இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி . மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் வீடியோ பதிவுகள் கிடைத்தவுடன் இங்கு பதிவிடுகிறேன் .
என்தங்கை படத்தின் தகவல்கள் தந்தமைக்கு நன்றி
Printable View
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி . மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் வீடியோ பதிவுகள் கிடைத்தவுடன் இங்கு பதிவிடுகிறேன் .
என்தங்கை படத்தின் தகவல்கள் தந்தமைக்கு நன்றி
journalist and actor cho about our makkal thilagam
http://youtu.be/w192j77vMv4
தலைவர் நடித்த படங்களில் மிகவும் சோகமான படம் என் தங்கை. இறந்த விட்ட தனது சகோதரி சரோஜா அவர்களை தோளில் போட்டு கடற்கரை மணலில் நடக்கும் அந்த வேக நடையை என்னால் மறக்க முடியாது.
தன்னுடைய சகோதரர்கள் ஏமாற்றும் போதும் தன்னுடைய உறவினர் (எம்.ஜி.சி) அவர்களிடம் உதவி கேட்டு ஏமாறும் போதும் அவருடைய நடிப்பு பிரமாதம். சோக உணர்சியை மிக அழகாக வெளி படுத்தியிருப்பார். மிகை நடிப்பு காலத்தில் அவருடைய இயற்கை நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.
முதன் முதலாக இப்படத்தை பார்த்த போது அடுத்தடுத்த காட்சியில் தலைவர் நிலை மோசமாகி கொண்டு வரும், இதன் பிறகு பழைய நிலைக்கு வந்து விடுவார் (அவர் மற்ற படத்தில் உள்ளது போல்) என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் தன் அன்பு சகோதரியுடன் கடலில் கலந்து விடுவார்.
முடிவு என்னால் நம்ப முடியவில்லை. தலைவர் இறந்து விடுகிறார். எப்படி இந்த படம் ஒடியது என்று எண்ண தோன்றியது பிறகு தான் தெரிந்து கொண்டேன். இப் படம் அவருடைய இமேஜ் காலத்திற்கு முன்பு வந்தது என்று.
தலைவரின் சகோதரி பத்திர பெயர் மீனா இப்பெயரை என் தங்கை படம் வளரும் நேரத்தில் அவர் வேறு படத்தில் படப்பிடிப்பு சமயத்தில் பத்திர பெயரை அழைக்கும் போது மீனா என்று தவறுதலாக கூப்பிட்டு பல டேக்குகள் வாங்கினார் என்று தலைவரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த அளவிற்கு தலைவர் ஈடுபாட்டுடன் நடித்த படம்.
தேசியத் தலைவனுக் கு திரு விழா
தெம்மாங்கு சீமையிலே அழகு உலா
தமிழ்த் தாய் கண்டெடுத்த செல்வனுக்கு ஓ ர் விழா
தாயகத்தில் தொண்டரெல்லாம் கொண்டாடும் பெரு விழா
வங்கக் கடலும் பொங்கி வருது
வயற்காட்டில் நெற்கதிர்கள் ஆடி வருது
மங்கையர் நாவினில் பாட்டு வருது
தங்கத் தமிழன் வரவை நாடி
அறிவியல் கற்றான் அண்னாவின் பாசறையில்
வாழ்வியல் படித்தான் அன்னையின் மடியில்
கொள்கைகள் கண்டான் சாத்திரங்கள் மூலம்
கொடுத்தனன் வாழ்க்கைதன்னை த்மிழ் மக்கள் வாழ
கோயில் கொண்டனன் எங்கள் மனதினில்
கொற்றவனாய் முதல்வனாய் மூர்த்தியாய்
நோயில் விழுந்து மறைந்தாலும்
மறையா வாழும் எங்கள் தலைவா நீ
வாழிய என்றும் வாழியவே
1961 ஆண்டில் திரைக்கு வந்து மாபெரும் சமூக சீர் திருத்த படமாக வந்து மக்கள் திலகத்தாலும் சிறப்பாக சமூக படங்களில் நடித்து வெற்றி கரமாக வருவார் என்று நிருபித்து காட்டிய படம்
''திருடாதே ''.
''திருடாதே ''.- படம் வந்து இன்றுடன் 52 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .
பல இடங்களில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தும் , 100 நாட்கள் ஓடியும் வசூலில் சாதனை புரிந்த படம் .
நாட்டிற்கு நல்ல கருத்தினை மிகவும் தெளிவாக பிரதிபலித்த படம் .
இந்த படத்தை பார்த்த பின் சமுதாயத்தில் உள்ள பல திருடர்கள் தங்களுடைய திருட்டு தொழிலை அடியோடு நிறுத்தி , திருந்தி வாழ்ந்ததாக செய்திகள் அன்றைய நாளேடுகளில் வந்த வண்ணம் இருந்தது .
ஒரு சமுதாய விழிப்புணர்வு தாக்கத்தை உருவாக்கிய படம் திருடாதே .
1961ல் பல படங்கள் வந்து பெற்றி பெற்றாலும் திருடாதே படம்தான் மாபெரும் சமுதாய புரட்சி ஏற்படுத்திய சீர் திருத்தத படம் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பும் பாடலும் படத்தின் இமாலய வெற்றிக்கு காரணம் .
திருடாதே - பல திருடர்களின் வாழ்க்கையினை மாற்றி அமைத்த படம் .
சமுதயாத்திற்கு நல்ல படிப்பினை தந்த படம் .
இந்திய திரைப்பட வரலாற்றில் காவிய படங்களில் ஒன்றாக வந்த படம் .
திருடாதே’ எம்.ஜி.ஆரின் முதல் சமூகப்படமல்ல. ஆனால் இரண்டாவது சமூகப்படம் என்று சொல்லலாம். 1936-ல் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய அவர், 1960 வரை ராஜா ராணி படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்தார் என்பது அவர் நடித்த படங்களின் பட்டியலைப்பார்க்கும்போது தெரிகிறது (இடையில் 1956-ல் அவரது முதல் சமூகப்படமாக வந்தது தேவரின் ‘தாய்க்குப்பின் தாரம்’ அதற்கடுத்த இரண்டாவது படமாக வந்தது திருடாதே (1961)படம்தான்) அவர் தொடர்ந்து சமூகப்படங்களில் நடிக்கத்துவங்கியது 1961ல் இருந்தே. திருடாதேயைத்தொடர்ந்து சபாஷ் மாப்பிளே, நல்லவன் வாழ்வான், தாய் சொல்லைத்தட்டாதே என்று தொடர்ந்து சமூகப்படங்களைத் தொடர்ந்தார். இருப்பினும் பழைய வாசனை விட்டுவிடக்கூடாது என்றோ என்னவோ அரசிளங்குமரி (1961), ராணி சம்யுக்தா மற்றும் விக்ரமாதித்தன் (1962), கலை அரசி மற்றும் காஞ்சித்தலைவன் (1963) என்று ராஜாராணிப் படங்களையும் சை ட்ராக்கில் பண்ணிக்கொண்டிருந்தார். இதைவிட்டால் 1967-ல் அரசகட்டளையே அடுத்த ரா.ரா. படம். (1965-ல் வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ராஜா ராணி கதையல்ல, கடற்கொள்ளையர்கள் பற்றிய படம்).
இவரோடு ஒப்பிடுகையில் சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் ஐம்பதுகளிலேயே ஏராளமான சமூகப்படங்களில் நடித்துள்ளனர். 1952-ல் வந்த சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் நடித்த பராசக்தியே ஒரு சமூகப்படம்தான். ஐம்பதுகளில் சந்திரபாபு கூட கதாநாயகனாக சமூகப்படங்களில் நடித்திருக்கிறார் கூடுதல் சுவாரஸ்யம்.
ராஜா ராணிப்படங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ரொம்ப நெருக்கம் என்பதைக்காட்டத்தானோ என்னவோ அவர் கடைசியாக நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனும்’ ஒரு ராஜா ராணிப்படமாகவே அமைந்தது.
நன்றி - சாரதா [ மையம் திரியின் அருமையான பட விமர்சகர் ]
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது (2)
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது (2)
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது (2)
திருடாதே ... பாப்பா திருடாதே ...
(திரைப்படம் : திருடாதே 1961)
ஐந்து பைசா திருடினாலும் திருட்டு தான் (உபயம்: அன்னியன் திரைப்ப*ட*ம்), ப*ல்லாயிர*ம் கோடி திருடினாலும் திருட்டு தான் (உப*ய*ம்: 2ஜி ஸ்பெக்ட்ர*ம் குழுவின*ர்). முன்ன*தில் மாட்டுவோர் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டு நாலைந்து மாதங்களுக்கு நடமாட முடியாமல் தவிப்பர். பின்ன*தில் மாட்டினோர் நாலைந்து மாத*ங்களில் ப*ல*த்த* வ*ர*வேற்பிற்குப் பிற*கு க*ட்சியில் முக்கிய* அந்த*ஸ்த்தைப் பெறுவ*ர். 'ப*ட்டுக்கோட்டை பாப்பாவுக்குத் தான* சொன்னாரு, ந*ம*க்கு எங்கே சொன்னாரு' என்ற*ல்லவா இப்படிக் கூட்டங்கள் அலைகிற*து.
எம்.ஜி.ஆர். படவிழா : திரண்ட பழைய நடிகைகள்
எம்.ஜி.ஆர். -சரோஜா தேவி ஜோடியாக நடித்து 1961-ல் வெளியான படம் திருடாதே. இப்படத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை அதை தயாரித்த ஏ.என்.எஸ். புரடக்ஷன் படநிறுவனம் தியாகராயநகர் ஜெர்மன் ஹாலில் இன்று நடத்தியது.
விழாவில் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள், அவர் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.
நடிகை சரோஜாதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பழைய நடிகைகள் ஜெயச்சித்ரா, ஷீலா, சி.எஸ்.சரோஜா, ராஜசுலோசனா, ராஜஸ்ரீ, சி.ஐ.டி. சகுந்தலா, ரத்னா, எஸ்.என்.பார்வதி, நடிகை சாவித்ரி மகள் விஜயா சாமூண்டீஸ்வரி, பின்னணி பாடகர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, சுசீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் ஏ.என்.எஸ். புரடக்ஷன் சார்பில் ஜெயந்தி கண்ணப்பன் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் 50 வயதை தாண்டிய எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மனைவி, குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
நடிகைகள் எம்.ஜி.ஆருடன் நடித்த அனுபவங்களை மேடையில் பேசினார்கள். விழாவையொட்டி அரங்கின் வெளியே எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் கண்காட்சி இடம் பெற்றது. என்கடமை, திருடாதே, நாடோடி மன்னன், அன்பேவா உள்ளிடட பல படங்களின் ஸ்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.
எம்.ஜி.ஆர். உருவப்படங்களின் பேனர்கள் கட்டி இருந்தனர். எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் கிளிப்பிங் காட்சிகள் மற்றும் பாடல்கள் திரையில் காட்டப்பட்டது. பழைய ரசிகர்களின் விசில் சத்தம் காதை பிளந்தது. அவர்கள் மகிழ்ச்சியில் நடனம் ஆடினார்கள்.