Originally Posted by
g94127302
அன்புள்ள RKS - உங்கள் சேவை மகத்தானது , புதுமையானதும் கூட -
திரியின் முதல் பாகத்திலிருந்து 12வது பாகம் வரை மிக சிறந்த பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன - சர்ச்சைகளுக்கு உட்பட்ட பதிவுகள் நீங்கலாக ----பல படங்கள் , பாடல்கள் சிறந்த முறையில் இங்கு பதிவிடப்பட்டுள்ளன - அத்தனைக்கும் பின்பு ஒவ்வருடைய உழைப்பும் , Passion உம் அடங்கி உள்ளது - ஒவ்வருவரும் அவர்கள் பாணியில் நடிப்பு கடவுளுக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் - வார்த்தைகளும் , வர்ணனைகளும் , பூஜிக்கும் விதங்களும் வேறு படலாம் - ஆனால் NT யை விரும்பாமல் யாருமே இங்கு பதிவுகளை இடுவதில்லை - அவருக்கு வாழ்க்கையில் கொடுக்க மறந்த மரியாதைகளை நாம் நமது புகழாழம் மூலம் இங்கு சற்றே ஈடு கட்ட முயற்சி செய்கிறோம் - கால போக்கில் பதிவுகள் அழிந்து விடலாம் - ஆனால் நாம் அவருக்கு மான சீகமாக கட்டிய மணி மண்டபமோ , , உள்ளத்தில் இருந்து வந்த புகழ் அஞ்சலியோ என்றுமே மறையாது - மறைய விடக்கூடாது
சில யோசனைகள் உங்கள் பார்வைக்கு :
1. Soft Copy யாக எல்லா பதிவுகளையும் , ஆவணங்களையும் CD யில் காப்பி செய்து புத்தகத்துடன் இலவசமாக கொடுக்கலாம் - இதன் செலவுகளை நான் ஏற்று கொள்ள தயாராக இருக்கிறேன்
2. செந்தில்/ KCS சொன்னது போல பதிவுகளை அலசி வரிசை படுத்தி போட வேண்டும்
3. பதிவுகள் போட்டவர்களின் பெயரை செலக்ட் பண்ணி , அவர் போட்ட எல்லா பதிவுகளும் அவருடைய பெயருக்கு கீழ் வர மாதிரி செய்யல்லாம்
மிகவும் முக்கியம் - update - போதிய இடைவெளிக்குள் நம் compilation யை புதுப்பிக்க வேண்டும்
உங்கள் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்