-
Thanks to ntfans
*அமெரிக்கர்களை அசரடித்த நடிகர் திலகம் !*
சிவாஜி கணேசனுடன் டென்னிஸ் குக்ஸ் என்ற வெளியுறவுத் துறை அதிகாரியும் வேறு இரண்டு நண்பர்களும்தான் அமெரிக்காவைச் சுற்றிவந்தனர்.
டென்னிஸ் குக்ஸ் சரளமாகத் தமிழ் பேசுபவர். அமெரிக்கத் திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், கதை வசனகர்த்தாக்கள் என்று அனைவருமே எங்கு போவதாக இருந்தாலும் மக்கள் தொடர்பு அதிகாரி, விளம்பரத் தூதர், போட்டியாளர்களை வசைபாடித் தூற்றுபவர் என்று ஐந்தாறு பேர் உள்ள சிறிய படை இல்லாமல் செல்ல மாட்டார்கள்.
சிவாஜி எளிமையாக வந்திருப்பதை வியப்போடு பார்த்தார்கள். இங்கு மட்டுமல்ல, இந்தியாவிலும் தனக்கு இப்படி யாருமில்லை என்றபோது, அவர்களுடைய விழிகள் வியப்பால் விரிந்தன. எனக்கு நானே விளம்பரத் தூதர் என்று சிரித்துக்கொண்டே அவர் சொன்னபோது ஆடிப்போனார்கள்.
சிவாஜி போன இடங்களிலெல்லாம் அனைவரும் கேட்ட கேள்விகள், "உங்களுடைய சொந்த வாழ்க்கையை நிருபர்கள் மோப்பம் பிடித்துவிடாமலிருக்கவும், சொந்த விஷயங்கள் வெளியே பேசப்படாமலிருக்கவும் என்ன உத்தியைக் கையாளுகிறீர்கள்?" என்பவைதான். "எங்கள் நாட்டு சினிமா நிருபர்கள், நாங்கள் நடிக்கும் படத்தின் கதை, அதில் எங்களுடைய கதாபாத்திரம் ஆகியவற்றோடு நிறுத்திக்கொள்வார்கள்" என்று பதிலளித்திருக்கிறார்.
"உங்கள் திரைப்படங்களில் முத்தக் காட்சிகளுக்கு அனுமதி இல்லையாமே, ஆணும் பெண்ணும் அன்பாக இருப்பதைக் காட்ட என்ன செய்வீர்கள்?" என்று கேட்டுள்ளனர். "லேசாகக் கட்டி அணைப்பதன் மூலமும் கைகளைப் பற்றுவதன் மூலமுமே காதலையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவோம், அதுவே போதுமானது" என்றார். ஆனால், இந்தப் பதில் அமெரிக்கர்களுக்குத் திருப்தி தரவில்லை. "அழுத்தமாக ஒரு முத்தம் தருவதைப் போல இதுவெல்லாம் வருமா?" என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர், "இந்தியர்கள் பாவம், எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக் கொள்பவர்கள்போல இருக்கிறது" என்று ஆதங்கப்பட்டுள்ளனர்.
ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பிரெடரிக் மார்ச், ஹென்றி ஃபோன்டா, ஷெல்லி விண்டர்ஸ், பர்ட் லங்காஸ்டர் ஆனாலும் சரி, புதிதாக நடிக்க வந்தவர்களானாலும் சரி, எல்லோருடனும் உற்சாகமாகவும் கண்ணியமாகவும் பேசியிருக்கிறார் சிவாஜி.
தொலைக்காட்சியில் நடிக்க வரும் பயிற்சியற்ற கலைஞர்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கும் சென்றிருக்கிறார். சிறுசிறு வேடங்களை ஏற்று படிப்படியாக முன்னேறி மாபெரும் கலைஞனான அவரைச் சக கலைஞர்கள் மரியாதையோடும் பிரமிப்போடும் பார்த்தார்கள்.
அவர்களுடைய நாடக அரங்க அமைப்புகளையும் காட்சி ஜோடனைகளையும் காட்சிகளை மாற்றும் உத்தியையும் கருவிகளையும் கண்டு வியந்தார் சிவாஜி.
'ரேடியோ சிட்டி மியூஸிக் ஹால்' என்ற அந்த அரங்கத்தைப் போல இந்தியாவிலும் நிறைய உருவாக வேண்டும் என்ற ஆசையை சிவாஜி உரக்க வெளிப்படுத்தினார்.
இந்தியத் திரைப்படங்கள் அமெரிக்காவில் ஓடாது என்று ஒரு விநியோகஸ்தர் கூறியபோது, அதை வன்மையாக மறுத்தார் சிவாஜி. சத்யஜித் ராய் படம் விதிவிலக்கு என்றார் ஒரு அமெரிக்கர்.
"நீங்கள்கூட சத்யஜித் ராய் படத்தில் நடித்ததால்தானே புகழ்பெற்றீர்கள்?" என்றுகூட ஒருவர் கேட்டார். கேள்வி கேட்டவர்களின் அறியாமையை சிவாஜி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
*பெருமிதத்தோடு வழியனுப்பிய சென்னை*
அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில், இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 1962-ல் இரண்டு மாத சுற்றுப் பயணம் மேற்கொண்டார் சிவாஜி. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் பம்பாய் சென்று, அங்கிருந்து அமெரிக்கா சென்ற அவரை வழியனுப்ப வந்தவர்களின் எண்ணிக்கையும் உற்சாகமும் சென்னை மாநகரம் அதுவரை கண்டிராதது.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகரை அமெரிக்க அரசு கெளரவித்திருப்பது அதுவே முதல் முறை. சாதாரண சுற்றுலாப் பயணி அல்ல; முக்கிய அரசு விருந்தினர் என்ற அந்தஸ்து அவருக்கு. திறந்த ஜீப்பில் சென்னை விமான நிலையத்தைச் சுற்றிவந்த சிவாஜி, தன்னுடைய ரசிகர்களின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் அன்போடு தலைவணங்கி ஏற்றார்.
புறப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகத் தினமும் ஒரு பாராட்டுக் கூட்டம், வழியனுப்பு விழா என்று 34 வயது சிவாஜியை அயரவைத்தனர் பல்வேறு திரையுலக நண்பர்களும் சங்க நிர்வாகிகளும். வருவதற்கு இரண்டு மாதங்களாகும் என்பதால், கையில் இருக்கும் திரைப்படங்களை முடித்துக்கொடுக்க அன்றாடம் 18 மணி நேரம் இடைவிடாமல் உழைத்தார் சிவாஜி. உரிய நேரத்துக்குச் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் செயல்பட்டதால் வழியனுப்பு நிகழ்ச்சிகளில்கூடக் களைப்போடுதான் காணப்பட்டார். அவசரமான இந்த நேரத்திலும் அவர் வேகமாக நடித்துக்கொடுத்ததுதான் மூன்று வேடப் படமான ‘பலே பாண்டியா’.
இந்த விழாக்களிலேயே முக்கியத்துவம் வாய்ந்தது சர்வதேசத் திரைப்படச் சங்கம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் அதிகாரி டாக்டர் தாமஸ் டபுள்யு. சைமன்ஸ் தலைமை வகித்தார். நகரின் தனி அடையாளமான மவுண்ட் ரோடு 14 மாடி எல்ஐசி கட்டிடத்தின் புல்தரையில் நிகழ்ச்சி நடந்தது.
இந்திய, அமெரிக்கக் கொடிகள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகளும் அந்த இடத்தை அலங்கரித்தன.
சிவாஜி கணேசன் இந்தியாவுக்கு மட்டுமே உரியவரல்ல, ‘உலக நாயகன்’ என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டின கொடிகள்.
இந்திய, அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள் பரஸ்பரம் இரு நாடுகளையும் சென்று பார்ப்பதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே புரிதல்களும் அன்பும் பெருகவும், உறவு வலுப்படவும் உதவும் என்று தூதர் தாமஸ் சைமன்ஸ் சுட்டிக்காட்டினார்.
சர்வதேசத் திரைப்பட சங்கத்தின் ஹாலிவுட் கிளை நிர்வாகிகள் முதல் முறையாக இந்தியத் திரைப்பட நடிகர் ஒருவரைக் கௌரவிப்பதைப் பூரிப்புடன் அவர் கூறினார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபைத் தலைவர் ஏ.எல்.சீனிவாசன், சிவாஜியை வழியனுப்பும் நிகழ்ச்சியில் சர்வதேசத் திரைப்பட சங்கத் தொடக்கமும் அமைவது மிகவும் பொருத்தமானது என்றார்.
சர்வதேசத் திரைப்பட சங்கப் புரவலரும் எல்.ஐ.சி. மண்டல மேலாளருமான எச்.பலராம் ராவ், நடிகர் ஜெமினி கணேசன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர். நடிகை சவுகார் ஜானகி நன்றி கூறினார். எம்.எல்.வசந்தகுமாரியின் இறைவணக்கப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ‘ஃபாலோ தி சன்’ என்ற பயணக் கதைப் படத் திரையிடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d5&oe=5ED6E3AF
Thanks Vijaya Raj Kumar
-
நாளை 06/05/2020 வேந்தர் டி.வி. யில் காலை 10.00 a.m. மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம்.¶
"உனக்காக நான்" கண்டு களியுங்கள். ¶
இதில் நடிகர்திலகம், ஜெமினிகணேசன், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to Change.
-
'சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை, சொல்லவா..கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா...கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா.....'
நாளை 06/05/2020 - காலை 10.00 a.m. மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில்..
நடிகர் திலகம் நடித்த - மகத்தான அண்ணன், தங்கை காவியம்
" பாசமலர் " - படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
-
பாலும் பழமும்-1961.
ஒரு முக்கோண காதல் அல்ல மணவாழ்வு கதை. காதல் வாழ்வு என்பது மக்களுக்கும் ,நாட்டுக்கும்,உலகத்துக்கும் சேவை செய்யும் உன்னத நோக்குடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை சொல்லி ,பிரமாண்ட வெற்றி பெற்ற படத்தை பற்றி கேட்டதுண்டா?
உலகம் தோன்றிய நாளிலிருந்து ,இருந்து வரும் ஒரு உன்னத ,மக்களை காக்கும் தொழில் செய்யும் அனைவரும் ,ஒரு படம் பார்த்து தங்கள் தொழிலையே நினைத்து பெருமிதம் கொண்டு ,அந்த படத்தின் நாயகனை பிரதி செய்து லட்சியமாக்கிய அதிசயம் கேட்டதுண்டா?
தமிழின் ஒரே ஸ்டார் நடிகன் ,முப்பது வயது இளைஞன் , தூக்கி வாரிய தலை முடியுடன், சில நரை சேர்த்து (salt &Pepper look )லட்சியவாதி மருத்துவராய் 1960 களில் நடித்து ,ஊரையே மலைக்க வைத்த அற்புதம் கண்டதுண்டா?
ஒரு தத்துவ பாடல், பாடல் ,இசை, நடிகனின் பங்களிப்பு(பாடகனும்) ஆகியவற்றால் அமரத்துவம் கண்டு, இன்றளவும் பெஞ்ச்மார்க் என்று சொல்ல படும் தர உன்னத அளவுகோலாக cult status அடைந்த கதை தெரிய வேண்டுமா?
உன்னத மனிதர்களை வைத்தே ,ஒரு படம் முழுவதையும் சுவாரச்யமாக்கும் கலை தெரிய வேண்டுமா?ரசிகர்கள் பாத்திரங்களுடன் ஒன்றி பயணித்த பேரதிசயம் நிகழ்ந்த வரலாறு அறிய வேண்டுமா?
கதை,வசனம்,இயக்கம்,நடிப்பு,பாடல்கள்,படமாக்கம் அனைத்திலும் உயரம் தொட்டு ,சமூகத்தின் மீது அக்கறையுள்ள பார்வை, அனைத்து ரக(நகரம்,கிராமம்) ஆண் பெண் ரசிகர்களை ஒருங்கே கட்டி போட்ட அறுபதுகளின் ஒரு படத்தை காண வேண்டுமா?
நடிகர்களின் இமயம், கதாசிரிய இமயம் (ஜி.பாலசுப்ரமணியம்),இயக்குனர்களின் இயக்குனர் ,கவிஞர்களின் கவிஞன்,மெல்லிசை சக்ரவர்த்திகள் இணைந்து நடத்திய கலை சாம்ராஜ்யம் தான் பாலும் பழமும்.
ஒரு செல்வ குடும்பத்தால் எடுத்த வளர்க்க பட்டு ,மருத்துவம் முடிக்கும் அனாதையான ரவி, தன்னுடைய லட்சியமாக கொள்வது புற்று நோய்க்கு மருத்துவ தீர்வு. அதற்கு உறுதுணையாக நிற்கும் சாந்தி என்ற செவிலி (nurse ) அனாதையாக நிற்கும் போது ,அவள் தன் லட்சியத்துக்கும் துணை நிற்பாள் என்று மணமுடிக்கிறான் .எடுத்த வளர்த்த பெரியவர்கள் தங்கள் பெண் நளினியை ரவிக்கு மணமுடிக்க எண்ண ,ரவியின் விருப்பத்தை அறிந்து பெருந்தன்மையாக அங்கீகரிக்கின்றனர்.மணவாழ்வில் சாந்தியின் அன்பினால் கவர படும் ரவி, ஒரு கட்டத்தில் முற்றிய காச நோய் கண்ட மனைவியை விட்டு நகராமல் தொழிலை உதாசீனம் செய்ய, அவனை விட்டு அகல்கிறாள் சாந்தி. தான் ஒரு விபத்தில் இறந்ததாக நம்ப வைக்கிறாள். பிறகு விதிவசத்தால் நளினியின் பிடிவாதத்தால் அவளை மணந்தாலும் ,சாந்தியின் நினைவால் ,நளினியுடன் விலகியே இருக்கிறான். ஒரு உணர்ச்சி போராட்டத்தில் ,கண் பார்வையை தற்காலிகமாக இழக்கிறான். ஒரு பெரியவரின் தயவால் சுவிட்சர்லாந்து சென்று நோய் குணமாகி வரும் சாந்தி, ரவியின் நிலையறிந்து ,அவனுக்கே பணி புரிய நீலா என்ற பெயரில் வர, முக்கோண போராட்ட உணர்ச்சி குவியலின் பின் ரவியும்,சாந்தியும் இணையும் கதை.
நடிகர்திலகமே படத்தின் தலையாய உயிர்மூச்சு. படவுலகத்துக்கும்,முதிர்ச்சியற்ற ரசிகர்களுக்கும் நல்ல கலையை தன் உழைப்பென்ற ரத்தத்தால் அமுதாக்கி கொடுத்து கொண்டிருந்தார் பலன் கருதாது. அவர் நடித்த அத்தனை படங்களும் ,ரசிகர்களை உயர்த்தி ,ரசனையை ஒரு படி மேலேற்றும் பணிகளை செய்தன. மற்றொரு புறம் ,ரசிகர்களை திருப்தி படுத்தி,அவன் ரசனை முன்னேறாமல் செய்து,அவனுக்கு பழகிய விருப்பப்பட்ட விஷயங்களை கொடுத்து வியாபாரியாக போட்டியாளர்கள். இப்போதைய படித்த இளைஞர்கள் (ஏட்டு படிப்பே. ரசனை உயர்ந்ததா?) மிக்க காலத்திலேயே கமல் போன்றவர்கள் இவ்வளவு திணறும் போது ,அந்த கால மந்தை கூட்டத்தின் நடுவே ,நடிகர்திலகத்தின் பணி எவ்வளவு மகத்தானது?
,பராசக்தி அந்தநாள்,ரங்கோன் ராதா, மணமகன் தேவை,அன்னையின் ஆணை,கப்பலோட்டிய தமிழன்,பார் மகளே பார்,புதிய பறவை,தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்கள் காலத்தை எவ்வளவு முந்தியவை? அதுவரை இருந்த மசாலாக்களை முறித்து போட்டவை.
இந்த படத்தில் ,நடிப்புக்கு ஒரு புது இலக்கணம் வரைய பட்டது. poise ,elegance ,balance ,style எல்லாம் கொண்ட ஒரு sophisticated underplay with restraint என்பது அரங்கேறி ரசிகர்களை குதூகலத்தில் தள்ளியது. அவன் ரசனையை கைபிடித்து பத்திரமாக மேலேற்றியது. மூக்காலே ,முணு முணுப்பது(whisper through Nasal Tone ) போல வசனம் பேசி அந்த பாத்திரத்துக்கு தொழில் சார்ந்த ஒரு மரியாதை கிடைக்க செய்வார்.ஒரு உயர் ரக கண்ணிய போக்கு ,பாத்திரத்தின் மனநிலையையும் ,உணர்வு நிலையையும் கூட துல்லியமாக நூல் பிடித்தாற்போல வெளியிட்டு விடும்.
இலகுவான ஒரு உபரி செய்தி. டி.எம்.எஸ் அவர்களுக்கு ஜலதோஷம். அத்துடன் பாடியதால், சிவாஜி தன் பாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்த குரல் பாடல்களுக்கும் கிடைத்து விட்டது.
நடிகர்திலகத்துக்கு இதில் தோதான திரைக்கதையமைப்பு. கண்ணியமான லட்சிய உணர்வுள்ள மருத்துவராக ஆரம்பம், தன் லட்சியத்தை சுமக்கும் துணையை தேர்வு செய்யும் கட்டம், முரண்பட்டு நிற்கும் குடும்பத்தாரிடம் சங்கட வெளியீடு, இலட்சிய மனைவியுடன் உணர்வு ரீதியில் காதலாகி கசிந்துருகும் இடங்கள், அவள் நோய் வாய் பட்ட பிறகு எல்லாவற்றையும் துறந்து அவளுக்காகவே வாழும் வாழ்வு, பிரிவின் சோகம்-தாபம்-வேதனை-விரக்தி, குடும்பத்தால் சுமத்த பட்டு வேண்டா வெறுப்பாக இரண்டாவது திருமணம், மனைவியுடன் ஓட்ட முடியாமல் அவள் உணர்வுகளை தாண்ட முடியாமல் தகிப்பது,கண் போன பின் நீலாவிடம் இயல்பாக அமையும் பிடிப்பு, அவளிடம் உள்ளம் திறப்பது,என்று படம் முழுதும் அவருக்கு கொடி நாட்ட தோதாக கதை ,காட்சிகள்.(பீம்சிங் அல்லவா?)
அவ்வளவு பிரமாதமாக அமையும் அவர் வெளியீட்டு முறை. அமைதியான ,லட்சிய மருத்துவர் , காதலில் விழும் அழகு நான் பேச நினைப்பதெல்லாம் என்றால், மனைவியை குழந்தை போல எண்ணி உருகி பணிவிடை செய்யும் பாங்கு பாலும் பழுமும் கைகளில் ஏந்தி.(சுமைதாங்கி சாய்ந்தால் முன்னோடி)எம்.ஆர்.ராதாவின் நியாமற்ற வேண்டுகோளை curt ஆக ,அமைதியான கண்டிப்புடன் புறம் தள்ளும் அழகு. மனைவிக்கு பணிவிடை செய்யும் போது ,இடையீடு செய்யும் தொலை பேசியில் முதல் வேண்டுகோள் மறுப்பு ,இரண்டாவது முறை இயலாமை கலந்த வெறுப்பான மறுப்பு, மூன்றாவது முறை மூர்க்கமான வெறுப்புடன் உயிர் போச்சா இருக்கா I am coming என்ற இயலாமையின் உக்கிர வெளியீடு,(சாந்தி விலகி போகும் முடிவுக்கு வரும் காட்சி. என்னவொரு impact ), civilian march பாணி நடையுடன் ,வாக்கிங் ஸ்டிக் உடன் பாடும் போனால் போகட்டும் போடா என்ற விரக்தி-தத்துவ பாடலின் ரசிக ஈர்ப்பு முறை (இதனை முன்னோடியாக கொண்டே சிவாஜி என்றால் ஒரு தத்துவ சோலோ என்ற formula எண்பதுகள் வரை தொடர்ந்தது )நளினியின் பிடிவாதம்,பெரியவரின் உடல் நிலை கருதி தன்னிலை வெளியிட்டு திருமணத்துக்கு உடன் படும் கட்டம்,இரண்டாம் மனைவியின் உணர்வு வெளியீட்டின் தகிப்பை தாங்க முடியாத கட்டம்,நீலாவின் குரல் கேட்டதும் வரும் துடிப்பு,அவளிடம் உருவாகும் நேசம் நிறை நட்பு, பெரியவருடன் தன கையறு நிலையை சொல்லி கலங்கி தவிப்பது என்று டாக்டர் ரவியின் பாத்திரம் என்றென்றும் பேச படும் அளவில் நடிப்பில் முன்னோடி புது பாணி அரங்கேற்ற படும்.(இதை ரிலீஸ் நாளில் உடனே பார்த்த அண்ணாவின் மனநிலை யூகிக்க கூடியதே)
சரோஜாதேவி பிரமாத படுத்துவார். சாவித்திரியின் spontaneity வராவிட்டாலும் ,அவரை விட சில இடங்களில் முந்துவார். முக்கியமாக நோயில் வீழ்ந்து கணவரின் அளவு மீறிய ஈடுபாட்டோடு வரும் பணிவிடைகளில் உருகி நெகிழ்ந்து அதே சமயம் கடமை மறக்கும் கணவரை எண்ணி மருகுவது, நீலாவாக வேடமிடும் போது கணவரின் காதல் கண்டு பெருமிதம் ஒரு புறம்,தன்னிலை எண்ணி தன்னிரக்கம் மறுபுறம், இரண்டாம் மனைவியின் ஸ்தானத்திற்கு கொடுக்கும் மனிதம் என்று முகபாவங்களில் பிரமாத படுத்துவார். மின்னல் போல உணர்வுகளை வெட்டி வெளியிடுவார். நட்பை விரும்பவும் செய்வார்.
சௌகார் ஜானகி,சுப்பையா,பாலையா,எம்.ஆர்.ராதா ,நாகையா வழக்கம் போல நல்ல பங்களிப்பு. சுப்பையாவிற்கு அவருக்கென்றே தைத்த சட்டை போன்ற ரோல்.(நானே ராஜாவில் வில்லனாகவும் கிழிப்பார். என்னவொரு performer !!!!)
பாலும் பழமும் படத்தின் மிக பெரிய பலம், எந்தொவொரு எதிர் மறை பாத்திரமும் இல்லாமல் , வாழ்க்கையின் சுருதி பேதங்களை அடிநாதமாக கொண்ட நிகழ்வுகள்,உணர்வுகள். சிறுசிறு மனத்தாபங்கள் (திருமணத்திற்கு ஒப்பும் பெரியவர்கள் ,மணத்திற்கு நேரில் வராதது அழகாக register ஆகும்) உணர்வு போராட்டங்கள் இவையே கதையை நடத்தி செல்லும்.
ஒரே எதிர்மறை பாத்திரம் செல்லத்துரை என்கிற எம்.ஆர்.ராதா நகைசுவைக்கு பயன் படுத்த பட்டிருப்பார்.கதையோடு ஒட்டாதெனினும் ,செந்தில்-கௌண்டமணி போல கருணாநிதி-ராதா நன்கு நகைச்சுவை மிளிரும்.
பாடல்கள் 1961 அதுவும் பீம்சிங் படம் , அதிலும் வேலுமணி (பதிபக்தி பங்குதாரர்கள் )படமென்றால், அதிலும் சிவாஜி என்றால் விஸ்வநாதன்-ராமமூர்த்தி உற்சாகத்தை கேட்கவும் வேண்டுமா?பா படங்களே பாடல் படங்கள் ,அதிலும் இதில் இரண்டு பா. ஆலயமணியின்,நான் பேச ,பாலும் பழமும்,போனால் போகட்டும்,காதல் சிறகை,என்னை யாரென்று,இந்த நாடகம் என திணற வைக்கும் அளவு சிறந்த பாடல்கள் அருமையான படமாக்கத்தில் மிளிரும். இதில் தென்றல் வரும் என்ற எனது பிரிய பாடல் நீக்க பட்டு விட்டது நீளம் கருதி.
லாஜிக் அருமையாக வரும். குடும்பத்தினர் கல்யாணத்திற்கு வராதது (சாந்தியை தெரியாது),எம்.ஆர்.ராதா மட்டும் பார்ப்பது,ரயில் விபத்து எல்லாம் சரி. சுவிட்செர்லாந்து சினிமா கற்பனை என்று விடலாம். சில வேளைகளில் டாக்டர் கொஞ்சம் நிதானமிழப்பார். ஆனால் பெரிய துன்பம் என்பதால் சில நேரம், குணமாற்றம் தடுமாற்றத்தில் ஏற்படுவதில்லையா?
படம் தொடுக்க பட்டிருக்கும் மாலை போல அழகான திரைக்கதையால்.ஒவ்வொரு கணமும் ,பார்வையாளருடன் பிணைந்திருக்கும். போர் என்று ஓர் நிமிடம் கூட இருக்காது.இது போன்ற படங்கள் மனிதனின் மனத்தில் உன்னதம் வளர்க்கும். வாழ்க்கை ஏற்ற-தாழ்வு,இன்ப-துன்பம் யாவற்றிலும் உயர் சமூக நோக்கம் ,மனிதத்துடன் ஜீவிக்க இப்படி பட்ட படங்கள் உதவின.
Thanks Gobalakrishnan Sundararaman
-
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை தொடர்கிறது.......
4-5-2020 திங்கட் கிழமை திண்டுக்கல்லில் சிவாஜி குருப் சார்பாக
அரிசிகார தெருவுில் வசிக்கும் எளியவர்களுக்கு கொரோனா உதவியாக அரிசி பருப்பு காய்கறி பைகள் 50 பேருக்கு வழங்கப்பட்டது,
சிவாஜி எ திருப்பதி
ஏ பாண்டியன்
எ மாரியப்பன்
எஸ் கண்ணன்
சிவாஜி எஸ் வெங்கிடு
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b6&oe=5ED8360Bhttps://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f1&oe=5ED8D361
-
-
-
-
-