பம்மலார் என்றால் பட்டையைக் கிளப்புதல் என்று பொருளோ... கலக்கல் சார்...
அன்புடன்
Printable View
பம்மலார் என்றால் பட்டையைக் கிளப்புதல் என்று பொருளோ... கலக்கல் சார்...
அன்புடன்
டியர் கார்த்திக் சார்,
திறமைசாலிகளை ஏதோ கடமைக்குப் பாராட்டி விட்டு, உப்புசப்புக்குக் கூட லாயக்கற்றவர்களை ஒப்புயர்வில்லாதவர்கள் என்று தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில் அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை தமிழனுக்கு ஈடு இணையாக எவரையும் காட்டி விட முடியாது.
நீங்கள் வெளிபடுத்தியிருப்பது உங்கள் தனிப் பட்ட ஒருவரின் ஆதங்கம் மட்டும் அல்ல. ஒட்டு மொத்த மனசாட்சியுள்ள அத்தனை நெஞ்சங்களின் உள்ளக் குமுறல் அது.
நடிகர் திலகம் ஆகட்டும்.. எம்.எஸ். வி ஆகட்டும்..டி.எம்.எஸ் ஆகட்டும் இருட்டடிப்புப் பட்டியல் இமயமலைத் தொடர்ச்சியா...........ய் நீண்டு கொண்டே போகும். தமிழ் நாட்டின் தலை விதி அது.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து, சொற்ப படங்களே ஆனாலும் அதி அற்புதமாய் பாடல்களுக்கு இசையமைத்து செவிக்கு விருந்து படைத்த இசையமைப்பாளர் ஷியாம்..(ஆனந்த தாகம்.. உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே ..)
'செம்மீன்' மலையாளக் காவியத்தின் அற்புத இசைக்குக் காரணமாய் விளங்கிய சலீல் சௌத்ரி. (உள்ளமெல்லாம் தள்ளாடுதே...)
'நீர்க்குமிழி'யிலிருந்து நடிகர் திலகத்தின் 'நிறைகுடம்' போன்ற படங்களின் பாடல்களுக்கு அபூர்வ மெட்டுக்கள் தந்து காதுகளை ரீங்காரமிடச் செய்த காலம் சென்ற இசை அமைப்பாளர் V.குமார். (விளக்கே நீ கொண்ட ஒளி நானே..)
'காற்றுகென்ன வேலி' படத்தின் அற்புதமான மெல்லிசைப் பாடல்களுக்கு தேனான இசை வடிவம் தந்து அத்தோடு காணாமல்போன சிவாஜி ராஜா. (ரேகா.ரேகா.. )
மற்றும் v.s.நரசிம்மன் (ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த..)
இன்னும் எவ்வளவோ திறமைசாலிகள்.
வந்த வேகத்தில் காணாமல் போனவர்களும் அங்கீகாரம் கிடைக்காமல் போராடிப் போராடி அலுத்து, களைத்துப் போனவர்களும் ஏராளம்..ஏராளம்...
ஆனால் திறமையற்றவர்களை முதல் இடத்தில் வைத்து மகிழ்வதில் சில ஏன் பல மீடியாக்கள் காட்டுவது தாராளம்..தாராளம்..
(நடிகர் திலகத்தின் அற்புதமான மாபெரும் வெற்றி பெற்ற வெள்ளி விழாக் கண்ட 'தியாகம்' படத்திற்கும் இதே நிலைமை தான். விகடன் மோசமான விமர்சனம் எழுதியது. தியாகம் 100-ஆவது நாள் பத்திரிகை விளம்பரத்திலோ அல்லது வெள்ளி விழா விளம்பரத்திலோ என்று நினைக்கிறேன்.. 'தவறாக விமர்சனம் செய்த விகடர்களுக்கு சரியான சாட்டையடி கொடுத்தீர்கள்' என்று தயாரிப்பாளர் சார்பில் பதிலடி கொடுத்திருந்ததாக நினைவு.)
நன்றி சார்!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
ஜல்லிக்கட்டு வெள்ளிவிழா துவக்க ஆண்டு.
'ஸ்டைல் கிங்'- அவர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஏரியில் ஒரு ஓடம் ...ஓடம்...
http://www.youtube.com/watch?v=WaPmB...yer_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
மறைந்த சசி குமார் அவர்கள் பற்றியா பதிவு நெஞ்சை உலுக்குவதாக இருந்தது
தூக்கு தூக்கி என்ற பேரே அருமை-t.m.s நம்மவருக்கு படிய முதல் படம்-நல்ல பாடல்கள்-
26-8-2011 அன்று தினகரன் 'வெள்ளிமலர்' இணைப்பில் திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் எழுதும் 'old is gold' தொடரில் 'தில்லானா மோகனாம்பாள்' படம் பற்றிய அவரது கட்டுரை.
http://i1087.photobucket.com/albums/...5/scan0007.jpg
http://i1087.photobucket.com/albums/...5/scan0008.jpg
திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கும் மற்றும் தினகரன் தின இதழுக்கும் நன்றி!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
நேற்று இரு மலர்கள் பாடல் கட்சிகள் பார்த்தேன்-மாதவி பொன் மயிலாள், மன்னிக்க வேண்டுகிறேன் ,மகாராஜா ஒரு மகாராணி ரொம்ப அருமை.
NT ரொம்ப ரொமாண்டிக்கா இருப்பார். பத்மினி உடன் நல்ல chemistry.
i think u have to change internet settings-
பிறந்த நாள் வாழ்த்துகள் -நீங்க கொடுத்து வைத்தவர்-நடிகர் திலகத்தின் அருகில் இருந்து பணியாற்றியதால்
கிருஷ்ணன் வந்தான் படக்காட்சி...
http://i872.photobucket.com/albums/a...ncollagefw.jpg
'கிருஷ்ணன் வந்தான்' பத்மஸ்ரீ அவர்களின் நிழற் படங்கள்.
http://i1087.photobucket.com/albums/..._000889816.jpg
http://i1087.photobucket.com/albums/..._003381271.jpg
http://i1087.photobucket.com/albums/..._000521767.jpg
http://i1087.photobucket.com/albums/..._003997218.jpg
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
டியர் குமரேசன் சார்,
உங்கள் விருப்பத்திற்காகவும், நம் எல்லோருக்காகவும் இதோ நீங்கள் கேட்ட அருமையான பாடல். (ரசிக வேந்தர் திரு ராகவேந்திரன் அவர்கள் சார்பாக).
எங்க மாமா திரைப் படத்தில் இருந்து நம் இதயம் தொட்ட 'எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்' பாடல் ஒலி-ஒளி வடிவில். ரசிக்க ஆரம்பிக்கலாமா..
http://www.raaga.com/channels/tamil/...sp?clpid=12334
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Dear All,
After Saradha and Raghavendran Sir it was the turn of my computer to go out of service. It is yet to be fixed. Posting this from friend's place. Would resume the posting once it is ready.
சுவாமி சொன்னது போல் நாங்கள் பலமுறை விகடனின் நிலைப்பாடு பற்றி பேசியிருக்கிறோம். அவர்கள் அப்படி எழுதியதற்கு சில காரணங்கள் உண்டு. அதைப் பற்றி விரைவில் பகிர்ந்துக் கொள்கிறேன். அதே போல் குமுதம் பற்றி [நடிகர் திலகத்திற்கு பெருமளவில் அந்த நாளில் ஆதரவாக இருந்த இதழ்] நண்பர் சாரதி எழுதுவார்.
விரைவில் சந்திப்போம்!
அன்புடன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சந்திரசேகர் சார். இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்.
[தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்கவும். காரணம் மேலே குறிப்பிட்டிருப்பதுதான்].
அன்புடன்
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
சிறந்த இசையமைப்பாளர்களைப் பற்றி தாங்கள் அளித்த mini sketch உண்மையிலேயே superb !
ஏரியில் ஒரு ஓடம்...ஓடம்....ஆஹா ! ஆஹா ! What a song !! What a performance !!! ஸ்டைல் சக்கரவர்த்தி என்றென்றும் நமது சிங்கத்தமிழன்தான். பாடலை வீடியோவாக வழங்கிய தங்களுக்கு "வீடியோ விற்பன்னர்" என்றே பட்டமளிக்கிறேன் !
"தில்லானா மோகனாம்பாள்" குறித்து திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் கருத்தோவியத்தில், 'தினகரன்' வெள்ளிமலரில் வெளியான கட்டுரை மிக அருமை !
"கிருஷ்ணன் வந்தான்" ஆல்பம் அற்புதம் !
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
"கிருஷ்ணன் வந்தான்" காவியக்காட்சிகள் அசத்தல் !
டியர் முரளி சார், நெஞ்சார்ந்த நன்றி !
டியர் sankara1970, மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
என் ஆச ராசாவே...
[28.8.1998 - 28.8.2011] : 14வது ஜெயந்தி
வரலாற்று ஆவணம்
தினமணி [வெள்ளிமணி] : 30.1.1998
http://i1094.photobucket.com/albums/...DC4462aa-1.jpg
நடிகர் திலகத்துக்கு ஜோடியாக நடிகை ராதிகா நடித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
என் ஆச ராசாவே...
[28.8.1998 - 28.8.2011] : 14வது ஜெயந்தி
வரலாற்று ஆவணங்கள்
விகடன் பேப்பர் : 20.2.1998
http://i1094.photobucket.com/albums/...EDC4464a-1.jpg
நடிகர் திலகம் பற்றி நடிகை சுவலட்சுமி : தினமணி : 11.9.1998
http://i1094.photobucket.com/albums/...EDC4466a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
என் ஆச ராசாவே...
[28.8.1998 - 28.8.2011] : 14வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
பாடல் கேசட் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/...EDC4467a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
என் ஆச ராசாவே...
[28.8.1998 - 28.8.2011] : 14வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
http://i1094.photobucket.com/albums/...EDC4468a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
Dear Pammalar,
Your coverage of Krishnan Vandhan and En Aasa Raasaave, prove your meticulous and sincere involvement in preserving documentary sources of NT's achievements and filmography. Please keep it up and accept my sincere appreciations.
A small collage of En Aasa Raasaave images, dedicated to you:
http://i872.photobucket.com/albums/a...ECOLLAGEfw.jpg
Raghavendran
டியர் முரளி சார்
தங்களுடைய கணினி எங்களுக்காக சீக்கிரம் சரியாகி விடும். தங்கள் பதிவுகளை வழி மேல் விழி வைத்து எதிர் நோக்கி நிற்கின்றோம், மய்யம் எனும் ஜன்னலின் வழியாக...
அன்புடன்
டியர் வாசுதேவன் சார்,
ஜல்லிக்கட்டு திரைக்காவியத்தின் பாடல் காட்சியை பதிவிட்டு அசத்தியுள்ளீ்ர்கள். இனிமேல் நம்மை நாமே பாராட்டுவது போல் தான் அனைவரும் தத்தம் பங்கினைச் செவ்வனே செய்து வருகின்றீர்கள். உங்கள் அனைவருக்கும் அந்த மஹானின் அருளாசி ஏராளமாய் உண்டு.
குமரேசன் சார் கேட்ட எங்க மாமா பாடலுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
அன்புடன்
அனைவருக்கும் ஓர் இனிய செய்தி காத்திருக்கிறது. சேவா ஸ்டேஜ் எஸ்.வி.சஹஸ்ரநாமம் அவர்கள் நாடமாக நடித்து நடிகர் திலகம் பண்டரிபாய் சந்திரபாபு மற்றும் பலர் நடித்து எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்கள் இசையமைத்த கண்கள் திரைக்காவியம் ஒளித்தகடாக வர உள்ளதாகவும் தற்சமயம் அப்படத்தை ஒரு நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் விரைவில் அதனை வெளியிடும் வாய்ப்பு உள்ளதாகவம் செய்தி வந்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் இதை விட ஆனந்தம் இருக்குமோ. சந்திரபாபுவின் குரலில் ஒரு பாடல், எஸ்.வி.வெங்கட்ராமன் குரலில் ஒரு பாடல் என அனைத்துப் பாடல்களும் நெஞ்சை அள்ளும் இனிய காவியம்.
விரைவில் வரட்டும் என எதிர்பார்ப்போம்
அன்புடன்
அடியேனுடைய பின்னணி வாக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் திரைச்சங்கத்திற்கான துவக்கக் கட்ட வேலைகள் விரைவில் துவங்க உள்ளன. இதனையொட்டிய அடுத்த கட்ட நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் விரைவில் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும். உறுப்பினர்களாக விழைவோர் தயாராய் இருக்கும்படியும் இங்கு தங்கள் பெயரை மொழியலாம் எனவும் கூறிக்கொள்ள விழைகிறேன். அனைத்து துவக்கக் கட்டப் பணிகளும் நிறைவடைய சற்று முன்னர் உறுப்பினர்களுக்கான விவரங்கள் முடிவு செய்யப் பட்ட பின்னர், யாரிடம் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என்பதையும் இங்கே எதிர் பார்க்கவும்.
அன்புடன்
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
என் ஆச ராசாவே...
[28.8.1998 - 28.8.2011] : 14வது ஜெயந்தி
வரலாற்று ஆவணங்கள்
அரிய நிழற்படம் : தினத்தந்தி : 23.1.1998
http://i1094.photobucket.com/albums/...EDC4469a-1.jpg
Shooting Spot News : The Hindu [Friday Review] : 24.4.1998
http://i1094.photobucket.com/albums/...EDC4472a-1.jpg
காவிய விமர்சனம் : குமுதம் : 10.9.1998
http://i1094.photobucket.com/albums/...EDC4473a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4475a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
என் ஆச ராசாவே...
[28.8.1998 - 28.8.2011] : 14வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
பெங்களூர் 'லாவண்யா' திரையரங்கில் "என் ஆச ராசாவே..." திரைக்காவிய வெளியீட்டின்போது நடிகர் திலகத்தின் மிகப் பெரிய பதாகைக்கு பெங்களூர் ரசிகர்கள் அணிவித்த ராட்சத மலர்மாலைகள்
[புகைப்படம் உதவி : நமது ஹப்பர் திரு.குமரேசன்பிரபு]
http://i1094.photobucket.com/albums/...nasairasa1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
"என் ஆச ராசாவே..." ஸ்டில் அசத்தல் !
நன்றி கலந்த பாராட்டுக்கள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள் !
Your Collage is a Classic ! My sincere & humble thanks to you !
"கண்கள்" தகவல் காதுகளில் தேன் பாய்ச்சுகிறது !
'நடிகர் திலகம் திரைச்சங்கம்' திட்டம் மாபெரும் வெற்றியடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !
முதல் ஆளாக அடியேன் இச்சங்கத்தில் சேர பணிவுடன் விண்ணப்பிக்கின்றேன் ! அன்புகூர்ந்து ஏற்றுக் கொள்ளவும் !
அன்புடன்,
பம்மலார்.
தேவராட்டக் கலைஞராக 'என் ஆச ராசாவில்' அசத்தும் 'நம் ஆச ராசா'
'கட்டுனன் கட்டுனன் கோட்ட ஒண்ணு ' பாடலுக்கு தேவராட்டக் கலைஞராக நடிகர் திலகம் ஆடும் கரகாட்டமும், முக பாவங்களும் நம்மை அசர வைக்கின்றன. அந்த உணர்ச்சி மயமான பாடல் காட்சியை ஒலி - ஒளி வடிவில் கண்டு பெருமிதம் கொள்வோம் அந்த மகா புண்ணிய புருஷரை இறைவன் நமக்கு அளித்ததற்காக.
இப்பாடலின் ஆரம்பக் காட்சி நம் கண்களில் ரத்தக் கண்ணீரையே வரவழைத்து விடுகிறது. மெய் சிலிர்க்க வைக்கும் அந்த உணர்ச்சிக்கடலின் உன்னத நடன அசைவுகள் உடலுக்குள் புகுந்து உயிரை உருக்குகின்றன.
தள்ளாத வயதிலேயும் அவருக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆர்வமும், பிடிப்பும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
நடிப்பின் இறைவா! இறவாப் புகழ் பெற்ற உண்மைக் கலைஞனே! நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் இருந்தோமே.. நாங்கள் செய்த புண்ணியம் தான் என்ன!..
இதோ! நம் 'தேவரின்' தேவராட்டம் ...
http://www.youtube.com/watch?v=yUE8PlGvuJs&feature=player_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
வாழ்த்துக்கு நன்றி திரு.முரளி அவர்களே. உங்களுடைய வழக்கமான விறு விறு பதிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். திரியைப் பற்றி கவிதை நடையில் அசத்திய வாசுதேவன் அவர்களுக்கு நன்றி. பம்மலாரின் தொடரும் ஆகஸ்ட் அற்புதங்கள் (சாகசங்கள்) அருமை. நடிகர்திலகத்தின் திரைச்சங்கம் பற்றிய தகவல்களுக்கும் அதில் பம்மலாருக்கு அடுத்து நானும் இணைந்து செயலாற்றவும் ஆவலுடன் இருக்கிறேன் திரு.ராகவேந்திரன் அவர்களே.
தங்கள் அன்புக்கு பணிவான என் நன்றிகள் திரு.சந்திரசேகரன் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள பம்மலார் சார்,
ஜல்லிக்கட்டு, கிருஷ்ணன் வந்தான், என் ஆச ராசாவே ஆகிய முத்தான மூன்று படங்களின் ஆவணத்தொகுப்புப் பதிவுகளுக்கு மிக்க நன்றி. 'ஜல்லிக்கட்டு' 100வது நாள் நிகழ்ச்சிகளின் தொகுப்பு (பொம்மை இதழ்) மிக அருமை. என் ஆச ராசாவே படத்துக்கு குமுதம் பத்திரிகை எழுதிய விமர்சனம் நெஞ்சைத்தொட்டது.
'ஜல்லிக்கட்டு' 100வது நாள் விழா மேடையில் நடிகர்திலகம், மக்கள் திலகம், வில்லன் திலகம் மூவருக்கிடையேயான வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான தள்ளுமுள்ளு பற்றி ஏற்கெனவே முரளி சார் அழகாகக் குறிப்பிட்டிருந்தார். பொம்மை இதழ் கவரேஜில் அந்த நிகழ்ச்சி மிஸ்ஸிங்.
'என் ஆச ராசாவே' படத்தில் நடிகர்திலகத்துடன் நடித்த அனுபவம் பற்றி 'வங்கத்தாரகை' சுவலட்சுமி குறிப்பிட்டிருப்பது சூப்பர். வழக்கறிஞர் அல்லவா, அதான் மிகச்சரியாக எடைபோட்டுள்ளார். 'படத்தின் நாயகன், நாயகி எல்லாமே சிவாஜி சார்தான்' என்று சொல்லியிருப்பது சரியான பஞ்ச். அப்படத்துக்கு பெங்களூர் ரசிகப்பெருமக்கள் சூட்டிய ராட்சத மாலைகள் மலைக்க வைக்கின்றன.
அன்புள்ள வாசுதேவன் சார்,
தில்லானா மோகனாம்பாள் படத்தைப்பற்றி பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் கட்டுரையைப் பதிவிட்டமைக்கு நன்றி. 'ஜல்லிக்கட்டு' பாடல் காட்சிக்கும், 'கிருஷ்ணன் வந்தான்' பட நிழற்பட வரிசைக்கும் ஸ்பெஷல் நன்றிகள். இப்பாடலை விட, 'ஏ ராஜா... ஒன்றானோம் இங்கே' என்ற பாடல் காட்சியில் இன்னும் ஸ்டைலாகப் பண்ணியிருப்பார். குறிப்பாக அந்த கருப்பு புல்சூட்டில் சத்ய்ராஜுடன் நடந்து வரும்போது காட்டும் ஸ்டைல், ஒரிஜினல் ஸ்டைல் கிங் இவர்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும்.
அன்புள்ள முரளி சீனிவாஸ் சார்,
உங்கள் கம்ப்யூட்டர் சரியானதும், மீண்டும் அற்புத, அரிய தகவல் மூட்டைகளுடன் வந்து அசத்துவீர்கள் என்று காத்திருக்கிறோம்.
superb vasudevan sir
நம் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: NT அவர்களின் கிரஹப்ரவேசம் திரைப்படத்தில் வரும் கிரஹப்ரவேசக் காட்சி புகைப்படம் நமது ரசிகர் ஒருவரின் புதிய இல்லத் திறப்புவிழா அழைப்பிதழிற்கு தேவைப்படுகிறது. திரு.ராகவேந்திரன் அவர்கள் எனக்கு ஒரு புகைப்படம் அனுப்பியிருந்தார். ஆனால் அது வீடியோவிலிரிந்து எடுக்கப்பட்டதால் Quality சரியாக இல்லை. நமது ஹப்பர்கள் யாரிடமும் இருந்தால் பதிவு செய்தால் அவருக்கு கொடுத்து உதவ வசதியாக இருக்கும்.
நன்றி
'மங்கையர் திலகத்தில்' நடிகர் திலகம் .
http://i1087.photobucket.com/albums/..._005466817.jpg
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன் .
அன்பு நன்றிகள் திரு.கார்த்திக் சார். விரைவில் உங்களுக்குப் பிடித்த 'ஏ...ராஜா...ஒன்றானோம் இன்று'...பாடல் ஒலி - ஒளிக் காட்சியைத் தர முயற்சி செய்கிறேன். நன்றி சார்.
'ஜல்லிக்கட்டு' படத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான ஸ்டைலில் பரிமளிக்கும் 'ஏ...ராஜா..ஒன்றானோம் இன்று' பாடலை திரு.கார்த்திக் சாருடன் நாமும் கண்டு களிக்கலாம்..
http://www.youtube.com/watch?v=YIbYCQlIs_k&feature=player_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
வீடியோ விற்பன்னர் வாசுதேவன் சார்,
நடிப்பைப் படைத்த இறைவனின் "என் ஆச ராசாவே..." பாடலான 'கட்டுனன் கட்டுனன் கோட்ட ஒண்ணு' பாடலுக்கு பற்பல நன்றிகள் ! இப்பாடலுக்கு முன்னோட்டமாக அமைந்த தங்களின் வர்ணனை பிரமாதம் !
What a divine dance & acting performance !
நமது இதயதெய்வத்தின் புகழ் என்றென்றும் ஓங்குக !
நமது 'வாசு'வின் வசீகரிக்கும் வதனத்தை நேர்த்தியான நிழற்படங்களாக வழங்கிய எங்கள் வாசு சாருக்கு ஸ்பெஷல் நன்றிகள் !
'ஏ.. ராஜா.. ஒன்றானோம் இன்று' பாடலுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !
டியர் mr_karthik,
தங்களது பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !
டியர் சந்திரசேகரன் சார், நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
இங்கு மட்டுமா ! அயல்நாடான இலங்கையிலும்
'சாதனைகளின் சக்கரவர்த்தி சிங்கத்தமிழனே'
என்பதனை அழுத்தந்திருத்தமாக ஆணித்தரமாக
நிரூபிக்கும் அற்புதமான கட்டுரை
வரலாற்று ஆவணம் : பொம்மை : அக்டோபர் 1987
http://i1094.photobucket.com/albums/...EDC4476a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4477a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4478a-1.jpg
இக்கட்டுரையை வடித்த திரு.யாழ் சுதாகர் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் என்றென்றும் !
திரு.யாழ் சுதாகர், தற்பொழுது பண்பலை வானொலி அலைவரிசைகளில் [FM Radio Channels] நிகழ்ச்சி தொகுப்பாளராக கலக்கி வருகிறார் !
அன்புடன்,
பம்மலார்.