gnyanapazhathai pizhindhu...hindi-la ??? :lol2:Quote:
Originally Posted by sankara70
Printable View
gnyanapazhathai pizhindhu...hindi-la ??? :lol2:Quote:
Originally Posted by sankara70
Ek viswanathanQuote:
Originally Posted by rangan_08
do viswanathan
ek do teen char viswanathan :lol:
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1967
1. நடிகர் திலகத்தை வைத்து அதிகமான படங்களை தயாரித்த பாலாஜி (17 படங்கள்) முதன் முதலாக நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த படம் - தங்கை.
2. அது போல் நடிகர் திலகத்தை வைத்து அதிகமான படங்களை இயக்கிய திருலோக்சந்தர் (20 படங்கள்) முதன் முதலாக இயக்கிய படம் - தங்கை.
வருடம் - 1968
இந்த வருடம் வெளியான படங்கள் - 8
1. 100 நாட்களை கடந்த படங்கள் - 4
கலாட்டா கல்யாணம்
என் தம்பி
தில்லானா மோகனாம்பாள்
உயர்ந்த மனிதன்
2. 75 நாட்களை கடந்த படங்கள் - 2
திருமால் பெருமை
எங்க ஊர் ராஜா
[html:6ac876c34f]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings3/eorajaprerelease.jpg">
[/html:6ac876c34f]
3. 50 நாட்களை கடந்த படம் - 1
லட்சுமி கல்யாணம்.
4. முதன் முதலாக சி.வி.ராஜேந்திரன் நடிகர் திலகத்தை இயக்கிய படம் - கலாட்டா கல்யாணம்.
5. டூயட் பாடல் காட்சிகளோ, தனி பாடலோ இல்லாமல் மிக பெரிய வெற்றிப்படத்தை தன்னால் தர முடியும் என்பதை நடிகர் திலகம் நிரூபித்த படம் - தில்லானா மோகனாம்பாள்.
[html:6ac876c34f]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings3/thillanarunning.jpg">
[/html:6ac876c34f]
மதுரை சிந்தாமணியில் ஓடிய நாட்கள் - 132
மொத்த வசூல் - Rs 3,47,167.13 p
[இது சிந்தாமணியில் அதே இத்தனை நாட்கள் (132) ஓடிய எந்த படத்தின் வசூலை விடவும் அதிகம்].
6. நடிகர் திலகத்தின் அதிகமான படங்களை இயக்கியவரில் ஒருவரான பி.மாதவன் முதன் முதலாக நடிகர் திலகத்தை வைத்து தயாரித்து இயக்கிய படம் - எங்க ஊர் ராஜா.
நிறுவனம் - அருண் பிரசாத் மூவிஸ்.
7. உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதும் ஜோடியோ டூயட் பாடலோ இல்லாமல் நடிக்கும் துணிச்சலை மீண்டும் வெளிப்படுத்தினார் நடிகர் திலகம். படம் - லட்சுமி கல்யாணம்.
8. 16 ஆண்டுகளில் 125 படங்கள். அனைத்திலும் நாயகனாக. மீண்டும் ஒரு முதன் முதல் சாதனையை நிகழ்த்தினார் நடிகர் திலகம். நடிகர் திலகத்தின் 125-வது படம் - உயர்ந்த மனிதன்.
17.10.1952 - பராசக்தி
29.11.1968 - உயர்ந்த மனிதன்
9. கதாநாயகனின் முதல் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் மீண்டும் அதே நாயகனின் 125-வது படத்திற்கும் இணைந்தது தமிழ் பட உலகில் முதன் முதல் மட்டுமல்ல, இன்று வரை முறியடிக்க முடியாததும் கூட.
தயாரிப்பாளர் - ஏவிஎம்
இயக்குனர்கள் - கிருஷ்ணன் பஞ்சு
நாயகன் - நடிகர் திலகம்
படம் - உயர்ந்த மனிதன்
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
ஆகா! தித்திக்கும் சாதனைகள்! :D
Hah! Murali-sar you are now entering my (probably yours too) favourite era of NTs 1967-early 70s. Where NT is in top form, when TFI was brimming with brilliant storyline, when all the leading stars were slim, trim and in athletic form, when the fashion was at its best (it made a comeback in 80s and is back now)....and in unrelated matter, when Hollywood was breaking away from the classic mould and brought great new writers and directors and stars, and when the Rock music was in a golden period and is now known as Classic Rock. (Also, when hippies emerged and later had to cut their hair and go to work when some Middle East guys decided to screw up with the energy issue).
Awaiting your further Sathanai posts eagerly.
Murali sir, while reading the " Sadhanaigal" of 1968, I was thinking about this. NT started his career in 1952, and even after 16 long years he remained as the undisputed king of acting and continued to make achievements. But it does not end here and your further posts will prove it.
I'm beginning to see NT's " Visvaroobam" through your posts.
டியர் Avadi to AmericaQuote:
Originally Posted by Avadi to America
தமிழ்த் திரைக்கலைஞர்களில் முதலில் 'PADHMA SHREE AWARD' வாங்கியது நடிகர்திலகம்தான் (ஆண்டு 1966).
பின்னர் 1968-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு 'PADHMA SHREE' வழங்க தேர்வுக்கமிட்டியின் அறிவிப்பிலும் வெளியானது. ஆனால் என்ன காரணத்தாலோ எம்.ஜி.ஆர். அதைப்பெற மறுத்துவிட்டார்.
1970-ம் ஆன்டு ஜெமினி கணேஷுக்கு 'PADHMA SHREE' வழங்கப்பட்டது. (அவர் மறுக்கவில்லை, பெற்றுக்கொண்டார்).
மற்றபடி (முரளி அவர்கள் சொன்னது போல) 1972-ல் எம்.ஜி.ஆருக்கு (ரிக்ஷாக்காரனுக்காக) 'பாரத்' விருதும், அவர் அரசியலில் தீவிரமாகி, முதலமைச்சராக மறைந்தபின்னர் 'பாரத் ரத்னா' விருதும் வழங்கப்பட்டது.
(தற்போது PADHMA SHREE விருது, நம்ம 'கலைமாமணி' போல மலிவாகிவிட்டது வேறு கதை).
Idhu ini muriyadikka mudiyadha onru..... there wont be any long standing directors here after !!!!!!Quote:
Originally Posted by Murali Srinivas
Saradhaa_SN and Murali Srinivas,
Thank you for the clarification.
Thanks Joe, Rakesh and Mohan.
Rakesh,
Yes. It is my favourite period for the simple reason I became a fan during those times. So naturally my affinity is more.
Mohan,
NT's Box office Viswaroopam would be emerging in the coming days.
Karthik,
Definitely yes. That's why I have specifically used that word முறியடிக்க முடியாதது.
Regards
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1969
1. இந்த வருடம் வெளியான படங்கள் - 9
100 நாட்களை கடந்த படங்கள் - 3
தெய்வ மகன்
திருடன்
சிவந்த மண்
2. 50 நாட்களை கடந்து 75 நாட்கள் வரை ஓடிய படங்கள் - 3
அன்பளிப்பு
தங்கசுரங்கம்
நிறைகுடம்
3. முதன் முதலாக நடிகர் திலகத்தோடு ஜெய்சங்கர் இணைந்து நடித்த படம் - அன்பளிப்பு.
4. முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்திற்கு மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி தனியாக இசையமைத்த படம் - தங்கசுரங்கம்.
5. குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா அவர்களுக்கு உதவும் பொருட்டு ஊதியமே பெற்றுக்கொள்ளாமல் நடிகர் திலகம் நடித்து கொடுத்த படம் - காவல் தெய்வம்.
6. இந்தியாவின் சார்பாக ஆஸ்கார் விருதிற்கு அனுப்பப்படும் படங்களில் முதன் முதலாக ஒரு தமிழ் படமும் பரிந்துரை செய்யப்பட்ட சாதனை புரிந்ததும் நடிகர் திலகத்தின் படமான தெய்வ மகன் தான்,
சிவந்த மண் படத்திற்கு தனியாகவே ஒரு சாதனை பட்டியல் எழுதலாம்.
7. முதன் முதலாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட தமிழ் படம் - சிவந்த மண்.
8. மிக அதிகமான இசை கருவிகள் பயன்படுத்தப்பட்ட பாடல் சிவந்த மண் படத்தில் வந்த பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடல்.
9. மிக அதிகமான ஊர்களில் வெளியான நாள் முதல் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிய சாதனையை புரிந்தது சிவந்த மண்.
தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் பட்டியல்
சென்னை
குளோப் - 125 காட்சிகள்
அகஸ்தியா - 117 காட்சிகள்
மதுரை - சென்ட்ரல் - 101 காட்சிகள்
கோவை -ராயல் - 103 காட்சிகள்
திருச்சி - ராஜா - 104 காட்சிகள்
பட்டுகோட்டை - நீலா - 102 காட்சிகள்
10. 100 நாட்களை கடந்து ஓடிய ஊர் மற்றும் அரங்குகள்
சென்னை
குளோப் - 145 நாட்கள்
அகஸ்தியா - 117 நாட்கள்
மேகலா- 103 நாட்கள்
நூர்ஜகான் - 103 நாட்கள்
மதுரை - சென்ட்ரல் - 117 நாட்கள்
கோவை -ராயல் - 103 நாட்கள்
திருச்சி - ராஜா - 103 நாட்கள்
சேலம் - ஓரியண்டல் - 110 நாட்கள்
தூத்துக்குடி - பாலகிருஷ்ணா - 101 நாட்கள்
11. முதன் முதலாக தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் 100 நாட்கள் ஓடிய படம் - சிவந்த மண்.
12. சென்னையில் மொத்த வசூல் - Rs 12,32,970. 21 p
சென்னையில் மொத்தம் ஓடிய நாட்களின் (468) கணக்குப்படி அந்த நாட்களுக்கு அதிகமான வசூலை பெற்ற படம் - சிவந்த மண்.
13. மதுரையில் பெற்ற வசூல் - Rs 3,37, 134.95 p
சென்ட்ரல் திரையரங்கில் 117 நாட்களுக்கு மிக அதிகமான வசூலை பெற்ற படம் சிவந்த மண்.
14. கோவையில் பெற்ற வசூல் - Rs 3,56, 453.59 p
சிவந்த மண் 50 நாட்களை கடந்து 80 நாட்கள் வரை ஓடிய ஊர்கள் - 22.
15. நடிகர் திலகம் கௌரவ வேடத்தை ஏற்க (தமிழில் முத்துராமன் செய்தது) இந்தியிலும் தர்த்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வட நாட்டில் 8 ஊர்களில் 200 நாட்களை கடந்தது.
16. பல மறு வெளியிட்டிற்கு பின் மதுரையில் 22. 07. 1977 அன்று சிந்தாமணி திரையரங்கில் திரையிடப்பட்ட சிவந்த மண் ஓடிய நாட்கள் - 23.
17. இரண்டு வருடங்களுக்கு பின் 08.06.1979 அன்று மீண்டும் மதுரை ஸ்ரீ தேவியில் திரையிடப்பட்டு 14 நாட்கள் ஓடியது.
18. நீண்ட இடைவேளைக்கு பின் 15.08.1985 அன்று மதுரை சிந்தாமணியில் திரையிடப்பட்ட தங்கசுரங்கம் ஓடிய நாட்கள் - 21
19. 1990-ம் ஆண்டு பெங்களுர் நகரில் சங்கீத் திரையரங்கில் திரையிடப்பட்ட தெய்வமகன் ஓடிய நாட்கள் - 21 (நன்றி செந்தில்)
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
தில்லானா மோகனாம்பாள் - விகடன் விமர்சனம் (நன்றி :விகடன்)
தில்லானா மோகனாம்பாள்... 'கலைமணி' எழுதிய இந்தக் கதை விகடனில் தொடர்கதையாக வெளிவந்தபோதே, லட்சக்கணக்கான வாசகர்கள் அதைப் படித்து இன்புற்றனர்.
இப்போது அது ஒரு வண்ணத் திரைப் படமாக வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருக்கும் சிலர் விமர்சிக்கிறார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்குபெற்றவர்கள்:
1. திரு. எஸ்.வெங்கிடரமணன், ஐ.ஏ.எஸ், சேர்மன், மெட்ராஸ் ஸ்டேட் இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்.
2. திருமதி ஜலஜா வெங்கிடரமணன், குடும்பத் தலைவி.
3. திரு. கே.என்.தண்டாயுதபாணிப் பிள்ளை, நடன ஆசிரியர்.
4. குமாரி சந்திரகாந்தா, நடிகை.
5. திரு.எஸ்.பி.கே.மூர்த்தி, இன்ஜினீயர்.
6. திருமதி ஹம்ஸத்வனி, தமிழ்ப் பேராசிரியை, ராணிமேரி கல்லூரி.
7. திருமதி லட்சுமி சுந்தரம், குடும்பத் தலைவி.
லட்சுமிசுந்தரம்: விகடனில் இதைத் தொடர்கதையா படிச்சிருக்கேன். ஹீரோவும் ஹீரோயினும் ரயில்ல போகும்போது ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அவங்க மனசிலே நினைச்சுக்கிறதை கலைமணி என்ன பியூட்டிஃபுல் டயலாகா எழுதியிருக்கார், தெரியுமா? இதையெல்லாம் எப்படிப் படத்திலே எடுக்கப் போறாங் கன்னு எனக்கு ரொம்ப 'டவுட்ஃபுல்'லா இருந்தது. ஆனா, இவங்க ரொம்ப அழகா எடுத்திருக்காங்க!
இந்தப் படத்திலே எனக்கு ரொம்பப் பிடிச்சது நகைச்சுவை!
வெங்கிடரமணன்: இந்தக் கதையின் மையமே சோகம்தான்! படத்தின் நல்ல முடிவுக்காகக் கதையைச் சந்தோஷமாக முடித்துவிட்டார்கள்.
துணை ஆசிரியர்: கதையிலே இந்த முடிவும் உண்டு. ஆனா, இதற்குப் பிறகும் கதை இருக்கு.
வெ.ரமணன்: இருக்கலாம். அதுக்காக வேற ஒரு ஃபிலிம் எடுக்கப்போறாங்களா? 'டாக்டர் ஷிவாகோ'விலே நாவல் முடிவிலிருந்து மாறி படத்திலே இருக்குன்னு வெச்சிக்குங்க... அதோட 'எஃபெக்டே' போயிருக்குமே!
ஹம்ஸத்வனி: இந்தக் கதையிலே வரவங்க - அது மோகனாம்பாள் குடும்பமானாலும் சரி, நாதஸ்வர வித்வானோட குடும்பமானாலும் அந்த மாதிரி குழுவிலே உள்ளவங்களாதான் இருக்காங்க. வெத்திலைப் பெட்டி தூக்கிட்டுப் போறதுலேயும் சரி, நாட்டியக் குடும்பம், அந்தத் தாயோட காரெக்டர் எல்லாமே உண்மையா, இயல்பா இருக்கு. கதைப்படி பாலையா சிவாஜியை விடப் பெரியவர். அவர் சில வேடிக்கைகள் பண்ணும்போது, அவர் எப்படி இந்த மாதிரி நடந்துக்கலாம்னு கேட்டா... அந்தக் குழுவிலே அதெல்லாம் ரொம்ப சாதாரணம்!
தண்டாயுதபாணிப் பிள்ளை: ஆனா, அதுக்குன்னு சதா கமுக்கத்திலே துணியை வெச்சிக்கிட்டே போறது, வர்றது... கொஞ்சம் அதிகமா தோணுது. பாலையா ஈஸ் வெரி குட்! அந்த நாதஸ்வரக்காரங்க செய்யாத அம்சங்கள் எல்லாம் இவர் செய்தார். அதிலே சந்தேகமே கிடையாது. சாரங்க பாணிப்பிள்ளையும் வாசிக்கிறாரு. ஆனா 'ஒரிஜனலா' இல்லே!
சந்திரகாந்தா: பழைய கலை களை அநாகரிகம்னு நினைச்சு மேல்நாட்டுக் கலைகளையே பின் பற்றிப் போகக்கூடிய நிலையிலே தான் இப்போ நாம இருக்கோம். இந்தச் சூழ்நிலையிலே தில்லானா மோகனாம்பாள் என்கிற இந்த நல்ல கதையைப் படம் எடுக்கணும்னு நினைச்சிருக்காரே ஏ.பி.நாகராஜன், அதுக்காகவே அவருக்கு 'ஃபஸ்ட் பிரைஸ்' கொடுக்கணும்.
வெ.ரமணன்: ஐ அக்ரீ! ஆனா, இதுலே போய் ஏன் இவ்வளவு காமெடியைப் புகுத்த வேண்டும்?
ச.காந்தா: ஏன்னா, படம் நல்லா ஓடணுங்கற காரணத்துக் காகவும், 'அடடே..! காமெடி நிறைய இருக்காமே'னு கேட்டு ஓடி வர்ற ரசிகர்களுக்காகவும் தான்! அப்படி வரவங்க மனசிலே நம்ப பழைய கலையின் பெருமை யைப் பதிய வைக்கிறாரே, இது பெரிய சேவை இல்லையா?
படத்திலே ஒரு 'பாயின்ட்' கவனிச்சீங்களா? மறைஞ்சு போன ராஜரத்தினம் பிள்ளையை ஒவ்வொரு சீன்லேயும் ஞாபகப் படுத்தறாங்க! ஒரு காலத்திலே நாதஸ்வர வித்வான்களை அடிமைகளா நடத்திக்கிட்டு இருந்தாங்களாம். கேள்விப்பட்டிருக்கேன். ராஜரத்தினம் பிள்ளை தோன்றியதுக்குப் பிறகுதான், நாதஸ்வர கலைஞர்களுக்கு மதிப்புக் கொடுக்கத் தொடங்கினாங்க. 'என் கலைக்கு மதிப்புக் கொடுத்தா உனக்கு நான் மதிப்புக் கொடுக்கிறேன். என் கலை உனக்கு அடிமை இல்லை' அப்படின்னு நடந்துக்கிட்டாராம் அவர். அப்படிப் பார்க்கும்போது, இந்தக் கதையிலே வர்ற ஷண்முகசுந்தரம் ராஜரத்தினம் பிள்ளைதான்னு சொல்லுவேன்.
த.பிள்ளை: கதாசிரியரே அவரை மனசுல வெச்சுக்கிட்டுத்தான் எழுதினார். அவர் எண்ணமே அதுதானே!
மூர்த்தி: நல்ல கதைகளை சினிமாவாக எடுக்கும்போது, அதைச் சின்னாபின்னப்படுத்திடறாங்க! அது 'ஷேப்' தெரியாம போயிடுது! இந்தக் கதையிலே அந்த மாதிரி பண்ணல்லே! காரணம், இந்தக் கதையே ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு ஏற்றதா இருக்கு. இந்தப் படத்தில் நடிப்பைப் பொறுத்தமட்டில், கிரெடிட் கோஸ் டு பத்மினி. மத்தபடி இது ஒரு நல்ல கூட்டு முயற்சி.
த.பிள்ளை: மதன்பூர் ராஜா கிட்டே, அவ உள்ளுக்குப் போயிட்டு அந்தப் படிக்கட்டிலே வெளியே வரா இல்லையா... அப்போ சிவாஜி கணேசனுக்கும், அவளுக்கும் வாக்குவாதம்... அந்த இடம் ரொம்பப் பிரமாதம்!
ச.காந்தா: எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம் உதயசந்திரிகா - பாலாஜி ஸீன்! தன் கணவன் கிட்டே 'நீங்க எங்கே வேணாலும் போங்க. அதை நான் தடுத்து நிறுத்தினா, இன்னும் அதிகமா போவீங்கன்னு தெரியும். யார் கிட்டே வேணாலும் போங்க. ஆனா, உங்களுக்காக மஞ்சள் குங்குமத்தோட இங்கே நான் ஒருத்தி காத்துக்கிட்டு இருக்கேன்'னு சொல்லிட்டு உள்ளே போயிடறா! பிரமாதமான ஸீன்! அந்த ஒரு வார்த்தையிலே கணவன் திருந்திடறான். அந்த இடம்தான் என் மனசைத் தொட்டது!
து.ஆசிரியர்: மனோரமா பற்றி...
ஜலஜா: மனோரமாவைத் தவிர, அந்தக் காரெக்டரை வேற யாருமே நடிக்க முடியாது!
த.பிள்ளை: அந்த டிராமா கொட்டகையில் போய், அவனிடம் நாதஸ்வரத்தைக் கொடுத்து, வாசிக்கச் சொல்லி ரசிக்கிறா பாருங்க... அப்பா, ராஜா, அப்படி இப்படீன்னு... ஐயய்யோ, கொன்னுட்டா!
து.ஆசிரியர்: நான் பல நாடுகளுக்குப் போய், பல படங்களைப் பார்த்தேன். எனக்கென்னவோ, சிவாஜி கணேசனுக்கு இணையா உலகத்திலே இன்னொரு நடிகர் இருக்கிறதா தெரியலே.
த.பிள்ளை: அவரைப் பத்திப் பேசாதீங்க சார்! பேச என்ன இருக்கு? உலகத்திலேயே மிகப் பெரிய நடிகர் அவர். அப்புறம் புதுசா சொல்ல என்ன இருக்கு?
மூர்த்தி: ஐ திங்க்... கமர்ஷியலாகவும் இது பெரிய வெற்றியா இருக்கும்னு நினைக்கிறேன்.
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1970
1. இந்த வருடம் வெளியான படங்கள் - 8
100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 4
வியட்நாம் வீடு
ராமன் எத்தனை ராமனடி
எங்கிருந்தோ வந்தாள்
சொர்க்கம்
[html:682a6df8ab]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings3/sorkkamprereleaseBommai.jpg">
[/html:682a6df8ab]
2. 50 நாட்களை கடந்து 85 நாட்கள் வரை ஓடிய படங்கள் - 3
எங்க மாமா
விளையாட்டுப் பிள்ளை (84 நாட்கள்)
எதிரொலி
3. முதன் முதலாக மதுரையில் பதினைந்தே நாட்களில் ஒரு லட்சம் ரூபாய் வசூல் செய்த படம் - எங்க மாமா.
அரங்கம் - தங்கம்
4. முதன் முதலாக மதுரையில் ஒரு கருப்பு வெள்ளை படம் தொடர்ந்து நூறு காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்த சாதனையை புரிந்தது நடிகர் திலகத்தின் படம் தான்.
படம் - வியட்நாம் வீடு
அரங்கம் - ஸ்ரீ தேவி
தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் - 106
5. கோவை மாநகரில் அதிகமாக ஆங்கிலப் படங்களே திரையிடப்பட்ட சென்ட்ரல் திரையரங்கில் சாதனை புரிந்தது வியட்நாம் வீடு.
தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகள் - 105.
[NOV & Rakesh, the following info is for you]
6. முதன் முதலாக மலேசியாவில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - வியட்நாம் வீடு.
7. நடிகர் திலகமும் இயக்குனர் சிகரம் பாலசந்தரும் முதலாகவும் இறுதியாகவும் இணைந்த எதிரொலி இந்த ஆண்டு தான் வெளியானது.
8. மதுரையில் மீண்டும் ஒரு முதன் முதல் சாதனை படைத்தார் நடிகர் திலகம். இரண்டு மாத இடைவெளியில் தொடர்ந்து வெளியான மூன்று படங்களுமே 100 நாட்களை கடந்தன.
ராமன் எத்தனை ராமனடி - 15.08.1970 - 104 நாட்கள்
எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 - 101 நாட்கள்
சொர்க்கம் - 29.10.1970 - 100 நாட்கள்
9. முதன் முதல் என்பது மட்டுமல்ல இன்று வரை முறியடிக்க முடியாத சாதனையையும் நடிகர் திலகம் புரிந்த ஆண்டு - 1970.
1967-ல் ஒரே நாளில் (தீபாவளி) வெளியான ஊட்டி வரை உறவு மற்றும் இரு மலர்கள் 100 நாட்களை கடந்தது போல இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் (1970) தீபாவளியன்று வெளியான எங்கிருந்தோ வந்தாள் மற்றும் சொர்க்கம் என்ற இரண்டு படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடியது.
10. நடிகர் திலகத்தின் இந்த இரண்டு படங்களுமே சென்னை,மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நான்கு ஊர்களிலுமே 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை முறியடிக்க இனி ஒருவர் பிறந்து வந்தாலும் முடியாது.
11. இரண்டு படங்களின் 100 -வது நாள் விழாவும் ஒரே மேடையில் நடைபெற்ற முதன் முதல் சாதனையும் நடிகர் திலகம் மூலமாகவே அரங்கேறியது.
12. இந்த வருடம் அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் நடிகர் திலகத்தின் 42- வது பிறந்த நாளை முன்னிட்டு முதன் முதலாக அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் சார்பாக சேலத்தில் இரண்டு நாள் மாநாடு நடை பெற்றது.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
Murali Srivinas wrote that Vietnam Veedu is the first Tamil movie to reach 100 days in Malaysia.
I think this info is incorrect. I am great fan of the late legend. I wish it was true. Coming from Malaysia, i doubt any Tamil film reached that milestone in the 70's. Most successful Sivaji and MGR movies will have a run of about 35 to 40 days. They use to run 3 to 4 shows daily in 3 theatres in KL the largest city in those days. The 3 Tamil movies that crossed this mark were:
Ulagam Suttrum Valiban-47 days
Athi Parasakthi-49 days
Aval Oro Thodarkathai-64 days.
I have excluded movies like Jeans and Padayappa that reached 100 days in single shows/single screen in the 90's in cineplexes.
I do not know about the 50's as i was not born. But i have heard Chandralekha was smash hit in Malaysia.
This is just a clarification, not to heard anyone's feelings.
Murali-sar, these are the most productive year for NT for sure. And amazing considering the quality and the quantity, when usually when the quantity increases, the quality deteroriates.
Another thing: all those collection, how much would it be worth these days? Hope some finance wizard can offer a solution.
I went online and got this general US based calclulator. http://www.westegg.com/inflation/, just to get an idea.
The three collections for Sivantha Man, I rounded at Rs18 million, is worth Rs 100 million now. But I know its not accurate, but a general picture.
Dear Karikalan,
The details or saadhanai pattiyal of NT movies, I am listing out has been taken from the database records that have been treasured by hard core NT fans of Madurai and they are keeping it for ages. While I can vouch safe for the achievements accomplished by NT films in Madurai, the records from locations other than TN/India have to be taken from these chronicled materials. As for as I know the people behind this (maintaining records) are very simple and uncomplicated and I firmly believe they have no reason to do a manipulating act. I do understand that you are not complaining and just pointing out the facts that you think are not correct, but still it may be that the film had completed 100 days through shifting (changing from one theatre to another and so).
Let me try to check with those people. Thanks for your post.
Regards
டியர் முரளி...
Amazing informations about the acheivements of Nadigar Thilagam.
The worthful 'Enga Mama' not crossed 100 days is a painful experience.
'எங்கிருந்தோ வந்தாள்' சென்னை (3 அரங்குகள்), மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய ஐந்து ஊர்களிலும்
'சொர்க்கம்' சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய ஐந்து ஊர்களிலும் 100 நாட்களைக்கடந்தது. (திருநெல்வேலி - பாப்புலர் தியேட்டர்). சொர்க்கம் கோவையில் 70 நாட்களைக் கடந்தது.
சென்னை 'தேவி பாரடைஸ்' தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் 'சொர்க்கம்'தான். அத்தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த முதல் தமிழ்ப்படமும் சொர்க்கம்தான். தேவி பாரடைஸில் ரசிகர்களைக்கவர்வதற்காக, ரூபாய் நோட்டுக்களால் ஆன மரம் செட் பண்ணப்பட்டிருந்தது (Inside a Glass Cabin).
சாரதா,
நன்றி பல.
அத்துடன் 1970- ம் வருடம் மதுரையில் தொடர்ந்து 3 படங்கள் 100 நாட்களை கடந்த சாதனையில் திரையரங்குகள் பெயர் இதோ.
ராமன் எத்தனை ராமனடி - 15.08.1970 - 104 நாட்கள் - நியூ சினிமா
எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 - 101 நாட்கள் - ஸ்ரீதேவி
சொர்க்கம் -29.10.1970 - 100 நாட்கள் - சென்ட்ரல்
அன்புடன்
Quote:
Originally Posted by Murali Srinivas
I badly need a whistling emoticon.. :(
:clap:
Dear friends,
It's with a heavy heart, I am writing this. The demise of Sridhar has caused a vaccum in Tamil cinema. Though he had been ill for quite a long time, his physical presence was at least some solace for us. But now his soul has departed, taking with it, the torch bearer of Tamil cinema. His service to Tamil cinema can not be compensated. He was a darling director for many fans of our times. His approach to the medium of cinema was different, his handling of the artistes and technicians a role model, his sense of humour and music highly classic. Particularly his films with NT brought out the vigor in NT. How can we forget the Sivandha Mann helicopter scene were NT miraculously escaped death?
Raghavendran.
Joe and all interested hubbers,
The Marakka Mudiyumaa series on NT which was telecast by Kalaingar TV has been recorded and edited (removing the in- between ads etc). The serial was on air for 9 weeks with a duration of 1 hour each. It has been divided into 3 DVDs each comprising of 3 parts. It would be ready for sale soon.
Moser Baer had come out with another novel way of selling. It has released a 3 in 1 series in the sense, a single DVD will consist of 3 movies and the total price is just Rs 45/- . Some NT combos are
Paalum Pazhamum
Baagha Pirivinai
Babu
Padithhal Mattum Pothumaa
Pattikkaada Pattanamaa
Andaman Kadhali.
[Prabhu, bought Andha Naal DVD ?]
Raj Video Vision has brought out Motor Sundaram Pillai and Ethirpaaradhadhu DVDs and MSP is selling like hot cakes.
NOV,
Where is your list of NT films for purchase during next month's visit?
Regards
:D Great!Quote:
Originally Posted by Murali Srinivas
Joe,Quote:
Originally Posted by joe
Reserved one for You.
Like I mentioned in the other thread, there is this case of the following Balajee produced NT films that are also not available on DVDs/VCDs.
Thangai
En Thambi
Thirudan
En Magan
It seems that even they are not available in overseas market [atleast Thangai and Thirudan].
Regards
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1971
1. இந்த ஆண்டு வெளியான படங்கள் - 10
100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3
குலமா குணமா
சவாலே சமாளி
பாபு
2. 50 நாட்களை கடந்து 80 நாட்கள் வரை ஓடிய படங்கள் - 5
இரு துருவம்
தங்கைக்காக
அருணோதயம்
சுமதி என் சுந்தரி
மூன்று தெய்வங்கள்
3. மூன்று மாத இடைவெளியில் ஆறு படங்கள் திரையிடப்பட்டும் கூட அதில் நான்கு படங்கள் 50 நாட்களை கடந்ததும் ஒரு படம் 100 நாட்கள் கொண்டாடியதும் நடிகர் திலகத்தால் மட்டுமே செய்ய முடிந்த சாதனை.
இரு துருவம் - 14.01.1971 - 50 நாட்கள்
தங்கைக்காக - 06.02.1971 - 50 + நாட்கள்
அருணோதயம் - 05.03.1971 - 50 + நாட்கள்
குலமா குணமா - 26.03.1971 - 100 நாட்கள்
சுமதி என் சுந்தரி - 14.04.1971 - 80 நாட்கள்
பிராப்தம் - 14.04.1971
4. ஒரே நேரத்தில் சென்னை திரையரங்குகளில் நடிகர் திலகத்தின் ஐந்து படங்கள் ஓடிய சாதனை இந்த வருடம் (1971) மீண்டும் அரங்கேறியது.
தங்கைக்காக - சாந்தி
அருணோதயம் - வெலிங்டன்
குலமா குணமா - பிளாசா
சுமதி என் சுந்தரி - சித்ரா
[html:c67c94bf84]
http://www.nadigarthilagam.com/paper.../sesundari.jpg
[/html:c67c94bf84]
பிராப்தம் - மிட்லண்ட்
5. 19 வருடங்களில் 150 படங்கள் அதுவும் நாயகனாகவே. ஆம் நடிகர் திலகத்தின் 150-வது படம் சவாலே சமாளி இந்த வருடம் தான் வெளியானது.
பராசக்தி - 17.10.1952
சவாலே சமாளி - 03.07.1971
6. சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற ஊர்களில் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது சவாலே சமாளி.
7. மீண்டும், ஜோடி - டூயட் பாடல் இத்யாதி இத்யாதி எதுவும் இல்லாமல் ஒரு வெற்றிப் படத்தை [விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்த] தன்னால் (மட்டுமே) கொடுக்க முடியும் என்பதை நடிகர் திலகம் நிரூபித்த படம் - மூன்று தெய்வங்கள்.
8. 1971-ம் வருட தீபாவளிக்கு வெளியான பாபு தீபாவளி படங்களிலே பெரிய வெற்றியை பெற்ற படமாக அமைந்தது.
9. முதன் முதலாக தமிழகத்தில் வெளியான அதே நாளில் சிங்கப்பூரிலும் வெளியான தமிழ் படம் - பாபு.
10. இந்த ஆண்டைப் பொருத்த வரை மதுரை மாநகரம் குறிப்பாக மதுரையின் ஸ்ரீதேவி திரையரங்கம் தமிழ் சினிமா சரித்திரத்தில் தன் பெயரை பொறித்துக் கொண்ட வருடம். [இரண்டு வருடங்களுக்கு முன்பே இதை பற்றி நான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்]
ஒரு திரையரங்கில், 15 மாதங்கள், கிட்டத்தட்ட 450 நாட்கள் அதிலும் ஒரு காலண்டர் வருடத்தின் (1971 Jan 1st to Dec 31st) அனைத்து நாட்களுமே (365), ஒரே நடிகரின் படங்கள் மட்டுமே ஓடிய சாதனை இதற்கு முன்பும் பின்பும் திரையுலகம் கண்டதில்லை. அந்த பட்டியல் இதோ
எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 to 05.02.1971- 100 நாட்கள்
தங்கைக்காக - 06.02.1971 to 25.03.1971 - 48 நாட்கள்
குலமா குணமா - 26.03.1971 to 03.07.1971 - 100 நாட்கள்
சவாலே சமாளி - 03.07.1971 to 17.10.1971 - 107 நாட்கள்
பாபு - 18.10.1971 to 14.01.1972 - 89 நாட்கள்
மொத்தம் - 444 நாட்கள்
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
koduthu vaitha rasigargal. Definitely a Golden period for NT & his fans.Quote:
Originally Posted by Murali Srinivas
idhudhan " Asura Sadhanai " . Incomparable & unbeatable achievement.Quote:
Originally Posted by Murali Srinivas
:notworthy:
NT with director Sridhar here
Mohan,
That (the photo) must have been during the making of Sivandha Man and Dharthi. Nice one.
You were mentioning about Asura Saadhanai. It is going to come immediately (ie) 1972.
Regards
Yesss !! 1972 - HERO-72Quote:
Originally Posted by Murali Srinivas
VASANTHA MALIGAI etc.. :bluejump:
Murali,
சிவாஜியின் சாதனை சிகரங்கள் - very interesting to read. NT fans will ever thank you for this.
Few observations: I think your reporting has mostly concentrated on Madurai run. I remember I have discussed with my uncle, who was a big fan of NT: Enga Mama ran 100 days in chennai (not in Madurai - may be because of size of Thangam theater) and Enga oor Raja also ran for 100 days in Chennai and other centers (not in Madurai).
I am very puzzled about number of movies NT did year after year. In my view, he should have reduced number of movies a year and made sure that movies run for silver jubilee. If not his own self-competition, without any doubt, i vouch that NT could have churned out silver jubilees every year.
One more interesting fact my uncle said during my last month visit to India: NT fans in Madurai city used to group themselves into different sub-categories: NT - Director Sridhar mandram, NT - A P Nagarajan mandram, and so on. I have heard and seen posters for NT - Devika group during Andavan Kattalai re-release in Madurai Alankar; also, NT - Padmini mandram posters for Thilana Mohanambal re-release in Chintamani. But this NT - directors group is new for me and this is more interesting. Could you shed some lights on this?
BTW, during my last visit, at Central cinema, NT's Karnan was running and I heard the Saturday night and sunday evening shows were full.
1972 - a block buster year for NT fans - 2 silver jubilee releases and tons of 100+ day movies - eagerly waiting for this year. When you write for 1972, could you change the topic title to something more suitable: 1972 - சிகரம் தொட்ட நடிகர் திலகம் - முறியடிக்க முடியாத சாதனைகள்
Regards
Murali,Quote:
Originally Posted by Murali Srinivas
I remember someone said that the same happened at Trichy too - a year round run of NT movies in the same theater.
tac,
Thanks for your kind words. Yes, it is more Madurai Centric and to a certain extent Chennai is also covered. Reason being we belong to Madurai and know the Madurai facts for sure. Another reason is this data is supplied by Madurai fans and as I told you on the other day, your area people [Kamarajar Salai Arasamaram area] had given these data and naturally Madurai records will be prominent.
Now coming to your specific queries, though Enga Mama and Enga Oor Raja deserve to be 100 days movies, unfortunately they are not. I have checked up this with Raghavendar Sir and one of my cousins and both confirmed the same. It was more due to the continous releases.
Regarding the joint Mandrams, I am sorry, I have not heard or seen such joint activities of any sort and I very much doubt if such things existed. On a personal level, the fans might have talked like this but I don't think any posters or banners ever came out.
While I wrote about Sri Devi's record, I too remember Saradhaa mentioning about Tiruchy - Prabhat. But we are not very sure about the same.
While Karnan was running at Madurai - Central (Sep middle), I was there and had visited the theatre.
Yes, as per your wish, I will write about 1972 under the heading suggested by you.
Regards
சிகரம் தொட்ட நடிகர் திலகம் - முறியடிக்க முடியாத சாதனைகள்
தொடர்ச்சி
வருடம் - 1972
நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஆண்டு.
நடிகர் திலகம் தொட்டதெல்லாம் வெற்றியாக மாறிய ஆண்டு.
ஹீரோ - 72 என்பதே நடிகர் திலகத்தின் ஒரு படத்திற்கு பெயராக சூட்டப்பட்ட ஆண்டு.
இந்த வருடம் வெளியான படங்கள் - 7
100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 6
வெள்ளி விழா கொண்டாடிய படங்கள் - 2
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் ஒரு தனி கதாநாயகனின் ஆறு படங்கள் வெற்றி பெற்ற சரித்திரம் [தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும்] இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.
1. ராஜா - 26.01.1972
இந்த வருடத்தின் முதல் படம் மட்டுமல்ல. முதல் 100 நாள் படமும் கூட.
சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 107
107 ஹவுஸ் புல் காட்சிகளின் வசூல் - Rs 3,13,124.80 p
[html:db716cb660]
http://www.nadigarthilagam.com/paper.../raja107hf.jpg
[/html:db716cb660]
[தேவி பாரடைஸ் அரங்கில் 35 நாட்களில் பெற்ற இந்த வசூல் ஒரு புதிய சாதனை]
மதுரை சென்ட்ரலில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் - 78
சென்னையில் 100 நாட்களை கடந்து ஓடிய திரையரங்குகள் - 3
தேவி பாரடைஸ்
அகஸ்தியா
ராக்சி
மற்றும்
மதுரை - சென்ட்ரல்
திருச்சி, சேலம், கோவை போன்ற ஊர்களிலும் 100 நாட்களை கடந்தது.
2. ஞான ஒளி - 11.03.1972
தொடர்ந்து இரண்டாவது 100 நாள் படம்.
சென்னையில் ஐந்து திரையரங்குகளில் வெளியான படம்
அனைத்திலுமே 75 நாட்களை கடந்து ஓடிய படம்
சென்னை சபாக்கள் சார்பாக மட்டும் 55 சிறப்பு காட்சிகள் நடத்தப்பட்டு அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது முதன் முதலாக சென்னை நகரம் கண்ட சாதனை.
சென்னையில் 100 நாட்களை கடந்த அரங்கம்
பிளாசா
மதுரை - நியூ சினிமா- வில் 90 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இந்த படம் ஒரு விநியோகஸ்தரின் பிடிவாதம் காரணமாக மாற்றப்பட்டு ஷிப்டிங்கில் 125 நாட்களை தாண்டியது.
3. பட்டிக்காடா பட்டணமா - 06.05.1972
தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து கருப்பு வெள்ளை படங்களில் உச்ச கட்ட வெற்றி பெற்ற படம்.
இன்று வரை தமிழின் எந்த கருப்பு வெள்ளை படமும் பெறாத வசூலை பெற்ற படம் - பட்டிக்காடா பட்டணமா
இந்த வருடத்தின் தொடர்ந்து மூன்றாவது 100 நாட்கள் படம்
இந்த வருடத்தின் முதல் வெள்ளி விழா படம்
சென்னை மாநகரிலே தொடர்ந்து வெளியான ஒரே நடிகரின் நான்கு படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.
பாபு
ராஜா
ஞான ஒளி
பட்டிக்காடா பட்டணமா
இந்த நான்கு படங்களும் சென்னையின் ஒன்பது திரையரங்குகளில் இந்த சாதனை புரிந்தது இன்று வரை பிரேக் பண்ண முடியாத ரிகார்ட்
பாபு - சாந்தி, கிரவுன்
ராஜா - தேவி பாரடைஸ், அகஸ்தியா, ராக்சி
ஞான ஒளி - பிளாசா
பட்டிக்காடா பட்டணமா - சாந்தி,கிரவுன்,புவனேஸ்வரி.
மதுரை சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 139.
[அதாவது தொடர்ந்து 39 நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்].
மதுரையில் ஓடிய நாட்கள் - 182
மதுரையில் முதன் முதலில் ஐந்து லட்சத்திற்கு மேல் வசூல் செய்த படம் இது தான்.
மொத்த வசூல் - Rs 5,61, 495.20 p
வரி நீக்கிய வசூல் - Rs 3,10, 449.02 p
விநியோகஸ்தர் பங்கு - Rs 1,59, 429. 62 p.
மதுரையில் ஒரு சில படங்கள் 175 நாட்களில் பெற்ற வசூலை வெறும் 100 நாட்களிலே கடந்து புதிய சாதனை படைத்த படம் - பட்டிக்காடா பட்டணமா.
மதுரையில் ஏன் தமிழகத்திலேயே அதிகமான வசூல் செய்த கருப்பு வெள்ளை படமும் இது தான்.
சென்ட்ரல் திரையரங்கில் மிக அதிகமான நாட்கள் (182) ஓடிய படமும் இது தான்.
மதுரை மாநகரில் ஷிப்டிங்கில் ஒரு வருடம் ஓடிய முதல் தமிழ் படமும் இது தான்.
06.05.1972 அன்று வெளியான இந்த படம் 05.05.1973 அன்று ஒரு வருடத்தை நிறைவு செய்தது.
நிறைவு செய்த அரங்கு - இம்பீரியல்.
பரமகுடியில் முதன் முதலாக 50 நாட்களை கடந்த படம் பட்டிக்காடா பட்டணமா
அரங்கு - கிருஷ்ணா.
இந்த பொன் வருடத்தின் (1972) சாதனைகள் தொடரும்
அன்புடன்
இடைவெளியின்றி ஒரே ஆண்டில் 8-)Quote:
Originally Posted by Murali Srinivas
After going through the success story of 1972, one could easily apprehend the fact that not only did NT benefited out of this but even the producers, distributors, theatre owners, technicians etc., who where involved must have had a whale of a time.
NT remained as a darling among the masses and the producers as well.
Well said Mohan Sir. In fact Raja did not stop with 107. It went on houseful for about 150 shows and I remember we stayed at Devi Paradise till 10.00 p.m. when almost all but a very few (say about 5 or 6 tickets) were short of for 148th or 149th (I don't exactly remember the no.) houseful show and one of our fan friends bought them on his own and made it complete 150 shows. But it was not publicised and not much claims were made. But for almost all the days till a few weeks before the film was stopped screening the evening show was houseful. Such was the impact RAJA made on the audience.Quote:
Originally Posted by rangan_08
HAPPY MURALI YOU HAVE COME TO 1972 THE YEAR OF HERO 72.
Raghavendran.
Murali-sar, you will be soon entering the year of my birth, 1973, I am twitching on my seat wondering what records NT created that year.
Oh, Joe and I was discussing this new re-evaluation and appreciation of NT. And its not even in NT’s thread, its on Last movie you saw thread.
We both agreed that your posts have made many NT convert and born again NTians. Because of the facts and figures which are not plucked from thin air. The records are impressive, but credible considering NT’s talent.
Great, great posts Murali-sar. Thanks. Waiting for 1973.
even I thought in this scene "epdi idha dubbingla kondu vara mudinjadhu"Quote:
Originally Posted by Prabhu Ram
His dialogue delivery,Body language in this movie is :notworthy:
excellent writeup PR
Ippadi kusumbu pidichavangala enna cholrathu?
Karnan, Anthanaal matrum Veerapandiya kattabomman ellam biggest flop-am. parunga comedyai.
http://www.behindwoods.com/tamil-mov...-21-10-08.html
Avare "based on my limited knowledge"-nnu sollitaru .Loose-la vidunga :sigh2:Quote:
Originally Posted by kalnayak
ஜோ,Quote:
Originally Posted by joe
முக்கியமான பாயிண்ட் அதை எடுத்து கொடுத்ததற்கு நன்றி. நாளிதழ் விளம்பரங்களை உள்படுத்தியதற்கும் நன்றி.
ஜோ, நாகர்கோவில் மட்டுமல்ல காரணம் (நீங்கள் ரசிகரானதற்கு). ராஜாவிற்கு பின்னால் பிறந்து ஞான ஒளி பெற்றதற்கு நீங்கள் பிறந்த வருடம் அப்படி.
Mohan and Ragahvendar sir,
Thanks.
Raakesh,
Coming next in another 2 days. [72 will take two more days].
Regards