https://i.postimg.cc/0Qsr2RJ1/6fb9da...ac143271e1.jpg
Printable View
https://i.postimg.cc/C11Z2Zdr/IMG-3632.jpg
தமிழ் திரையுலகின்
சாதனை
மன்னன்
மக்கள் திலகம்
புதிய படம் கையை சுட்டால் ...அதிலிருந்து மீள எம்.ஜி.ஆர் ., படம் போடு- இது 80 வருடமாக நடக்கும் தமிழ்சினிமா அதிசயம்.............. Thanks RK.,
மதுரையில் நேற்று ஞாயிறு (21- 09- 2019) மாலை காட்சியில் மதுரை - சென்ட்ரல் DTS.,திரையரங்கில் மக்கள் திலகத்தின்" நினைத்ததை முடிப்பவன் " திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்றது ...இந்த திரைப்படம் வெளிவந்து 44 ஆண்டுகள் ஆகிறது இப்போதும் அன்று திரையிடப்பட்ட போது இருந்த உற்சாகம் ஆட்டம் பாட்டம் கொண்டn ட்டம் ரசிகர்களின் ஆரவாரத்தை இப்போதும் பார்க்க முடிந்தது எந்த ஒரு நடிகருக்கும், தலைவருக்கும் இல்லாத ரசிகர்களின் ஆதரவு நமது தலைவருக்கு மட்டுமே இப்போது திரைக்கு வரும் புதிய படங்கள் ஒரு வாரம் கூட ஒடுவது இல்லை வசூலிலும் திரைப்படம் ஓடும் நாட்களிலும் நமது தலைவர் தான் எதிலும் முதலிடம் எப்போதும் முதலிடம் இந்த சாதனையை முறையடிக்க இனி எந்த நடிகரும் கிடையாது எத்தனை யுகங்கள் ஆனாலும் உலகம் உள்ளவரை தலைவரின் புகழ் மங்காது என்றும் ஒளி விளக்காக, வானத்தில் உள்ள சந்திரனாக நமது (எம்.ஜி.ராம) சந்திரன் முழு நிலவாக பிரகாசிப்பார், முழு சூரியன் ஆக பிரகாசிபார்...... ..... மதுரை ராமகிருஷ்ணன்......... Thanks...........
சிலம்பு செல்வர் . அய்யா.ம.பொ.சி. அவர்களிடம் இந்த படத்தை காண்பித்து " இந்த நிகழ்வு குறித்து சொல்லுங்கள் அய்யா......? " என்றேன் - இனி அவர் சொன்னது........
இந்த விழா..... எனக்கு ரொம்பவே மறக்க முடியாத நிகழ்ச்சி..... எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து அமர்ந்ததில் இருந்து ஏதோ.... கலக்கத்தில் இருப்பது மட்டும் எனக்கு தெரிந்தது...... அவர் கலங்கி போய் இருந்தால்...... அவரது கைக்குட்டை அவரது கண்ணாடிக்கு உள்ளே லாவகமாக போய் வரும்..... அதை என்னாலும் கவிஞர் வாலியாலும் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...... நான் அருகே சென்று..... என்ன ஆனது......? ஏன் முகம் மாறி உள்ளது என்றேன்...... அதற்கு அவர்.... இந்த வெற்றி கேடயத்தில் உள்ள படம் என் தாயை நினைவு படுத்தி விட்டது...... நாங்கள் சகோதரர்களாக இப்படித்தான் வறுமையின் பிடியில் எங்கள் தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் இருந்து வந்தோம்..... என்று கண்ணீர் விட்டார்......
ஒட்டு மொத்த தமிழ்நாடும் அவர் விழியசைவிற்கும் விரலசைவிற்க்கும் காத்திருக்கும் போதும் அவர் தனது பழைய நெகிழ்வூட்டும் நிகழ்ச்சிகளை மறக்கவே இல்லை......
அவரது ஈகை..... உழைப்பு .... என்று ஆயிரம் காரணங்கள் அவரது இமாலய வெற்றிக்கும் புகழுக்கும் காரணமாக எல்லாரும் சொன்னாலும் அவரது தாய்பக்தியும் காரணம் என்பது என் கருத்து............. Thanks.........
தலைவரை தாக்கி எழுதாத எந்த பத்திரிகையும் இல்லை,ஆசிரியனும் இல்லை! உதாரணம் ஆனந்த விகடன் ,துக்ளக்....Etc...அத்தனை போராட்டத்திலிருந்தும் ஜெயித்தார்,அது மட்டும் அல்லாமல் தாக்கி பேசியவர்கள் அவரைப்புகழ்ந்து பேசும்படி அவர் செயல் இருந்தது.He was a Magnanimous man especially in Humanity.......... Thanks Mr. Devaraj Andrews...
அண்ணா காலத்திலேயே புரட்சித்தலைவரைதி.மு.கவிலிருந்துநீக்கவேண்டும் என்றும்,தலைவராகவேவெளியேறிவிடுவார் என்றும் பலத்த வதந்திஉலாவியது,காரணம் காமராஜர் விழாவில் தலைவர் கலந்து கொண்டதால்,அப்போது தலைவர்MLCஆக இருந்தார் அந்தச்சூழ்நிலையில்,கல்கண்டுபுத்தகம் ஒருகட்டுரை வெளியிட்டது அதில்,சைக்கிள்படம் போட்டு அமைதி.மு.க என்றும் முன்சக்கரம்தான் அண்ணாஎனவும் பின்சக்கரம் எம்.ஜி.ஆர்என்றும்அச்சிட்டு,முன்சக்கரம்எனும்அண்ணாகட ்சிக்கு வழிகாட்டியாகவும் ஆனால் பின்சக்கரம் எனும்,எம்.ஜி.ஆரோடுதான் பெடல் என்ற தொண்டர்கள் இணைப்பு உள்ளது ஆகவே எம்.ஜி.ஆர் இல்லாத தி.மு.க வைநினைத்துக்கூடபார்க்கமுடியாது என்று ஆசிரியர் தமிழ்வாணன் எழுதியிருந்தார்
இந்தப்புத்தகம் கிடைக்கவும் யாராவதுமுயற்சி எடுங்கள்.......... Thanks...
புரட்சித் தலைவர் எம்ஜிஆர்... இந்த ஒரு பெயருக்கு கிடைத்த முக்கியத்துவமும், புகழும், மக்கள் செல்வாக்கும் வேறு எவருக்கும் கிடைத்ததில்லை.. கிடைக்கப் போவதுமில்லை. ஆனால் கனவுத் தொழிற்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் எப்போதும் அடுத்தவர் புகழைப் பார்த்து, தாங்களும் அதே போல வர வேண்டும் என்ற ஆர்வத்தில் காப்பியடிக்க ஆரம்பிக்கிறார்கள்... அடைமொழியைக் கூட அதே மாதிரி சூட்டிக் கொள்ளத் தலைப்படுகிறார்கள்.
புரட்சித் தலைவர் புரட்சி நடிகராக இருந்த எம்ஜிஆர், பின்னர் மக்கள் திலகமானார். கொஞ்ச நாளில் அந்தப் பட்டங்களுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி அமைந்தது எம்ஜிஆருக்குத் தரப்பட்ட புரட்சித் தலைவர் பட்டம். அவர் இந்த மண்ணுலகிலிருந்து மறையும் வரை அதுவே அவரது நிரந்தரப் பெயராயிற்று (நல்லவேளை, நானே சூப்பர் ஸ்டார் என்று இன்றைய நடிகர்கள் போட்டுக் கொள்வதைப் போல, இந்தப் புரட்சித் தலைவரை பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை!
புரட்சிக் கலைஞர் எண்பதுகளில் சினிமாவில் அடுத்தடுத்த வெற்றிகளைக் கண்ட விஜயகாந்துக்கு எம்ஜிஆரையும் பிடிக்கும், கலைஞர் கருணாநிதியையும் பிடிக்கும். பார்த்தார்... எம்ஜிஆரின் புரட்சியையும், கருணாநிதியின் கலைஞரையும் உருவி புரட்சிக் கலைஞர் ஆனார். கேப்டன் பிரபாகரனில் நடித்ததன் மூலம் கேப்டன் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். பின்னாலில் அவரது புரட்சிக் கலைஞர் பட்டம் காணாமல் போய், கேப்டன் பட்டம் நிலைத்துவிட்டது. இப்போது அதையும் எதிர்த்து யாரோ வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
புரட்சி நாயகன் இன்று ஏதோ ஒரு கட்சியின் (அடிக்கடி கட்சிப் பெயரை மாத்திட்டதால நெசமாவே பேர் ஞாபகமில்லீங்க) தலைவராக இருக்கும் கார்த்திக்கை கொஞ்ச நாள் புரட்சி நாயகன் என்று அடைமொழி போட்டு அழைத்து வந்தார்கள். இப்போது அந்த அடைமொழியை அவரும் மறந்துவிட்டார், சினிமாவும் அவரை மறந்துவிட்டது. இடையில் கொஞ்ச காலம் மறைந்த முரளிக்கும் இந்த அடைமொழியைப் பயன்படுத்தினார்கள். நியாயமாக அவரை எவர்கிரீன் மாணவன் என்றுதான் அழைத்திருக்க வேண்டும்
புரட்சித் தளபதி இந்தப் பட்டத்தை மதுரை ரசிகர்கள் தனக்குக் கொடுத்ததாகச் சொல்லி சில படங்களில் பயன்படுத்தினார் விஷால். ஆனால் அப்படி அவர் போட்டுக் கொண்ட எந்தப் படமும் ஓடவில்லை. பின்னர் ஒரு நாள் சத்தமின்றி புரட்சி, தளபதிகளையெல்லாம் கட் பண்ணிவிட்டு, வெறும் நடிகரானார் விஷால். ஆச்சர்யம்... அடுத்த மூன்று படங்களிலும் நல்ல பெயர் கிடைத்தது அவருக்கு!
புரட்சித் தமிழன் இது சத்யராஜுக்கான அடைமொழி. தமிழர்களிடையே அவர் என்ன புரட்சி செய்தார், அட இந்த அடைமொழிக்கும் சினிமாவுக்கும்தான் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பதெல்லாம், மேடை கிடைத்தால் சினிமாவையும் முன்னணி நடிகர்களையும் கலாய்க்கும் சத்யராஜே யோசிக்க வேண்டிய சமாச்சாரம்.
புரட்சி இயக்குநர் இந்த அடைமொழிக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா... நம்ம ஹீரோ விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன். அவர் அப்போல்லாம் தொடர்ந்து 'சட்ட'ப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். சட்டம் ஒரு இருட்டறையில் ஆரம்பித்து ஒரு டஜன் சட்டப் படங்கள் எடுத்து, பார்ப்பவர் கண்விழிகளைப் பிதுங்க வைத்துக் கொண்டிருந்த நேரம் அது. சட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசிவிட்டதாக நினைத்துக் கொண்டோ என்னவோ, புரட்சி இயக்குநர் என்ற அடைமொழியை அவர் எடுத்துக் கொண்டார்.
புரட்சித் திலகம் இந்த டைட்டிலுக்குதான் இப்போது மல்லுக் கட்டு ஆரம்பித்துள்ளது. இந்த அடைமொழியை முதலில் வைத்துக் கொண்டவர் இயக்குநர் நடிகர கே பாக்யராஜ். அவர் அப்போது எம்ஜிஆர் பெயரில் ஒரு கட்சியும் நடத்தி வந்தார். புரட்சித் தலைவரிலிருந்து பாதியையும், மக்கள் திலகத்திலிருந்து மீதியையும் எடுத்து இந்த அடைமொழியை சூடிக் கொண்டார். என் கலையுலக வாரிசு என எம்ஜிஆரே அறிவித்திருந்ததால், இந்த அடைமொழி பெரிதாக யாரையும் உறுத்தவில்லை. இப்போது அந்த அடைமொழியைத்தான் சரத்குமார் சூடிக் கொண்டிருக்கிறார்.
புரட்சித் தலைவி... சினிமாவில் இருந்த வரை ஜெயலலிதாவுக்கு திரையுலகம் வழங்கிய பெயர் கலைச்செல்வி. அவர் அரசியலுக்கு வந்து, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, கட்சி நிர்வாகிகள் கொடுத்த அடைமொழி புரட்சித் தலைவி. சொல்லப் போனால் இவர் புரட்சித் தலைவி -ஆன பிறகுதான் சினிமாவில் 'புரட்சி' என்ற தலைப்பைப் பயன்படுத்துவதற்கே முற்றுப்புள்ளி விழுந்தது. இப்போது அதை மீறி புரட்சித் திலகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.. பார்க்கலாம்!.......... Thanks..........
பணத்தோட்டம் !
__________________
என்னதான் நடக்கும்
நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும்
தயங்காதே ஒரு தலைவன் இருக்கின்றான் மயங்காதே !
கவிஞர் கண்ணதாசன் !
இப்பாடல் பலரது வாழ்க்கைய புரட்டி போட்ட பாடல்
பலரது தற்கொலைகளை
தடுக்கப்பட்ட பாடல் !
தன் இயலாமையால் மனம் வெம்பியவர்களுக்கு மாமருந்தாய் அமைந்த பாடல் !
எத்துன்பம் நேர்ந்திடுனினும் நல்லதை நினைத்து போராடு உற்சாகத்தை இரத்தத்தில் செலுத்தி
நெஞ்சை நிமிரவைத்த பாடல் !
இது போன்ற காட்சிகளில் மக்கள் திலகத்தின் நடிப்பு விமர்சனத்திற்கும் உட்படுமோ ?
............ Thanks........
ஐயா ஒரு பையன் எம்ஜிஆருக்கு மாலை போட்டு அந்த மாலையை அவனுக்கே திருப்பி போட்டார் எம்ஜிஆர்.நீங்கதான் போட்டுக்கணும் என்று அந்த பையன் வற்புறுத்தி மீண்டும் மாலையை அவனுக்கே அணிவித்தான். இந்த மாதிரி காட்சிகளின் போது பொதுமக்கள் கரவொலியும் விசில் ஒலிகளும் எழுந்தன என்று படிக்கும் பொழுது புல்லரித்து போனேன்.காரணம் .மாலை மட்டும் போடவில்லை.அங்கம் முழுவதும் முத்தமிட்டேன். அந்த பையன் தான் பெரும் பாக்கியசாலியும் நித்தம் நித்தம் வாழும் தெய்வம் புரட்சி தலைவரை வணங்கி கொண்டு இருக்கும் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் ஷிவபெருமாள். நான் தான்.இதில் ஒரு மாபெரும் அதிசயம் என்ன வென்றால் 36 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை கோடிட்டு காட்ட ஒரு புகைப்படம் தேவைபடும் பொழுது அதில் சம்மந்தப்பட்ட ஒருவனின் உழைப்பாலும் அவன் சார்ந்த அமைப்பின் பேனரே வருகிறது என்றால் புரட்சி தலைவர் இன்றும் மகா சக்தியாக விளங்குகிறார் என்பதற்க்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு வேறு இல்லை. இந்த பதிவை போட்ட சகோதரருக்கு ஆயிரம் நன்றி கள்.இதில் ஒரு சம்பவம் என்னவென்றால் தலைவர் உண்ணாவிரதம் உட்கார்ந்த சில நிமிடங்களில் ஒரு அதிகாரி வாக்கிடாக்கியில் புரட்சி தலைவரிடம் ஓடி வந்து மேடம் (அன்னை இந்திரா) உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டதாகவும் தாங்கள் உண்ணாவிரதம் இருந்தால் தமிழ் நாடு கொந்தளிக்கும் என்று சொன்னார்கள் என்று அந்த அதிகாரி கூறிய பொழுது தலைவர் உட்கார்ந்து விட்டு உடனே எழுந்தால் நன்றாக இருக்காது என்று கூறிவிட்டு இதை உண்ணாவிரதமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று மேடத்திடம் சொல்லி விடுங்கள் என்று சொல்லியதை நான் அருகே இருந்து கேட்டேன். மாலை போட நான் பட்ட கஷ்டம் தலைவர் என்னிடம் பேசியது எல்லாவற்றையும் போட்டால் நெடிய பதிவாகிவிடும்.இந்த பந்தலில் தலைவருக்கு திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களோட கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அண்ணன் பாஸ்கரன் டேவிட் மற்றும் பலர் அமர்ந்து இருந்ததை பார்த்தேன்.இந்த நிகழ்ச்சி யின் புகைபடத்தை பல வருடங்களாக தேடுகிறேன் கிடைக்கவில்லை.அது ஒன்று தான் என் கவலை.. நன்றி......... Thanks...
https://i.postimg.cc/jq3VHtvP/IMG-3646.jpg
நாடு போற்றிய நல்லவர்
வேலை வாய்ப்பு அளித்த பொன்மனச் செம்மல் :
முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கங்கை அமரனின் மகன் பிரபுவின் மிருதங்க அரங்கேற்றத்திற்கு புகழ் சேர்த்ததுடன் ஒரு மிருதங்க வித்வானின் கோரிக்கையையும் அதே இடத்தில் தீர்த்து வைத்தார்.விழாவில்
பேசிய மிருதங்க வித்வான் அழுத்தமாக ஒரு கோரிக்கையைச் சொல்லி வைத்தார்.இசைக் கல்லூரியில் படித்து பட்டம் பெறுபவர்களுக்கு
வேலைவாய்ப்பு முதல்வர் உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.உடனே
அமைச்சரை எம்.ஜி.ஆர் அழைத்து தன் சார்பில் ஒரு உத்தரவை சொல்லும்படி பணிக்க,அவரும் இசைக் கல்லூரி பட்டதாரிகளுக்கு, வேலை வாய்ப்பு உறுதி அளித்து உத்தரவிடுவதாக முதல்வர் சொல்லச் சொன்னார்.அதை மகிழ்வோடு
சொல்கிறேன் என்று பிரகடனப்படுத்தி விட்டார்.கங்கை அமரனின் பையன் மாஸ்டர்
பிரபு எம்.ஜி.ஆர் காலில் விழுந்து வணங்கியதும்,தன்னுடைய பரிசாக தங்கச் சங்கிலியை அணிவித்து பாசத்துடன் தட்டிக் கொடுத்தார் புரட்சித் தலைவர்.
-தேவி 1985............ Thanks...
வரும் வெள்ளி முதல் (27/9/19) சிவகாசி லட்சம் அரங்கில்* மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் தூள் கிளப்பிய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறும்*
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
குமுதம் ரிப்போர்ட்டர்*----------------------------------
ரஜினி* எம்.ஜி.ஆர். ஆக முடியாது .---------------------------------------------------
பூச்சாண்டி காட்டி வரும் இவரை அவரது ரசிகர்களே நம்பிவிட* தயாராக இல்லை .தானும் ஒரு எம்.ஜி.ஆராக* வலம்* வரலாம் என்று தமிழகத்தில் ரஜினி நினைப்பு*வைத்தால் அது 100 சதவிகிதம் தவறு . கருவாடு மீனாகலாம் ..ஆனால் ஒருபோதும் ரஜினி எம்.ஜி.ஆர். ஆகவே முடியாது .
கோதை ஜெயராமன், மீஞ்சூர் .
வரும் 27.09.2019 வெள்ளிக்கிழமைமுதல் சிவகாசி லட்சம்.டி.டி.எஸ். பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் இருவேடத்தில் தூள்கிளப்பிய வெள்ளிவிழாக் காவியம்" எங்க வீட்டுப் பிள்ளை" வெற்றிப்பவனி வருகின்றார்... நன்றி ...மதுரை எஸ்.குமார்..... Thanks.........
மதுரை அனுப்பானடி - பழநி ஆறுமுகா DTS., திரையரங்கில் வரும் வெள்ளிக்கிழமை முதல் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் "அடிமைப்பெண்"... வெற்றிப்பவனி... நன்றி ... மதுரை.எஸ் குமார்............. Thanks.........
மெட்ராஸ் காரங்களே மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு கலக்கிய மதுரை இரசிகர்கள். இத்தனைக்கும் "நினைத்ததை முடிப்பவன்" இந்த வருஷம் நான்காவது முறையாக அங்கு திரையிடப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்..
மண்ணுலகை விட்டு மட்டுமே மறைந்து எங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்ற புரட்சி தெய்வத்தின் புகழை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் எம்ஜிஆர் பக்தர்களைக் காணும் போது உண்மையிலேயே ஒரு சிலிர்ப்பு தான் ஏற்படுகின்றது. நாங்க கூட படம் ஆரம்பிக்கும் முன் வெளியேயும், படம் போட்ட பின் உள்ளேயும் கொண்டாட்டத்தை தூள் பரத்துவோம். ஆனா, இன்ட்ரோல்ல பொதுவாக கன்ட்ரோலா தான் இருப்போம். ஆனால், இவிங்க அப்ப கூட அளப்பரைய நிறுத்தலயே. மதுரை பக்தர்களை இரு கரம் கூப்பி வணங்குகின்றேன் ✌...... Thanks...
*" நினைத்ததை முடித்தவர்** "
தலைவர் அவருக்கு பாரத் பட்டம் வழங்கிய போது கூறிய பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள்.
"எனக்கு இன்று இவ்வளவு இரசிகர்கள் இருப்பது ஒன்றும் பெருமையில்லை. அது ஒரு பெரிய வெற்றியும் கிடையாது. ஆனால், என் காலத்துக்குப் பின்னும் எனக்காக இரசிகர்கள் இருந்து, எனது இலட்சியங்களும் கொள்கைகளும் கடைபிடிக்கப் படுமேயாயின் அதுதான் உண்மையான வெற்றி" என்றார். இன்று வரை அதற்கு எந்தக் குறையும் ஏற்பட்டு விடாமல் தலைவரின் புகழ் நாளுக்கு நாள் ஏற்றம் மட்டுமே காண ஏதுவாக அவரது பக்தர்கள் இருந்து வருகிறார்கள், இலட்சக்கணக்கான , கோடான கோடிக்கணக்கான இரத்தத்தின் இரத்தங்களின் தலைவரின் ஆசான் எடுத்துரைத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டின் வெளிப்பாடு இது.
"என்றும் ஆளும் எங்களாட்சி இந்த மண்ணிலே" ✌✌✌✌ என்று ஆணித்தரமாக அன்றே கூறிய கலியுகக் கடவுளின் கூற்றினை மெய்யாக்கிக் கொண்டிருப்பவர்களும் அவர்கள் தான், அதிமுக வின் ஆணிவேரே இவர்கள் தான். இவர்கள் இல்லையென்றால் இந்த ஆட்சி இல்லை, பட்டம், பதவி எதுவுமேயில்லை. இதற்கு முன்பிருந்தவர்களும் உண்மை எம்ஜிஆர் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. உண்மையிலேயே எதையுமே எதிர்பார்க்காத, தன் தலைவரின் புகழ் ஒன்றே குறி என்று வாழ்கின்ற மக்கள் கூட்டத்தை நிகழ் காலத்தில் காண்பதரிது. குவாட்டர், பிரியாணிக்கு விலை போகாத முரட்டு பக்தர்கள் படை அது. அத்தகைய தியாக உள்ளம் படைத்தவர்கள் தொண்டுள்ளம் கொண்டவர்களை உலகில் வேறெங்கும் காண இயலாதென்பது தெள்ளத்தெளிவு. தன் தலைவன் செய்த தியாகத்திற்கும், தொண்டிற்கும் அவர் வழியில், நன்றி மறவாமல் ப்ரதி உபகாரம் செய்து வரும் உன்னத உள்ளங்களின் எண்ணங்களை தயவுசெய்து களங்கப்படுத்தி விடாதீர்கள். இதுவரை, கண்டுகொள்ளாமல் இருந்த போக்கையும் மாற்றிக் கொள்ளுங்கள். நாம் மதுரை சென்ட்ரலில் கண்ட தொண்டர் படையைப் போன்றதொரு படை சென்னை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்கள் தொடங்கி சிற்றூர்கள் வரை பரவி அங்கிங்கெனாதபடி வியாபித்து இருக்கிறது. அவர்களின் பரிசுத்தமான எண்ணங்களை மதிக்க வேண்டுமென்று
ஆட்சியிலும், கட்சியிலும் இருப்பவர்களை கேட்டுக் கொள்வோம். இனிமேலாவது உண்மை நிலையை உணர்ந்து அதற்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு புரட்சித் தலைவரின் வழியில் ஊழலற்ற ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்கும் ஆட்சியைத் தர வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தலைவர் பக்தர்களின் எண்ணமாகும். தொடர் வெற்றியைக் கழகம் அடையவும் அவ்வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவும் அஃதொன்றே துணை நிற்கும். தலைவரின் வழியில் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றமடைய பாடுபடுவோம். தலைவரின் புகழுக்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடாமல் காப்பதே ஒவ்வொரு எம்ஜிஆர் தொண்டனின் கடமையாகும்.
வாழ்க புரட்சித் தலைவர் நாமம் ✌✌
வளர்க பொன்மனச்செம்மல் புகழ் ........... Thanks...............
கடந்த வாரம் காஞ்சி பாலசுப்ரமணியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்*பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள்*நடைபெற்றது .
தகவல் உதவி ;: காஞ்சி* நண்பர்**திரு.செல்வராஜ் .
ஞாயிறு முதல் (22/9/19) ராசிபுரம் சாமுண்டியில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆரின்*மகத்தான வெற்றிகாவியமாகிய டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள்*நடைபெறுகிறது .
தகவல் உதவி : சேலம் நண்பர் திரு.வெங்கடேஷ் .
வரும் வெள்ளி முதல் (27/9/19) மதுரை அனுப்பானடி பழனி ஆறுமுகாவில் திரையிட இருந்த டிஜிட்டல் "அடிமைப்பெண் " தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளிவைப்பு .
தீபாவளி வெளியீடாக வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன் "*மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியாக உள்ளது .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
கோவை சண்முகாவில் வரும் வெள்ளி முதல் (27/9/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 9 கதாநாயகிகளுடன் நடித்த "நவரத்தினம் " மீண்டும் திரைக்கு வருகிறது .
கோவையில் தீபாவளி வெளியீடாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன் " அல்லது "ஆயிரத்தில் ஒருவன் " திரைக்கு வர உள்ளது .
* தகவல் உதவி : கோவை நண்பர் திரு.கமலக்கண்ணன் .
https://i.postimg.cc/nVmzZpkM/d7db94...651e22a187.jpg
நேற்று
இன்று
நாளை
எப்போதும்
இவர்போல்
வேறு ஒருவர்
இனி இல்லை
சாதனை சரித்திரம்
என்றும்
அவர் வழியில்
அரிய பதிவு
படித்து பாருங்கள்...........
சரித்திரம் சாகாது.........
நம் சரித்திர நாயகன்
புகழும் மங்காது..........
அரிய படத்துடன் ஆரம்பம் பதிவு...இந்த படம் மதுரை வீதியில் 26.10.1958 அன்று "நாடோடி மன்னன் ", வெற்றி விழாவில் யானை இருமுறை நம் மன்னனுக்கு மாலை போடும் காட்சி..
இனி பதிவுக்குள் போவோம்......
அன்று நடந்த விழாவை முழுதாய் சொல்ல முகநூலில் இடமில்லை முக்கிய நிகழ்வுகள் மட்டும் உங்கள் பார்வைக்கு..
26.10.1958 அன்று மதுரை மாநகரில் மன்னனுக்கு விழா...நூற்றுக்கணக்கான மைல் களுக்கு அப்பால் இருந்தும் ரயிலில், பஸ்களில், கார்களில், மாட்டு வண்டிகளில், சைக்கிள்களில் வந்து சேர்ந்த பல்லாயிரம் ரசிகர்கள் தங்கள் சொந்த செலவில் வந்து குவிந்தனர்.
மாலை 4.00 மணிக்கு மதுரை சந்திப்பு ரயில்நிலையம் அருகில் இருந்து ஊர்வலம் ஆரம்பம். கண்ணுக்கு எட்டிய வரை மக்கள் கூட்டம்.
4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் நடுவே நம் தலைவன் வீற்று இருக்க வாழ்க எம்ஜியார் என்ற கோஷம் விண்ணை பிளக்க புறப்பட்டது ஊர்வலம்.
ரதத்தின் முன்னே சென்ற உலக உருண்டையின் மீது தங்கவாள் சுழன்று கொண்டே மின்னியது.
110 சவரன்கள், அந்த வாளுக்கு என்று ஒரு அற்புத தனி உறை அன்றே சுமார் 61 ஆண்டுகளுக்கு முன்னால் அதன் மதிப்பு ரூபாய் 20000 ...
ஊர்வலத்தின் முன்னே யானைகள், குதிரைகள், மாடுகள், அணி வகுத்து செல்ல பின்னே அலைகளாக வந்த ரசிகர்கள்.
தூவ பட்ட மலர்கள், வீசி எறிய பட்ட மாலைகள் ஏராளம்....எங்கு நோக்கினும் மகிழ்ச்சி.
நிகழ்வுகளை " நாடோடி மன்னன்", பட ஒளிப்பதிவாளர் ஜி. கே.ராமு, மற்றும் சண்முகம் ஆகியோர் பட பிடிப்பில்........
3 மைல் தூரம் உள்ள தமுக்கம் மைதானம் வந்து அடைய ஊர்வலத்துக்கு 3.30 மணி நேரம் ஆனது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
2 லட்சம் மக்கள் குழுமி இருந்த அந்த மைதான மேடையில் தலைவன் ஏறிய உடன் எழுந்த கரகோஷம் அடங்கவே 15 நிமிடங்கள் ஆயின.
கலந்து கொண்டவர் விவரம்.
சட்டமன்றதலைவர் கிருஷ்ண ராவ், எதிர்க்கட்சி தலைவர் வி.கே.ராமசாமி முதலியார், பி.டி.ராஜன், தியாகராயர் கல்லூரி முதல்வர் ம.கி சண்முகம், கே ஆர் ராமசாமி, நாவலர், கவி கண்ணதாசன், தி.க பகவதி, என்.எஸ்.நாராயணன், துரை ராஜ், ஏ. எஸ்.ஏ சாமி, மற்றும் திரைத்துறை முன்னணியினர்.
இந்த விழாவை நடத்தும் பொறுப்பில் எம்.சி. எஸ் முத்து அண்ணன், துரை அரசு அவர்கள்.
தலைமை உரை ஆற்றிய பி.டி.ராசன் பேசிய பின் எஸ்.முத்து வரவேற்று பேச பின் நாவலர் அவர்கள் மக்கள் சார்பில் வழங்க பட்ட தங்க வாளை மலர் மாலை சூடிய பின் எடுத்து கொடுக்க அந்த வாளை நம் தலைவன் உயர்த்தி காட்ட என்ன ஒரு அமர்க்களம் அன்று.
பின் எஸ்.எஸ்.ஆர் பாராட்டு உரை வழங்க நன்றி உரையில் நம் தலைவர் பேசி முடிய இயற்கையும் வாழ்த்தி பெரு மழை பெய்தது அதிசய நிகழ்வு.
மறுநாள் காலை மதுரை பெரியவர்களும், தமிழக பெரியோர்களும், மன்ற மறவர்களும் ஆயிரக்கணக்கில் நம் வாத்தியாருடன் காலை உணவு சாப்பிட.
விழா உரையில் தங்க வாளை கண்டு ஆசைப்படாதே, பொன்னுக்கு ஆசை பட கூடாது, தங்க ஆசையை தகர்த்து ஏறி என்ற செய்தியை மக்கள் ரசிகர்கள் எனக்கு உணர்த்தி உள்ளனர் என்று பேசி மதுரை செட்டியார் பிலிம்ஸ் கொடுத்த அந்த நிகழ்வில் கொடுத்த 11 சவரன் பரிசை அன்றே மதுரை தமிழ் சங்கத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தவர் நம் தலைவன்.. பின்னர் அந்த தங்க வாளையும் தானமாக கொடுத்த தங்க தலைவா என்றும் உன் புகழ் காக்கும் எம்ஜியார் ரசிகர்கள்.
வாழ்க எம்ஜியார் புகழ்.பதிவில் நிறை இருந்தாலும், குறைகள் இருந்தாலும் சொல்லுங்கள்.
என்றும் அவர் ரசிகர்கள் சார்பாக.... நன்றி.
.
இன்றைய நடிகர்கள் ரசிகர்கள் யாராவது இந்த பதிவை படிக்க படிப்பீர்கள் என்றால் ஓர் முறைக்கு பல முறை யோசியுங்கள்.. எம்ஜியார் எப்படி இன்று உள்ள நடிகர்கள் எப்படி என்று அவர்களை குறை சொல்லவில்லை...அவர் போல வாழ்ந்து பின் அவர் போல வர நினைக்க வேண்டும் இல்லையா... சொல்வது தவறா...நன்றி..
நன்றி நெல்லை மணி........
அன்புடன்...
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி .......... Thanks.........
வாழ்க...வாழ்க...பல்லாண்டென, வாழ்த்துகிறோம்
*************************
மலேசியா கோலாலம்பூர் நகரின் பிரிக் பீல்ட்ஸ் அருகில் அமைந்திருக்கும் டாக்டர்
"எம்ஜிஆர் மையம்" அறங்காவலர் மரியாதைக்குறிய அண்ணார் திரு. மணிவாசகம் அவர்களது மகிழ்ச்சி பொங்கும் பிறந்த நாளுக்கு ,
பெங்களூர் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " சார்பில்....
நீடித்த ஆயுளுடனும், நிலைத்த மகிழ்வுடனும், உலகம் போற்றும்... வணங்கும் ,
உத்தமக் கடவுள் ஶ்ரீ இறைவன் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசியுடன் வாழ்க... வாழ்க... பல்லாண்டு என வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்களுடன்....
எம்ஜிஆரின் காலடி நிழல்
கானா க. பழனி (பெங்களூர்)
எம்ஜிஆர் பித்தன்
அ. அ. கலீல்பாட்ஷா (திருவண்ணாமலை)
எம்ஜிஆர் பக்தர்
மு. தமிழ்நேசன் (மதுரை)
எம்ஜிஆர் தொண்டர் - 1-
சம்பங்கி GSR
(பெங்களூர்)
எம்ஜிஆர் தொண்டர்- 2-
க. ராஜசேகர் (பெங்களூர்)
எம்ஜிஆர் தொண்டர் -3-
சுதர்சன் (பெங்களூர்)
எம்ஜிஆர் தொண்டர் -4 -
முருகன் @ பிரகாஷ்
எம்ஜிஆர் தொண்டர் - 5 -
ந. பாஸ்கரன் (பெங்களூர்)
------ அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர் ., உதவும் அறக்கட்டளை -- பெங்களூர்......... Thanks...
வீரப்பன் சொல்கிறார்...
*எம்.ஜி.ஆர்* *முதலமைச்சராக இருந்த பொது,* *ஒருநாள் நான் ராமாவரம்*
*தோட்டத்திற்கு* *போயிருந்தேன்*. *அப்போது*
*ஒரு பழைய நாடக நடிகர்* *அங்கு வந்திருந்தார்.*
*அவரிடம்,* *என்ன* *விஷயமாக வந்திருக்கிறீர்கள* ?' *என்று கேட்டேன்*
*அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே*
*பட்டினி..ஒன்றும் முடியவில்லை*. *நான்*
*சின்னவரோட நாடகத்தில* *நடிச்சிருக்கேன்*ஏதாவது* *உதவி* *கேட்கலாம்னு* *வந்திருக்கேன் என்றார்*
'*சரி உட்காருங்க* *எம்.ஜி.ஆர் வெளிய*
வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்.
சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
" இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும் " என்று சொல்லிவிட்டு,காரில்
ஏறிச் சென்றுவிட்டார்.
அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
தவிப்புடன் நின்றார்.
" இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
சொன்னாருல்ல,மதியம் சாப்டுட்டு
போங்க " என்றேன்.
"நான் எப்படிச் சாப்பிடுவது..என்
குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
என்றார் அவர்.
'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்.
சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
எம்.ஜி.ஆர் கோட்டையிலிருந்து வந்து
விட்டார்.
அந்த நடிகரிடம்,மதியம் திரும்ப
எம்.ஜி.ஆர் வெளியே புறப்படும்போது
அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
போங்க..என்றேன். சரி..என்றார்.
வெளியே வந்த எம்.ஜி.ஆர் அவரைப்
பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார்.அந்த
நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
மீண்டும் நின்றது.எம்.ஜி.ஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
அவர் காருக்கு அருகில் சென்று சற்று
தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
அவரும் காருக்கு மிக அருகில் போய்
நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
எம்.ஜி.ஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
அவர் என்னருகே வந்து கவரைப்
பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
விட்டது.அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
எனக்குத் தான் அதிக சந்தோஷம்.
மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
சென்றிருந்த போது எம்.ஜி.ஆரிடம்
கேட்டேன்..." கஷ்டத்துல வந்த அந்த
நடிகரை சாப்பிடச் சொன்னீங்க,ஆனா
அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
கேட்காம போயிட்டீங்க.திரும்ப மதியம்
வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க.அந்த
நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு.
இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
வச்சு அனுப்புறீங்க. ஏன் அண்ணே
அப்படிச் செஞ்சீங்க " என்று கேட்டேன்.
சில கணங்கள் என்னை அமைதியாகப்
பார்த்துவிட்டு அவர் சொன்னார்.
" எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
படுவார்.அவரா கேட்டா கம்மியாத் தான்
கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
கொடுத்திடனும் " என்றார்.
எனக்குத் தான் இப்ப கண் கலங்குச்சு.
அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
ஈகை இயல்பு பற்றியும் இருவேறு
கருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.
*அதனால்* *தான்*அவர் இறந்தும்* *இன்னும்*
*வாழ்ந்து* *கொண்டிருக்கிறார்*.......... Thanks...