Chennai Shanthi Cinemas : Pudhiya Paravai : 25.7.2010 Sunday Gala
http://chennaishanthitheatre.webs.co...lbumid=9596143
A Very, Very Happy Viewing,
Pammalar.
Printable View
Chennai Shanthi Cinemas : Pudhiya Paravai : 25.7.2010 Sunday Gala
http://chennaishanthitheatre.webs.co...lbumid=9596143
A Very, Very Happy Viewing,
Pammalar.
Thanks Mr. Pammalar.
Very much happy to see our NT with garlands. Wiating for more photos and videos.
Pammalar, much appreciated your hardwork to bring our god's celberation to every one. Please keep doing.
Cheers,
Sathish
தன்னிகரற்ற சாதனை, சாந்தியில் புதிய பறவை வெற்றி முழக்கம்.
இன்று மாலை 25.07.2010 சென்னை சாந்தியில் அரங்கு நிறைவு HOUSE FULL .
காணக் கண்கோடி வேண்டும் என்ற மொழிக்கு இன்றைய சாந்தி திரையரங்கின் நிகழ்வுகளே சரியான சான்று.
பெங்களூரு ரசிகர்கள் அசத்தி விட்டார்கள். மாலை என்றால் அப்படி யொரு மாலை. காட்சிப் படங்கள் பதிவேற்றப்படும் போது காணுங்கள்.
நாடி நரம்பெல்லாம் புகுந்து ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார் நடிகர் திலகம். உணர்ச்சி மயமாகாத ரசிகர்கள் இல்லை எனலாம். பகல் காட்சியில் கிட்டத் தட்ட 500 இருக்கைகளும் மாலைக் காட்சியில் அனைத்து இருக்கைகளும் நிறையும் அளவுக்கு ரசிகர்கள் திரண்டது மட்டுமல்ல. மேள தாளத்துடன் ஊர்வலமாய் மாலையை எடுத்துச் சென்று அண்ணாசாலையே குலுங்கும் அளவிற்கு ஆர்ப்பரிப்பு செய்து விட்டனர். காவல் துறையினர் வந்து குவியும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம், பேருந்து உட்பட அனைத்து வாகனங்களில் பயணித்தோர், சாலையில் சென்றோர் அனைவரும் வியந்து சொன்ன வார்த்தை - "சிவாஜி படத்துக்கு கூட்டம் பாரேன், அதுவும் பழைய படத்துக்கு" என்பதே அனைவரின் உதடுகளும் உள்ளமும் உச்சரித்த வார்த்தைகள்.
சாந்தியில் உள்ளே வைக்கப் பட்டிருந்த கட்அவுட்டுக்கு செலுத்தப் பட்ட மாலைகளின் எண்ணிக்கை கிடடத்தட்ட 15க்கும் மேல். பிரம்மாண்டமான பெரிய மாலையை மேலே ஏற்ற தேவைப்பட்ட கரங்களின் எண்ணிக்கை மட்டுமே 100க்கும் மேல் இருக்கும். பாண்டு வாத்தியம் முழங்க பெங்களூரு, புதுவை, கடலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து திரண்ட ரசிகர்களின் ஆரவாரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கண்களில் நிழலாடும். உள்ளேயோ கேட்கவே வேண்டாம். அதுவும் எங்கே நிம்மதி பாடலுக்கு எழுப்பப் பட்ட உணர்ச்சி மயமான கரவொலிகளும் கோஷங்களும் படம் இன்று தான் புதியதாக வெளியானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தியது.
அரங்கினுள் ஆரவாரம் - காணுங்கள்
http://sivajimoviesinchennai2010.blogspot.com/
தொடரும் பதிவுகளில் விரிவாக நம் அனுபவங்கள்...
அன்புடன்
ராகவேந்திரன்
நேற்று பொதிகையில் ராஜா ! நடிகர் திலகத்தின் இளமை ஊன்ஞலாடியது. ஒருவித துள்ளலுடன் நடித்திருப்பார் ! கடைசி காட்சியில் தன் முத்திரையை பதித்திருப்பார். :notworthy:
Very nice coverages on Pudhiya Paravai Sunday Gala. Thanks to Mr.Pammalar & Mr.Ragavendran
Nadigar Thilagam's Ninth Year of Remembrance : 21.7.2010 : Please click the links below:
1)
http://www.chennailivenews.com/Event...niversary.aspx
&
2)
http://www.indianewsreel.com/photo-g...n-Chennai.aspx
திரு பம்மல் சார் & திரு ராகவேந்திரா சார்,
புகைப்படங்கள் மிகவும் அருமை.பலகோடி நன்றிகள்.
அடுத்து முரளி சாரின் வர்ணணைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்
From Deccan chronicle 25.07.2010 -
At a time when big heroes’ films are struggling at the box office, the late thespian Sivaji Ganesan’s 1964 evergreen classic, Pudhiya Paravai, is running to packed houses after its re-release at Shanthi Theatre.
Pudhiya Paravai, a musical thriller, stars Saroja Devi as Sivaji’s love interest. It was also notable for being the first Tamil film shot on a ship which was hired for the purpose.
To commemorate Sivaji’s ninth death anniversary, the movie has been released by Srinivasan, one of his ardent fans and a distributor of Tamil films. “Even 46 years after it was first released, the movie ran to a full-house on the weekend,” reveals Srinivasan.
Interestingly, the film was the first production from Sivaji’s home banner, Sivaji Films. “It was a milestone in Sivaji’s career. It had mind-blowing music by the M.S.Vishwanathan-Ramamurthy duo and all the songs were big chartbusters. In those days all Sivaji-starrers would be first released only in Shanthi Theatre. For the first time, the late star chose to release his film in Paragon Theatre (where normally MGR films used to release). The legendary actor took Paragon Theatre (now a multi-storied complex) on lease, renovated it and released the movie there,” reminisces distributor R.G.Venkatesh, who has watched Pudhiya Paravai at least a dozen times. The highlight of the film was Sivaji’s stylish looks and memorable dialogues. Which is why fans of the actor are felicitating Arurdas, the dialogue writer and Mutthappa, Sivaji’s make-up man, at a function in the city.
on behalf of me and karnataka state prabhu fans i than each and every one for grand sucess of sunday celebration in shanthi
thank you raghavendra and pammalar
harish how are you
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 1
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]
சாந்தி தியேட்டரின் நுழைவாயிலை நோக்கி எனது கால்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சரியாக மாலை நாலேகால் மணி. எதிரே மகானின் பக்தர்கள் - பெற்ற குழந்தையை சிரத்தையுடன் சுமந்து வரும் அன்னை போல் - தாங்கள் பெற்ற தந்தைக்கு அணிவிப்பதற்காக ராட்சத மலர் மாலையை தங்களது கைகளிலும், தோள்களிலும் இருபுறமும் சுமந்து கொண்டு, "சிவாஜி புகழ் வாழ்க!', "எங்கள் தெய்வத்தின் புகழ் வாழ்க!" என்கின்ற கோஷங்களுடன் அமைதியான முறையில் ஊர்வலமாக அரங்க நுழைவாயிலை நெருங்கினர். ராட்சத மலர் மாலைக்கான முழு பங்களிப்பும் பெங்களூர் பக்தர்களைச் சேர்ந்தது. அவர்கள் இந்த மாலையை ஒரு கன்டைனர் லாரியில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு எடுத்து வந்தனர். ஊர்வலத்தில் சென்னை மற்றும் பெங்களூர் பக்தர்களுடன், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் புதுச்சேரியிலிருந்தும் வருகை புரிந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நுழைவாயிலில் ஊர்வலம் சில மணித்துளிகள் நின்றது. "அடி என்னடி ராக்கம்மா", "கேட்டுக்கோடி உருமி மேளம்", "வரதப்பா" பாடல்கள் பேண்ட் வாத்தியத்தில் முழங்க, ட்ரம்ஸ் ஒலிக்க, பக்தர்கள் பக்திப் பரவசத்தில் திளைக்க ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்!
தியேட்டரினுள்ளே 5000 வாலா(சரம்) சப்தம் ரீங்காரமிட, மாபெரும் மலர் மாலா(மாலை), கோமகன் சிவாஜி அளித்த கோயில் யானை போல், பக்தர்கள் புடை சூழ மிக அழகாக, நேர்த்தியாக, கம்பீரத்தோடு அரங்கிற்குள் நுழைந்தது. மிக உயரமான அந்த மலர் மாலையை 60 அடி உயர ராட்சத பதாகைக்கு(கட்-அவுட்) கீழே, அருகே வாத்தியங்கள் முழங்க எடுத்து வந்தனர். பின்னர் அதனை தூக்கி, ஏற்றி அண்ணலின் அன்பு சொட்டும் முகத்துக்கு சூட்டினர். கரவொலிகளும், குரலொலிகளும் விண்ணைப் பிளந்தன. வாலாக்கள் தொடர்ந்து வெடித்த வண்ணம் இருந்தன. ஊர்வலம், டான்ஸ், வாணவேடிக்கைகள், மாலை சாற்றுதல், பாலாபிஷேகம் முதலிய சுபகாரியங்கள் கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணி நேரம் நீடித்தது. சரியாக மாலை 5:45 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட இறைவனுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இந்த சமயத்தில் மேட்னி ஷோ முடிந்து கூட்டம் உள்ளிருந்து வெளியே வர, கற்பூர ஆரத்தியைக் கண்டு அனைவருக்கும் மெய் சிலிர்த்தது. இதயதெய்வத்தின் புகழ் பாடும் கோஷங்கள் அரங்கத்தில் குழுமியிருந்த ஒவ்வொரு நல்லிதயத்திலிருந்தும் அவர்களது இரத்தநாளங்களிலிருந்தும் உணர்வுபூர்வமாகக் கிளம்பி விண்ணைப் பிளந்தன. மணவிழாவில் கூடும் உறவினர் போல், திருவிழாவில் கூடும் தோழர்கள் போல், இத்திரைவிழாவில் பக்தர்கள் ஆங்காங்கே ஒன்று கூடி நலம் விசாரித்துக் கொண்டதையும், தங்கள் இறைவனின் நடிப்பைப் பற்றியும், சாதனைகள் குறித்தும் அளவளாவிக் கொண்டதையும் காணக் கண்கோடி வேண்டும். எங்கு பார்த்தாலும் பக்தர் வெள்ளம். சரியாக ஆறு மணிக்கு "SHANTI HOUSEFULL" என்கின்ற போர்டு மாட்டப்பட விசில் சத்தம் விண்ணை வீழ்த்தின. சென்னை பக்தர்கள் 10000 வாலா சரவெடியை கொளுத்திப் போட, ஆடியிலே தீபாவளி. காலதேவன் 6:30 நோக்கி நெருங்க, கலைத்தேவனைக் காண அடியவர் கூட்டம் அரங்கினுள் ஆர்ப்பரித்தது. மன்னவனுக்கு சூட்டப்பட்ட மாபெரும் மாலை கண்டு, பொழுதான மாலை வெட்கி, நாணி, மங்கி இரவுக்குள் புகுந்தது.
(தொடரும்...)
பக்தியுடன்,
பம்மலார்.
பம்மலார் அவர்களின் வர்ணனை எந்த அளவிற்கு துல்லியமாக உள்ளது என்பதை இதோ இந்த காட்சியில் காணுங்கள். நன்றி யூட்யூப் மற்றும் நமது ஹப் நண்பர்களுக்கு.
http://www.youtube.com/watch?v=2uJNuEdLWvo
ராகவேந்திரன்
Review of Nadigar Thilagam website in a blog:
http://websitesreview-meens.blogspot.com/
Thank you, madam. Your words of praise enthuse me and at the same places more responsibility. Thank you once again. At this chance, I'd like to mention my thanks to hub friends, who are so encouraging.
Raghavendran
Chennai Mylapore Kapaleeswarar Temple : 21.7.2010 : Annadhaanam organised by Sivaji Peravai : Photo Feature
Chief Guest for the Function : Tamil Nadu Hindu Religious & Charitable Endowments Minister Honourable K.R.Periyakaruppan
http://pammalaar.webs.com/apps/photo...lbumid=9603898
Photos Courtesy : Sivaji Peravai President Mr.K.Chandrasekaran
Regards,
Pammalar.
Chennai Shanthi Cinemas : Pudhiya Paravai : 25.7.2010 Sunday Evening Gala : 10000 Wala Burst Video
http://www.youtube.com/watch?v=kBwYwkXfOp4
Happy Viewing,
Pammalar.
Murali sir, Raghavendra sir, groucho & Plum - thanks for your kind words.
Pammalar sir, clippings & videos are great !
From Dinamalar website
மீண்டும் சிவாஜிகணேசனின் புதிய பறவை!
--------------------------------------------------------------------------------
நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, நாகேஷ், மனோரமா நடிப்பில் 1964ம் ஆண்டு திரைக்கு வந்து சக்கை போடு போட்ட படம் புதிய பறவை. 46 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படத்தை சிவாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில், தாதா மிராஸ் இயக்கியிருந்தார். தற்போது சிவாஜி கணேசனின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சாந்தி தியேட்டரில் புத்தம் புது டிஜிட்டல் காப்பியாக திரையிடப்பட்டுள்ளது. புதிய படங்களுக்க இணையாக தியேட்டரை சுற்றிலும் சிவாஜி ரசிகர்கள் கட்-அவுட்களை *வைத்துள்ளனர். ரசிகர்கள் பலர் சிவாஜி கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
புதிய பறவை படம் 1964ம் ஆண்டு பாரகன் தியேட்டரில் திரையிடப்பட்டது. அந்த காலகட்டத்திலேயே நல்ல வசூலை வாரி குவித்த இந்த படம் இப்போதும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருக்கிறதாம்.
http://cinema.dinamalar.com/tamil-ne...ning-again.htm
மிக்க நன்றி மகேஷ் அவர்களே, அன்றைய மாலைக் காட்சியில் முரளி சார் அவர்களால் பங்கேற்க முடியாமல் போனது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தம் தான். இருந்தாலும் முடிந்த வரையில் நம்மால் இயன்ற வரையில் அன்றைய நிகழ்ச்சிகளை இங்கு பதிந்து கொள்வோம். தங்களுடைய அனுபவங்களையும் எண்ணங்களையும் அறிய மிகுந்த ஆவலாய் இருக்கிறோம்.
அன்று மாலை கட்அவுட்டுக்கு சாற்றுவதற்காக பெங்களூரு ரசிகர்கள் கொண்டு வந்திருந்த பிரம்மாண்ட மாலையை ஊர்வலமாய் எடுத்துச் சென்றதைக் கண்டோம். இதோ அம்மாலை மேலே தூக்கி ஏற்றப் படும் காட்சி.
http://www.youtube.com/watch?v=sNGCaYhob8I
அன்புடன்
ராகவேந்திரன்
Dear friends,
After print media, now it's the turn of e-media to cover the reception for Pudhiya Paravai. See what behindwoods would like to say:
http://www.behindwoods.com/tamil-mov...-27-07-10.html
Raghavendran
திரு.கார்த்திக் சார்,
ஆடிப் பெருக்கைப் போல துள்ளி வரும் தங்களின் உள்ளப் பாராட்டுக்கு எனது பணிவான நன்றிகள்! தங்களது ஆவலை விரைவில் பூர்த்தி செய்கிறேன்.
டியர் கோல்ட்ஸ்டார், சந்திரசேகரன் சார், செந்தில் சார், குமரேசன்பிரபு சார், ரங்கன் சார்,
பாராட்டுக்கு நன்றி!
டியர் மகேஷ் சார்,
"புதிய பறவை" பற்றி ஆங்கில நாளிதழான டெக்கான் க்ரோனிகிளில் வெளிவந்த செய்தியையும், தினமலர் இணையதள நாளிதழில் வெளிவந்த தகவலையும் பதிவிட்டமைக்கு நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களது மனம் திறந்த பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
நடிகர்திலகம்.காம் இணையதளத்திற்கு கிடைத்திருக்கும் பாராட்டு குறித்து எல்லையில்லா மகிழ்ச்சி. நமது நடிகர் திலகம் பல படங்களில் ஒன்மேன்ஷோ புரிந்திருக்கிறார். நடிகர்திலகம்.காம் இணையதளமும் ஒரு ஒன்மேன்ஷோ தான். அதாவது, ராகவேந்திரன் என்கின்ற ரசிக திலகத்தின் ஒன்மேன்ஷோ.
நடிகர்திலகம்.காம் மென்மேலும் வளர்ந்து வான்புகழ் அடைய வளமான வாழ்த்துக்கள்!
அன்புடன்,
பம்மலார்.
Dear Pammalar,
Thank you for your kind words of appreciation. It was possible only because of friends and fans like you. There are many more assignments we have to complete.
Times of India has covered the Pudhiya Paravai success:
http://timesofindia.indiatimes.com/c...ow/6224856.cms
Raghavendran
Raghavendra,
Please accept my delayed congratulation of receiving this year's Sivaji Award. You, along with Girija, totally deserve it. Good luck in managing one and only web site: www.nadigarthilagam.com
Pammalar and others,
Hats off to your energetic coverage of Pudhiya paravai show.
It is sad to note that Murali couldn't attend Sunday festive event. Can someone give a beautiful presentation of the show please? This is taking me back to my viewing of PP during rerelease at Madurai Alankar.
Total collection so far please. Any idea of extending PP to 2nd week?
Regards
NT fan
Ilaya thilakam Prabhu on Puthiya paravai's release... as reported by TOI.
"We screened Pudhiya paravai' because of demands form fans to mark his 9th death anniversary on Friday, but now the request for a Sivaji' film mela has come up," said actor Prabhu, son of Sivaji Ganesan. "The state of the prints of all his films need to be examined," he added.
The negatives of Pudhiya paravai' were cleaned up' at a lab, much to the delight of Sivaji's die-hard fans. Made in 1964, the film, has Sivaji playing the role of a man tortured by guilt over his past. "It came as a shock when people called me up for tickets," said Prabhu, in whose family-held theatre, Shanthi, the film could not be released in 1964. "Bollywood film Sangam' was running in the theatre and we had to release it at Paragon theatre, which does not exist anymore," he recollected"
http://timesofindia.indiatimes.com/c...ow/6224856.cms
Few other links...
Dinamalar - website
http://cinema.dinamalar.com/tamil-ne...ning-again.htm
Deccan Chronicle
http://www.deccanchronicle.com/tablo...eatre-271[
Sify
http://sify.com/movies/fullstory.php?id=14951195
Behindwoods.com
http://www.behindwoods.com/tamil-mov...-27-07-10.html
Kolly-theater
http://www.kolly-theater.com/2010/07...luxe.html[
Review by a viewer
http://cinema.theiapolis.com/movie-1...e-1000583.html
Dear Mahesh,
Thank you for providing links covering the Sunday event.
Here is another video hosted. This is the dance and gala at the entrance before the garland was taken in.
http://www.youtube.com/watch?v=D4M5gGwo5Fo
Raghavendran
ராகவேந்தர் சார், பம்மலார் சார்
சாந்தி தியேட்டர் நிகழ்வுகளை நேரடியாக பார்த்தது போல் இருந்தது.
நன்றி !!!
Dear Sir,Quote:
Originally Posted by tacinema
Thank you very much for your kind words. There are many more people like Murali Sir, Pammalar, who should get recognised. Hope it materialises soon.
Dear Radhakrishnan,
Thank you for your kind compliments.
Raghavendran
Senthil & tac,
Sorry folks! Couldn't make it for Sunday evening show. But Ragavendar sir and Swami have made it more than enough.
I had gone to the theatre though I didn't go to the movie. It was a fantastic celebration by any yardstick and the two hours I had spent there was joyous. There was so much crowd and we were happy to see many youngsters turning up.
வந்திய தேவன் ஆடிப்பெருக்கு அன்று வீர நாராயண ஏரியை சுற்றி நடைபெறும் காட்சிகளை கண்டு களித்துக் கொண்டு வரும் போது அந்த காட்சிகளை வாசகன் உணர அத்துணை அழகாக விவரித்திருப்பார் கல்கி. அதே போல் நமது சுவாமி அவர்களும் கவிதை கலந்த நடையிலே ஆரம்பித்திருக்கும் அரங்கு நிகழ்வுகளை படிக்க நானும் ஆவலாய் உள்ளேன்.
அன்புடன்
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 2
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]
வெள்ளித்திரை விடிவெள்ளியின் "புதிய பறவை" புதுக்காவியத்தின் ஆறரை மணி ஆட்டம் ஆரம்பிக்கப் போகிறது என அறிந்து அனைவரையும் போல் அடியேனும் அரங்கினுள் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டேன். எனக்கு பக்கத்து இருக்கையில் நமது ராகவேந்திரன் சார், தங்கச்சுரங்கம் சிவாஜி போல் துடிப்புடன் இருந்தார். அவர் எப்பொழுதுமே அப்படித்தானே!
'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்' என டைட்டில் கார்ட் ரீட் செய்ய, ஆர்ப்பரிக்கிறது அரங்கம். அதிலிருந்து, 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்கின்ற நாமகரணம் வரும் வரை ஒரே கரவொலி, விசிலொலி மயம்! பெயர்ப்பலகை திகிலோடு முடிவடைந்து திரைப்படம் மென்மையுடன் மொட்டு விடுகிறது. சிங்காரச் சென்னையை நோக்கி சிருங்காரப் பயணிகள் கப்பல், பொற்றாமரைக்குளத்தில் மிதந்து வரும் கோயில் தெப்பம் போல், ஆழ்கடலில் அழகுற மிதந்து அக்கரைச்சீமையிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கப்பலில் பயணம் செய்யும் கோபால்(நடிகர் திலகம்), பைனாகுலர் மூலம் ஃபைனான காட்சிகளை ரசித்த வண்ணம் அதே தளத்தில் சற்று தள்ளி 'டைம்' மேகஸின் படித்துக் கொண்டிருக்கும் சகபயணி லதாவின்(சரோஜாதேவி) காலை தெரியாமல் இடற, இருவரும் தங்களை பரஸ்பரம் தெரிந்து கொள்கிறார்கள். கோபால் பைனாகுலர் மூலம் உலகத்தைக் காண, கோபாலின் கோபியர்களோ (நடிப்புக்கடவுளின் பக்தர்கள்) இங்கே அவரையே உலகமாகக் காண்கிறார்கள். அகன்ற திரையில் நடிகர் திலத்தின் நல்லுருவம் தெரிந்தவுடன் ஆர்ப்பரிக்கும் அடலேறுவாகிறது அரங்கம்.
அடுத்து டைனிங் ஹால் காட்சி. நடிகர் திலகம், சரோஜாதேவி, விகேஆர். தனது மகளிடம் விகேஆர் 'இது இடம்' என்று அமர வேண்டிய இருக்கையையும், 'இது தமிழ்' என்று தமிழர் திலகத்தையும் காட்ட, 'தமிழே தலைவர் தான்' என்கின்ற கோஷம் கேட்கிறது. தனக்கு பிடித்தமான பலகாரம் பால்பேணி எனக் கூறிவிட்டு, சரோஜாதேவியின் ரசனையை வியக்கும் நடிகர் திலகம், அதற்குப்பின் மொழியும் வசனங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. "வாழ்க்கையில ரசனை ரொம்ப முக்கியம். ரசிக்கத் தெரிஞ்சவங்க தான் உலகத்தினுடைய அழக பூரணமா அனுபவிக்க முடியும். நல்லா இருக்குன்னு சொல்றோம் பாருங்க, அந்த வார்த்தையே ரசனையிலேர்ந்து தான் உற்பத்தியாகுது." எவ்வளவு ரசித்து நடிக்கிறார். இதை ரசித்த விகேஆர், "வயசு இளமையாயிருந்தாலும் வார்த்தை முதுமையாயிருக்கு" என சிலாகிக்கிறார். உண்மை. அதை இவ்விதமும் கூறலாம். இளம் வயதிலே நடிப்பில் முதிர்ச்சி முத்திரை பதிப்பவர் நடிகர் திலகம் என்று.
விகேஆர் வினாக்களை விட அதற்கு விடைகளை அளிக்கிறார் நடிகர் திலகம். தனது பெயர் கோபால் என்றும், சொந்த ஊர் ஊட்டி என்றும், வியாபார விஷயமாக சிறுபிராயத்திலிருந்தே சிங்கப்பூரில் இருப்பதாகவும், தற்பொழுது தாயகம் திரும்புவதாகவும் கூறுகிறார். விகேஆரும் தன் பங்குக்கு தனது ஊர் ஊட்டிக்கு அருகாமையில் உள்ள கோயமுத்தூர் என்றும், தனது மகள் அக்கரைச்சீமைக்கு சுற்றுலா செல்ல விரும்பியதால் சிங்கப்பூர், மலேயா போன்ற நாடுகளுக்கு சென்று விட்டு மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். அதே சமயத்தில், லதா கோபாலிடம், தனது உள்ளம் அவரோடு நெருங்கி விட்டதையும் சூசகமாகத் தெரிவித்து, ஊரும் நெருங்கி விட்டது என்கிறார். பால்பேணி வருகிறது. நாம் எல்லோரும் தான் பலகாரம் சாப்பிடுகிறோம். ஆனால் இங்கே நடிகர் திலகம் பால்பேணி சாப்பிடுகிறார் பாருங்கள். எத்தனை அழகு! எத்தனை நேர்த்தி! பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய நடிப்புப்பெட்டகம் அவர். கப்பல் கேப்டன் வருகிறார். வெள்ளைக்காரரான அவர், தனது அளகு தமிளில் வெளுத்து வாங்குகிறார். (இன்றைய காலகட்டத்தில் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும், வானொலியிலும், இன்னும் பற்பல விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பல பீடைகள் மொழிக்கொலையை துணிந்து செய்யும் போது வெள்ளைக்கார கேப்டன் தமிழ் பேசுவதை, தமிழ் பேச முயற்சிப்பதை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.). நாளை கப்பல் சென்னைத் துறைமுகத்தை அடைவதாகவும், அதனால் இன்றிரவு கப்பலில் கேப்டன்ஸ் நைட் ஃப்ங்ஷன் வைத்திருப்பதாகவும், அதில் ஆட்டம், பாட்டம் எல்லாம் உண்டு என்று கூறும் கேப்டன், "ஆல் கலந்துக்கணும்" என அன்புக் கட்டளையிடுகிறார்.
அடுத்த காட்சியாக கேப்டன்ஸ் நைட் ஆரம்பமாகிறது. பக்தர்கள் இங்கே அந்த அற்புத இசைக்கு ஆடியபடியே திரையை நோக்கி நெருங்குகின்றனர். மெல்லிசை மன்னர்கள் மேற்கத்திய இசையிலும் மன்னர்கள். கேப்டனும், மற்றவர்களும் பாடிக் கொண்டே ஆடும் அந்த இசைக்கு நமது கால்களும் நம்மை அறியாமல் தாளம் போடுகின்றன. பக்தர்களைப் பற்றி சொல்லவா வேண்டும். கேப்டன் எவராவது பாட வேண்டும் என வேண்டுகோள் விடுக்க, எவரும் பாட முன்வராததால், தானே ஒரு அளகான தமில் பாட்டு பாடப் போவதாகக் கேப்டன் கூற, விகேஆர் உடனே "தமிழைக் காப்பாற்றுங்கள் கோபால்" என அறைகூவல் விட, கலைத்துறை என்னும் கடலில் தமிழைத் தன்னிகரற்ற முறையில் காப்பாற்றிய நடிகர் திலகம், ஆழிப்பெருங்கடலில் அசையும் இந்த அழகிய கப்பலிலும் தாய்மொழியைக் காப்பாற்ற தயார் ஆகிறார். திரைக்கு அருகே உள்ள மேடையிலும் வரிசையாக அகல் விளக்குகளைப் போல சூடங்களை வைத்து அக்னி பகவானுக்கு ஆக்யஞை(கட்டளை) கொடுக்க ஆயத்தமாகிறார்கள் பக்தர்கள். விகேஆரின்(இராமதுரை) மகள் லதா ஒரு அழகான தமிழ்ப் பாட்டு பாடுவார் என கோபால் அறிவித்ததுதான் தாமதம், அரை அரங்கமே திரையை நெருங்குகிறது.
கோபாலின் கைகள் கிளாப் அடிக்க, பின்னர் விரல்கள் பியானோவில் விளையாட, பியானோவை எந்த இசைக்கலைஞர் மெல்லிசை மன்னர்களின் குழுவில் வாசித்தாரோ அவர் தோற்றார், நடிகர் திலகம் இங்கே ஜெயித்து விட்டார். எத்தனை தத்ரூபமாக, கம்பீரமாக கைவிரல்களை அசைத்தும், சிரத்தை சற்று உயர்த்தியும், அங்க அசைவுகளைக் கொடுத்தும் தாளக்கட்டோடு வாசிக்கிறார். திரு.ஜோ கூறிய புகழுரை நினைவுக்கு வருகிறது. "இன்னொருத்தன் பொறந்துதான் வரணும்". பியானோ இசைக்கு திரைமேடையில் ஏறிய பக்தர்கள் ஆட, மேடைக்கு அருகே குழுமியிருந்தவர்கள் ஆட, அரங்கத்தில் ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் ஆட, இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து ஆட, ஆக அரங்கமே ஆடுகிறது.
(தொடரும்...)
பக்தியுடன்,
பம்மலார்.
Having goosebumps just looking at the pix. What to do, will this ever happen to Malaysia? :cry:
இந்த வசனத்தை NT உச்சரிக்கும் விதம் மற்றும் அவரது பாடி language இருக்கிறதே..., வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. பார்த்துத்தான் உணர வேண்டும். சனிக்கிழமை இரவுக் காட்சியில் படம் பார்க்கும் போது பலத்த கையொலி.Quote:
Originally Posted by pammalar
பம்மலார் வர்ணனை அற்புதம். Match highlights தருவீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் "Full replay" தருகிறீர்கள். Thanks. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.
'புதிய பறவை' உற்சாகத்தில் திளைத்திருக்கும் நடிகர்திலகத்தின் ரசிக / பக்த கோடிகள் அனைவருக்கும் இந்த பழைய பறவையின் நல்வாழ்த்துக்கள்.
(கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக துண்டிக்கப்பட்டிருந்த எனது கணிணி இணைப்பு இப்போதுதான் மீண்டும் கிடைத்துள்ளது. முதல் வேலையாக விடுபட்டுப்போன பக்கங்கள் அனைத்தையும் படித்து முடித்தேன்).
முதலில், நடிகர்திலகத்தின் நினைவுநாளன்று 'நடிகர்திலகம் சிவாஜி' விருது பெற்ற சகோதரர் ராகவேந்தர், சகோதரி கிரிஜா மற்றும் திரு ஜெகன் ஆகியோருக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். தகுதியானவர்களுக்கு கிடைத்திருக்கும் தகுதியான விருது. ராகவேந்தர் அவர்கள் இன்னும் இதுபோன்ற பல விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டும் என்பது என் ஆவல் மட்டுமல்ல, அவரது உழைப்புக்கு வழங்கப்படும் அங்கீகாரமும் கூட.
பலர் இங்கே சொல்லியிருப்பது போல, விரைவில் சகோதரர்கள் பம்மலார், முரளியண்ணா ஆகியோருக்கும் வழங்கப்பட வேண்டும். அந்த நல்ல நாளை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.
டியர் பம்மலார்.....
சாந்தி திரையரங்கத்தில் புதிய பறவை வெளியீடு புகைப்படத் தொகுப்பு மிகவும் அருமை.
சாந்தி திரையரங்க ஞாயிறு மாலை நிகழ்வுகளின் வர்ணனைகள் மிகவும் அற்புதம். நேரில் பார்ப்பது போலுள்ளது. உங்களின் வர்ணிப்பில் முரளியண்ணா இன்னொரு கல்கியைப் பார்த்தாரென்றால், நான் இன்னொரு சாண்டில்யனைப் பார்க்கிறேன். முதல் பாடல் வரைதான் வந்துள்ளது. அதுவே களைகட்டியுள்ளது.
வாழ்த்துக்கள்... நன்றிகள்....
மிச்சத்தையும் படிக்க காத்திருக்கிறோம்
டியர் ராகவேந்தர்
தாங்கள் மிகவும் சிரத்தையோடு அளித்திருக்கும் youtube இணைப்புகளுக்கு நன்றி.
(துரதிஷ்டவசமாக எனது கணினியில் youtube இணைப்பு வேலை செய்யவில்லையாதலால் கண்டு ரசிக்க முடியவில்லை. விரைவில் வாய்ப்பு வரும்போது கண்டு ரசிப்பேன்).
டியர் கே. மகேஷ்
தாங்கள் அளித்திருக்கும் பல்வேறு இணையதளங்களின் (புதிய பறவை திரையரங்க நிகழ்வுகளைப் பாராட்டி எழுதப்பட்டவை) இணைப்புகளுக்கு மிக்க நன்றி. அனைவரும் நன்றாகவும், உண்மையாகவும் எழுதியுள்ளனர். அவர்கள் வியப்படைந்ததில் அர்த்தம் இருக்கிறது.
** 46 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படம்....
** பலமுறை திரையரங்குகளில் திரையிடப்பட்ட ஒரு படம்.....
** பலமுறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுவிட்ட ஒரு படம்....
** விசிடி / டிவிடிக்களில் வெளியாகிவிட்ட ஒரு படம்...
இப்போதும் கூட திரையரங்க வெளியீட்டில் இத்தகைய வரவேற்பைப் பெறுகிறதென்றால், காண்போர் அதிகபட்ச வியப்படைவது அர்த்தமுள்ளதுதானே. சிவாஜிபடை இன்றைக்கும் பொலிவோடு, வலுவோடு திகழ்கிறது என்பதற்கு, இந்த இணையங்களில் வெளியாகியுள்ள விவரங்களே கட்டியம் கூறும்.
நடிகர்திலகம் வாழ்கிறார்.... என்றும் வாழ்வார்.....
Pammalar,Quote:
Originally Posted by pammalar
நம் தலைவர் மிக அடக்கத்தோடு பேசும் தமிழ் உச்சரிப்பே கொள்ளை அழகு. இந்த மாதிரி காட்சிக்களில் அவர் புகுந்து விளையடிருப்பார். தமிழ் அழகு பெறுகிறது என்பார்கள் - இதோ இந்த காட்சி தான் அதற்க்கு உதாரணம். எந்த நடிகர் அவரோடு போட்டி போடா முடியும்?
போக போக படம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த ஒரு சீன்
சாட்சி. தங்கள் வருணனை மிக அருமை.
Superb start. please continue
Regards
டியர் முரளியண்ணா,
நடிகர்திலகத்தின் நினைவுநாள் விழா நிகழ்ச்சிகளின் முழுத்தொகுப்பும், விழாவை நேரில் கண்டு நெகிழ்ந்த உணர்வை ஏற்படுத்தியது. சிவசக்தி பாண்டியன், பொன்.விஜயராகவன், குகநாதன் ஆகியோரின் உரைகள் நெகிழ வைத்தன. ஒரே படமானாலும் ஆர்.கே.செல்வமணியின் அனுபவமும் நெஞ்சைத்தொட்டது. தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி
டியர் பம்மலார்,
நடிகர்திலகத்தின் நினைவுநாள் சுவரொட்டிகள் வரிசை அமர்க்களம். அதில் நெஞ்சைத்தொட்ட ஒரு வாசகம், நம் அனைவருக்கும் பொருத்தமான ஒன்று....
"மறக்க முடியுமா உங்களை
மாற்ற முடியுமா எங்களை"
(எந்த ஜென்மத்திலும் முடியாது).
ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இவ்வாரம் பிரபல திரைப்பட / நாடக / சின்னத்திரை நடிகரான திரு சண்முக சுந்தரம்.......
'நான் நடித்த முதல் படமே நடிகர்திலகத்துடன் தான், 'ரத்தத்திலகம்' படத்தில் நடித்தேன். முதல் இரண்டு நாட்கள் தனித்தனி சீன்கள் எடுத்தனர். மூன்றாவது நாள் இருவருக்கும் காம்பினேஷன் சீன். மேக்கப் ரூமில் இருந்தவர் என்னை அழைக்கிறார் என்றார்கள். போனேன். முதல் படமாச்சே என்று அவரிடத்தில் எனக்கு பயம் எதுவும் இல்லை. ஏனென்றால் அவர் அடிக்கடி என் அண்ணனைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். நான் நடித்த நாடகங்களையும் பார்த்திருக்கிறார். மேக்கப் ரூமில் நுழைந்ததும் அங்கிருந்த தன் நண்பரிடம், 'இவர் சண்முக சுந்தரம். ஒண்டர்புல் ஆக்டர்' என்று அறிமுகப் படுத்தியவர் என்னிடம் திரும்பி, 'இன்னைக்கு நாம ரெண்டு பேருக்கும் காம்பினேஷன் சீன். நீ கொஞ்சம் அசந்தால் நான் உன்னை சாப்பிட்டு விடுவேன். நான் அசந்தால் நீ என்னை சாப்பிட்டுடணும்' என்றார்.
முதல் காட்சியே அவருடைய கன்னத்தில் அறைகிற மாதிரி சீன். 'பார்த்து அடிப்பா. நான் வயசானவன்' என்று சிரித்துக்கொண்டே சொன்னார். நானும்' இல்லேண்ணே நான் சும்மா அடிக்கிற மாதிரி ஆக்ஷன்தான் கொடுப்பேன்' என்று சொல்லி அறைவது போல் நடித்தேன். அதற்கு உண்மையிலேயே நான் கடுமையாக அடித்தது போல அவர் ரியாக்ஷன் கொடுத்ததுதான் சிறப்பு'. (இந்த இடத்தில் ரத்தத்திலகம்' கிளிப்பிங் காண்பிக்கப்பட்டது. சண்முக சுந்தரம் நான்குமுறை நடிகர்திலகத்தின் கன்னத்தில் அறைகிறார். அடி விழ விழ இவர் சிம்மக்குரலில் கர்ஜனை செய்கிறார்).
அடுத்த படமான 'கர்ணன் படத்திலும் எனக்கும் அவருக்கும் போட்டி சீன்தான். படத்தின் முக்கியமான காட்சி. கர்ணனாகிய அவருக்கு போர்க்களத்தில் தேரோட்டும் சல்லியனாக நான் நடித்திருந்தேன். நான் சொன்னதை அவர் கேட்கவில்லை என்பதற்காக பள்ளத்தில் இறங்கிய தேரை அப்படியே விட்டுவிட்டு கோபமாக இறங்கிப்போகும் காட்சி. (இந்த இடத்திலும் கிளிப்பிங்கும் வசனமும் காண்பிக்கப்பட்டன). தன்னோடு நடிப்பவர்களுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து அவர்களுக்கும் பெயர் கிடைக்க வேண்டும் என்று கருதும் ஒரே நடிகர், நடிகர்திலகம் சிவாஜி ஒருவர்தான்".
நன்றி சண்முகசுந்தரம் சார்...
சகோதரி சாரதா அவர்கள் நீண்ட நாட்களுக்குப் பின் புதிய பறவையாக சிறகடித்து வந்திருக்கிறார். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அது என்னவோ தெரியவில்லை, ஒரு வரி அல்ல, ஒரு வார்த்தை எழுதினாலும் போதும், நம் அனைவரும் ஒரு சேர பங்கேற்று விவாதிக்கும் போது ஏற்படும் மன நிறைவு நிச்சயம் நீங்காத நினைவுகள் தான்... மீண்டும் சாரதா அவர்களின் வரவுக்கு நமது அனைவரின் சார்பில் என் இதயங்கனிந்த மகிழ்ச்சியையும் நல்வரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுடைய கனிவான வார்த்தைகளுடனான பாராட்டு்க்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள். இதை எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்ததாக நான் எண்ணவில்லை, நம் அனவைரின் சார்பாகவும் எனக்குத் தரப்பட்டதாகத் தான் எண்ணுகிறேன். சொல்லப் போனால் தங்களுக்கும், முரளிசார், பிரபு ராம், பம்மலார் உள்ளிட்ட வித்தகர்களுக்கும் வழங்கப் படும் போது தான் என் மனம் நிறையும். நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய தங்களின் அலசல்கள் அடுத்த தலைமுறையினருக்கு சரியான வகையில் அப்படங்களை அறிமுகப் படுத்துகின்றன. இதற்கெனவே தனியாக தங்களுக்கெல்லாம் தனியாக விருது வழங்கப் பட வேண்டும்.
ஞாயிறு மாலைக் காட்சியில் நடைபெற்ற கோலாகலங்கள் உலகெங்கிலும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு உவகையூட்டியுள்ளது. இன்று மாலைக் காட்சி வரையில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியுடன் பவனி வந்துள்ளது. இதே சமயத்தில் திருச்சியில் உள்ள முருகன் திரையரங்கிலும் புதிய பறவை வெளியிடப் பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தகவல்.
மெல்லிசை மன்னர்களின் இனிய பின்னணி இசையினை சாந்தி திரையரங்கில் குளிர்சாதன வசதியின் அமைப்பில் கேட்கும் சுவையும் சுகமும் தனி. குறிப்பாக ஹென்றி டேனியலின் குரலில் இரவு விடுதியில் ஒலிக்கும் பாடல், மலைவாழ் பழங்குடி மக்களின் இசையுடனும் ஹம்மிங்குடனும் புல்லாங்குழலின் இசையுடனும் வயலின் கருவிகளின் ஒலியுடனும் துவங்கும் சிட்டுக் குருவி பாடல், காரில் பங்களாவில் நுழைந்து இறங்கி, அங்கிருந்து ஊட்டியைச் சுற்றிப் பார்த்து விட்டு ஜீப்பில் வீட்டுக்குள் நுழையும் வரை ஒலிக்கும் மெல்லிய பின்னணி இசை, உன்னை ஒன்று கேட்பேன் இரண்டாம் முறை சுசீலாவின் குரலில் ஒலிப்பதற்கு சற்று முன்னால் ஒலிக்கும் ஹென்றி டேனியலின் குரல் ...
மெல்லிசை மன்னரின் இசையை அணு அணுவாக ரசிக்கவும் நடிகர் திலகம் கற்றுக் கொடுத்து விட்டாரே ... ரசனையைப் பற்றி அவர் கூறும் வசனம் போதுமே ...
வாழ்க்கையில் நடிகர் திலகத்தின் ரசிகனாகப் பிறக்க வேண்டும்...
புதிய பறவையைப் பார்க்க வேண்டும்...
அதை சென்னை சாந்தி திரையரங்கில் பார்க்க வேண்டும்..
சிவாஜி ரசிகர்களி்ன் இந்த மூன்று ஆசையும் நிறைவேற வாய்ப்பளித்த விநியோகஸ்தர்களுக்கும், சாந்தி திரையரங்க நிர்வாகத்திற்கும் நமது உளமார்ந்த நன்றி.
ஞாயிறு கோலாகலம் .... போனஸ்...
ராகவேந்திரன்