டியர் ஹரிஷ் சார்,
தங்களின் கடலளவு வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறைந்த வானளவு நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
டியர் ஹரிஷ் சார்,
தங்களின் கடலளவு வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறைந்த வானளவு நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புமிக்க TFMLover அவர்களுக்கு முதலில் நம் அனைவரின் சார்பில் மிகப் பெரிய
நன்றி....நன்றி..... நன்றி....
http://youtu.be/IaxGu--YQpQ
நீண்ட நெடும் நாட்களாக என்னுள்ளே ஏக்கத்தை ஏற்படுத்தி ஆவலைத் தூண்டி விட்டு காத்துக் கொண்டிருந்த பாடலைக் காணொளியாகத் தந்தமைக்கு நம் அனைவர் சார்பிலும் நன்றியை உணர்வுபூர்வமாக கூறிக் கொள்கிறேன். அநேகமாக நம் நண்பர்களில் 90 சதம் பேர் இப்பாடலைப் பார்த்திருக்க மாட்டார்கள்.
எல்லாம் உனக்காக திரைக்காவியத்திலிருந்து மலரும் கொடியும் பெண்ணென்பார் பாடலைத் தந்து உள்ளத்தில் உவகை பொங்கச் செய்து விட்டார் அவருக்கு மீண்டும் உளமார்ந்த நன்றி.
டியர் பார்த்த சாரதி சார்,
தங்களின் 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' பாடலைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை பசுமையாக நெஞ்சில் நிரந்தரமாகக் குடியேறி விட்டது. அதுவும் எனக்கு மிகவும் பிடித்த எல்.ஆர். ஈஸ்வரி அவர்களைப் பற்றி நீங்கள் புகழ்ந்துள்ள விதம் மனத்தைக் குதூகலிக்கச் செய்கிறது. அந்த அற்புதப் பாடலுக்கு அவர்களைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. நடிகர் திலகத்தின் அந்த சுழலும் மேடையின் எதிர் நடையையும் காலம் உள்ளவரை மறக்க முடியாது. சுற்றக்கூடிய தட்டிற்கு எதிர்ப்புறம் வேகத்துடனும், அதே சமயம் கம்பீர ஸ்டைலுடனும் நடக்க அவரை விட்டால் வேறு யார்?
மொத்தத்தில் பார்த்தசாரதி சாரால் 'பட்டத்துராணி' மேலும் மெருகேறி பளிங்குச் சிலை போல் மின்னுகிறாள்.
பாராட்டுக்களுடன்,
வாசுதேவன்.
அன்பு ராகவேந்தர் சார்,
மிக அரிய 'மலரும் கொடியும்' தந்து TFMLover அவர்கள் அசத்தினார்கள் என்றால் தாங்கள் அதனை 'எல்லாம் உங்களுக்காக' என்று பதிவிட்டு நீண்ட நெடுநாள் பசியைப் போக்கியதற்கு நன்றி.!
அன்புடன்,
வாசுதேவன்.
KUDOS TO KARTKSENIOR AND VASUDEVAN SIRS FOR ENLGHTNNG BRIEF FACTS. DRCTOR CVRAJAENDRAN ALSO STOOD WITH NT TLL END AND INFACT REFUSED SOME OFFERS WHEN GIVEN TO WORK WITH OTHERSDE.
BR PANTHULU WAS GIVEN ALL POSSIBLE HELP TO PRODUCE MURADAN MUTHU, NT TOOK ONL NOMNAL VALE FOR HIS JOB STILL BRP WANTED TO MAKE THIS AS 100TH MOVIE OF NT insetead of navarathri to mone gans . navarathr was produced to help APN, the movie has come so nicely when compeled chinnavar wanted to make this as 100th movie, later mm and navarathr clashed on the sameda, mm was given special mornng shows n madras thus counted as 99 th movie and navarathr later released at 3pm shows as 1oo th movie. lke this NT has astuggled caarrier and many untold stores are there for many people to leave NT, I also felt very bad for aarur dass remarks.
டியர் பார்த்தசாரதி சார்,
பட்டத்துராணி பாடல் ஆய்வு பிரமாதம், குறிப்பாக நடிகர்திலகம் சாட்டையால் அடிக்கும் போது உண்மையிலேயே அடிப்பது போல் தோன்றும், அதற்கேற்ப காஞ்சனா அஹ்... அஹ்... அஹ்... என்று விம்முவது (எல்.ஆர் ஈஸ்வரி குரலில்) பாடலின் சுவையை மேலும் கூட்டும்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் சுவையான பாராட்டுக்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !
டிசம்பர் மாதம் வெளியான கலைக்குரிசிலின் காவியங்கள் பட்டியல் அருமை. ஒவ்வொரு காவியத்திற்கும் ஒரு மினி இமேஜையும் இணைத்திருப்பது excellent !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
கோடீஸ்வரன் & கள்வனின் காதலி
[13.11.1955 - 13.11.2011] : 57வது ஆரம்பதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5122-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Mail : 12.11.1955
http://i1110.photobucket.com/albums/...GEDC5123-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தங்களின் உளப்பூர்வமான பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !
டியர் செந்தில் சார்,
தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
அன்பைத் தேடி
[13.11.1974 - 13.11.2011] : 38வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : டிசம்பர் 1974
http://i1110.photobucket.com/albums/...GEDC5121-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
உலக எய்ட்ஸ் தினமான இன்று [டிசம்பர் 1], எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு குறும்பட வீடியோவை பதிவிட்டது ஒரு சிறந்த timely gesture !
இதுவரை நான் பார்த்திராத "எல்லாம் உனக்காக" காவியப் பாடலான 'மலரும் கொடியும் பெண்னென்பார்' பாடலை youtube இணையதளத்தில் தரவேற்றிய TFMLover அவர்களுக்கும், அதனை இங்கே இடுகை செய்த தங்களுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
பாரம்பரியம்
[13.11.1993 - 13.11.2011] : 19வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5126-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் பார்த்தசாரதி சார்,
'பட்டத்து ராணி' பாடல் பற்றிய தங்களின் ஆய்வு குறித்து ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அதியற்புதம் !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
பரிட்சைக்கு நேரமாச்சு & ஊரும் உறவும்
[14.11.1982 - 14.11.2011] : 30வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5125-1.jpg
காவிய விமர்சனம் : தேவி : 1982
http://i1110.photobucket.com/albums/...viReview-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
தங்கள் பாராட்டுக்கு அன்பு நன்றிகள்.
கோடீஸ்வரன், கள்வனின் காதலி, அன்பைத் தேடி விளம்பரங்களின் அணிவகுப்பு அருமை. (கோடீஸ்வரன் விளம்பரம் கோலாகலம்).
பரிட்சைக்கு நேரமாச்சு & ஊரும் உறவும் மற்றும் பாரம்பரியம் பதிவுகள் பரவசப் படுத்துகின்றன.
'ஊரும் உறவும்' தேவி விமர்சனம் தேனமுது. நிஜமாகவே நல்ல படம். நல்ல மெசேஜ் சொன்ன படம். வழக்கம் போல நடிகர்திலகத்தின் படங்களாலேயே இந்தப் படமும் பாதிக்கப் பட்டது. வித்தியாசமான வேடத்தில் அமர்க்களமாக நடித்திருப்பார் நடிகர் திலகம். எல்லாம் விழலுக்கிழைத்த நீராகி விட்டது. பின் புற்றீசல் போல தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருந்தால்?...
அருமையான பதிவுகளை பதிப்பித்ததற்கு பாராட்டுக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மத்திய அமைச்சர் கிராமங்களில் மருத்துவ சேவை ஆற்ற வேண்டியதைப் பற்றி மிகவும் தீவிரமாக வலியுறுத்தி வந்தார். அவர் இந்தப் படத்தைப் பற்றி அறிந்திருந்தால் தன்னுடைய துறைக்கு இப்படத்தைப் பிரச்சாரப் படமாக ஆக்கியிருப்பார்.
டியர் பம்மலார் மற்றும் வாசுதேவன்
டின்செல் டவுனின் டீட்டி (Tinsel Town Deity) யின் டிசம்பர் அணிவகுப்பினை அட்டகாசமாக தந்துள்ளீர்கள். ஆவணங்களின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
நன்றி.
TFMLover அவர்களின் கருணையினால் எல்லாம் உனக்காக திரைக்காவியத்தில் மற்றொரு பாடல் சுசீலாவின் கொஞ்சும் குரலில் கோபத்தைப் போக்கி சாந்தம் வரவழைக்கும் பாடல்
கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் ஏனடா ... கேளுங்கள்... பாருங்கள்...
http://www.youtube.com/watch?v=Xz50gYQtTfs
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)
10. "வாராய் என் தோழி வாராயோ"; படம்:- பாச மலர் (1961); பாடல்:- கவியரசு கண்ணதாசன்; பாடியவர்:- எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர்; ; இசை:- மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன் / ராமமூர்த்தி; இயக்கம்:- ஏ. பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, சுகுமாரி மற்றும் குழுவினர்.
இந்தப் பாடலை எப்போது கேட்டாலும், அந்த வைர வரிகளுக்காக சிலிர்க்கும்; எப்போது பார்த்தாலும், அதை எடுத்த விதத்துக்காகவும், அதில் நடித்த நடிக/நடிகையர்களின் நடிப்புக்காகவும், புல்லரிக்கும். இப்போதெல்லாம், கான்செப்ட் சாங், தீம் சாங் என்று என்னவெல்லாமோ சொல்லுகிறார்கள். இந்தப் பாடலைப் போல ஒரு கான்செப்ட் சாங்கை ஐம்பது வருடங்களுக்கு முன்பே யோசித்து அதைக் கச்சிதமாக எடுத்ததற்கு இந்தத் தமிழ் சமுதாயம் என்றென்றைக்கும் இந்தக் குழுவிற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தப் பாடல் வந்த புதில் இருந்து, இன்று வரை, ஏன் என்றென்றும் திருமணப் பந்தல்களில், நிரந்தரமாகக் குடியேறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மற்றொரு பாடல், (அதுவும் நடிகர் திலகம் தான்; வேறென்ன சொல்வது, எந்த நிகழ்ச்சிக்கும், நினைவு கூறுதலுக்கும், அது கோவில் திருவிழாவாகட்டும், திருமண விழாவாகட்டும், இந்திய சரித்திரத்தை நினைவு கூறுவதாகட்டும் - சுதந்திர எழுச்சி உட்பட - யாருக்கும், இவரது படங்கள்/காட்சிகள்/பாடல்களை விட்டால் வேறு கதியே இல்லை - அப்படி தமிழர்களின் வாழ்வில் ஊனும் உயிருமாய்க் கலந்து விட்ட யுக, மகாக் கலைஞன்.) பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி - ஆனால், இந்தப் பாடல் சோக ரசத்துடன் இருப்பதால், வாராய் என் தோழி வாராயோ அந்தப் பாடலை முந்துகிறது. இந்தப் பாடலை மிகச் சரியாக யோசித்து, அதை கவனத்துடன் செதுக்கி அந்தப் பாடலின் சூழலுக்கு மிகப் பொருத்தமாக நுழைத்து மாபெரும் வெற்றி கண்ட இயக்குனர் ஏ.பீம்சிங் அவர்கள் தான் இந்தப் பாடலின் முதல் நாயகன்.
அடுத்து, வரிகள். எப்பேர்ப்பட்ட அர்த்தம் தொனிக்கும் வரிகளையும், சூசகமாகக் கையாள்வதில் சூரன் கவியரசு என்பதை நிரூபித்த பாடல். இந்தப் படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் மயங்குகிறாள் ஒரு மாது பாடலிலும், இதே வித்தையை அற்புதமாக செய்தார். ஒரு மங்கல நிகழ்ச்சியில் இடம் பெறுகின்ற பாடல் - ஆனால், தோழி பாடுகின்றாற்போல் வருகின்ற பாடல் என்பதால், வெறுமனே, மங்களமான வார்த்தைகள் மட்டுமே வருவதாக எழுத முடியாது. இது சினிமா என்கின்ற பொழுதுபோக்கு ஊடகம் அதில் சொல்லப் படுபவை வெகு ஜனங்களுக்காக என்கின்ற உண்மையைப் புரிந்து கொண்டு எந்த இடத்திலும், டாகுமெண்டரி உணர்வு யாருக்கும் வராவண்ணம் வார்த்தைகளை எழுதி, அதாவது, தன்னுடைய உயிர்த்தோழியை இலேசான குறும்புடன் சூசகமாக சில வார்த்தைகளை வைத்துப் பாடுவதாகவும் எழுதி, பாடலின் கண்ணியத்தைக் கடைசி வரை காப்பாற்றிய - அதன் மூலம், மொழியின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் நிலை நாட்டிய எழுத்து வேந்தர், கவியரசு கண்ணதாசனை எப்படி பாராட்டுவது - இந்த யுகக் கவியை நாளும், பொழுதும் நினைத்து நினைத்து கர்வப்படுவதை விட வேறென்ன வேலை ஒவ்வொரு தமிழனுக்கும்?
அடுத்து பாடியவர். மறுபடியும் எல்.ஆர். ஈஸ்வரி. இந்த அற்புதப் பாடகியை உலகத்திற்குப் பெரிய அளவில் வெளிக்காட்டிய பாடல். இவரது முதல் மூன்று முத்தான பாடல்களில், ஒரு பாடலை இப்போது தான் எழுதினேன்; அடுத்த பாடல், இப்போது இடம் பெறுகிறது. ஆக, ஒவ்வொரு கலைஞனின் சிறந்த முதல் ஐந்து படைப்புகளை குறிப்பிடச் சொன்னால், அதில் குறைந்தது அறுபது சதவிகிதம், நடிகர் திலகம் நடித்த படங்களில் இருந்து தானே வருகிறது? இந்தப் பாடல் நெடுக வரும் அந்தக் குறும்பை, கொப்பளிக்கும் எனர்ஜியை, வேகத்தை, ஆரவாரத்தை, ஈஸ்வரி அவர்களை விட எந்தப் பாடகியும் இந்த அளவிற்குச் சிறப்பாகக் காட்டியிருக்க முடியாது.
இப்பொழுது இசை. ஒரு விழாப் பாடலுக்குத் (மங்களகரமான பாடலும் கூட) தேவைப்படுகின்ற வேகம், எனர்ஜி மற்றும் ஆர்பரிக்கும் சந்தோஷ உணர்வு அத்தனையும் இதில் காட்டியாக வேண்டும். இந்த உணர்வுகளை மெல்லிசை மன்னர் தந்த விதம் அருமை. குறிப்பாக இரண்டு விஷயங்கள் இந்தப் பாடலின் இசையமைப்பில் கூறியாக வேண்டும். ஒன்று, குழுவினரின் சிரிப்பொலி அந்தப் பாடலின் பின்னணி இசையோடு இயைந்து வரும் (மூன்றாவது சரணம் - இரவோடு இன்பம் உருகாதோ இரண்டோடு மூன்றும் வளராதோ! என்னும்போது). அடுத்து, சமஸ்கிருத வேதங்கள் அடங்கிய - திருமணம் நடைபெறும்போது புரோகிதர்களால் ஓதப்படுகின்ற வரிகள் - பாடலோடு மீண்டும் இயைந்து வருகின்ற விதம். இந்த இரண்டு சங்கதிகளும் மிக முக்கியமாக - பாடலின் அடிப்படை விஷயமான அந்த வேகம் / டெம்போவைக் கொஞ்சமும் குறைக்காமல், மேலும் மெருகூட்டிச் செல்லும் அந்த விதம். நிறைய பேர் இந்த விஷயத்தைக் கவனித்திருக்கக் கூடும். இல்லையென்றால், ரசித்து இன்புறலாம்.
கடைசியில் நடிப்பு. சுகுமாரி எனக்குத் தெரிந்து இந்தப் படத்தில்தான் முதன் முறையாக நிறைய நேரம் வருவார் - இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் (பின்னாளில் இவர் இயக்குனர் பீம்சிங்கின் மனைவியானது வேறு விஷயம்.). மிக அருமையாகவும் அதே சமயம் அளவோடும் பாடி நடித்து - யார் இந்தப் புதுமுகம் என்னும் அளவுக்குப் பெயர் வாங்கினார். என்றுமே, இது போல் ஒரு பாடலுக்கு நடனம் மற்றும் பாடி நடிப்பவர்கள் பெரிய அளவுக்கு உடனே பெயர் வாங்குவதில்லை. (உதாரணம் ஏ.சகுந்தலா - அவருமே கூட இந்தப் பாடலில் குழுவினரோடு நடனம் ஆடியிருப்பார். இது போல் இன்னும் சில நடிகைகளும் உண்டு.). நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களுக்கும் இந்தப் பாடலில் பெரிதாக வேலை இல்லை. இருப்பினும், இந்தப் பாடலில் அவ்வப்போது வரும் சில வரிகளுக்கேற்ப, அவருடைய நாணத்துடன் கலந்த முக பாவங்கள் இன்னமும் யாருடைய கண்களை விட்டும் அகல மறுக்கின்றன.
கடைசியில், நடிகர் திலகம். இந்தப் பாடலிலும், - அதாவது இது ஒரு குழுவினர் ஆக்கிரமிக்கும் பாடல். இந்தப் பாடலிலும், நடிகர் திலகம் அற்புதமாக சில பல ரீயாக்ஷன்களைக் காண்பித்து, பார்ப்பவர்களின் கவனத்தை தன் மீதும் தக்க வைத்துக் கொண்டார். இது எல்லோரும் அறிந்த ஒன்று. மேற்கூறிய வரிகள் வரும் போது, சாவித்திரி ஒரு வித நாணத்துடன் போகும்போது, அந்த இடத்தில் நிற்கும் நடிகர் திலகம் தானும் ஒரு வித பாவத்துடன் - கண்ணியம் தென்படும் ஒருவித பாவம். அதற்கு ஒரு இலக்கணத்தை அன்றே வகுத்துச் சென்றிருப்பார்! அதிலும், அப்போது வரும் இலேசான காற்றில் அவருடைய தலை முடி ஒரு விதமாக ஆடும். அவரது முடி கூட நடிக்கும்!! இந்தக் குறிப்பிட்ட போர்ஷனை பின்னாளில் வந்த ஒரு சினிமாவில் மொத்தமாகப் பயன்படுத்தி, இந்த ரீயாக்ஷனை நகைச்சுவை நடிகர் செந்திலை விட்டு செய்யச்சொல்லியிருப்பார்கள். நல்ல வேளை, அவர் பெரிதாக நையாண்டி செய்யாமல், நகைச்சுவையோடு மட்டுமே அணுகியிருப்பார் - இந்நாட்களில் நடிக்கும் நடிகர்களைப் போல் இல்லாமல்! அடுத்து, கடைசியில் மாங்கல்ய தாரணம் நடக்கும் போது, கையில் இருக்கும் அட்சதையை கண்களில் நீரைத் தேக்கி வைத்து மணமக்கள் மேல் போடும் இடம். தங்கையின் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான தருணத்தில் ஒரு அண்ணன் எப்படி உணர்வானோ, அதை நூறு சதவிகிதம் நடித்துக் காண்பித்து பார்ப்பவர் அத்தனை பேரின் கண்களிலும் - முக்கியமாக, ஒவ்வொரு தகப்பன், தாய் மற்றும் சகோதர சகோதரிகளின் கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்த அற்புதத் தருணமல்லவா அது! இது வெறும் ஒரு நொடியில் காட்ட வேண்டிய காட்சி தானே. இது போல், எத்தனையோ படங்களில் எத்தனையோ நடிகர்களுக்கும் இது போன்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது - அது எப்படி, இவர் ஒருவர் மட்டும், அந்த ஒரு நொடிப் பொழுதையும் வீணாக்காமல், தன்னுடைய நூறு சதவிகித அற்பணிப்பைத் தந்தார்? ஆம், இந்த ஒரு காரணத்தினால் தான், அவர் மட்டுமே நடிகர் திலகமானார். உலகம் உள்ளளவும், இந்தப் பட்டத்துக்குச் சொந்தக்காரராகிறார்!
நமது நண்பர்கள் மற்றும் ஏனையோர் இந்தக் கட்டுரையில் இது வரை இடம் பெற்ற பாடல்களையும், இந்தப் பாடலைப் பற்றிய கட்டுரையைப் படிக்கும் போது, சிலருக்கு பாடல்களைத் தேர்வு செய்ததில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். சிலரது பார்வையில் வேறு சில பாடல்கள் இவைகளை விடச் சிறப்பாக அமைந்திருக்கலாம். இருப்பினும், என்னுடைய பார்வையில் இந்தப் பாடல்கள் மற்றவைகளை முந்துகின்றன என்பதற்கு அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்று தான். இவை, இன்றளவும், எல்லோராலும், இன்றைய இளம் தலை முறையினராலும் ரசிக பேதமின்றி ரசிக்கப் பட்டு சிலாகிக்கப்பட்டு கேட்பதற்கு மட்டுமல்லாமல், பார்பதற்கும் விரும்பப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுகின்றது. அதற்குக் காரணம் ஒரு சிறந்த பாடலுக்குத் தேவைப் படுகின்ற அத்தனை அம்சங்களும் நூறு சதவிகிதம் வெற்றிகரமாக அமைந்து, அந்த குழுப்பணி (டீம்வொர்க்) முழுமையாக நிறைவேறியது. அதனால் தான் இந்தப் பாடல்களை சிரஞ்சீவித் துவம் பெற்ற பாடல்கள் என்று தலைப்பு கொடுத்தேன்.
இந்தத் தொடரில் நான் அவ்வப்பொழுது எழுதி வந்த பாடல்களைப் பற்றிய என்னுடைய கட்டுரைகளுக்கு உடனுக்குடன் என்னைப் பாராட்டி அங்கீகரித்த, அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய கோடானு கோடி நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
தொடரும்,
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
Anbu Pammalar sir,
Your recent Treasures (ponnukku mElAna pokkishanggaL) are simply superb.
the eye catching ads of.....
Kodeeswaran
KaLwanin Kadhali
Parambariyam
Paritchaikku NEramaachu
AnbaiththEdi
and the review of 'Oorum Uravum' are making us very happy.
Thanks for your unvaluable service, and continue for all of us.
Anbu Parthasarathy sir,
Your analysis about the evergreen hit 'Pattaththu Rani paarkum paarvai' is excellent.
You have analised all departments of the song such as lyrics, unparalelled music, wonderful picturisation, art direction, the performance of the involved and also co-stars (esp. Nambiar) are very very super.
Your special pointing about NT's performance (walking on the disc on anti rotating direction) is pleasant one.
Thanks a lot to you sir.
டியர் பம்மலார் சார்,
பாரம்பரியம், பரீட்சைக்கு நேரமாச்சு விளம்பரம் மற்றும் ஊரும் உறவும் திரைப்பட தேவி விமர்சனம் என பதிவிட்டு கலக்கி விட்டீர்கள், விமர்சனத்திலேயே குறிப்பிட்டது போல் சற்று இடைவெளி விட்டு வந்திருந்தால் நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும், என்ன செய்வது, நம் படத்துக்கு நம் படமே எதிரி, அந்த வருடம் மட்டும் 13 படங்கள், அதாவது மாதம் ஒரு படம் என இடைவெளி இல்லாமல் வெளியானதே முக்கிய காரணம்.
//நமது நண்பர்கள் மற்றும் ஏனையோர் இந்தக் கட்டுரையில் இது வரை இடம் பெற்ற பாடல்களையும், இந்தப் பாடலைப் பற்றிய கட்டுரையைப் படிக்கும் போது, சிலருக்கு பாடல்களைத் தேர்வு செய்ததில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். சிலரது பார்வையில் வேறு சில பாடல்கள் இவைகளை விடச் சிறப்பாக அமைந்திருக்கலாம்//
டியர் பார்த்தசாரதி சார்,
மீண்டும் ஒரு அருமையான பாடல் பதிவோடு வந்துள்ளீர்கள், இசை, பாடியவர், பாடல் வரிகள், நடிப்பு என ஒன்று விடாமல் அலசி விட்டீர்கள், நீங்கள் எந்த பாட்டை ஆய்வு செய்தாலும் அது சிறப்பாக இருப்பதால் பாடல் தேர்வு குறித்து யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என நம்புகிறேன்.
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் வழங்கிய கோலாகலமான பாராட்டுக்களுக்கு எனது குதூகலமான நன்றிகள் !
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
'கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் ஏனடா' பாடல் வீடியோவுக்காக TFMLover அவர்களுக்கும், தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
டியர் ஜேயார் சார்,
தங்களின் கலக்கல் பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
Dear mr_karthik,
My sincere thanks for your priceless post of praise !
Regards,
Pammalar.
வழிமொழிகிறேன் !
'வாராயோ தோழா வாராயோ
சாரதிபதிவை வாசிக்க வாராயோ'
சாரதி சார்,
தங்கள் ஏற்றமிகு எழுத்தில் மேலும் எழுச்சி பெற்ற 'வாராயென் தோழி வாராயோ' பாடலின் ஒலி-ஒளிக்காட்சி:
http://www.youtube.com/watch?v=JM5HxZM6R3E
அன்புடன்,
பம்மலார்.
நடிகர்திலகம் திரியின் ஏழாம் பாகம்.....
பார்வையாளர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டி சாதனை.
அன்புள்ள பம்மலார் சார்,
தங்களின் விலை மதிக்க முடியாத ஆவணப்பொகிஷப் பதிவுகளாலும் மற்ற நண்பர்களின் சீரிய பங்களிப்பினாலும் இது சாத்தியமாயிற்று என்றால் அது மிகையில்லை.
குறிப்பாக தாங்கள் இந்த ஏழாம் பாகத்தில் அள்ளித்தந்திருக்கும் சாதனைப்பொன்னேடுகளால், முந்தைய பாகங்களை விட இது பல மடங்கு பொலிவு பெற்றதாக விளங்குகிறது. அவற்றால் இங்கு வருகைதந்து மகிழ்வோர் எண்ணிக்கை மிகக்கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. இதற்கு முழுமுதற்காரணமாக விளங்கிய தங்களுக்கும், தங்கள் சீரிய முயற்சி மற்றும் அயராத உழைப்பு இவைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
நீங்கள் தேடித்தேடி அளித்திருக்கும் வரலாற்று ஆவணப்பொக்கிஷங்கள், நடிகர்திலகத்தின் ஐம்பதாண்டுகால திரையுலக வரலாற்றில் அங்கங்கே ஒளி வீசும் வைரங்கள், வைடூரியங்கள், விலை மதிப்பில்லா முத்துக்கள். அவற்றின் 98 சதவீத ஆவணங்களை தீவிர ரசிகர்களாகிய நாங்கள் கூட பார்த்ததில்லை. அவற்றை தேடிச்சேகரித்து அனைவரின் பார்வைக்கும் அள்ளி வழங்கி, ஒவ்வொரு ரசிகர்களையும் 'ஆவணக்காப்பாளர்களாக' மாற்றிய தங்களுக்கு எங்கள் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம்.
தன்னிகரில்லா தங்கள் சிறப்பான சேவை தொடர வாழ்த்துகிறோம்.
அன்பு பார்த்தசாரதி சார்,
சூட்டோடு சூட்டாக அடுத்து ஒரு அற்புதப் பாடலோடு களம் இறங்கி ஆய்வுசெய்து வழக்கம் போல ஜெயக்கொடி நாட்டி உள்ளீர்கள். அதுவும் என் மனம் கவர்ந்த பின்னணிப் பாடகி (போன முறை பட்டத்து ராணி, இம்முறை "வாராயென் தோழி வாராயோ") அவர்களின் பொன்னான இரு பாடல்களை ஆய்வு செய்து ஆனந்தப்படுத்தியதற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
"கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (மூன்றாம் பாகம்).
http://i1087.photobucket.com/albums/..._000326893.jpg
நடிகர் திலகத்தின் நடிப்பு முத்திரைகள்.
தன்னை அன்புடன் வளர்த்த மேரியம்மாவின் மீது (பண்டரிபாய்) தொழிலதிபர் சத்தியநாதன் ('சங்கிலி' முருகன்) ரோட்டில் குடிபோதையில் காரை ஏற்றி விட, குற்றுயிரும்,கொலையுயிருமாக தன் தாய் மரணப்படுக்கையில் கிடக்க, பதைபதைத்து பதறி ஓடி வருவார் N.T. அவர் கண்ணெதிரிலேயே மேரியம்மா உயிரை விட, அவளை மடியில் சாய்த்துக் கொண்டு கதறும்போது டாக்டர்கள் சற்று தாமதமாக அங்கு வர, தன் தாயைக் கட்டிலில் கிடத்திவிட்டு, இருகைகளையும் தலையின் பின்பக்கமாக சேர்த்து கோர்த்து வைத்துக் கொண்டு உடலை லேசாக வளைத்து நின்றபடி டாக்டர்களிடம் "too late"என்று மூக்கை உறிஞ்சுவது போல உதடுகளைக் குவித்து மூச்சை வாயால் உறிஞ்சுவது(!) லேசுப்பட்ட உடல்மொழி அல்ல. அப்படி ஒரு உன்னதமான N.T. யின் போஸுக்கு சொந்தம் கொண்டாடிவிட்ட பெருமை இந்த அற்புதப் படத்திற்கு மட்டுமே உண்டு.
அந்த அற்புத போஸ்
http://i1087.photobucket.com/albums/..._000076676.jpg
மேரியம்மாவை மடியில் கிடத்தி கதறும் காட்சி
http://i1087.photobucket.com/albums/..._000056990.jpg
"மேரியம்மா! உன் கண்ணுக்குள்ளேயே என்ன வச்சுக் காப்பாத்துன... இப்ப நான் உன்ன மண்ணுக்குள்ள வச்சு எப்படிப் புதைப்பேன்?"
என்று தன் தாய் அநியாயமாக சாகடிக்கப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம், கோபம், தாயை இழந்த சோகம், தாங்க முடியாத வேதனை, வஞ்சம், தன் தாய் இறக்கக் காரணமானவனை பழிவாங்கத் துடிக்கும் வெறி என்ற அத்தனை உணர்ச்சிகளையும் ஒருசேரக் கொட்டி கண்களை மேல்நோக்கிய வெறியோடு அந்த ஒரு சில நிமிடங்களில் ஓராயிரம் வித்தைகளை உணர்ச்சிப்பிழம்பாய் அள்ளி வழங்கியிருப்பார் N.T.
தன் அன்புத் தாய் கொலை செய்யப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம்
http://i1087.photobucket.com/albums/..._000158158.jpg
தாயின் மரணத்திற்கு காரணமாய் இருந்த சத்தியநாதன் அதற்கு ஈடாக ரூபாய் பத்தாயிரத்தை முத்துக் கிருஷ்ணனிடம் (தியாகராஜன்) கொடுத்தனுப்ப, அவனும் அதை வாங்கிக்கொண்டுவந்து N.T. யிடம் கொடுக்க, கோபத்தின் ஆரம்பத்தில் இருக்கும் நடிகர் திலகம்,
"என் மேரியம்மவுடைய வில கேவலம் பத்தாயிரம் ரூபாயா? மேரியம்மா யார் தெரியுமில்ல... என்னோட தெய்வம்... எவனோ பெத்துப் போட்ட என்ன எடுத்து வளர்த்து தன்னுடைய வாழ்க்கையை பாழாக்கிகிட்டவ ... அவளுடைய உயிருக்கு பத்தாயிரம் ரூபா விலையா?... இதெல்லாம் உனக்குத் தெரியாதா?... தெரிஞ்சிருந்தும் ஏன் வாங்கிகிட்டு வந்த?...கொண்டு போய் அவன் மூஞ்சில விட்டெறி"...
என்று கூற அதற்கு முத்துகிருஷ்ணன்
"இந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துட்டா மட்டும் செத்துப் போன மேரி மம்மி திரும்பி வந்துடப் போறாங்களா"
என்று எதிர்வாதம் பேச தன்னை நம்பி தன் கழுத்தில் சுற்றிகொண்டிருக்கும் பாம்பே தனக்கு எதிராகத் திரும்ப ஆரம்பிப்பதைக் கண்டு சற்று திகைத்து, பின் சடாலென வலது காலை வேகமாக தரையில் ஒரு உதை உதைத்து,வேட்டியை மடித்துக் கட்டி சற்றே காட்டமாக
"முத்துக்கிருஷ்ணா! ஐயாவுக்கே அட்வைஸ் பண்றியா? இது என்னுடைய பெர்சனல் மேட்டர். இத எப்படி டீல் பண்ணனும்கிறது எனக்குத் தெரியும்.நீ போ" என்று தெனாவட்டாகக் கூறியபடி சிகரெட்டை வாயில் வைத்து போடுவாரே ஒரு சொடுக்கு! அந்த சொடுக்கில் சொக்கிப் போகும் நம் அனைவரின் மனங்களும்.
அதிர வைக்கும் ஆங்கார சொடுக்கு
http://i1087.photobucket.com/albums/..._000323156.jpg
ஐயாவுக்கே அட்வைஸ் பண்றியா?...
http://i1087.photobucket.com/albums/..._000287087.jpg
சொன்னது போலவே நேரிடையாக சங்கிலி முருகனைப் பழிவாங்கக் களத்தில் இறங்குவார் N.T. சங்கிலி முருகனின் பார்ட்னரை அவர்மீது நம்பிக்கை இல்லாமல் தன் பாகத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி கேட்கச் செய்தும், சங்கிலி முருகனுடைய கம்பெனியில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடத்தச் செய்தும்,சங்கிலி முருகனின் கார் டிரைவரை வேலையே விட்டு விலகச் செய்தும் இப்படி பல இன்னல்களை அவருக்குத் தெரியாமலேயே தன் தாதா செல்வாக்கால் உருவாக்கி தன்னிடமே நேரிடையாக உதவி கேட்டு வரும் நிலைக்கு சங்கிலி முருகனை ஆளாக்கி விடுவார் N.T. இவ்வளவு இன்னல்களுக்கும் காரணம் N.T தான் என்று தெரியாமல் அவரிடமே பிரச்சனைகளுக்கு உதவ வழி கேட்டு வருவார் சங்கிலி முருகன்.ஒவ்வொரு பிரச்னையாக சங்கிலி முருகன் சொல்லிக் கொண்டே வர, N.T யும் பிரச்னைகளைத் தீர்ப்பதாக ஒத்துக் கொண்டு சங்கிலி முருகனின் வீட்டிற்கு செல்வார் .செல்வதற்கு முன் N.T..யை வரவேற்பதற்காக மாலையுடன் காத்திருக்கும் சங்கிலி முருகன் தன் உதவியாளரிடம் ,"என்ன மேனேஜர்! இன்னும் அவரு வரலியே"என்பார். அதற்கு அந்த மேனேஜர்,"பெரியவர் சொன்னா சொன்ன டயத்துக்கு வந்துடுவாருங்க....கடிகாரம் தப்பினாலும் தப்பும்...அவரு மாத்திரம் கரெக்டா டயத்துக்கு வந்துடுவாரு...என்று புகழாரம் சூட்டுவது நடிகர்திலகத்தின் நேரந்தவறாமையையும்,காலந்தவறாமையையும் குறிப்பிடுவதற்கென்றே எழுதப்பட்ட சத்தியமான வசனம். (சபாஷ்! வியட்நாம் சார்...)
பின் N.T சங்கிலி முருகன் வீட்டிற்கே வந்து மறைமுகமாக தன் பழிவாங்கும் படலத்தைத் தொடங்குவார். சங்கிலி முருகன் வீட்டிலேயே அவர் மனைவியிடமும்,மகளிடமும் அவரை வசமாக மாட்டி வைக்கும் காட்சிகள் படுசுவாரஸ்யமானவை. சங்கிலி முருகன் மனைவி முன்னாலேயே "சத்தியநாதா, இது எத்தனையாவது wife?" என்று அவரை அவர் மனைவியிடம் மாட்டிவிட்டு மிரள வைப்பதும், சங்கிலி முருகன் மகளிடம்,"உன் வயசென்ன டார்லிங்?" என்று N.T கேட்க அதற்கு அந்தப் பெண் "பதினாறு"என்று பதில் கூற, "சகுந்தலாவுக்கும் அதே வயசுதான்" என்று கலாய்த்து சங்கிலி முருகனின் லீலைகளை மறைமுகமாக உணர்த்தி அலற வைப்பதும், இதையெல்லாம் சமாளிக்க சங்கிலி முருகன் N.T யிடம்,"வாங்க டிபன் சாப்பிட்டுகிட்டே பேசலாம்"என்று பேச்சை திசைதிருப்ப முயற்சிக்க, நடிகர் திலகம் அதற்கு,"ஆங்...(இந்த இடத்தில் ஒரு ஜகா வாங்குவார் பாருங்கள்)...நான் உன் கையால் டிபன் சாப்பிட மாட்டேன்ப்பா...நீதானே சொன்ன...சொத்துக்காக மாமனாரை உப்புமாவுல விஷம் வச்சுக் கொன்னேன்னு" என்று அவர் மனைவி முன்னேயே அவரை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும், சங்கிலி முருகனின் ஆபீஸ் மெம்பர்ஸ் மீட்டிங் நடக்கும் போது அவருடைய பார்ட்னரைக் காட்டி அத்தனை பேர் முன்னிலையில்,"ஒ...இவனதான் நீ கொலை பண்ணச் சொன்னியா?"என்று காலை வாருவதுமாக பழிவாங்கும் படலத்தைப் பக்காவாக நகைச்சுவையுடன் பண்ணியிருப்பார் N.T.
சங்கிலி முருகனிடம் "ஜகா"வாங்குவது போன்று கலாய்க்கும் காட்சி
http://i1087.photobucket.com/albums/..._000658091.jpg
தொடர்கிறது....
அன்புடன்,
வாசுதேவன்.
"கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (மூன்றாம் பாகம்). (தொடர்கிறது)....
N.T. ஏதோ ஒரு காரணத்திற்காக தன்னைப் பழிவாங்கத் துடிப்பதைப் புரிந்து கொள்ளும் சங்கிலி முருகன் N.T.யைக் கொல்ல ஒரு அடியாளை ஏற்பாடு செய்வார். வீட்டில் N.T யிடம் நைசாகப் பேசிக்கொண்டே சங்கிலி முருகன் N.T யின் பின்னல் ஒளிந்து நிற்கும் அந்த அடியாளிடம் N.T.யைக் கொலை செய்யச் சொல்லி சைகை செய்ய, N.T விஷயம் தெரியாதவாறு வேறொரு பக்கம் பார்த்தபடி நின்று கொண்டிருப்பார். அந்த அடியாள் பின்னாலிருந்து N.T. யை அடிக்க நெருங்குகையில் N.T. சற்றும் எதிர்பாரவிதமாக அந்த அடியாளைப் பார்க்காமலேயே
"டேய்! கபாலிக் கய்தே! வந்து அடியேண்டா...எவ்வளவு நாழி காத்துகிட்டு இருக்கிறது?"
என்பாரே பார்க்கலாம்! அந்த அடியாள் N.T யின் அடியாள் கபாலிதான் என்பது தெரியாமல் அவனையே N.T. யைக் கொலை செய்யக் கூட்டி வந்து பேந்தப் பேந்த முழிக்கும் சங்கிலி முருகனைப் பார்த்து,
"ஹஹ்ஹா"....என்ற கேலியோடு கூடிய வெறித்தன சிரிப்பை சிதற விட்டுவிட்டு N.T
"என் ஆளை வச்சே என்னை மடக்கப் பார்த்தியா?
நீ என்ன பெரிய புத்திசாலின்னு நெனப்பா?
நான் யாரு தெரியுமா? உங்க தாத்தா" என்று எகத்தாளம் புரிவது எக்ஸலன்ட்.
பின் தொடர்ந்து சங்கிலி முருகனிடம்,
"உன்னை income tax-இல் காட்டி கொடுத்ததும் நான்தான்...
உன் கம்பெனியெல்லாம் ஸ்ட்ரைக் பண்ணச் சொன்னது நான்தான்...
உன் பார்ட்னரை உன்னை விட்டு விலகச் சொன்னது நான்தான்...(இந்த இடத்தில் கீழே தரையில் இருக்கும் சின்னஞ்சிறு வட்டத் திண்டு ஒன்றின் மேல் திமிர்த்தனமான வெறியோடு வலது காலைத் தூக்கி வைப்பார்)
உன் மேனேஜரை விட்டே என்னை இங்கு கூட்டிட்டு வரச் சொன்னதும் நான்தான்"...
என்று படிப்படியாகத் பழி உணர்வைத் தன் குரலில் உயர்த்தி,
"சகலமும் நானே! காரியமும் நானே! எப்படி என்னுடய கீதாபதேசம்" என்றபடி கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை படு ஸ்டைலாக சுண்டிவிட்டு,பார்வையில் அனல் கக்க வைத்து விஸ்வரூபம் எடுத்த கிருஷ்ண பரமாத்வாக சங்கிலி முருகனை கதிகலங்க வைப்பார். (நம்மையுந்தான்)
"எப்படி என்னுடய கீதாபதேசம்" சிகரெட்டை ஸ்டைலாக சுண்டிவிடும் காட்சி
http://i1087.photobucket.com/albums/..._000838338.jpg
உடன் சங்கிலி முருகன் N.T யின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க, N.T அவரைத் தூக்கி நிறுத்தி,
"இப்ப கால்ல விழுந்தா உன்னை நான் மன்னிச்சிடுவேன்னு நெனச்சியா?...அன்னைக்கு உன் கார்ல அடிபட்டு குத்துயிரும், கொலையுயிருமா கிடந்தாளே மேரியம்மா...அவள என்னா ஏதுன்னு கூடப் பார்க்கம நாயை அடிக்கிற மாதிரி அடிச்சுப் போட்டுட்டு குடிவெறியில காருல பறந்துட்ட இல்ல...அவ யார் தெரியுமா... என் தாய்...என் தாயாருங்கிறதுக்காக மட்டும் நான் சொல்லல..எதிரியாய் இருந்தாலும் மனிதாபிமானத்தோடு நடந்துக்கணும்... நீ செய்தியா?...இல்ல...ஏன்?"
என்று சங்கிலி முருகனின் தோள்களைத் திருப்பி அவர் நெஞ்சில் வலது கைவிரல்களை மடக்கி முஷ்டியால் மூன்று முறை குத்தியபடியே,
"பணக்காரன்ற திமிர்...நீ செஞ்ச குத்தத்த மறைக்கணும்கிறதுக்காக கேவலம் பிச்சக் காசு பத்தாயிரம் கொடுத்தனுப்பிச்சே இல்லே...
எங்க அம்மாவோட விலை கேவலம் பத்தாயிரம் ரூபா இல்ல...
உன் கேசுல நானே பெர்சனலா ஏன் interfere ஆகி இருக்கேன் தெரியுமா?
என் ஆட்களை அனுப்ச்சா உன்னை ஒரேயடியா"
என்று நிறுத்தி
தன் கரத்தை பாக்கவாட்டில் வலதும் இடதுமாக அசைத்து தீர்த்துக் கட்டுவது போன்ற பாவனையில்
"விஷ்" என்று சற்று நிறுத்திவிட்டு (கையால் வெட்டுவது போன்ற படு அலட்சியமான ஒரு மூவ்மென்ட்டைக் கொடுப்பார். இந்த குறிப்பிட்ட ஒரு செய்கைக்காகவே இந்தப் படத்தை ஓராயிரம் முறை பார்க்கலாம்)
"விஷ்"....என்ற வெட்டுவது போன்ற பாவனை
http://i1087.photobucket.com/albums/..._000918985.jpg
"குளோஸ் பண்ணிடுவாங்க"...என்று தொடருவார்.(இந்த மூன்று நிமிடக் காட்சியில் நடிகர் திலகத்தின் அற்புதமான டயலாக் டெலிவரியுடன் கூடிய அனாயாசமான அந்த சூறாவளி நடிப்புப் பரிமாணம் மற்ற அவர் படங்களிலிருந்து இந்தப் படத்தை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டும்)
பின் தொடர்ந்து,
"நீ அப்படி சாகக் கூடாது...உன் உயிர் இருக்கிற வரைக்கும் அணு அணுவா... (நிறுத்தி திரும்ப ஒருமுறை உச்சரிப்பார்) அணு அணுவா...துடிச்சி சாகணும்... (இந்த இடத்தில் வலது கை விரல்களை ஒன்று சேர்த்துக் குவித்து, விரித்து பின் மறுபடியும் குவித்து விரித்து அணு அணுவாக என்ற வார்த்தைக்கேற்ப அற்புதமான அசைவை அசால்ட்டாக பிரதிபலிப்பார்) நான் சொல்றது உனக்கு மட்டுமில்லே!... பணத்த வச்சுகிட்டு செஞ்ச குற்றத்த மறைக்கப் பார்க்குறானுங்களே...அத்தனை பணக்காரப் பசங்களுக்கும் இந்த தீனதயாள் விடுற எச்சரிக்கைடா டாய்"
என்றபடி தன் வலது பக்க மீசையை அத்தனை விரல்களாலும் தடவியபடியே கம்பீரமான எச்சரிக்கை விடுவது தமிழ் சினிமாவிற்கு புது இலக்கணம். பின் அவரது பாணியில் "bastard" என்று மிரட்டிவிட்டு செய்வாரே ஒரு அமர்க்களம்...
"அணு அணுவா" அற்புத ஆக்ஷன்
http://i1087.photobucket.com/albums/..._000927327.jpg
மீசையை கம்பீரமாகத் தடவும் காட்சி
http://i1087.photobucket.com/albums/..._000939739.jpg
கீழே விழுந்து கிடக்கும் அவரது துண்டை சங்கிலி முருகனிடம் எடுக்கச் சொல்லும் அந்தத் திமிரும் தெனாவட்டும் இருக்கிறதே! அடேயப்பா...அதுதான் ஹைலைட்..
"எட்றா துண்டை" என்று மிரட்டும் பயங்கரம்,
அந்த வார்த்தையை உச்சரிக்கும் தொனி,
துண்டை சங்கிலி முருகன் எடுத்துக் கொடுத்தவுடன் அதை ஸ்டைலாக கழுத்தில் போட்டுக் கொள்ளும் லாவகம்,
"be careful" என்று எச்சரித்துவிட்டு ஒரு ஸ்டெப் முன்னால் சென்று மறுபடி அதே ஸ்டெப்பை திரும்ப பின்னால் வைத்து "ம்" என்று ஆங்காரத்துடன் முறைத்துவிட்டுப் போகும் பயங்கரம்... (அந்த மனிதரைத் தவிர யாராவது இனியொருவர் பிறக்க முடியுமா?) சும்மா நெத்தியடி..
"எட்றா துண்டை" மிரட்டி மிரள வைக்கும் காட்சி
http://i1087.photobucket.com/albums/...00946646-1.jpg
துண்டை லாவகமாக அணியும் காட்சி
http://i1087.photobucket.com/albums/...00951251-1.jpg
"be careful" சங்கிலி முருகனை எச்சரிக்கும் காட்சி
http://i1087.photobucket.com/albums/..._000957023.jpg
போதை மருந்து கடத்தச் சொல்லி N.T யிடம் பணம் தந்து பேரம் பேசுவார்கள் சிலர். அதை மறுத்து ஒதுக்கிவிட்டு,மாறாக அவர்களை அந்தத் தொழிலைச் செய்யக்கூடாது என்று மிரட்டி அனுப்பி வைப்பார் N.T. ஏற்கனவே பணத்துக்கு ஆசைப்பட்ட தியாகராஜன் N.T. பணம் வாங்க மறுத்ததைக் கண்டு பணம் தர வந்த கும்பலிடம் தன்னிடம் பணத்தைத் தருமாறும், தான் N.T யிடம் சொல்லி போதை மருந்து கடத்த சம்மதம் வாங்கித் தருவதாக N.T. முன்னிலையிலேயே சொல்ல,அதைக் கேட்டு ஆத்திரமுறுவார் N.T. தியாகராஜன் N.T யிடம்,"உட்கார்ந்த எடத்துல பணம் வந்தா நோகுதா?...உங்களால முடியலைனா பேசாம ஒரு மூலையில் போய் உட்காருங்க...நான் பாத்துக்கிறேன்" என்று கூற, தான் வளர்த்த கடா தன் பேச்சுக்குக் கட்டுப்படாமல் தன் மீதே பாய்கிறதே என்று கோபத்தில் கொதித்து வெகுண்டெழுவார் N.T.
தன் தன்மானத்துக்கு கேடு விளைவித்ததோடு மட்டுமில்லாமல், தன் தாதா பதவிக்கே ஆசைப்பட்டுவிட்டானே என்று கண்மண் தெரியாமல் தியாகராஜனை போட்டிப் புரட்டி எடுத்து விடுவார் N.T. இந்த இடத்தில் இன்னொரு பிரளயத்தை நடத்திக் காட்டுவார் N.T. தியாகராஜனை விளாசிவிட்டு தரையில் அமர்ந்து கொண்டு சிகரெட்டைப் பற்றவைப்பார்.
தியாகராஜனைப் பின்னி எடுத்துவிட்டு "தம்" போடும் காட்சி
http://i1087.photobucket.com/albums/..._001071638.jpg
"சே! சொறிநாயை விடகேவலமா போயிட்டடா நீ! நானும் பாத்துகிட்டே வரேன்...அன்னைக்கு என்னாடான்னா மம்மி செத்ததுக்கு பணம் கொண்டாந்து கொடுத்தே!...இன்னைக்கு என்னாடான்னா பணம் கொடுங்க! செய்வாருன்னு சொல்ற...இங்க ரெண்டு opinion க்கு இடம் கிடையாது...ஒரே opinion தான்... (இந்த இடத்தில் சிகரெட் புகையை ஒரு இழு இழுத்துவிட்டு நிறுத்தி பின்) அதுவும் அய்யாவோட opinion தான்... என் மூஞ்சியிலேயே முழிக்காதே"...என்ற ஆத்திரம் கலந்த வேதனையை வெளிப்படுத்துவார்.
பின்னால் அடிபட்டு நிலைகுலைந்து கீழே விழுந்து கிடக்கும் தியாகராஜன் தட்டுத் தடுமாறி எழுந்திருக்க முயல உடனே N.T தியாகராஜனைப் பார்க்காமலேயே கன்னத்தில் ஒரு கையை வைத்தபடி, "அப்படியே போடான்னா அப்படியே போகணும்" என அழுத்தம் திருத்தமாகக் கட்டளையிட, எழ முயற்சித்த தியாகராஜன் படுத்த வாக்கில் குழந்தை போல தவழ்ந்து செல்லும் போது தியேட்டரில் கரகோஷம் காதுகளை கிழித்தது இன்னும் நன்றாக எனக்கு நினைவிருக்கிறது. தான் வளர்த்தவனே தனக்கு எதிராகத் திரும்பி விட்டானே என்ற வேதனை ஒருபுறம்... சிறுவயது முதற்கொண்டே பாசத்துடன் வளர்த்தவனை முதன் முதலாக அடித்துத் துவைத்து விட்டோமே என்ற சோகம் ஒருபுறம் என இருவேறுபட்ட உணர்வுகளையும் கண்களின் மூலமாகவே மாறி மாறிப் பிரதிபலித்து பிய்த்து உதறி விடுவார் நம்மவர்.
தியாகராஜனை அடித்துவிட்டு மனம் வெதும்பும் அற்புத உணர்வுப் பிரதிபலிப்புகள்
http://i1087.photobucket.com/albums/..._001117050.jpg
http://i1087.photobucket.com/albums/..._001114447.jpg
(ஆடம்பர செட்டுகள் இல்லை...படாடோப உடைகள் இல்லை...வெளிநாட்டு படப் பிடிப்புகள் இல்லை...கவர்ச்சி அம்சங்கள் எதுவும் இல்லை...டிஷ்யூம் டிஷ்யூம் என்று காது கிழியும் சமாச்சாரங்களும் இல்லை. கார் சேசிங்குகள் இல்லை... மசாலாத் தூவல்கள் இல்லை...கண்களைப் பிசைய வைக்கும் சோகக் காட்சிகள் கூட இல்லை...'வியட்நாம் வீடு' சுந்தரத்தின் அறிவார்ந்த வசனங்கள் துணையோடு ஜாலியான,புத்திசாலித்தனமான, குறும்பு கொப்பளிக்கும், எதைக் கண்டும் அஞ்சாத, எதையும் வெற்றி கொண்டு பவனி வரும் தீனதயாளு தாதாவாக அட்டகாசமாய் ஒன்லி இதுவரை காணாத நம் இதய தெய்வம் நடிகர் திலகம்.... நடிகர் திலகம்... நடிகர் திலகம் மட்டுமே இப்படத்தில்)
(தீனதயாளுவின் அட்டகாசங்கள் தொடரும்).... .
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பிற்குரிய ஆய்வுச்செம்மல் வாசுதேவன் சார்,
தங்களின் கைவண்ணத்தில் ஜொலிஜொலிக்கின்ற "கருடா சௌக்கியமா" ஆய்வுக்கட்டுரையின் மூன்றாம் பாகத்தை எதனுடன் ஒப்பிட்டுப் புகழ்வது ? முப்பாலுடனா, முக்கனியுடனா, முத்தமிழுடனா - இவை மூன்றையும் சேர்த்து அதனோடு தங்களின் மூன்றாம் பாகத்தை ஒப்பிட்டாலும் அந்த மூன்றையும் விஞ்சி நிற்கிறதே தங்களின் இந்த மூன்று.
படப்பிடிப்புக் கட்டுரை எழுதி பிரமாதப்படுத்தினீர்கள் ! படக்கட்டுரையிலும் புகுந்து விளையாடுகிறீர்கள், தாங்கள் "கட்டுரைத் திலக"மும் தான் !
ஒவ்வொரு காட்சிக்குண்டான முத்திரை வசனங்களோடு நமது நடிகர் திலகத்தின் நடிப்பு முத்திரைகளை தாங்கள் அலசியுள்ளவிதம் அதியற்புதம் ! அந்தந்த காட்சிக்கான நிழற்படங்களையும் அங்கங்கே இணைத்து நிழற்படத்திலகம் என்பதனை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள் !
மொத்தத்தில், "கருடா சௌக்கியமா" ஆய்வுக்கட்டுரையினுடைய மூன்றாம் பாகத்தின் இரு பதிவுகளும், இரு கண்களுக்கு ஒப்பான கண்ணான பொன்னான பதிவுகள் !
அடுத்தடுத்த பதிவுகளைக் காண ஆவல் பீறிட்டு எழுகிறது !
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தங்களின் தூய உள்ளத்திலிருந்து தாங்கள் அளித்த உச்சமான பாராட்டுக்களுக்கும், வளமான வாழ்த்துக்களுக்கும் எனது சிரம் தாழ்த்திய சிகர நன்றிகள் !
நம் ஒவ்வொருவரது பங்களிப்பினாலும், நமது திரி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. வருங்காலத்தில் நமது திரி இன்னும் பற்பல சாதனைகளுக்கு சொந்தமாகப்போவது திண்ணம் !
எல்லாப் புகழும், பெருமையும் நமது இதயதெய்வம் நடிகர் திலகத்துக்கே !
அன்புடன்,
பம்மலார்.