Originally Posted by
madhu
நேற்றே நிலாவை நம்ம SSS தயவில் பார்த்து ரசித்தாகி விட்டது..
அடுத்த ரிக்வெஸ்டை மெதுவாக வைக்கலாம் என்று வரலக்ஷ்மி.. வரலக்ஷ்மி
( சிக்கா.. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியில் எஸ்.வரலக்ஷ்மி சொந்தக் குரலில் பாடும் "காதலாகினேன்.. எவர் ஏது சொன்ன போதும் நான்... காத..லாகினேன்" பாட்டு கேட்டதுண்டா ? )
இருக்கட்டும்.. வரலக்ஷ்மி விரதம் அன்றைக்கு உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன் என் அடுத்த ரிக்வெஸ்டை.
ஜெய்சங்கர் நடித்து வெளிவராமல் போன "கதா நாயகன்" என்ற படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடும் ஒரு அருமையான பாட்டு..
"சில நேரங்களில் சில மனிதர்களை
சிந்தித்து பார்த்தால் சிரிப்பு வரும்
என்ன கோலமோ என்ன கொள்கையோ
இதயம் சிலருக்கு இரண்டல்லவோ"
என்று ஆரம்பித்து
"சந்திரனுக்கு செல்பவனுக்கு சாம்பார் சாதம் இல்லை.. அங்கு இல்லை
சந்ததி என்று ஒன்பது பிள்ளை இனிமேல் பிறந்தால் தொல்லை.. என்றும் தொல்லை
சோழன் காலக் குடுமி... இதில் காரில் என்ன பவனி
அடி பெண்ணே கொஞ்சம் கவனி
நீயும் ஆண்பாதி பெண் பாதி அவதாரமோ"
என்றெல்லாம் stanzas வரும்..
சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் பாடலுக்கான படம் தெரியாமல் நான் தேடிக்கொண்டு இருந்த சமயம் நம்ம ராகவ்ஜிதான் கண்டு பிடித்து சொன்னார்.
இந்தப் பாட்டு எங்கேயாச்சும் கிடைச்சா மதுர கானங்கள் திரிக்கு மடக்கி இழுத்துக் கொண்டு வாருங்கள்.