நான் விரும்பி கேட்பதெல்லாம் பாத்ரூமில் பாடுவதற்கும்,பொது மேடையில் பாடுவதற்கும் உள்ள வித்யாசத்தை ,பொறுப்புணர்வை, பொது forum மற்றும் இணைய எழுத்துகளிலும் காண்பிக்க வேண்டும் என,என் தணியா விருப்பத்தையே என் பாணியில் அவ்வப்போது சொல்லி கொண்டுள்ளேன்.
நண்பர்களிடம் பேசி விளக்கி விட்டேன். இனி, நாங்கள் தேவை படும் போது , வருவோம். மற்ற படி ,புது கருத்துகளுக்கும்,மாற்றங்களுக்கும் ,வாசல் திறந்தே உள்ளது.சிறிது காலம் மதுர கானம்,ஜெமினி ,ரவி என்று இளைப்பாறி விட்டு (ஒரே இடத்தில் வாந்தி எடுத்தால் இடம் ரொம்ப அசுத்தமாகி விடாதா) பிறகு ,மனமிருந்தால் வருவோம். இல்லையென்றால் இதை கடைசி பதிவாக்கி மகிழவும்.(எவ்வளவுதான் போராடுவது,புரிந்து கொள்ள படாமலே??)
வழக்கம் போல filmography திரியில் ராகவேந்தர் சாரின் பணி சுமையை சிறிது குறைப்பேன்.மற்றோர்(மீள் பதிவு) மற்றும் என்னுடைய பதிவுகள் படம் சார்ந்து.
நிஜமாகவே பணி சுமையை நானே வலுவில் அதிக படுத்தி கொண்டுள்ளேன். சில சமயம் சனி,ஞாயிறு களும் என் வசமின்றி கழிகின்றன. இது வேறு என்னை சிந்திக்க விடாமல் மூச்சு முட்ட வைக்கிறது. இசையை பற்றி ,அது சார்ந்த மன எழுச்சி,நீட்சிகளை, நனவோடை உத்தியில் எழுதுவது (ராகங்கள் சார்ந்து)ஆசுவாசம் தருகிறது.
அணைத்த,எதிர்த்த,அணைத்து எதிர்த்த,எதிர்த்து அணைத்த உள்ளங்களுக்கு நன்றி .
அனைவருக்கும் நடிகர்திலகம் என்ற ஞான தந்தை சார்பில் தந்தையர் தின வாழ்த்துக்கள்.