அன்புள்ள முரளி சீனிவாஸ் சார்,
உயர்ந்த மனிதன் பற்றிய கோபால் அவர்களின் ஆய்வுக்கு பதிலளிக்கும் முகமாக, அதுபற்றிய கூடுதல் தகவல்களையும், நுண்ணிய விஷயங்களையும் தந்து ஆய்வை மெருகேற்றியுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்ட காட்சியான, சிவகுமாரின் வீட்டு சாப்பாட்டை ருசித்து சாப்பிடும் காட்சிக்கும், ராதாவின் குடிசையில் மீன் குழம்பை ருசித்துச் சாப்பிடும் காட்சிக்கும் கூட பல வித்தியாசங்கள். இருந்தாலும் இதற்கு அது முன்னோடி எனக்கூறலாம்.
முன்பெல்லாம் தங்களிடமிருந்து நீண்ட ஆய்வுக்கட்டுரைகள் அடிக்கடி வரும். இப்போது அவற்றைக்காண்பது அரிதாகி விட்டபோதிலும், இதுபோல ஆய்வுகளுக்கு பதிலளிக்கும்போது தங்களின் மனதில் தோன்றும் அரிய விஷயங்கள் வெளியாகின்றன.
மெல்லிசை மன்னர் பற்றிச் சொல்லும்போது, 'என்னைவிட தெரிந்த கார்த்திக்' என்ற வாசகத்தை மட்டும் தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் இதுபோன்ற நுணுக்கங்களில் தங்களைவிட விவரம் தெரிந்தவர்கள் இங்கு யாருமில்லை என்பது தெளிவு.
அடிக்கடி இதுபோல் பதிவிட்டு அசத்துங்கள்.