நன்றி SVN. நீங்கள் தந்த 'கனவா இது' சூப்பர். பாலுவும், ஜானகியும் ஆலாப்பில் உரையாடுவது பிரமாதம். நீங்கள் எடுத்து சொன்ன பிறகு இந்த பாடலை நான் கேட்க்கும் விதமே மாறி விட்டது.
நான் தரும் பாடல் வேறு ஜானர். கிராமிய வகை. ஜானகியின் அரிய பொக்கிஷம் இது. அதிகம் பேசப்படவில்லை. எளிதான ராகம். சோக பாடல் போல் தெரிந்தாலும், இது அந்த வகை இல்லை. மணமகளே வா திரைப்படத்தில், ராஜா சாரின் 'கன்னி மனம் கெட்டு போச்சு'. ஜானகியின் குரலில் நெளிவு சுளிவு அதிகம்.
https://youtu.be/Qf730IzTw68