நன்றி சித்தூர் வாசுதேவன், நெய்வேலி வாசுதேவன் வராத குறையை அவ்வப்போது வந்து நீங்களாவது குறையுங்கள்.
Printable View
வாசுதேவன் அவர்கள் எங்கிருந்தாலும் ஞான ஒளி என்று கேட்டால் வந்து விடுவார் என்றார்கள். எனவே இந்த நிலாப் பாடல் அவருக்கு சமர்ப்பித்து இந்த திரிக்கு அவரை வருமாறு அழைக்கிறேன்.
நிலாப் பாடல் 73: "மண மேடை மலர்களுடன் தீபம் "
-------------------------------------------------------------------------------
சற்றே அவசரப் படாமல் பொறுமையாக இந்தப் பாடலை படித்தும் கேட்டும் இது ஒரு நிலாப் பாடல்தான் என்று சம்மதித்து ஏற்றுக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இத்திரைப் படத்தில் நடிகர் திலகம் நடித்த பாடல்களில் நிலா எதுவும் வரவில்லை. இந்த பாடலில் மட்டும் தான் பகலில் தெரியும் நிலவு வருகிறது. எனவே நெய்வேலி வாசுதேவன் முழு மனதுடன் இதை ஏற்றுக் கொண்டு திரிக்கு விரைவில் வரவேண்டும். சந்தோஷமான விஷயம் இது ஒரு சந்தோஷ பாட்டு. சாரதாவும் ஸ்ரீகாந்தும் நடித்த காதல் பாடல். மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இசையரசி பி. சுசீலா பாடியிருக்கிறார் கண்ணதாசன் பாடலை. நல்ல இனிமையான பாடல்தான்.
பாடல் வரிகள்:
----------------------
மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார்
என்றும் வாழ்க மணமங்கை என்பார்
(மண)
நான் இரவில் எரியும் விளக்கு
நீ என் காதல் மணிமாளிகை
நீ பகலில் தெரியும் நிலவு
நான் உன் கோவில் பூந்தோரணம்
மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்
(மண)
என் மடியில் விடியும் இரவு
நம் இடையில் வளரும் உறவு
தேகம் தழுவும் மலர் காற்று
மோகம் பரவும் பேரு மூச்சு
நான் பெறுவேன் சுகமே சுகமே
(மண)
என் தனிமை உலகம் இனிமை
என் தாய் வீடும் நினைவில் இல்லை
நான் உறவில் உனது அடிமை
உன் துணை போல சுகமும் இல்லை
அருள் புரிவான் தேவன் நம் பாதை எங்கும்
(மண)
மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார்
என்றும் வாழ்க மணமங்கை என்பார்
(மண)
நான் இரவில் எரியும் விளக்கு
நீ என் காதல் மணிமாளிகை
நீ பகலில் தெரியும் நிலவு
நான் உன் கோவில் பூந்தோரணம்
மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்
(மண)
என் மடியில் விடியும் இரவு
நம் இடையில் வளரும் உறவு
தேகம் தழுவும் மலர் காற்று
மோகம் பரவும் பேரு மூச்சு
நான் பெறுவேன் சுகமே சுகமே
(மண)
என் தனிமை உலகம் இனிமை
என் தாய் வீடும் நினைவில் இல்லை
நான் உறவில் உனது அடிமை
உன் துணை போல சுகமும் இல்லை
அருள் புரிவான் தேவன் நம் பாதை எங்கும்
(மண)
காணொளி:
------------------
https://www.youtube.com/watch?v=cfUedZ9DCjs
அனைவருக்கும் வணக்கம்.
கல்நாயக், சின்னக்கண்ணன் எப்படி இருக்கீங்க?
கல்நாயக், இதுதான் டெலிபதி என்பதோ? பணிகள் காரணமாக பல நாட்களாக நமது திரியை பார்க்க முடியவில்லை. (மக்கள் திலகம் திரிக்கும் அவ்வப்போது டிமிக்கி கொடுத்து விடுகிறேன்). நீண்ட நாட்கள் ஆயிற்றே பார்ப்போம் என்று இங்கே வந்து பார்த்தால், நான் கேட்ட பாடலை போட்டுள்ளீர்கள். துள்ளாத காதல் மன்னரையும், சோகமான நாட்டியப் பேரொளியையும் பார்த்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்றாலும் மிக இனிமையான பாடல்.
திரியை தாமதமாகப் பார்த்தாலும் என் கொள்ளுத்தாத்தா பற்றி நீங்கள் குறிப்பிட்டதை தாமதமில்லாமல் அவரிடம் கூறி உங்கள் பதிவையும் காண்பித்தேன். மகிழ்ச்சியடைந்தார். ‘உன்னைப் போலவே அவரும் (நீ்ங்கள்) சின்னப் பையன்தானா?’ என்று கேட்டார். ‘அப்படித்தான் சொல்கிறார் தாத்தா’’ என்றேன் நான். அதற்கு அவர், ‘‘பதிவுகளைப் பார்த்தால் முதிர்ச்சியும் பக்குவமும் தெரிகிறது. மஞ்சள் மகிமை பாட்டெல்லாம் வேறு போடுகிறார். நம்ப முடியவில்லையே. ஏறக்குறைய அவருக்கு என் வயது இருக்கும்போலிருக்கிறதே?’’ என்றார். உங்கள் பதிவுகளை படித்து மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
இத்தனை நாள் படிக்காமல் விட்டுப் போன உங்கள் பதிவுகளை நானும் படித்து மகிழ்ந்தேன் கல்நாயக். இருவர் பட பாடலை ‘வெண்ணிலா கியூப்’ என்று நீங்கள் புதுமையாக சிந்தித்து வர்ணித்திருப்பது ரசிக்கத்தக்கது. தமிழ்த்திரையில் நிலவு பற்றி வந்த பாடல்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் போட்ட பாடல்களை பார்த்தால் போதும். இன்னும் எவ்வளவு ஸ்டாக் வைத்துள்ளீர்கள்? ரவி சார் கூறியபடி சூரிய மண்டலத்துக்கும் செல்லும் எண்ணம் உண்டா?
நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். இரவும் நிலவும் பாடலுக்கு லைக் போட்டு விட்டேன். 2 லைக் போட முடியாது என்பதால் தேங்க்சும் போட்டு விட்டேன். நன்றி.
சின்னக்கண்ணன்,
வழக்கம்போல உங்கள் குறும்பு பதிவுகள் அமர்க்களம். ‘இரவும் நிலவும்..’ பாடலுக்கு உங்கள் விளக்கம் அபாரம். அந்தப் பாடலுக்கு இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை கேட்டதில்லை. படித்து குலுங்கி சிரித்தேன். நன்றி.
எனது பதிவுகளுக்கு பாராட்டு தெரிவித்த சகோதரி ஸ்டெல்லா ராக் அவர்களுக்கு நன்றி.
வாசு சார், கிருஷ்ணா சார் வராதது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. திரியை பார்க்கிறார்களா? என்று தெரியவில்லை. இருவரும் இல்லாத திரி சூரிய, சந்திரர்கள் இல்லாத வானம்போல இருக்கிறது. அனைவரின் அன்பான அழைப்புகளை ஏற்று இருவரும் திரிக்கு வர வேண்டும் என்று வேண்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மறந்து போன பாடல்கள் வரிசையில்
இது வெளிவந்தபோது அதிகம் வானொலியில் கேட்டது
https://www.youtube.com/watch?v=oeN1fVS-Psg
*
வாங்க கலை வேந்தன்.. செளக்கியமா…அண்ட் தாங்க்ஸ்..உங்கள் பாராட்டுக்களுக்கு..
வரும்போதுபாட்டுக் கொண்டுவந்திருக்கலாமில்லை.. பூகம்பம் நேப்பாளில் நடந்திருக்கிறது ..உருக்குலைந்த கட்டிடங்கள் மானுமெண்ட்ஸ் எல்லாம் பார்க்கும் போது மனது உருகி வேதனைப் படுகிறது..அதே சமயத்தில் எனக்குஒரு அரசியல் சம்பவம் நினைவுக்கு வருகிறது என்று ஆரம்பித்துசம்பவத்தை ச் சொல்லி இதையே ம.தி என்ன சொல்லியிருக்கிறாரென்றால்.. அப்படின்னு முடிச்சு ஒரு பாட் கொடுத்திருக்கலாம்..( உங்க ரூட் கரீட்டா சொல்லிட்டேனா)
*
கல்நாயக்..என்ன பண்றது..பகல்ல ஒரே வேலை.. ராத்திரிதான் வர முடியறது..( எதாவது தப்பாச் சொல்றேனா என்ன!) //வருஷமெல்லாம் வசந்தம்தான்.// இப்பவும் அப்படித் தான் ஓய் இருக்கு….ஆமா ஒரே ஒரு நிலவு அதுவும் ஒரே தடவை வர்றதவச்சுக்கிட்டு வராதவங்களை எல்லாம் வரவச்சுட்டீங்களே.. நீங்க தான்மார்க்கெட்டிங்பெர்ஸன்.. மண மேடை நல்ல பாட்டு கொ.வை.ஸ்ரீ!
பாருங்க ரவி வந்திருக்காரு.. வாங்க அண்ட் தாங்க்ஸ்ங்க
சூரிய மண்டலத்துல சுடுமேங்க.. ஹையாங்க்..! ம்ம் அழகா ஒருகட்டுரை எழுதுங்க
ஆதிராம், எஸ்.வாசு தேவன் வாங்க .. செளக்கியமா..பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.. ஆமா எஸ்.வாசுதேவன்..அந்த தீஸ்ரி மன் ஜில் ஆஜா ஆஜா போட்டுட்டீஙக்ளா என்ன..(ஹையா வலை விரிச்சாச்சு)
.rajesh.. எப்படி ஃபில் அப் பண்ணிக்கறது.. ம்ம் ஒங்க நிலாப் பாடல்களை இனிமேத் தான் ஒன்பை ஒன் கேக்கப்போறேன்.. தாங்க்ஸ்ங்க்ணா..
இனி அடுத்த போஸ்டில் வரப்போகிற பருவம் என்னன்னாக்கா…
பருவமே…பழைய பாடல் பாடு – 3
படக் படக்கென எழுதிவிடலாம் என்று தான் தொடர் ஆரம்பித்தால், வேலை..வேலை.. ப்ளஸ்ஸ்ஸ்ஸ் மைனஸான சோம்பல்…
அது என்னவோ கொஞ்சம் மசமசன்னு சோம்பலா உள்ளுக்குள்ள குறும்பா கொஞ்சம் கண்கள்ல கனவுகட்டி ஒர்ரே இடத்துல எதாவதுபடிச்சுச் சிரிச்சுக்கிட்டு இருக்கணும்னு தோணுது…அஃதாவது பருவப்பொண்ணுங்களோட மன நிலைன்னு சொல்லலாமா (அச்சோ நான் பருவப் பையன் ஆச்சே!) :)
அங்கம் வளர்ந்துவிடும் அழகாக நடைமலரும்
..ஆடவர்கண் பார்த்தாலே அனிச்சையாகத் தலைகுனியும்
சங்குக் கழுத்தழகும் சங்கமிக்கும் இடமழகும்
...சற்றே தனிமையிலே பார்த்தங்கே களிகொள்ளும்
சொந்தம் பாராட்டி சோர்வுவரத் தான்மிரட்டும்
…சொக்கி நிற்காமல் சுறுசுறுப்பாய் இருவென்றே
விந்தைக் கருத்துக்கள் வஞ்சியரும் கேட்பதுவும்
…மிதமாய் வந்துநிற்கும் மங்கையெனும் பருவமன்றோ..
ஆக பதினொன்றிலிருந்து பதினான்கு வரை பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்களைப் மங்கைப் பருவம் என்பார்கள்..
அதுல பார்த்தீங்கன்னா.. பாட்டுல்லாம் இருக்கு மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனின்னு.. ஆனா.. அந்தப் பாட்டுக்கு ஆடுற பெண்ணிற்குக் குறைந்த பட்சம் இருபத்திரண்டு வயதாவது இருக்கும் என நினைக்கிறேன்..
மங்கைக்கு என்ன பாட் போடலாம்..
என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
எனக்கு ரொம்பப்பிடித்த பாட்டு..ஏற்கெனவே போட்டிருந்தாலும்ம்ம் மீண்டும் மீண்டும்கேட்கலாம்..
https://www.youtube.com/watch?featur...&v=lL3amisRPzg
கார்த்திக் மோனிஷா..உன்னை நினச்சேன் பாட்டுப் படிச்சேன்..
இந்த மோனிஷா படம் வந்த சில மாதங்களில் இறந்துவிட்டார்கள் தெரியும் தானே..
பதினாறு வயதிருக்கும் என நினைக்கிறேன்..ஆனால் பார்வைக்கு இன்னும் சின்னப்பெண்ணாகத் தான் இருக்கிறார்..ம்ம்
*
இன்னும் ஒரு மங்கை..
மங்கை நான் கன்னித் தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன் ( அதானே பார்த்தேன் என நீங்கள் சொல்வது கேட்கிறது!) :)
கொத்து மலர்க்குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
துயில் கொண்ட வேளையிலே
குளிர் கண்ட மேனியிலெ
துணை வந்து சேரும்பொது சொல்லவோ இன்பங்கள் ( ஹீம்ம்.. )
https://www.youtube.com/watch?featur...&v=ceHH1WelVBs
அடுத்த பருவத்துல வர்றேன்..
Thanks Rajesh for reminding me. Here are the songs:
From Aravalli (1957)
Chinna peNNaana podhile annaiyidam........
http://www.youtube.com/watch?v=kGPO7CCU8eA
From "The Man Who Knew Too Much"(1956), a Hitchcock thriller
Que Sera Sera
( When I was a little girl I asked my mother......)
http://www.youtube.com/watch?v=xZbKHDPPrrc
Que Sera Sera was a very popular song and was translated into several languages. It also won an Oscar.
You might want to watch the movie.
அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்.
பல சொந்த அலுவல்கள் காரணமாகவும், ஆபிஸ் வேலைகள் நிமித்தமாகவும் திரிக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். தங்கள் எல்லோருடைய அன்பான அழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சின்னக் கண்ணன், கல்நாயக், ஸ்டெல்லா மேடம், கலை வேந்தன் சார், எனதருமை ராஜேஷ் அனைவர்க்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
கலைவேந்தன் சார்,
ஒரு எழுத்து விடாமல் திரியை தொடர்ந்து படித்து வருகிறேன். தங்கள் பங்களிப்புகளையும் படித்து மனம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி!
கல்நாயக், சின்னக்கண்ணன்,
அற்புதமான பங்களிப்புகளோடு திரியை கொஞ்சமும் தொய்வில்லாமல் அருமையாக நடத்தி வருகிறீர்கள். மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்து விட்டேன்.
உங்கள் இருவரின் சரமாரியான உழைப்போடு, ராஜேஷ், கலை சார், ராஜ்ராஜ் சார், மது அண்ணா இன்னும் பலரின் பங்களிப்போடு, திரி அமர்க்களமாகப் பயணிப்பதைப் பார்த்து நிஜமாகவே மனம் சந்தோஷப்படுகிறது. அனைவருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களும் நன்றிகளும்.
கல்நாயக்,
நிலாப் பாடல்களின் தொகுப்பு நில்லாப் பாடல்களாக வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல் மனதிற்குள் இன்பக்கணை தொடுக்கிறது. இதற்காக தாங்கள் எவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டுள்ளீர்கள் என்பதும் தெளிவாகப் புரிகிறது. நன்றி என்பது சம்பிரதாய வார்த்தை. விரைவில் நூறைத் தொட வாழ்த்துக்கள்.
தங்களின் 'ஞானஒளி' பாடல் என்னை இங்கே இழுத்து வந்து விட்டது என்றால் மிகையில்லை. சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ தெரியாது. நேற்றுதான்... உங்கள் பதிவு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்தான் தலைவரின் இறுதிக் கட்ட உச்ச நடிப்புகளை 'ஞானஒளி' யில் பல நூறாவது தடவையாக பிரம்மித்து போய் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். சற்று நாழிகைக்கெல்லாம் பார்த்தால் உங்கள் 'மண மேடை' பாடல் பதிவு. கடவுள் அனுகிரஹம் இல்லாமல் வேறு என்ன? ஐ மீன் நான் வணங்கும் 'ஆண்டனி' தெய்வம் ஆசி இல்லாமல் வேறு என்ன?
http://i1087.photobucket.com/albums/...115752.571.jpg
அதுவும் அவர் மாதா சிலையின் முன் நின்று,
"மாதாவே! என் மகளை தெருவில நிக்க வச்சுட்டியே! எனக்கேன் இந்த வாழ்வு மாதாவே!"
என்று புலம்பி 'டக்'கென்று திரும்பி, இரு கைகளையும் வயிற்றின் குறுக்கே கிராஸ் போல வைத்து, பின் உடனே படுகம்பீரத்துடன் கைகளை பின்கட்டி நடந்தபடி ,
"லாரன்ஸ்! Is a combination of cobra and the wounded tiger?"
என்று கர்ஜிப்பாரே!
(இந்த 'tiger' என்ற வார்த்தையை உச்சரித்து முடித்தவுடன் அந்த தெய்வத்தின் வாயை கவனியுங்கள். வலதுபுற உதடுகள் சற்றே மேலேறி, அதே சமயம் இடதுபுற உதடுகள் கீழறங்கி, இரு உதடுகளும் ஒட்டிய நிலையில், மேஜர் தனக்கு விடுத்திருக்கும் சவாலை அந்த முகம் எப்படி வெறித்தனமாக, ஆங்காரமாக, அதே சமயம் முரட்டுத்தனமாக எதிர்கொள்கிறது. (அந்த மீசையின் ஏறி இறங்கிய அம்சத்தை என்னவென்று எழுத!?) சற்றே மேல்நோக்கி பார்க்கும் அந்த முகத்தில்தான் எத்துணை வேதனை கலந்த வெறி? ("உன்னலதாண்டா நான் பெத்த மகளை அணுகக்கூட முடியவில்லை... இருடா! உன்னை வச்சுக்கிறேன்...) அதே சமயம் தன் இயலாமையையும் வெளிபடுத்தத் தயங்காது. அந்தக் கண்களில்தான் என்ன ஒரு ஆங்கார வெறி! கண்களை மூடிக் கொண்டு அந்த குரலைக் கேட்டால் மிரண்டு போவீர்கள். அந்த மீசைக்கும், பார்வைக்கும் ஒரு சிங்கமாகவே காட்சியளிப்பார். கோப சிங்கம், பாச சிங்கம் என்று இரண்டு குணங்களையும் மாற்றி மாற்றி காட்டுவார். எப்படியானாலும் சிங்கம் சிங்கம்தானே!
வேண்டாம் கல்நாயக். என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக ஆரம்பிக்கிறது. இதற்கு மேல் சத்தியமாக முடியாது.
தலைவரின் இன்னொரு அருமையான ஸ்டைல் பாடலோடு விரைவில் மீண்டும் வருகிறேன்.
அதுவரை உங்கள் அனைவரது அன்பையும் எண்ணியபடி,
உங்கள் அனைவரின் பதிவுகளை ரசித்தபடி
உங்கள் அனைவரின்
வாசுதேவன்.
(சி.க,
அடுத்த பாகத்தைத் தொடங்க இப்போதே ரெடியாகுங்கள்)