http://i67.tinypic.com/24ez23r.jpg
உண்மையான ரசிகர்கள் - தொண்டர்கள் - பொதுமக்கள் ஆதரவு - எம்ஜிஆரின் வெற்றி மேல் வெற்றி .
திரு மகாலிங்கம் சார்
தினத்தந்தி பற்றிய தங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே .
1967க்கு முன்பு தினத்தந்தி பத்திரிகை மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் விமர்சனத்தை எந்த அளவிற்கு மோசமாகவும் தரக்குறைவாகவும் எழுதியது என்பதை அன்றைய மக்கள் திலகத்தின் ரசிகர்கள் நன்கு அறிவார்கள் . 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தினத்தந்தியில் 1972 வரை எம்ஜிஆர் படங்களின் விளம்பரங்கள் செய்திகள் தொடர்ந்து இடம் பெற்றது .பின்னர் 1972-1977 வரை மீண்டும் தினத்தந்தியில் எம்ஜிஆர் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது .பின்னர் தினத்தந்தியின் வியாபார போக்கு நாடறிந்தது ,
அன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தினசரி பத்திரிகைகள் வார , மாத இதழ்களான
தினத்தந்தி
தினமணி
நவமணி
நவசக்தி
சுதேசமித்திரன்
ஹிந்து ஆங்கில பத்திரிகை
பேசும்படம்
குண்டூசி
கலைப்பூங்கா
அலைஓசை
கல்கி
ஆனந்த விகடன்
குமுதம்
மலைமுரசு பேப்பரில் எம்ஜிஆர் பற்றியும் எம்ஜிஆர் படங்களை பற்றியும் எதிர்மறையான தகவல்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தது .ஆனால் மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களை பற்றி சிறிதும் கவலை படவில்லை . அதைபோல் அவருடைய ரசிகர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை .
மாறாக யாரெல்லாம் எம்ஜிஆரை தாக்கினார்களோ அவர்கள் எல்லாம் தங்கள் தவறை உணர்ந்து எம்ஜிஆரை பற்றியும் அவரின் நடிப்பை பற்றியும் மனித நேயத்தை பற்றியும் , அவரின் ஆளுமைகளை பற்றியும் . எம்ஜிஆரின் திரை உலக சாதனைகள் பற்றியும் அரசியல் வெற்றிகள் பற்றியும் அனைவரும் எழுதிவருவது மூலம் எம்ஜிஆரின் பொறுமைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி .என்பதை அறியலாம் .
எம்ஜிஆர் தன்னை நம்பினார்
தன்னுடைய ரசிகர்களை நம்பினார்
தொண்டர்களை நம்பினார்
மக்களை நம்பினார்
விளைவு ?
வெற்றி மேல் வெற்றி கண்டார் .
கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு வருகிறார் .