-
Quote:
Originally Posted by
ravichandrran
உட்கார்ந்து இருப்பவர்கள் : இடமிருந்து வலமாக ......
திருவாளர்கள் : அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் நாராயணசுவாமி முதலியார், நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர், கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி, நாஞ்சில் மனோகரன், ஜி. ஆர்.எட்மண்ட், புரட்சித்தலைவரின் நம்பிக்கைக்குரிய அவரது உண்மை விசுவாசி திரு. ஆர். எம். வீரப்பன் ஆகியோர்.
நின்றுகொண்டிருப்பவர்கள் : .இடமிருந்து வலமாக ....
திரு கே. ராசாமுகம்மது, பி. டி சரஸ்வதி அம்மையார், மறைதிரு ராகாவானந்தம், பி. சவுந்தரபாண்டியன், கா. காளிமுத்து, சி. பொன்னையன் மற்றும் கே. குழந்தைவேலு ஆகியோர்.
மந்திரிசபை புகைப்படத்தை வெளியிட்டமைக்கு நன்றி திரு. ரவிச்சந்திரன் அவர்களே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
30-06-1977 அன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், அண்ணா சாலையில் கூடிய லட்சக்கணக்கான மக்களிடையே ஆற்றிய எழுச்சி மிகு 5 நிமிட உரை :
http://i60.tinypic.com/rjp8wp.jpg
அன்புக்குரிய தாய் குலமே ! என் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புக்களே ! இதய தெய்வம் அண்ணாவின் மீது ஆணையிட்டு உறுதி எடுக்க விரும்புகிறேன்.
அங்கு ( ராஜாஜி மண்டபத்தில்) நடந்தது அரசாங்க சடங்கு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அமரர் அண்ணா அவர்கள் சொன்னார். அமைச்சரவையின் சார்பில், தமிழக மக்களுக்கும், பிற நாடுகளிலும், பிற மாநிலங்களிலும், வாழும் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மக்களுக்கும் சேவை செய்யக் கடமைப்பட்டு இருக்கிறோம்.
மக்களுடைய தேவையை நிறைவேற்றுவதற்காகவும், மக்கள் விருப்பத்தை சட்டமாக்குவதற்காகவும்தான் மக்கள் நம்மை தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.
லஞ்சமற்ற - ஊழலற்ற ஆட்சி நடத்துவோம். நிர்வாகத்தில் தலையிடாமல், நீதிமன்றத்தில் குறுக்கிடாமல் பணியாற்றோவோம். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள மாபெரும் பணியினை உயிரை கொடுத்தேனும் நிறைவேற்றுவோம்.
இழப்புக்கள் ஏற்பட்டாலும் எதிர்த்து நின்று கடமையை. நிறைவேற்றுவோம். அண்ணா மீது ஆணை. உங்கள் ஆசியோடு பணி செய்யப் புறப்படுகிறோம். ஆசி கூறுங்கள்.
அண்ணா நாமம் வாழ்க !================================================== ================================================== ==========
புரட்சித்தலைவரின் இந்த எழுச்சி மிகு உரையை நேரில் கேட்கும் பாக்கியத்தை பெற்றவர்களில் நானும் ஒருவன். மலையாள படங்களை திரையிடும் " நியூ எல்பின்ஸ்டன் " என்ற ஒரு திரையரங்கம் அண்ணா சாலையில் முன்பு இருந்தது. அது பின்பு மூடப்பட்டது.
அன்றைய தினம் (30-06-1977) அந்த திரையரங்க வளாகத்தின் அருகே உள்ள பாம்பே ஹல்வா ஹவுஸ் கடையின் முன்பு திரண்டிருந்த மக்களில் ஒருவனாக புரட்சித் தலைவரின் புன்முகத்தை காணும், பெரும்பேறினை பெற்றேன். எங்கள் பொன்மனச்செம்மல் அன்பர் குழு நண்பர்கள் மற்றும் திருவொற்றியூர் நகர அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அடலேறுகள் பலருடன் இக்கூட்டத்தில் பங்கு பெற்றது என் வாழ் நாளில் நான் மறக்க முடியாத நாள்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
29-06-1977 அன்று மாலை. மந்திரிகள் பட்டியலை அளிக்க கவர்னர் மாளிகைக்கு நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் செல்லும் காட்சி !http://i61.tinypic.com/rrtk6w.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
30-06-1977 அன்று வெளியான "மாலை முரசு" பத்திரிகையில், நம் இதய தெய்வம் பற்றி வெளியான ஒரு பெட்டிச்செய்தி !
http://i57.tinypic.com/i4k03d.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
மேடையில் வீற்றிருந்தாலும், மக்கள் நலனுக்காக, உடனே கோப்பு ஒன்றில், மேடையிலேயே கையொப்பமிடும் நம் மக்கள் தலைவர் :
http://i58.tinypic.com/nbuqll.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i57.tinypic.com/244tx08.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.
எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.
அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.
சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.
இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.
“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.
நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.
உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.
உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.
முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!
courtesy - panruttiyaar
-
30-06-1977 அன்று நம் மன்னவன் மகுடம் சூடிய போது அலை மோதிய மக்கள் கூட்டம் அண்ணா சாலையில் பெரியார் சிலையில் இருந்து வெலிங்டன் தியேட்டர் வரையிலும், வாலாஜா சாலையில் திருவல்லிக்கேணி சந்திப்பு வரையிலும், இன்னொரு பக்கம் பிளாக்கர்ஸ் சாலை வரையிலும் நிரம்பி வழிந்தது. புரட்சித் தலைவரின் உரையை தெளிவாக கேட்பதற்காக அப்பகுதி முழுவதும் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.
http://i62.tinypic.com/20r1cwp.png
தமிழில் பதவி ஏற்பு :
ஆளுநர் பட்வாரி அவர்கள் பதவி ஏற்பு உறுதி மொழியையும் ரகசியக் காப்ப்பு பிரமாணத்தையும் ஆங்கிலத்தில் படித்தார். நம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் அந்த வாசங்களை தமிழில் திருப்பி சொன்னார் :
எம். ஜி. ராமசந்திரன் என்னும் நான், சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியும், ஒருமைப்பாட்டையும், நிலை நிறுத்துவேன் என்றும், தமிழக அரசின் அமைச்சராக உண்மையாகவும் உளச்சன்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் அரசியலமைப்புக்கும், சட்டத்துக்கும் ஒப்ப அச்சமும், ஒரு சார்பும் இன்றி, விருப்பு - வெறுப்பு விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன். பதவி ஏற்பு உறுதி மொழியினை புரட்சித் தலைவர் தமிழில் கூறி முடித்தவுடன் அதற்கான அரசாங்கப் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
ரகசிய காப்பு
அடுத்து ரகசிய காப்பு பிரமாணத்தை ஆளுநர் ஆங்கிலத்தில் படிக்க பொன்மனச்செம்மல் அவர்கள் அதனை தமிழில் கூறினார். எம். ஜி. ராமசந்திரன் என்னும் நான், தமிழக அரசின் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய கவனத்துக்கு வரும் அல்லது எனக்கு தெரியப் படுத்தப்படும் எந்தப் பொருளையும், அமைச்சரின் கடமைகளை நிறைவேற்றத் தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ, பலரிடமோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். இவ்வாறு கூறியவுடன், இந்த வாசகங்களுக்கடியில் அரசுப்பதிரத்தில் கையெழுத்திட்டார்.
ராஜாஜி மண்டபத்தில் காலை 9.15க்கு தொடங்கிய இந்த பதவியேற்பு வைபவம் சுமார் 40 நிமிடங்கள் நீடித்து காலை 9.55 க்கு முடிவடைந்தது.
விழா முடிந்த காலை 9.55 முதல் 10.15 வரை புரட்சித் தலைவரால் மண்டபத்தை விட்டு வெளியே வர இயலவில்லை. மண்டபத்தில் இருந்த அனைவரும், நம் பொன்மனசெம்மலுடன் கை குலுக்கவும், மாலை அணிவிக்கவும் போட்டி போட்டுக் கொண்டு நெருக்கியடித்துக் கொண்டு வந்தனர். அந்த வரவேற்புகளையும், வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்ட நம் புரட்சித்தலைவர் அவர்கள் ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் " புரட்சித் தலைவர் வாழ்க " என்று எழுப்பிய வாழ்த்து முழக்கங்கள் விண்ணை பிளந்தன. அவர்களனைவருக்கும், நம் ஒப்பற்ற இதய தெய்வம் கையசைத்து, இரு கரம் கூப்பி வணக்கங்களை பணிவுடன் தெரிவித்தார்.
பிறகு திறந்த வேனில் நம் புரட்சித்தலைவர் அவர்கள் ஏறிக்கொண்டு அண்ணா சிலைக்கு ஊர்வலமாக சென்றார். விழாக்கு, அ.தி.மு.க. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், அப்போதைய தலைமை நீதிபதி கோவிந்தன் நாயர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மற்றும் முப்படை தளபதிகள் வந்திருந்தனர்.
நம் புரட்சித் தலைவரின் மனைவி அன்னை ஜானகி அவர்களும், அமைச்சர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். எம். ஜி. சக்கரபாணி, நடிகர்கள் மனோகர், நம்பியார், இயக்குனர் ப. நீலகண்டன், அனைத்துலக எம். ஜி. ஆர். மன்ற தலைவர் முசிறிப்புத்தன், சத்தியவாணி முத்து, தாரா செரியன், மால்கம் ஆதி சேஷையா ஆகியோரும் வந்திருந்தார்கள்.
நடிகை லதா தனது சகோதரியுடன் வந்திருந்தார்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
. .
-
இரண்டாயிரம் பதிவுகள் கண்ட எங்கள் இனிய நண்பர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள் இடைவிடாத பதிவுகள் வழங்கிட இதய தெய்வத்தின் ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
http://i60.tinypic.com/149bka9.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
சத்துணவு தந்த சரித்திர நாயகன்
ஐக்கிய நாடுகள் சபையில் நம் புரட்சித் தலைவரின் பெயர் உச்சரிக்கப்பட்டு அவர் கொணர்ந்த சத்துணவு திட்டம் பற்றிய விரிவான உரையை பதிவு செய்தார், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமசந்திரன் அவர்கள்.
அப்படிப்பட்ட மகத்தான திட்டம் இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 33வது ஆண்டு காண்கிறது. இத்திட்டத்தின் படி, 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளும், மாணவ மாணவியரும், பள்ளிக்கூடங்கள், மூலமாகவும், 2 முதல் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு நல்வாழ்வு நிலையங்களின் மூலமாகவும் பயன்பெறுவர்.
சத்துணவு திட்டத்தை சிறப்ப்பாக நடத்துவதற்காக புரட்சித்தலைவர் தலைமையில் ஒரு உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்த உயர் மட்டக் குழுவில் நம் மன்னவனால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வருமாறு :
1. நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன்
2. கல்வி அமைச்சராக இருந்த அரங்க நாயகம்
3. சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கோமதி சீனிவாசன்
4. சட்ட மேலவை உறுப்பினராக இருந்த ஜி. சாமிநாதன்
5. சட்ட மேலவை உறுப்பினராக இருந்த தாரா செரியன்
6. சென்னை நகர ஷெரிப்பாக இருந்த சிவந்தி ஆதித்தன்
7. டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்
8. டாக்டர் அறம்
அப்போதே, இந்த இலவச மதிய சத்துணவுத் திட்டத்துக்காக 100 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 60 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் சமூக நல மையங்கள் அமைக்கப்படும் என்று நம் புரட்சித் தலைவர் அவர்கள் அறிவித்தார்.
2 முதல 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வழங்கும் உணவு 80 கிராம் அரிசி, 10 கிராம் பருப்பு, 7 கிராம் எண்ணெய் மற்றும் காய்கறி அடங்கியதாக இருக்கும்.
5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வழங்கும் உணவு 100 கிராம் அரிசி மற்றும் பருப்பு, 50 கிராம் கூட்டுக்காய்கறி அடங்கியதாக இருக்கும் என்று நம் புரட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த சத்துணவு திட்டத்தை 01-07-1982 அன்று திருச்சி அருகே திருவெறும்பூர் யூனியனில் அடங்கிய பாப்பாக்குறிச்சியில் முதல்வர் புரட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
முதலில் பாப்பாக்குறிச்சி குழந்தைகள் நல வாரிய நிலையத்தை நம் இதய தெய்வம் அவர்கள் திறந்து வைத்தார். பின்பு, அங்கு குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பதற்காக வைக்க பட்டிருந்த பொருகளை பார்வையிட்டார். அதன் பின்பு, மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். வரிசையாக 2000 குழந்தைகள் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு, நம் புரட்சித்தலைவர் உணவு பரிமாறினார். சாம்பார் சாதம், கீரை, பாயசம், வாழைப்பழம் ஆகியவை பரிமாறப்பட்டன. பிறகு, நம் பொன்மனசெம்மலும் அந்த குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிட்டார்.
http://i1273.photobucket.com/albums/...pse23e1160.jpg
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், அன்றைய தினமே அமைச்சர்கள் கலந்து கொண்டு இந்த சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்