வி.குமாரின் இசையமைப்பில் இன்னொரு அருமையான படம் வெகுளிப்பெண் என்று ஞாபகம்.
"கண்ணான கண்ணுறங்கு", "முள்ளுக்கு ரோஜா சொந்தம்", "எங்கெல்லாம் வளையோசை", "தித்திக்கின்றதா முத்தமிட்டது", " நீதான் மோகினியோ" என்ற பாடல்கள் எல்லாமே இனிமைதான்.
Printable View
வி.குமாரின் இசையமைப்பில் இன்னொரு அருமையான படம் வெகுளிப்பெண் என்று ஞாபகம்.
"கண்ணான கண்ணுறங்கு", "முள்ளுக்கு ரோஜா சொந்தம்", "எங்கெல்லாம் வளையோசை", "தித்திக்கின்றதா முத்தமிட்டது", " நீதான் மோகினியோ" என்ற பாடல்கள் எல்லாமே இனிமைதான்.
நண்பர்களே,
மனதை மயக்கும் மதுரகானங்களால் இன்றும் மக்கள் மனதில் சிரஞ்சீவியாய் நிலைத்திருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் 50வது ஆண்டு நிறைவு விழா வரும் 16.08.2014 சனிக்கிழமை அன்று மாலை சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. நுழைவுச் சீட்டு பற்றிய விவரங்கள் கீழே உள்ள நிழற்படத்தில் காணும் தொலைபேசி எண்களில் தெரிந்து கொள்ளலாம்.
https://scontent-a-sin.xx.fbcdn.net/...22427685_n.jpg
CONGRATULATIONS VASU SIR
http://i61.tinypic.com/123se2u.jpg
http://i60.tinypic.com/maw4sg.jpg
http://youtu.be/_YI8AHFvMcg
வாசு ஜி காலை வணக்கம் வாங்கோ வாங்கோ....
வி.குமாரின் இசையை மறக்க முடியுமா .. எத்தனை எத்தனை பாடல்கள் .எத்தனை முத்துக்கள்
பொதுவாகவே வி.குமார் வாலி கூட்டணி ஏ கிளாஸ்.
கண்ணதாசனுடனுன் பணியாற்றினார்
அப்படி வி.குமார் கண்ணதாசன் கூட்டணியில் எனக்கு மிகவும் பிடித்த படம் ஆயிரம் பொய்
அதில் புலவர் சொன்னதும் பொய்யே பாடலை பாடகர் திலகும் இசையரசியும் இசைத்த அற்புத காதல் பாடல்
https://www.youtube.com/watch?v=yuh5jpLmvus
தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை பாடல் இசையரசியின் குரலில் மிகவும் அழகான பாடல்
http://www.dailymotion.com/video/x16...969_shortfilms
கோ/மது சார்,
எனது இன்னொரு பிரியமான பாடகி சொர்ணாவை பெருமைப்படுத்தியதற்கு நன்றி! என்னால் மறக்கவே முடியாத இன்னொரு பாடகி சொர்ணா. சொர்ணாவின் பாடல்கள் என் சேமிப்புக் கிடங்கில் உள்ளன.
இன்னும் சில அபூர்வங்கள்.
இளமைக் கோவில் ஒன்று- ஜானகி சபதம்
ஓ..மம்மா... டியர் மம்மா- 'மங்கள நாயகி' சுசீலாம்மாவுடன்
மாவில மாப்பிள்ள மண்ணாங்கட்டி போல- 'மங்கள நாயகி'
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் - நல்ல பெண்மணி
பட்டத்து ராஜன் வந்தது போல - நல்ல பெண்மணி
ஆட்டுக்கு வால அளந்து வச்சவன் புத்திசாலி - 'புத்திசாலிகள்'. (ஜமுனா ராணி, பி.பி.எஸ். எஸ்.வி.பொன்னுசாமி, பி.டி.சம்பந்தம் இவர்களுடன்) செம பாட்டு.
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்னு- பத்தாம் பசலி (பாடகர் திலகத்துடன்)
பனி மலரோ- பொன்வண்டு (பாடகர் திலகத்துடன்)
முத்தம் முத்தம் செந்தேனல்லவோ- 'புத்திசாலிகள்'.(பாடகர் திலகத்துடன்)
கனவுகளே ஓராயிரம் கனவுகளே- ராஜநாகம்
மாமியார்க்குக் கல்யாணம்- 'புத்திசாலிகள்'.
காலை வணக்கம் ராஜேஷ் சார்.
தங்களது முத்துமுத்தான 2000 பதிவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.( சரக்கு அத்தனையும் முறுக்கு)
இசையரசியின் புகழை எட்டுத் திக்கும் பரவச் செய்யும் தங்கள் சேவை பாராட்டுதல்களுக்கு அப்பாற்பட்டது.
ராஜேஷ் சார்,
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
என்னுடைய மிக விருப்பமான அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்.
இப்பாடல் சென்சார் ஆவதற்கு முன் பிரச்னைக்கு உள்ளானது.
பாடலில் சில வரிகளை மாற்றி விடும்படி அதிகாரிகள் கூறி விட்டனராம்.
பிரச்சனைக்குரிய வரிகள்.
என்னதான் பெண்ணிடத்தில் இத்தனை இன்பம்
இங்குதான் தோன்றியது முத்தமிழ் சங்கம்
பொன்னிலே தோய்த்தெடுத்த பூவையர் அங்கம்
இதுவரி பிரச்சனை இல்லை.
அடுத்த வரிதான்.
'போதையில் ஆடவைக்கும் ஆடவர் அங்கம்'
பின்
'போதையில் ஆடவைக்கும் ஆடலரங்கம்'
என்று மாற்றி விட்டார்கள்.
ஆனால் என்ன ஒரு அழகான பாடல். நன்றி சார்.
'தில்லையிலே' உச்சரிப்பில் ஒருதடவை 'தில்.....லையிலே' என்று சொக்க வைப்பது மாதிரி ஒரு இழு இழுப்பார் பாருங்கள் சுசீலாம்மா. அற்புதம்.