் கொண்டு விட்டது. ஆக 21 வருடங்களாக மூடிக் கிடக்கும் தியேட்டர் எப்போது வேண்டுமானாலும் இடிக்கபப்ட்டு வணிக வளாகமாக மாற கூடும் என்பதும் தெரியும். அபப்டி இருந்தும் ஏன் இந்த சோகம்?
அதற்கு காரணம் தங்கம் தியேட்டருக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி பந்தம் என்றே சொல்ல வேண்டும். 1952 அக்டோபர் மாதம் 17-ந் தேதி தமிழ் சினிமாவில் துள்ளி எழுந்தான் ஒரு சிங்கத் தமிழன். அவனோடு சேர்ந்து துள்ளி எழுந்தது மதுரை தங்கம் தியேட்டர். பலருக்கு தெரிந்திருக்கலாம். என்றாலும் தெரியாத ஒரு சிலருக்காக சொல்கிறேன். மதுரை தங்கம் தியேட்டர் ஆரம்பமானதும் அதே 1952 அக்டோபர் 17 அன்றுதான். பராசக்திதான் முதல் படமாக வெளியானது.
தனிப்பட்ட முறையில் தங்கம் திரையரங்கைப் பற்றி எனக்கு ஏராளமான நினைவுகள்.
முதல் நினைவு மெல்லிய தீற்றலாய் - அன்னை இல்லம். படம். அன்றைக்கு மிக சிறிய வயதில் பால்கனியில் அமர்ந்து பார்த்ததில் ஏதும் நினைவில்லை. நடையா இது நடையா பாடல் காட்சியின் ஒரு சில ஷாட்ஸ் மட்டும் ஏனோ நினைவிருக்கிறது..
மிகப் பெரிய போர்டிகோ அமைந்திருக்கூடிய தங்கத்தில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்று வாசல் முதல் உள்ளே அரங்கத்தின் பால்கனிக்கு இட்டு செல்லும் சின்ன படிக்கட்டுகள் வரை பெற்றோரின் கை பிடித்து சென்று கர்ணன் படம் பார்க்க போனதும் போர் காட்சிகளும் நடிகர் திலகம் கதையை தலைக்கு மேலே தூக்கி பீமனை தாக்க முயற்சிக்கும் காட்சியும் இன்றும் நினைவில்.
பணமா பாசமா ஒரு மதியக் காட்சி பார்க்க போனபோது அன்றுதான் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் நேரில் தோன்றுகிறார்கள் என்பது தெரிய வந்தது. ஒரு படத்தின் வெற்றி விழாவில் அதில் நடித்த நட்சத்திரங்கள் மேடையில் தோன்றுவதை முதன் முதலாக நேரில் பார்த்த அனுபவம் தங்கம் தியேட்டர் எனக்கு கொடுத்த ஒரு pleasant surprise.
பணமா பாசமாவை பார்த்து விட்டு அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் வீட்டில் அனைவரும் அதே யூனிட்டின் அடுத்த படமான உயிரா மானமா படத்தை முதல் நாள் அடித்து பிடித்து பார்க்க போய் ஏமாற்றம் அடைந்ததும் அதே தங்கத்தில்தான்
நடிகர் திலகத்தின் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற ஆசையை முதலில் நிறைவேற்றிக் கொடுத்ததும் எங்க மாமா படத்தின் மூலமாக அதே தங்கம் தியேட்டர்தான்.
எங்க மாமா முதல் நாள் இரவுக் காட்சி என்றால் அதை விட விரைவாக நடிகர் திலகத்தின் படத்தை முதல் நாள் மாலைக் காட்சியிலே பார்க்கும் ஆசை "எதிரொலி"க்க வைத்ததும் அதே தங்கம் தியேட்டர்தான்.
முதன் முறையாக படம் பார்க்க வீட்டோடு செல்லாமல் நண்பனோடு Andaz படம் பார்த்ததும் அதே தங்கம் தியேட்டரில்தான். ஜிந்தகி ஏக ஸஃபர் பாட்டு முடிந்ததும் [ராஜேஷ் கண்ணா portion முடிந்தவுடன்] ஏராளமான பேர் [குறிப்பாக இளம் பெண்கள்] எழுந்து போவதைப் பார்த்ததும் அதுதான் முதல் முறை. .
தேரே மேரே ஸப்னே என்ற தேவ் ஆனந்த் படம் பார்க்கும்போது அதில் இறுதியில் வரும் ஒரு பிரசவக் காட்சியைப் [அந்த கால் கட்டத்திற்கு துணிச்சலாக காட்டியிருப்பார்கள்] பார்த்து விட்டு முன் வரிசையில் அமர்ந்திருந்த சக வயது சிறுவன் ஒருவன் மயக்கம் போடுவதை பார்த்ததும் அதே தங்கம் தியேட்டரில்தான்.
மறக்க முடியாத 1972-ல் லாரி டிரைவர் ராஜாவை "நீதி"யில் பயங்கர அலப்பரையோடு பார்த்ததும் தங்கத்தில்தான்
நீதிக்கு பிறகு ஒரு ஒன்றரை வருட காலம் முழுக்க முழுக்க இந்திப படங்களை மட்டுமே தங்கம் திரையிட ஏராளமான இந்தி நடிகர்களையும் இந்திப் படங்களையும் பரிச்சயப்படுத்தியதும் தங்கம் தியேட்டர்தான். சீதா அவுர் கீதா, விக்டோரியா நம்பர் 203, யாதோன் கி பாராத், மனோரஞ்சன், பே-இமான் என்று எத்தனை எத்தனை படங்கள்!
நடிகர் திலகத்தை மதுரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது தங்கம் தியேட்டர் எனும்போது அந்த முதல் அனுபவம் அதாவது பராசக்தியை தங்கத்தில் தரிசிக்கும் அனுபவம் நமக்கு கிடைக்கவில்லையே என்ற என்னைப் போன்றோரின் ஏக்கத்தையும் போக்கியது தங்கம் தியேட்டர்.
ஆம். 1977-ம் ஆண்டு தீபாவளியின்போது தங்கம் தியேட்டர் தன் வெள்ளி விழாவைக் கொண்டாடியது. அந்த நேரத்தில் தங்கத்தில் வெளியான முக்கியமான படங்களிலிருந்து காட்சிகள் திரையிடப்பட்டன. அப்படி அந்த 1977 தீபாவளிக்கு வெளியான "சக்கரவர்த்தி" திரைப்படம் பார்க்க போனபோது பராசக்தியின் முக்கியமான காட்சிகளை அதே தங்கத்தில் காணும் வாய்ப்பும் கிடைத்தது. 1952-ல் அலப்பரை எப்படி இருந்தது என்பது தெரியாது. ஆனால் 1977-ல் பராசக்திக்கு நடந்த அலப்பரை மறக்க முடியாது. .
நடிகர் திலகத்தின் படங்களான இளைய தலைமுறை, என்னை போல் ஒருவன் போன்றவற்றை மீண்டும் முதல் நாள் காண வாய்ப்பு கிடைத்ததும் தங்கம் தியேட்டர் மூலமாகத்தான்
எம்ஜிஆர் படங்களான பறக்கும் பாவை, தேடி வந்த மாப்பிள்ளை, நான் ஏன் பிறந்தேன், ஜெய்சங்கரின் வீட்டுக்கு வீடு, அத்தையா மாமியா, துணிவே துணை, அன்று சிந்திய ரத்தம், ஒரே வானம் ஒரே பூமி, பக்திப் படங்களான ஆதி பராசக்தி, சுப்ரபாதம், முத்துராமனின் ஒரு குடும்பத்தின் கதை, உறவு சொல்ல ஒருவன், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், காற்றினிலே வரும் கீதம், ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை, பாக்யராஜின் தூறல் நின்னுப் போச்சு, பிரபுவின் அதிசய பிறவிகள், முத்து எங்கள் சொத்து என்று பார்த்த படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அதுவும் 1982 தீபாவளியன்று [நவம்பர் 14, 1982] காலையில் பரீட்சைக்கு நேரமாச்சு படத்தை சினிப்ரியாவில் ஓபனிங் ஷோ பார்த்துவிட்டு மாலை ஸ்ரீதேவியில் ஊரும் உறவும் பார்க்க திட்டமிட்டு ஏதோ காரணத்தினால் அது நடக்காமல் போக மாலைக் காட்சி தங்கம் தியேட்டருக்கு சென்று அதிசய பிறவிகள் பார்த்தது, படம் முடிந்து வெளியே வந்தால் பேய்த்தனமான மழை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடித்து பெய்த மழை, வேறு வழியில்லாமல் இரவு 10-30 மணிக்கு தொப்பலாக நனைந்து ரோடுகளில் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்ற தண்ணீரில் கிட்டத்தட்ட நீந்தி சென்று ரயில்வே ஸ்டேஷன் வாசலில் அண்ணா நகர் போக பஸ்ஸிற்காக காத்து நின்று தீபாவளிக்கு வாங்கிய புது சட்டையும் பாண்ட்டும் வகை தொகையில்லாமல் அழுக்காகி மற்றொரு முறை அணிவதற்கு கூட லாயக்கில்லாத அளவிற்கு போன அனுபவத்தை கொடுத்ததும் தங்கம் தியேட்டர்தான்.
எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம். ஆகையால் நமது சிங்கத்தின் சாதனைகளை மட்டும் சொல்லி முடிக்கிறேன்
1952-லியே ஒரு லட்சத்து அறுபத்தி எட்டாயிரம் ரூபாய்க்கும் மேலாக மொத்த வசூல் செய்து சாதனை படைத்தது நடிகர் திலகத்தின் பராசக்தி அதிலும் 112 நாட்களில் 1,12,000/- ருபாய் வரி நீக்கிய நிகர வசூல். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரம் ருபாய் நிகர வசூல். V C கணேசன் முதல் படத்திலிருந்தே வசூல் சக்கரவர்த்தி கணேசன் என்பதற்கு தங்கமே சான்று. . .
தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய படங்கள் 7. அவற்றில் அதிகபட்சமாக நடிகர் திலகத்தின் 3 படங்கள் 100 நாட்களை கடந்தது. அவை
பராசக்தி [112 நாட்கள்]
படிக்காத மேதை [116 நாட்கள்]
கர்ணன். [108 நாட்கள்]
நான்காவது படமாக 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய வணங்காமுடி 78 நாட்களில் மாற்றபப்ட்டது வழக்கம் போல் வில்லனாக வந்தது நடிகர் திலகத்தின் தங்கமலை ரகசியம். மட்டுமல்ல பெண்ணின் பெருமை 77 நாட்களும், எதிர்பாராதது 71 நாட்களும் ஓடியதும் தங்கத்தில்தான். கட்டபொம்மன், பாகப்பிரிவினை என்ற இரு இமயங்களுக்கிடையே சிக்கியும் கூட மரகதம் 67 நாட்கள் ஓடியது அதுவும் தங்கத்தில் ஓடியது என்று சொன்னால் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவர் விளங்கும். அதே போல் நல்ல வசூலோடு ஓடிக்கொண்டிருந்த அன்னை இல்லம் 60 நாட்களை நிறைவு செய்தபோது 14.01.1964 அன்று வெளியான கர்ணன் படத்துக்காக மாற்றப்பட்டது. அன்னை இல்லம் 60 நாட்கள் தொடர்ந்து வெளிவந்த கர்ணன் 108 நாட்கள், ஆக தொடர்ந்து 168 நாட்கள் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரங்கமான தங்கத்தில் ஒரே நடிகரின் படங்கள் நமது நடிகர் திலகத்தின் படங்கள் ஓடியது எந்தக் காலத்திலும் முறியடிக்க முடியாத சாதனை.
தங்கம் தியேட்டர் சரித்திரத்திலேயே தொடர்ந்து 15 காட்சிகள் அரங்கம் நிறைந்த ஒரே படம் நடிகர் திலகத்தின் அன்னை இல்லம். 1963 நவம்பர் 15 வெள்ளிக்கிழமை தீபாவளியன்று வெளியான அன்னை இல்லம் 15,16, 17 [வெள்ளி, சனி, ஞாயிறு] மூன்று தினங்களிலும் 5 காட்சிகள் வீதம் நடை பெற்று அவை அனைத்தும் ஹவுஸ் புல் ஆனது.
மதுரை மாநகரிலே முதன் முறையாக முதல் வாரத்தில் அரை லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்ற படம் அன்னை இல்லம்.
மதுரை தங்கத்தில் அன்னை இல்லம் முதல் வார வசூல் Rs 51,096/-
அந்த முதல் வார சாதனை வசூலை முறியடித்தது எங்க மாமா
மதுரை தங்கத்தில் எங்க மாமா முதல் வார வசூல் Rs 57,902. 25 p [1970]
எங்க மாமாவிற்கு பிறகு வசூல் சாதனை புரிந்த படம் நீதி.
மதுரை தங்கத்தில் 4 வாரத்தில் (28 நாட்களில்) நீதி பெற்ற வசூல் சாதனை Rs 1,70,514.03 [1972]
நீதியை முறியடித்தது இளையதலைமுறை. முதல் இரண்டு வாரத்தில் வசூல் சாதனை புரிந்தது இளைய தலைமுறை.
மதுரை தங்கத்தில் 14 நாட்களில் இளைய தலைமுறை பெற்ற வசூல் Rs 1,39,221.40 p [1977]
இளைய தலைமுறையின் முதல் வார சாதனை வசூலை முறியடித்தது என்னை போல் ஒருவன்
மதுரை தங்கத்தில் என்னை போல் ஒருவன் முதல் வார வசூல் Rs 80 ,140 .69 p [1978]
தங்கம் தியேட்டர் சரித்திரத்திலேயே இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமை [படம் வெளியான 9-வது நாள்] கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக எக்ஸ்ட்ரா காட்சி அதாவது 5 காட்சிகள் திரையிடப்பட்ட வரலாற்றை உருவாக்கியதும் நடிகர் திலகத்தின் என்னை போல் ஒருவன்தான்.
மதுரை மாநகரிலேயே பத்தே நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்த முதல் படம் என்னை போல் ஒருவன்
மதுரை தங்கத்தில் என்னை போல் ஒருவன் 10 நாள் வசூல் Rs 1,00,000/- சொச்சம்.
இப்படி நடிகர் திலகத்திற்கும் தங்கம் தியேட்டருக்கும் இருக்கக்கூடிய பிணைப்பை அசைக்க முடியாத சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
மேற்சொன்ன அனைத்து சாதனைகளுக்கும் விளம்பரம் இணைத்திருக்கிறேன். விநியோகஸ்தர் கொடுத்த விளம்பரங்கள். எனக்கு இந்த விளம்பரங்கள் தந்துதவிய நண்பர்கள் செந்தில்வேல் மற்றும் NT Fans வாட்ஸப் குழுவிற்கு நன்றி.
சங்கத் தமிழ் மதுரையில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமாக உருக் கொண்ட தங்கமே! சிங்கத் தமிழன் ரசிகர்களாகிய நாங்கள் உன்னை என்றும் மறவோம்!
அன்புடன்
ஒரு விதத்தில் தீபாவளி நாயகனுக்கும் தீபாவளி தியேட்டருக்கும் இருக்கும் உறவை தீபாவளி நேரத்தில் எழுதுவதுகூட பொருத்தம்தான். மதுரையின் மைந்தர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0d&oe=5A677A9F
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...20&oe=5A87DED9
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...fe&oe=5A7D0557
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...55&oe=5A7E23B2
-
திரைச்சூரியன் வள்ளல் சிவாஜி கணேசனின்
153 வது வெற்றிச்சித்திரம்
பாபு வெளியான நாள் இன்று
பாபு 18 ஒக்டோபர் 1971
https://i.ytimg.com/vi/k3YN6RCZHs0/hqdefault.jpg
https://encrypted-tbn0.gstatic.com/i...pU-rqv38xySgDQ
கலர்படங்களுக்கு மத்தியில்
வெளிவந்து சாதனை ஏற்படத்திய
கறுப்பு வெள்ளை சித்திரம் பாபு
-
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...86&oe=5A727EEE
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
-
Vasu Devan
தலைவர் இல்லாத 'தீபாவளி' நடிகர் திலகத்தின் ரசிகர்கள் தீபாவளியைக் கொண்டாடியது போன்று எவரும் அவ்வளவு சந்தோஷமாக தீபாவளி கொண்டாடியிருக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் தெய்வத்தின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது இரவெல்லாம் கண்விழித்து, தியேட்டரில் கொடி கட்டி, ஸ்டார்கள் வைத்து, ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகள் போட்டு, இரவில் திரையரங்கிற்கு பக்கத்தில் உள்ள கடையில் நான்கைந்து டீ சாப்பிட்டுவிட்டு, கடமைக்கு வீடு சென்று தீபாவளி குளியல் குளித்துவிட்டு, படையலுக்குக் கூட காத்திராமல் தியேட்டரில் த...லைவர் ரசிகர்கள் பண்ணும் அலம்பலுக்குக்காக ஓடோடி வந்து கோஷம் போட்டு, பட்டாசுகள் வெடித்து, தலைவர் கட்-அவுட் பாதங்களை தொட்டு கும்பிட்டு, எட்டு மணிக்கெல்லாம் படத்தை கடலைகள் ஆர்ர்பாரிக்கும் சப்த ஆரவாரத்துடன் கண்டு களித்தது நினைவில் பசுமையாக தங்கி ஞாபகம் வருகிறது.
தலைவர் போனார். தீபாவளி போச்சு. இப்போது பிள்ளைகள், மனைவிக்காக தீபாவளி. சும்மா பெயருக்கு. கடமைக்கு.
ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகனும் இந்த நன்னாளில் இப்போது நினைப்பது என்ன தெரியுமா?
தலைவரின் தீபாவளிப் படங்களையும், அன்றைய தியேட்டர் திருவிழாக் கோலங்களையும், ரசிகர்களின் ஆரவாரங்களையும்தான்.
தீபாவளி அன்று கூட பட்டினி கிடந்தது தலைவர் படம் பார்த்து வயிறும், மனசும் நிறைந்து வந்தவன் நடிக திலகத்தின் ரசிகன் மட்டுமே.
வேறு எவருக்கும் இந்த பாக்கியம் எப்போதும் கிடைத்தது இல்லை.
என் தெய்வம் இல்லாத, என் தெய்வத்தின் படங்கள் இல்லாத தீபாவளிகள் என் வரையில் புஸ்வாணங்களே.
இந்த நன்னாளில் தலைவரின் நினைவுகள் வாட்டி வதைக்கின்றன.
'''மூன்று தெய்வங்களின் தாயெனும் செல்வங்களை விடிகாலையில் எழுந்து கண்களில் கண்ணீர் பொங்க பார்த்து தலைவரின் ஆசீர்வாதம் வாங்கியாகி விட்டது.
பிள்ளைகள், மனைவி, சுற்றம், தாய், தந்தை, சகோதரன் என்று ஆயிரம் விழுதுகள் அருகில் இருந்தாலும் என் 'ஆலமரம்' எங்கே?
அந்த ஆரவார தீபாவளிகள் எங்கே?
நாள் முழுதும் நேரம் பத்தாமல் தியேட்டரிலேயே தவம் கிடந்த அந்த தீபாவளி எங்கே?
ஒவ்வொரு ஷோவிற்கும் கொட்டும் மழையிலும் கியூவில் நின்று தலைவனை தரிசித்த மக்கள் கூட்டம் நிறைந்த தீபாவளி எங்கே?
சந்தோஷமான தீபாவளி பண்டிகை. ஆனால் ஒவ்வொரு தலைவரின் ரசிகனும் தீபாவளி அன்று அசை போட்டுக் கொண்டிருக்கும் சிந்தனையே வேறு. அது தெய்வத்தின் ரசிகர்களைத் தவிர யாராலும் உணர முடியாதது. உணர்ந்து கொள்ள முடியாதது.
அனைவருக்கும் 'தெய்வம்' சிவாஜி தீபாவளி வாழ்த்துக்கள்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...52&oe=5A69441F
-
-
-
-
Sundar Rajan
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f7&oe=5A7EC4BE
Sundar Rajan
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
இந்த செய்தி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது,
இன்று பத்திரிக்கை உலகிலும், மீடியா உலகிலும் இளைஞர்கள் அதிகளவில் இருப்பதால் ...இந்த செய்தி அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தவர்கள் இருந்தாலும் அவர்கள் சிவாஜி அவர்களைப் பற்றிய செய்திதானே என்று அமைதியாக இருந்து விடுகின்றனர்.
அவர்களுக்காக
அகில இந்திய சிவாஜி மன்றத்தின் தலைவராக இருந்தவர் ஜயா சண்முகம் அவர்கள், அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், அவரை தன்னுடயை தளபதியாக வைத்துக் கொண்டவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள். எனக்கு தெரிந்தவரையில் எந்த ஒரு நடிகரும் தான் சார்ந்த இனத்தவரையோ அல்லது தனது உறவினர்களையோ தான் அகிலஇந்திய மன்றத்தின் தலைவராக வைத்திருப்பார்கள்.
நமது அன்பு இதயங்களுக்கும் சரி, மற்ற மன்றத்தை சார்ந்தவர்களுக்கும் தளபதி சண்முகம் என்றால் தான் தெரியும். அவருடைய இறுதி காலம் வரை அவரை மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றவில்லை. மேலும் அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து ஒரு காலகட்டத்தில் அவருக்கென்று ஒரு அறையையே ஒதுக்கி அவரை பாதுகாத்து வந்தவர் சிவாஜி அவர்கள்.
ஓட்டுக்காக இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சிறு உதவியை செய்துவிட்டு நான் தான் அவர்களின் காவலன் என்று கூக்குரலிடும் அரசியல்வாதிகளே, நடிகர்களே யாராவது, மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் போல் ஒரு தாழ்த்தப்பட்டவரை தலைவராக நியமிக்கத் தயாரா
அதேபோல், மன்றத்தின் பொதுச்செயலாளராக இருந்த மாவீரன் ராஜசேகரன் அவர்கள் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்,
தாழ்த்தப்பட்டவரை தலைவராகவும், முக்குலத்தோரை பொதுசெயலாளராகவும் நியமித்து அன்றே சாதி, மதம் பாகுபாடு அல்லாமல் அனைவரும் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று உணர்த்தியவர் சிங்கத்தமிழன் சிவாஜி அவர்கள்.
இப்போது புரிகிறதா, தமிழகத்தின் உண்மையான சமூகநீதி காவலன் சிவாஜி அவர்கள் தான் என்று.
சிவாஜி என்று சொல்லடா.....
தலையை மட்டுமல்ல
நெஞ்சையும் நிமிர்த்தி செல்லடா...
-
Jahir Hussain
Ayakudi, India
"தீபாவளியும் சிவாஜி சினிமாக்களும்"... சிவாஜி ரசிகர்களுக்கு தீபாவளிக் கொண்டாட்டங்களே புத்தாடை, பட்டாசு, மத்தாப்புகள், பலகாரம், எண்ணெய் குளியல் இவற்றைத்தாண்டி ஒன்று இருக்கிறது என்றால் அன்று ரிலீஸ் அகும் சிவாஜி சினிமாக்கள்தான்... 1952 - 92... வரை பராசக்தி முதல் தேவர் மகன் வரை.. இந்த 40 ஆண்டுகளில் சற்றேறக்குறைய 50 சிவாஜி சினிமாக்கள் வந்திருக்கக் கூடும்.. வெற்றியின் சதவீதம் அதிகம்..நம் தலைவருக்கு ஐஸ்வர்யமான பண்டிகை தீபாவளியும் கூட...
நம் நண்பர்கள் ஒவ்வொருவரருக்கும் அவரவர் வயதுக்குத் தக்கவாறு தீபாவளி ரிலீஸ் சிவாஜி சினிமாக்கள் அனுபவம் இருந்து இருக்க கூடும்.. அந்த நாளில் டிக்கெட் கிடைக்காமல் மூட் அவுட் ஆன அனுபவங்கள் சில நண்பர்களுக்கு இருக்கலாம்.. இன்னும் பலதரப்பட்ட காரணங்களுக்காக தீபாவளி தினத்தில் அன்றைய தலைவர் படத்தை பார்க்க முடியாது போயிருக்கலாம்.. எதிர்பாராத விதமாக ஓரு சில ஆண்டுகளில் சிவாஜி சினிமா ரிலீஸ் ஆகாமல் நம்மை "கருப்பு தீபாவளி" கொண்டாட வைத்திருக்கலாம்.. இப்படி நூற்றுக் கணக்கான அனுபவங்களை நாம் பகிர்ந்து கொள்வது கூட தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நான் நினைக்கிறேன்.. 1976 தீபாவளி... நான் பார்த்த முதல் தீபாவளி சிவாஜி சினிமா... "சித்ரா பௌர்ணமி"... தீபாவளி அன்றே மாலைக்காட்சி பார்த்து விட்டேன்... எங்கள் ஊரில் சந்தானகிருஷ்ணா தியேட்டரில் படம் ரிலீஸ்.. கட்டுக்கடங்காத கூட்டம்.. திண்டுக்கல் மெய்ன் ரோட்டில் தியேட்டர் அமைந்துள்ளது... தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய பண்டிகைகள் சமயத்தில்தான் அதுபோன்ற பெருங்கூட்டம் வரும்.. அதுபோல ஒரு பெருங்கூட்டம்தான் அன்று...
அன்று 5 காட்சிகள்.. முதல் காட்சி 9 மணி.. அப்போதே பார்த்து விட துடித்தேன்.. நண்பர்கள் யாருமின்றி ஒற்றை ஆளாய் சென்று விட்டேன்.. எனக்கு 10 வயது கூட ஆகவில்லை.. டிக்கெட்டுக்காக அலைமோதுகிறேன்.. முடியவில்லை.. ஒரு நல்லவர் வந்தார் "தம்பீ" போய் பெரியவர்களை அழைத்து வா.. இந்த கூட்டத்தில் சிக்கினால் நீ "பஞ்சாமிர்தம்" ஆகி விடுவாய் போ போ என்று அறிவுறுத்தினார்... (குறிப்பு:- அந்த நல்லவர் குறிப்பிட்ட வார்த்தைதையை ஹைடு பண்ணிட்டு பஞ்சாமிர்தம் என்ற வார்த்தையை சபை நாகரீகம் கருதி பயன் படுத்தி உள்ளன்)
திரும்பவும் ஆயக்குடி போனால் வீட்டில் விட மாட்டார்கள்... ஆயக்குடிக்கும் பழனிக்கும் 3 கி மீ தூரம்.. என்ன செய்வது... நோன்புக்காசாக கிடைத்த ரூபாய் 20 கைவசம் உள்ளது.. (எங்கள் அப்பாவின் அருமை நண்பர் மருதநாயகம் அவர்கள் வீட்டில்தால் விபரம் தெரிந்த நாள் முதல் தீபாவளி கொண்டாட்டம் அதுபற்றிய பதிவு ஒன்றும் பதிவிடப் போகிறேன்) வேறு படங்கள் பார்க்க மனமில்லை.. ஊரைச்சுற்றி ஓய்ந்து போனேன்.. 1 மணிக்காட்சி 4 மணிக் காட்சி இரண்டிற்கும் டிக்கட் வாங்க முடியாமல் 7 மணிக்காட்சிக்கு கிடைத்தது டிக்கெட்.. குதூகலம் ஆனந்தம் பெருமிதம் மூன்றும் கலந்தவனாக படம் பார்த்து ரசித்து முடித்தேன்.. இரவு 10 மணிக்கு காட்சி முடிந்தது... வீட்டில் வலைவீசி தேடுகிறார்கள்.. பஸ்ஸிலும் கூட்டம்.. எப்படியோ வீடு வந்து சேர மணி 11... நல்ல வேளை கடும் கோபத்தில் இருக்கும் அப்பாவை சமாதானப்படுத்தி தூங்க வைத்து இருந்தார்கள்.. பூனை போல வீட்டுக்குள் புகுந்தேன்.. அம்மாவும் பாட்டியும் சாப்பாடு போட்டார்கள்.. சாப்பாடு முடிந்த பிறகு கேள்விகள் அறிவுரைகள் எல்லாம்.. அதில் முக்கியமான அறிவுரை .. டேய் உன்னை "பிள்ளை படிக்கிறவன்" கொண்டு போயிட்டால் என்னடா செய்யறது? ஆகையால் கவனமாக இருக்க வேண்டும்.. யாரும் மிட்டாய் கொடுத்தால் வாங்கித் தின்னாதே.. பிடிச்சு கொண்டு போய் கையை காலை ஊனமாக்கி கண்காணாத ஊர்ல பிச்சை எடுக்க விட்றுவானுங்க என்ற பயமுறுத்தல் வேறு.. எப்படியோ அடி வாங்காமல் தப்பித்தேன்... இது என் 1976 தீபாவளி சிவாஜி சினிமா அனுபவம்.. அடுத்தது "அண்ணன் ஒரு கோயில்" பட அனுபவம்.. அப்படியே தொடரும்....
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a1&oe=5A87E138
-
தமிழ் திரை உலகில் எவரும் "பராசக்தி" வெளிவரும்வரை பல விஷயங்களை கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் ..அவை யாதெனில்...
1) இந்த நடிகர் இத்துனை நடிகர்கள் மத்தியில் வளருவார் என்று.
2) அவரது வளர்ச்சி தடுக்கமுடியாத, அடைக்கமுடியாத, கட்டுகடங்காத காட்டாற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் என்று !
3) குறைந்த வருடங்களில் நிறைந்த திரைப்படங்கள் நடித்து திரை உலகில் உள்ள 90 சதவிகித தயாரிப்பாளர்கள் ஏக மனதாக மற்ற மொழி நடிகர்களை ஓரம்கட்டி மண்ணின் மைந்தன் சிவாஜியை வைத்து திரைப்படம் எடுக்கவே முடிவெடுப்பார்கள் என்று.
4) இந்த நடிகர்தான் திரை உலகிலயே வரும் காலங்களில் எந்த நடிகரை காட்டிலும், எவ்வளவு கடுமையான போட்டிகளுக்கு இடையிலும் சர்வ சாதாரணமாக
a) அதிக 50 நாட்கள் படங்கள்
b) அதிக 75 நாட்கள் படங்கள்
c) அதிக 100 நாட்கள் படங்கள்,
d) அதிக 125 நாட்கள் படங்கள்,
e) அதிக 150 நாட்கள் படங்கள்,
f) அதிக 175 நாட்கள் படங்கள்,
g) ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளிவந்து இரெண்டுமே 100 நாட்கள் ஓடும் படங்கள்,
h) வெளிநாடுகளில் அதிக விருதுகள்,
i) அண்டை நாடான இலங்கையில், மற்ற நாடுகளில் அதிக 100 மற்றும் 175 நாட்கள் படங்கள், 200 நாட்கள் படங்கள்,
250 நாட்கள் வெற்றிப்படங்கள், வசூல் படங்கள்
இப்படி பல முதல் சாதனைகளுக்கு சொந்தக்காரராக இவர் மட்டுமே என்றும் இருப்பார் என்று எவருமே நினைத்து பார்க்காத தருணம் !
(நண்பர் ரவிகிரண்சூரியா அவர்களின் முன்னைய பதிவு பராசக்தி 65 வருட நிறைவில் ஒரு நினைவலை)
-
-
கலைக்கதிரவன் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
65 வது வெற்றிச்சித்திரம்
பெற்ற மனம் வெளியான நாள் இன்று
பெற்ற மனம் 19 ஒக்டோபர் 1960
https://upload.wikimedia.org/wikiped...etra_Manam.jpg
-
கலைக்கதிரவன் ,வெற்றித்திலகம், சிவாஜி கணேசனின்
205 வது வெற்றிச்சித்திரம்
பட்டாக்கத்தி பைரவன் வெளியான நாள் இன்று
பட்டாக்கத்தி பைரவன் 19 ஒக்டோபர் 1979
10 வது ஹவுஸ் புல் வாரம்
பட்டாக்கத்தி பைரவன்
ஜெஸிமா(கிராண்பாஸ்) ஶ்ரீதர் (யாழ்ப்பாணம்)
http://oi66.tinypic.com/255rgaw.jpg
https://i.ytimg.com/vi/YGQmtKLeZ-M/maxresdefault.jpg
https://upload.wikimedia.org/wikiped..._bhairavan.jpg
https://i.ytimg.com/vi/e6s7qF4UaNE/hqdefault.jpg
-
மாற்றுத்திரியில் ஒருவருக்கு சிவபுராணம் தேவையாம்
மிகவிரைவில் ஆரம்பம்
-
Sekar Parasuram
வசந்த் தொலைக்காட்சி யில் 2pm க்கு
அந்தமான் காதலி
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...86&oe=5A39AE4C
-
-
Sundar Rajan
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...9b&oe=5A6B2E2F
Sundar Rajan
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
ஒரு ஆங்கில இதழ் 1950 முதல் 1960ல் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் தகுதியுடையவர்களில் தமிழில் நமது நடிகர்திலகம் அவர்கள் டாப்பில் இருந...்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.
நடிகர்திலகம் இருந்தவரை கலையுலகில் முதல் இடத்தில் இருந்தவர்,
இப்போதும் இருப்பவர். இனி யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது ,
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு அடுத்து தான் எவரும் வரமுடியும் என்பது உலகநியதி.
ஆனால்,
அரசியலில் பாருங்கள்,
கூகுளில் Tamilnadu ChiefeMinister list என search செய்தால்,
முதலமைச்சர் படங்களின் வரிசையில் எம்ஜிஆர் அவர்களின் படம் எந்த இடத்தில் உள்ளது என பாருங்கள்.
இன்று வரை கலையுலகில் சிவாஜி அவர்களை மிஞ்ச எவரும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை.
ராஜா திரைப்படத்தில்
நடிகர்திலகம் அவர்கள் சொல்லும் வார்த்தை ராஜான்னா ராஜா தான்,
ஆம் சிவாஜின்னா சிவாஜி தான்.
-
Sundar Ra
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...85&oe=5A7AD91A
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
கடந்த சில நாட்களாக நமது இதயங்கள் அனைவரும் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்தவற்றைப் பற்றி எழுதி வருகின்றனர்.
நீயா நானாவு...க்கு இருந்த மரியாதை மக்களிடத்தில் போய் வெகுநாட்களாகி விட்டது. அந்த நிகழ்ச்சியின் முடிவை முன்னரே முடிவு செய்து கொண்டு, அதற்கேற்றார் போல் விவாதம் நடத்துவார் கோபிநாத் என்பது உலகறிந்த விசயம்.
இதில் இன்னொரு செய்தி என்னவென்றால், எந்த அணி வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த அணியில் நீயா நானா குழுவின் சாா்பில் சிலை அமரச் செய்து அவர்களை பேசவிடுவார்கள் என்ற செய்தி அதில் கலந்து கொண்டோர் பலருக்கு தெரியும்.
அவர்களிடத்தில் அடிக்கடி மைக்கை கொடுங்கள் என்று சொல்லி பேசவிடுவது, அவர்கள் நன்றாக பேசினார்கள் என்று பரிசு கொடுப்பது இது மாமுலான விசயம்.
இதனால் நீயா நானாவுக்குக்கு இருந்த டிஆர்பி ரேட்டே
குறைந்து வருடங்களாகி விட்டது.
சரி விசயத்திற்கு வருவோம், எனக்கு முதலில் அலைபேசியில் அழைத்து, நீயா நானாவில் நான் கலந்து கொள்கிறேன், தலைப்பு சிவாஜி பாடலா அல்லது எம்ஜிஆர் பாடலா என்று தகவல் கூறியவர் நமது அன்பு இதயம் அப்துல்ரசாக் அவர்கள்.
அவரிடம் சில தகவல்களை சொன்னேன், முடிந்தால் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் பாடல்களை அனுப்பி வைக்கிறேன் என்று கூறினேன், ஆனால் என்னால் அனுப்ப முடியவில்லை்.
காலையில் அப்துல்ரசாக் அவர்கள் நிகழ்ச்சியில் இருந்தவாறு போட்டோ எடுத்து அனுப்பி இருந்தார். அதைப் பார்த்த பிறகு எனக்கு ஒரு சந்தோசம்.
ஏனென்றால், எதையும் தட்டிக்கேட்கும் சமூகநலபேரவை சந்திரசேகரன், பல விசயங்கள் தெரிந்த கான், தைரியமாக எடுத்துரைக்கும் சுப்பு, பல அரிய தகவல்களை தரும் சேகர் பரசுராம், இளைய ரத்தமாக அப்துல்ரசாக், உணர்ச்சிவசப்படும் ஜெயக்குமார், எதையும் ஆணித்தராமாக எடுத்துரைக்கும் ராமஜெயம் இவர்களையெல்லாம் பார்த்தவுடன் எனக்கு பேரின்பம், எதிரணியினர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்கள், விஜய் டிவி நீயா நானா குழுவிற்கு சிம்மசொப்பனமாக இருப்பார்கள் என்று மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால், நீயா நானா குழுவோ நமக்கு சரியான வாய்ப்பு தராமல், எதிரணிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பது அறிந்து மனம் நொந்தேன்.
ஜெயக்குமார் அவர்கள் இந்த நிகழ்ச்சி விஜய் டிவி ஒளிபரப்பாமல் செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார்.
நிகழ்ச்சி தவறான பாதையில் செல்கிறது, நமக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று தெரிந்தவுடன், அன்பிற்குரிய சந்திரசேகரன், கான், சுப்பு, ராமஜெயம் போன்றோர், நாங்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்று அங்கேயே நமது கண்டணத்தை தெரிவித்து விட்டு வெளியில் வந்திருந்தால், நீயா நானா குழுவின் பித்தலாட்டத்தை உலகறிய செய்திருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
எத்தனையோ அரசுகள் நமது மக்கள்தலைவர் அவர்களின் புகழை மறைக்கப் பார்த்து, அதில் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருப்பதைக் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த வீணாய் போன விஜய் டிவியால் என்ன செய்ய முடியும்.
-
Abdul Razack
அன்பு இதயங்களே கடந்த 15/10/2017 அன்று விஜய் TV யின் நீயா? நானா? நிகழ்ச்சியில் பங்கு பெற்று அங்கு நடந்த நிகழ்வுகளை இதில் பதிவிடுகிறேன் இதில் எதுவும் தவறு இருந்து அதில் நியாயம் இருந்தால் சுற்றிகாட்டவும் முதலில் நாம் நிகழ்ச்சியின் உள்ளே செல்லும் முன் அதன் நடைமுறைகள் பலம்.பலவீனம் இதை நாம் தெரிந்து கொண்டால் அடுத்து வரும் விடயங்கள் எளிதாக புரியும் இதன் தலைப்பு சிவாஜி பாடல்களா? எம் ஜி ஆர் பாடல்களா? இந்த தலைப்பே நம்மில் பல பேருக்கு விருப்பம் இல்லை பாடல்கள் விவாதம் என்றால் பட்டுகோட்டையா? கண்ணதாசனா? வாலியா? வைரமுத்துவா?இப்படித்தான் இருக்கும் இவர்களின் இந்த தலைப்பு மக்கள் மனதில் யார் பாடல்கள் அதிகம் இடம் பிடித்துள்ளது என்ற நோக்கம் இதில் எம் ஜி ஆர் அணிக்கு சாதகம் அவர்கள் ஆளுங்கட்சியாக இருப்பது அதனால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிளும் அந்த கட்சி மீட்டிங் நடக்கிறது அதனால் மைக் செட்டில் அவரின் பாடல்களை நாள் முழுவதும் ஒளிபரப்பிகொண்டே இருக்கிறார்கள் இதை நாம் அனைவரும் அறிவோம் ஆனால் சிவாஜி பாடல்கள் என்றால் தொலைகாட்சிகளில் வருவது மட்டுமே நாம் விரும்பினால் கேட்கலாம் கட்டயாமாக அங்கு போல் நாம் தினிக்க முடியாது இரண்டாவது இது கோபிநாத் பற்றியது வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர் அந்த பாடத்தை முழுவதும் தெரிந்து இருக்கனும் அதைவிட்டு மாணவனிடம் விளக்கம் கேட்ககூடாது,,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் தகுதி 30 வயது முதல் 45 வரை என்பது இரண்டு பக்கமும் 30 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்பது விதிமுறை நம் அணியில் ஒருவர் மட்டுமே 50 வயதை கடந்தவர் அவரும் வாய்திறக்கவே இல்லை அந்த அணியில் 14பேர்கள் 50 வயதை கடந்தவர்கள் மூன்று பேர் 30 வயதிற்கும் கிழ் உள்ளவர்கள் அதில் சிலர் ஏற்கனவே இது போன்று வேறு நிகழ்ச்சியில் கலந்து அனுபவம் பெற்று நெளிவு சுளிவு தெரிந்தவர்கள் அதனால் பாடல்கள் பாடுவதற்கு மேடையில் கச்சேரி பாடும் ஒரு ஆண் ஒரு பெண் என்று முன்னேற்பாடாக அழைத்து வந்து விட்டார்கள் நம் அணியில் அனைவரும் புதியவர்கள்நமக்குள்ளே அறிமுகம் இல்லாதவர்கள் இதை உங்கள் மனங்களில் பதிந்து மேலும் படியுங்கள் ஸ்டுடியோ உள்ளே சென்றோம் இரண்டு பிரிவாக பிரித்து அமரவைத்தார்கள் பிறகு நிகழ்ச்சி தொடங்கியது கோபிநாத் வந்து அனைவருக்கும் வணக்கம் வைத்து நிகழ்ச்சியின் விதிகள் சொன்னார் நான் கேட்பதற்கு ஏற்ற பாடல்கள் பாடவேண்டும் பாடல் சிறப்புபற்றிதான் சொல்லனும் நடிகர்கள் சிறப்பு சொல்லக்கூடாது எதிர் பாட்டை மட்டம் தட்டகூடாது உங்கள் பாடல்களை உயர்வாக பேசலாம் தனிமனித புகழ் வேண்டாம் ஒரு முறை வந்த பாடல் அடுத்து வரவேண்டாம் அரசியல் வேண்டாம் என்று சொல்லி எம் ஜி ஆர் பாடல் ஒன்று பாடுங்கள் என்று கேட்டார் அங்கு ஒளித்த பாடல் நான் ஆணையிட்டால் பிறகு நம் பக்கம் திரும்பி ஒருவர் பாடலாம் என்றார் நான் பாடுகிறேன் நான் பாடுகிறேன் என்று அனைவரும் ஆர்வமாக கேட்டார்கள் ஒருவர் தான் பாடவேண்டும் என்று சொன்னபிறகு நண்பர் ராம் குமார் இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்ற பாடல் பாடி பலத்த கைதட்டல் வாங்கினார் அதன்பிறகு முதல் கேள்வியாக எம் ஜி ஆர் ரசிகர்களிடம் முதன் முதலாக ஒரு எம்ஜிஆர் பாட்டு கேட்க்கிறீர்கள் அது உங்களுக்கு பிடித்து போய் இந்த பாடலை நாம் திரும்பி கேட்கமாட்டோமா என்று ஏங்கி தவித்த பாடல் அதன் காரணம் என்ன சொல்லுங்கள் என்றார் அந்த அணியினர் 3 நிமிட பாடலுக்கு ஒவ்வொருவரும் 5 நிமிடம் விளக்கம் கொடுத்து குறிப்பிட்ட பாடலில் வந்து நிறுத்துவார்கள் எங்கே அந்தபாடலை பாடுங்கள் என்று அவர் சொன்னால் அங்கு இருக்கும் மேடை பாடகரிடம் மைக்கை கொடுத்து அவர் அழகாக பாடி பாராட்டு வாங்கி விடுவார் மேலும் அங்கு இருந்த அவர்கள் 30 பேர்களில் எட்டு பேர் மட்டும் மைக் வாங்கி பேசி பாடவரும் சூழ்நிலையில் பாடகரிடம் கொடுத்து விடுவார்கள் ஒரு சில பாடல்களை அந்த எட்டு பேரும் பாடினார்கள் மற்ற இருபது பேரும் அமைதியாக இருப்பார்கள் அவர்களிடம் முடித்து நம்மிடம் திரும்பினார்..,,,...............தொடரும்,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7b&oe=5A71C18B