http://www.youtube.com/watch?v=mXBOXRffLqY
Printable View
மக்கள் திலகம்எம்ஜிஆர் அவர்கள் பதவி ஏற்ற 30.6.1977 நினைவலைகளை திரியில் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .37 ஆண்டுகள் கடந்து விட்டாலும் நம் மனதில் பசுமை நினைவுகளாய் இருப்பது மகிழ்ச்சியான
செய்தியாகும் .மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கிடைத்த பல பெருமைகளில் முக்கியமானது -மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம் .
எம்ஜிஆரின் சத்துணவு தொடக்க விழா - 1.7.1982
மக்கள் திலகத்தின் தீர்க்க தரிசனதிற்கு உதாரணம் - 1.7.1982 அன்று துவக்கி வைத்த சத்துணவு திட்டம் . உலகமே பாராட்டியது . 32 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து நடை முறை படுத்த பட்ட திட்டம் .
கிண்டல் கேலி பேசியவர்கள் எல்லாம் இன்று மனதார பாராட்டும் திட்டம் . இத்திட்டத்தால் பயன் பெற்ற குழைந்தைகள் இன்று பெரியவர்களாகி சமுதாயத்தில் நல்ல நிலையில் முன்னேறி உள்ளார்கள் .
அந்த திட்டத்தின் நாயகன் வள்ளல் எம்ஜிஆர்இன்றும் சரித்திர நாயகனாக சத்துணவு தந்த நாயகனாக வாழ்கிறார் .
புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள் . குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் தலைவனின் மாண்பைக் காணுங்கள். .
100 கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது. "சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன் .
தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர் . அவர்களது இடுப்பில் குழந்தைகள். நான் காரிலிருந்து இறங்கி, 'காலையில் சாபிட்டீர்களா ? ' என்று கேட்டேன் ' இல்லை ' என்று பதில் சொன்னார்கள் . 'குழந்தைகள் சாபிட்டதா ? ' என்று கேட்டேன் . '
இல்லை'... எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை... வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம் . குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது. இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை. அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம் .
என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.....சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது.... என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம் அந்தத் தாய் ....." இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் சொன்னபோது அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை .
நன்றி ஆனந்த விகடன் 18-07-1982
It was MGR who started the first ever mid-day meal scheme in Tamilnadu in the 1982 when he was CM. He gave two reasons, one that he knew from personal experience how agonising it was for children to go without meals - having experienced this himself as a child - also to ensure larger enrolment in schools and reducing drop-out rates.
Indira Gandhi, the then great Economists, the Planning Commission, many other celebrities criticised the move as one that would lead to bankruptcy of the State. Surprisingly, the UN complimented him. And, MGR achieved both objectives of larger admissions in schools and fewer drop-outs.
This is the reason why, nearly the whole of Tamilnadu adored MGR even after 30 and more years of his death. His name is magic and that is what Jayalalitha is cashing in as his one-time mistress. Most tamil-adults of to-day have had the benefit of this scheme when they were young and are grateful to him, so vote for his name.
Another point, India can never claim to have any sense of hygiene in the kitchen or with regard to our articles of food or even potable water. Most mothers cook in these conditions and feed their children, yet no child has died of it so far. The reason is that more than the food, it is the motherly love that is fed.
In the Mid-day meals scheme, however, this love - not even an iota - is lacking, hence children die. The Hare Krishna temple in Bangalore is running a scheme for meals for students in schools and serve millions of children every-day, yet there has been no complaint. The reason is their dedication and sincerety.
K.V.Narayanmurti.
எம்ஜிஆர் -ஒரு சிலருக்கு பிடிக்காதவர் . ஏன் என்றால் எம்ஜிஆரின் வெற்றிகளை , பாராட்டுகளை , புகழை , இன்னமும்
எம்ஜிஆரின் புகழ் நீடித்திருப்பது போன்ற காரணத்தால் பிடிக்காமல் போய் விட்டது . அந்த சிலரின் குறைகளுக்கு என்ன காரணம் ?
தான் சார்ந்திருக்கும் ஒரு இயக்கத்தின் நாயகருக்கு பெருமை சேர்ப்பதாக எண்ணி நடக்காதவைகளை நடந்தாதாக கற்பனை செய்து ,மாநில , திராவிட , இந்திய வரலாற்றினை இழிவாக பேசி, அந்நியன் போல் ஒரு சமயம் போற்றி மறுபுறம் தாக்கி இறுக்கமான மன நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணமா என்று தெரியவில்லை .
அடுத்தவர்கள் சொல்வதை - எழுதியதை நம்புவர்கள் -சுயமாக சிந்திக்காமல் நம்பி ஆவேசமாக செயல் படுவதின் எதிரொலி .
தான் என்ன செய்கிறோம் - என்ன நினைக்கிறோம் - என்பதையே அறியாதவர்கள் படைப்புகள் ''கானல் நீரே ''
என்னதான் வரிந்து கொண்டு அலங்காரம் செய்தாலும் அகத்தின் அழகு நன்கு தெரிகிறதே .
ஜூலை மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
நாளை நமதே - 1975
ஆயிரத்தில் ஒருவன் -1965
நேற்று இன்று நாளை -1974
தெய்வத்தாய் - 1974
குலேபகாவலி - 1955
மலைக்கள்ளன் - 1954
தலைவன் -1970
சபாஷ் மாப்பிளே - 1961
கணவன் -1968
ஜூலை மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
நாளை நமதே - மிகவும் ஜாலியான படம் . மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் பிரமாதமாக நடித்திருந்தார் .மக்கள் திலகத்தின் சிறப்பான நடனங்கள் ஹை லைட் .
ஆயிரத்தில் ஒருவன் - சொல்லவே வேண்டாம் .பந்துலுவின் அமுத சுரபி .
நேற்று இன்று நாளை -அது என்றென்றும் நமக்குதான் என்று சொன்ன இசை சித்திரம் .
தெய்வத்தாய் -சகாப்தம் படைத்தவள் .
குலேபகாவலி - ராமண்ணாவை லட்சாதிபதியாக உயர்த்திய படம் .
மலைக்கள்ளன் - மக்கள் திலகம் திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்ற படம் . அதுவே இன்று வரை நிலைத்து விட்டது .
தலைவன் - என்றென்றும் .
சபாஷ் மாப்பிளே - நகைச்சுவையில் மக்கள் திலகம் நடித்த படம் .
கணவன் -மக்கள் திலகம் கதையில் உருவான , இனிமையான படம் .
குஷிப்படுத்துகிறாள் குலேபகாவலி!
எம்.ஜி.ஆர். இன்றும் ஹீரோதான்!
ஒரு ரசிகனின் பார்வையில் -
சிவகாசி தங்கமணி தியேட்டரில் குலேபகாவலி இரவு 10 மணி காட்சி பார்த்தேன். ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. படம் முழுவதும் பாட்டுக்களே. ஆனாலும், பாடல் காட்சியின் போது டீ குடிக்கவோ, தம் அடிக்கவோ யாரும் அரங்கை விட்டுச் செல்லவில்லை. புதுமையான கதை, அருமையான வசனம், மயக்கும் இசை, நேர்த்தியான நடிப்பு, கவர்ச்சி, காமெடி, சண்டை என இப்படி ஒரு மசாலா படத்தை 1955 களிலேயே மிகப் பிரம்மாண்டத்துடன் இயக்கியிருக்கிறார் டி.ஆர்.ராமண்ணா. படத்தை முடிக்கவே மனமில்லாததாலோ என்னவோ, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக குலேபகாவலி திரையில் ஜொலிக்கிறாள். ஒவ்வொரு காட்சியிலும் எம்.ஜி.ஆர்., சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலுவின் பாடி லாங்வேஜ் வியக்க வைக்கிறது. டி.ஆர். ராஜகுமாரி இருக்கிறாரே..! சொல்லவே வேண்டாம். காட்சிக்கு காட்சி சொக்க வைக்கிறார்.
இடைவேளையின் போது 75 வயது மூத்த ரசிகர் ஒருவரிடம் ‘பெரியவரே! இந்த வயசுலயும் இந்த ராத்திரி ஷோவுக்கு வந்திருக்கீங்களே..?’ என்று பேச்சு கொடுத்தேன். “அதுவா..? எப்படியும் இந்தப் படத்த அம்பது தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இப்பக் கூட எனக்கு இது பழைய படமாத் தெரியல. படத்த பார்த்துக்கிட்டிருக்கிறப்ப அந்தக்கால நினைவுகளெல்லாம் வந்து போகுது. இப்ப எனக்கு நாப்பது வயசு குறைஞ்சாப் போல இருக்கு..” என்று பொக்கை வாயைத் திறந்தார்.
படம் ரிலீஸாகி 57 வருடங்களுக்குப் பிறகும் ஒரு கருப்பு வெள்ளை திரைப்படத்தை ரசிகர்கள் இந்த அளவுக்கு ரசிக்க முடிகிறதென்றால், அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் திரைப்படத்துக்கு எத்தனை வரவேற்பு இருந்திருக்கும் என்பதை எண்ணும் போது மலைப்பாக இருக்கிறது. ரசிகர்கள் தரும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையாக உழைத்திருக்கிறார்கள் அன்றைய கலைஞர்கள்!
ஒரு பழைய சினிமாவைப் பார்த்து ரசித்து பதிவும் செய்திருக்கிறானே “பைத்தியக்காரன்..” என பட்டம் கொடுத்து விடாதீர்கள். மக்களின் சிந்தனை, வேட்கை எந்த ஒரு படைப்பை நோக்கிப் பயணிக்கிறதோ அதுதான் கலை! கலை என்பது மக்களுக்கானதே!
-சி.என்.ராமகிருஷ்ணன்