http://i59.tinypic.com/20izx9i.jpg
Printable View
MY FAVOURITE THALAIVAR DOUBLE ACTION SONGS
http://www.youtube.com/watch?v=A7tBBUwZ5Ss
சென்னை ஆழ்வார்பேட்டை பெத்தாச்சி ஆடிடோரியத்தில் ஒரு பேனா ,
தன்னை கைபிடித்த எழுத்தாளனோடு அறுபதாவது ஆண்டில் அடியெடுத்து
வைக்கப் போகிறது. ஆகஸ்ட் மாதம்,6-ம் தேதி மாலையில் ஒரு மாறுபட்ட மணிவிழாவைக் கொண்டாடிக் கொள்ளவிருக்கிறது.
சுந்தரம் என்கிற எழுத்தாளன் தெரு நாடகம், ரேடியோ நாடகம், ஒய்.ஜி.பி.
குழுவில் புகலிடம் என இருந்தான். 1958-ம் ஆண்டு டன்லப் தொழிற்சாலையின் முதல் ஆண்டு விழா.
டன்லப் அதிகாரி தேவராஜன் என்னை எழுத்துக்களை எழுத வைக்க முதல் தடவையாக நல்ல வெள்ளை பேப்பரை தந்தார்.
அந்த ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தாளி யார் தெரியுமா ? புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அன்று அவர் புரட்சி நடிகர்- மக்கள் திலகம். நாடகத்தை ரசித்து பார்த்தார். நாடகம் முடிந்து பேச வந்தார். மாலைகள் அவர் கழுத்தில் விழுந்தன. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மைக்கில் இந்த நாடகத்தை எழுதிய ஆசிரியரை மேடைக்கு அனுப்புங்கள் என்றார்.
கருப்பாக, ஒல்லியாக , விகாரமாக பெரிய மூக்கு (டாம் அண்ட் ஜெர்ரி ) கார்ட்டூன் போல போய் நின்றேன் . அவர் பார்வை சட்டையிலிருந்த என் பேனாவின் மேல் பட்டது. தனக்கு போடப்பட்டிருந்த அத்தனை மாலைகளையும் என் கைகளில் வைத்தார். "எப்படி இத்தனை அழகாக எழுதினாய் " என பாராட்டினார்.
அதில் ஒரு வசனம் வரும். "கடைசி வரைக்கும் உன் கை வானம் பார்க்க கூடாது. தலை பூமி பார்க்க கூடாது."என்று. அவர் அந்த வரிகளை ரசித்தார்.
பாராட்டும்போது அவர் சொன்ன தீர்க்க தரிசன வரிகள் என்ன தெரியுமா ?
"இந்த கல்யாணசுந்தரம் இதே அண்ணாமலை மன்றத்தில் இதே மேடையில் மிகப் பெரிய புகழை அடைவான் " என்றார்.
என்ன படிச்சிருக்கே, எங்க படிச்சே என்றெல்லாம் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அழுதேன். ஏன் அழுகிறாய். சந்தோஷப்
படுப்பா என்றார். திரும்ப திரும்ப ஏன் அழுகிறாய் என்றார் . எங்கம்மா
சித்தார்த்தா ஞாபகம் வந்திடிச்சு என்றேன். உங்கம்மா எங்கே இருக்காங்க
என்ன பண்றாங்க என்று கேட்டார்.
திருச்சியில் இருக்காங்க. நான் ஒரு மாவாட்டி மகன். அம்மா எனக்கு இந்த பேனாவை வாங்கி கொடுத்தப்ப நான் எழுதி பெரிய ஆளா வரணும்னு பிள்ளையார்கிட்ட வைச்சு கொடுத்தாங்க. இப்ப நீங்க சொல்றப்ப எனக்கு எங்கம்மா ஞாபகம் வந்தது என்றேன்.
இப்போ நான் சொல்றது உண்மை. அதற்கு சாட்சியும் ஆதாரமும் இருக்கு. டன்லப் அதிகாரி தேவராஜன் இருக்கார். எம்.ஜி.ஆர். அவர்கள்
பேசற போட்டோவும் இருக்கு. அது முதல் பேனாவுக்கு இரையாக பேப்பர் கிடைத்தது.
ஆம். கோஸ்ட் ரைட்டர் ஆக அன்று பிரபலமாக இருந்த சரவணா பிலிம்ஸ் , பத்மினி பிக்சர்ஸ் , தேவர் பிலிம்ஸ் போன்றவற்றில் கதை விவாதங்களுக்கு அழைக்கப்பட்டேன் . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்ன ஒரே வார்த்தை "உன் தாய் சித்தார்த்தா , உன் அக்கா ,குடும்பத்தினரை சென்னைக்கு கூட்டிக் கொள் : என்றது தான்.
பேனாவால் உயர்ந்த நான் பெருமைபட்டது என்ன தெரியுமா ?
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது வீட்டு வசதி
வாரிய தலைவராக இருந்தது.
மக்கள் திலகத்திற்கு மகுடம் சூட்டும் படங்களான "நான் ஏன் பிறந்தேன் ", "நாளை நமதே " ஆகிவற்றின் வெற்றிக்கு என் பேனாவும் உதவியது.
73 வயதாகும் சுந்தரத்திற்கு உதவிய பேனாவிற்கு 65 வயது.
நன்றி :மக்கள் குரல் தினசரி.