Ankil Doris day's Que sera sera became chinna pennana pothile as well right?
Printable View
Ankil Doris day's Que sera sera became chinna pennana pothile as well right?
கர்ணன் படப் பாடலுக்கு லைக்ஸ் அள்ளி வழங்கிய ராஜேஷ், சி.க, ஆதிராம் மற்றும் ரவி அவர்களுக்கு நன்றிகள். படித்துவிட்டு லைக்ஸ் வழங்க மறந்தவர்களுக்கும், மறுத்தவர்களுக்கும், இனிமேல் படித்து விட்டு லைக்ஸ் வழங்கப் போகும் உள்ளங்களுக்கும் நன்றி.
ஆதிராம்,
இப்போதாவது என் எழுத்துக்கு பதில் எழுதியதற்கு நன்றி. இல்லாவிட்டால் நாம் இருவரும் ஒன்றே என்று நினைப்பவர்களுக்கு மேலும் மேலும் தீனி போட்டவர்களாவோம். நடிகர் திலகத்தின் படங்களில் இருந்து பல நிலாப் பாடல்களை எழுதி விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அவர் பங்கேற்காத சில பாடல்களை குறிப்பிட்டுருக்கிறேன். வந்தாலும் வாயசைக்காமல் இருந்த பாடல்களும் உண்டு. அவர் முழுமையாக பங்கேற்ற பாடல்களில் இது நான்காவது (புதையல், சவாலே சமாளி, பலே பாண்டியா முன்னர்). இன்னும் சில வரலாம். நீங்கள் சொல்வது போல காட்சியமைப்பில், காதல் ரசத்தில் (சி.க. அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார்), இசையில், பாடியதில் மற்றும் பெரிதும் விரும்பப் பட்ட காதல் ஜோடிகளின் நடிப்பில், நடிகர் திலகத்தின் அட்டகாசமான நடை அழகில் இது சிறந்த நிலாப் பாடல்தான்.
மெல்லிசை மன்னர்கள் தனித் தனியாக இசை அமைத்த புராணப் படங்கள் விவரத்திற்கும் நன்றி.
ரவி,
உங்கள் ஆதரவிற்கு நன்றி. நடிகர் திலகம் பாடலுக்கு மட்டும்தான் மதுரகானத் திரியில் பங்கேற்பீர்களா. வாருங்கள். உங்கள் பதிவுகளை எல்லா இடங்களிலும் படித்துக்கொண்டுதான் உள்ளேன். நடிகர் திலகம் திரி போல அடிக்கடி வந்து உங்கள் பதிவுகளை பதியுங்கள்.
சி.க.,
இரவும் நிலவும் வளரட்டுமே பாடலுக்கு நீங்கள் எழுதிய பதில் பதிவுதான் இங்கே முத்தாய்ப்பு. காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதுவதில் நீங்கள் கில்லாடிதான் என்று கவியரசர் வரிகளை அலசி ஆராய்ந்து மறுபடியும் நிருபித்து விட்டீர்கள். ஒரு சின்ன ஊடலுடன் கூடிய காதல் சிறுகதை எழுதி தேவிகா - நடிகர் திலகம் ஜோடியின் காதல் வேதியியலை கொண்டாடிவிட்டீர்கள்.
"செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ" பாடல் விவரம் தந்து பட்டாக்கத்திக்கு உற்சாகம் ஊட்டி விட்டீர்கள். நன்றி நன்றி. நன்றி.
ராஜேஷ்,
'இரவும் நிலவும் வளரட்டுமே' பாடலை விரும்பிப் பாராட்டியதற்கு நன்றிகள். இதென்ன திடீரென்று இவ்வளவு நிலாப் பாடல்களை அறிவித்து விட்டீர்கள். இவைகளில் சிலவற்றை பின்னர் நான் எழுதலாம் என்று இருந்தேன். பரவாயில்லை. என் வேலை எளிதானது. இந்த பாடல் வரிசையில் நாளை உனது நாள் படப் பாடல் "வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது" ஒன்றை மட்டும் ஏற்கனவே நான் எழுதிவிட்டேன்.
கலைவேந்தன் நீங்கள் கேட்ட நிலாப் பாடல் இன்று. ஏற்கனவே மது அவர்கள் இந்த பாடலை மதுர காணத் திரியில் குறிப்பிட்டு சி.க. அவர்கள் நிலாப் பாடல்களை எழுதினால் நூறு பக்கங்களுக்கு எழுதுவார் என்று சொல்லி இந்த பாடலை குறிப்பிட்டு இருக்கிறார். நான் நிலாப் பாடல்களை எழுதி அதிக பட்சமாக நூறு பாடல்களை மட்டும் எழுதலாம் என்று எழுதிக் கொண்டு இருக்கிறேன். சி.க., ராஜேஷ் போன்றவர்கள் ஏற்கனவே பல பாடல்களை குறிப்பிட்டு விட்டார்கள்.
நிலாப் பாடல் 71: "வெண்ணிலவே, வெண்ணிலவே, வெண்ணிலவே தண்மதியே"
-----------------------------------------------------------------------------------------------------------------------
காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களின் மீண்டும் ஒரு நிலாப் பாடல். காதல் சோகப் பாடல். "நிலவே என்னிடம் நெருங்காதே ஒரு விதம்" என்றால். இது பெண்ணிடம் இருந்து வரும் சோகம். இங்கே காதலன், காதலியை நிலவென அழைக்கவில்லை. காதலன் வீழ்ந்து கிடக்க உண்மை நிலாவை துணைக்கு காதலி அழைக்கும் பாடல். எழுதியவர் பண்குகத் திறமை கொண்ட கொண்டாடப் படத்தக்க கொத்தமங்கலம் சுப்பு அவர்கள். பாடியவர் பி.லீலா. கலைவேந்தன் போன்ற பலராலும் இந்த பாடல் இன்னும் விரும்பிக் கேட்கப் படுகிறது. காரணம் படத்திற்கு இன்றும் கிடைக்கக் கூடிய வரவேற்பு என்றுதான் சொல்லவேண்டும்.
என்ன நாட்டியப் பேரொளியை சோகத்தை பிழிய வைத்துவிட்டார்கள். நன்றாகத்தான் இருக்கிறது. தமிழ்த் திரை உலகின் பிரமாண்டங்களின் ஆரம்ப கர்த்தா ஜெமினி S.S. வாசன் அவர்கள் இயக்க, C. ராமச்சந்திரா இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் பற்றிய அதிக விவரங்களை சி.க. தனது இசையமைப்பாளர்கள் தொடரில் தருவார்.
பாடல் வரிகள் (சற்றே சுருக்கமாக):
-------------------
வெண்ணிலவே வெண்ணிலவே
வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வா வா...
நிலவே நிலவே வா..வா.....!
.. வேறு துணை யாருமில்லை....
விதி வழியே வந்தேன்....
நிலவே நிலவே வா..வா.....!
அஞ்சேல் அஞ்சேல் என்றே ...
அருகினிலே வந்தாரே...அபயமே தந்தாரே......
ஆதரித்தார்...அன்புரைத்தார்....
யாரிவரோ...அறியேனே...!நான் அறியேனே......!
இன்ப நிலா ஓடத்திலே...ஏற்றியே வந்தானே ....
இதயம் கோயில் கொண்டானே ....
எந்த ஊரோ என்ன பேரோ....எங்கிருந்தோ வந்தான் ..
இதயம் கோயில் கொண்டானே ....
வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வா வா...
நிலவே நிலவே வா..வா.....!
காணொளி:
------------------
https://www.youtube.com/watch?v=D2YsvbhzLCk
கலைவேந்தன், இங்கே பார்த்தீர்களா நாட்டியப் பேரொளி வஞ்சிக்கோட்டை வாலிபனோடு பயணம் செய்கிறார்கள் படகினிலே. சந்தோஷம்தானே?
இங்கே சித்ரா பௌர்ணமி வருவதை முன்னிட்டு ஆளாளுக்கு நிலாப் பாடல்களை எழுதி கொண்டாடி வருகிறோம். (சொல்லவே இல்லை என்று யாரும் காலை வாரி விட்டு விடாதீர்கள். அதுதான் இப்ப சொல்லிட்டேன் இல்லையா). இங்கே ஒருத்தர் என்ன பண்ணுகிறார் பாருங்க.
நிலாப் பாடல் 72: "எங்கே அந்த வெண்ணிலா, எங்கே அந்த வெண்ணிலா"
---------------------------------------------------------------------------------------------------------------
நூற்றுக்கணக்கான பாடலில் வெண்ணிலாவை கொண்டாடிக் கொண்டிருக்க இப்படி ஒருத்தர் வெண்ணிலாவை தேடினால் எப்படி இருக்கும்? நான் அரண்டே போய்விட்டேன். ச்சே. ச்சே. அவரு தன் காதலி வெண்ணிலாவை தேடிக்கிட்டு இருக்காருன்னு பின்னாலதான் தெரிஞ்சது. மனோஜ் பாரதி மற்றும் அனிதா நடிப்பில். தேடினாலும் சற்று நேரத்தில் சோகத்தை கைவிட்டு காதலியை கண்டு சந்தோஷத்துடன் பாடுகிறார் பாருங்கள். சிற்பி இசையமைத்திருக்கிறார். கேட்கவும் சட்டென்று பிடிக்கிறது பாருங்கள். இது போதும். நன்று. உன்னி மேனன் பாடியிருக்கிறார்.
பாடல் வரிகள்:
--------------------------
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
—
தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன?
நீதான் எந்தன் ஒளி விளக்கு
என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு
—
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
—
மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன?
காதல் எனக்கு போதும் அம்மா
என் காதல் எனக்கு போதும் அம்மா
—
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
-----------------------------------------------------------------------------
காணொளி:
------------------
https://www.youtube.com/watch?v=m2DLHLv2ikY
சி.க. நிலாப் பாடல்கள் எழுதியிருந்தால் வருஷமெல்லாம் வசந்தம்தான். நான் எழுதினதால் இரண்டு மாதங்களுக்கு மட்டும்தான்.
பாடகி சுஜாதா பாடிய அதே பாடல் (பாடல் மட்டும்.)
https://www.youtube.com/watch?v=CtNluYndu-k
Madura Ganam becomes Nila Ganam due to Mr Kalnayak and well supported by Mr CK. Great Going.
அன்புள்ள கல்நாயக் , CK , இந்த திரியினில் வருவதற்கு மிகவும் நடுக்கமாகவும் , பயமாகவும் உள்ளது - இருவரும் இவ்வளவு அறிவுபூர்வமாகவும் , அழகாகவும் பாடல்களை அலசுதுவதை பார்க்கும் பொழுது - இந்த திறமைகளில் 0.0001% கூட இல்லாமல் இங்கு வந்து பதிவுகள் போடுவதைப்போல ஒரு கொடுமை இருக்க முடியாது என்று என் உள்மனம் சொல்கின்றது - உங்கள் இருவர் பதிவுகளையும் படிக்கும் போது , சந்திர மண்டலத்திர்க்கே போய் வசிப்பதைப்போல உள்ளது - ஏதாவது ஒரு பதிவை நான் போட்டு அது "நிலாவுடன் " சம்பந்த இல்லாமல் போய் விட்டால் , உங்கள் பதிவுகளில் உள்ள தொடர்பு தடைப்பட்டு விடும் அபாயமும் உள்ளதால் , பூமியில் இருந்துகொண்டே அந்த நிலவின் அழகை உங்கள் பதிவுகள் மூலம் ரசிக்கின்றேன் . அந்த சந்திர மண்டலத்தில் வாசுவையும் , திரு கிருஷ்ணாவையும் சந்தித்தீர்கள் என்றால் என் மரியாதையை அவர்களுக்கு தெரிவிக்கவும் . சூரியமண்டலத்திக்கும் நீங்கள் இருவரும் செல்லும் வாயிப்பு உண்டா ? - நிலா பதிவுகளை நீங்கள் இருவரும் தொகுத்து ஒரு புத்தகமாக flipcart இல் பதிவிட வேண்டும் என்பது என் அவா .
அன்புடன்
ரவி
ரவி,
உங்கள் இந்தப் பதிவில் இருக்கும் கற்பனை வளங்களை விடவா நான் என் நிலாப் பாடல் பதிவுகளில் சொல்லிவிட்டேன். நான் சந்திர மண்டலத்திற்கு பயணம் செல்லவில்லை. வாய்ப்பு கிடைத்தால் உங்களையும் அழைக்கிறேன். நான் சென்னைவாசிதான். நிலாப் பாடல்கள் எழுதியதால் சந்திரனுக்குப் போனால் சூரியனுக்கு போவதற்கு சூரியனைப் பற்றி பாடல்கள் எழுதவேண்டும். நீங்கள் என் முயற்சிக்க கூடாது?உங்கள் அனுபவங்களில் நீங்கள் பெற்ற அறிவு இந்த 0.00001% கூட எனக்கு கிடைக்காததால்தான் இங்கே நான் நிலாப் பாடல்கள் எழுதிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் அப்படியே மாற்றி சொல்கிறீர்கள்.
என்னை எழுதத் தூண்டி உற்சாகப் படுத்தியவர்களில் வாசுவும் முதன்மையானவர். அவர் விரைவில் வந்து பங்கு கொள்ளவேண்டும் என்று எனக்கும் பேராவல் உள்ளது. அடுத்த நிலாப் பாடலை அவருக்கே சமர்பிக்கலாம் என்று இருக்கிறேன். கிருஷ்ணாவும் மதுரகானத் திரியில் அளப்பரிய பங்கெடுத்தவர். நீண்ட நாட்கள் வராமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை. எல்லோரும் வரவேண்டும். எழுத வேண்டும்.