-
ராஜேஷ் சார்,
'உன்னைச் சுற்றும் உலகம்' படத்தில் நம் அரசியின் அரிதான ஒரு பாடல்.
சீதாவைத் தேடி ஸ்ரீராமன் வந்தான்
நீதானே என் வாழ்வு என்றான்
விதுபாலா வின்சென்ட் ஜோடியில். சரியா ராஜேஷ் சார்.
அதை விடுவோம். என்ன ஒரு அருமையான பாடல். வசீகரிக்கும் குரல்.
அழகான டியூன்.
மை கொண்ட கண்ணும்
மலர் கொண்ட குழலும்
சூப்பர்.
நடுவில் கமல் பிளே பாய். அது யார் சார் ஜோடி? 'குமாஸ்தாவின் மகள்' குள்ளச்சி உஷா போலவும் தெரிகிறது. 'கவர்ச்சிக் கன்னி' மாயா போலவும் தெரிகிறது.
http://www.youtube.com/watch?feature...&v=kiiC5ahbo2c
-
சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் .. ஆஹா என்ன அருமையான பாடல் நினைவூட்டலுக்கு நன்றி ..
விதுபாலா .. இன்னொரு நல்ல நடிகை .... எல்லா பாத்திரங்களையும் அற்புதமாக செய்வார்..
கமல் கூட ஆடுவது யாரென்று தெரியவில்லை .. ராகவ் ஜி, கோபால் ஜி, எஸ்.வி ஜி சொல்லுவார்கள் என்று நம்புவோம்
-
அன்பு என்னாளும் தாயகலாம் பிள்ளை இல்லாமலே
தங்கை உள்ளத்தை நான் கொள்ளலாம் அண்ணன் சொல்லமலே
கண்கள் தாலட்டினால் யாரும் உறவாகலாம்
... ஆஹா என்ன அருமையான டியூன், இசையரசி பாடும் இந்த வரிகள் மெய் சிலிர்க்க வைக்கும்
பாடகர் திலகம் மட்டும் சளைத்தவரா .. தூள் கிளப்பியிருப்பார்
http://www.youtube.com/watch?v=amB7c8u7ii8
-
மேலை வானத்து மேகங்களே
பாலம் போடுங்களேன்
கடலின் கீழ் உள்ள முத்துக்களே
கரையில் வாருங்களேன்.
ஆஹா! "ஓஹோ"பாடல். நடிகர் திலகம், ஜெயசித்ரா அண்ணன் தங்கை கூட்டணி. உடன் ஜெயகணேஷ்.
தமிழ்ப்ப் பாடலகளில் இன்னொரு நல்முத்து இப்பாடல்.
-
-
Lalithasree
நண்பர் வாசு சார் அவர்களுக்கு இனிய காலை வணக்கம்
5000 உபயோகமுள்ள தகவல்கள் நிறைந்த பதிவுகளை அள்ளி வழங்கிய நண்பர் வாசு சார் அவர்களுக்கு வாழ்த்துகள்
வாசு சார் அவர்களின் உணர்ச்சிகள் படத்தின் பாடல் பதிவில் நடிகை லலிதஸ்ரீ பற்றி குறிப்பிட்டு இருந்தார் . இது சம்பந்தமாக எனது நண்பர் ஒருவருக்கு இவரின் மேல் தகவல் மற்றும் இன்றைய தகவல் பற்றி எழுதி கேட்டு இருந்தேன். அவர் அனுப்பிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்
லலிதாஸ்ரீ- இவரது இயற்பெயர் சுபத்ரா. திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவர்தான் கமலஹாசன் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து ஆர்.சி,சக்தியின் இயக்கத்தில் உருவான “உணர்ச்சிகள்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர் மலையாளத்தில் நடித்த முதல்படம் வெளிவரவில்லையென்றாலும் 1976-லிருந்து இதுவரை ஆறு மொழிகளில் 460 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர். 1984 முதல் 1987 வரையிலான காலகட்டத்தில் இவர் உச்சத்திலிருந்தவர். வருடத்திற்கு 34 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். புகழ்பெற்ற மலையாள நகைச்சுவை நடிகர் ஜெகதி ஸ்ரீகுமாருடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன்பின் படிப்படியாக படங்கள் குறைய ஆரம்பித்தது. ”பலராம் வெசர்ஸ் தாராதாஸ்” என்ற படம் இவர் கடைசியாக நடித்தது. படங்கள் குறையத் துவங்கியதும் தந்தை காலமானதும் இவரது தாயாருக்குக் கேரளாவில் வசிக்க விருப்பம் குறைந்துவிட இவரது அக்கா ஒருவருடனும் தம்பி ஒருவருடனுமாக சென்னைக்குப் புலம்பெயர நேரிட்டது.
நடிகை ஜெயபாரதி இவருக்காக பல உதவிகள் செய்தவர். ஜெயபாரதி ஏராளமான படங்களுடன் உச்சலிருந்த காலகட்டத்தில் அவர் நடிக்கும் பல படங்களில் லலிதாஸ்ரீக்கு வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்துள்ளார். பழம்பெரும் நகைச்சுவை நடிகர் பகதூரிடம் ஜெயபாரதி லலிதாஸ்ரீயைப் பற்றி தெரிவித்து அவரது பல படங்களில் ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்துள்ளார். பகதூரும் பல வகைகளில் இவருக்கு உதவிகள் புரிந்துள்ளார். இவ்விருவருக்கும் இவர் கடமைப்பட்டுள்ளதாக பல பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார்.
இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உட்பட 6 மொழித் திரைப்படங்களுக்கு மொழிமாற்றுப்பணிகளும் செய்து வருகிறார். தற்போது சென்னையில் அழகு நிலையம் ஒன்றை ஸ்தாபித்து அதனை நடத்தி வருகிறார். இவரது கணவர் பெயர் விஜயசாரதி. இவர்களுக்குக் குழந்தையில்லை. அதனால் விஜி என்ற விஜி விஜயகுமார் என்பவரது மகள் சுஜித்ரா என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார். சுஜித்ராவும் லலிதாஸ்ரீயும் இணைந்தே அழகு நிலையத்தை நடத்தி வருகின்றனர்.
இவர் நடித்த படங்கள் சில:-
தேவி கருமாரியம்மன் [தமிழ்], உணர்ச்சிகள் [தமிழ்], அலாவுதீனும் அற்புத விளக்கும் [தமிழ்], அப்ராஜிதா, அன்னியருடே பூமி, விட பறயும் மும்பே, மழு, அனுராஹக் கோடதி, ஈ யுகம், கடமத்தச்சன், முகூர்த்தம் 11.30, இத்திரிப்பூவே சுவந்நப்பூவே, தத்தம்மே பூச்சா பூச்சா, ஸ்வப்னமே நினக்கு நந்நி.
1979-இல் வெளிவந்த அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் “சைனபா” என்ற கதாபாத்திரத்தில் லலிதாஸ்ரீ
அன்றும் இன்றும் http://antrukandamugam.files.wordpre...pg?w=593&h=338http://antrukandamugam.files.wordpre...pg?w=593&h=453
-
வி.குமார், சொர்ணாக்கா, நாத நாமக்ரியா என தகவல் கள் தந்த கோபால் சாருக்கு நன்றி..
என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கிறது நல்லபாடல்..
நான் வாழ வைப்பேன் - ரஜினிக்கு ஒரு மிகப் பெரிய ப்ரேக் கொடுத்த படம் என்றால் மிகையில்லை..எந்தன் பொன் வண்ணமே பிடிக்கும்.. டபக்கென துள்ளல் பாட்டு ஆகாயம் மேலே பாதாளம்கீழே ஆனந்த உலகம் நடுவினிலே.. அதுவும் பிடிக்கும்
மை கொண்ட கண்ணும்
மலர் கொண்ட குழலும் // இதுவும் அழகுப் பாட்டு.. நன்றி வாசு சார்..
ராஜேஷ் கறுப்பு வெள்ளைக் கட்டழகி விதுபாலாவை பற்றி ப்பேசியாகிவிட்டது..இப்படிக் கேட்டால் வாசு சார் இப்படித் தான் இ.புகைப்படம் போட்டுபயமுறுத்துவார்..இருந்தாலும் நேரம் இரவு நேரம் என காலங்கார்த்தால மனதில் அந்தப் பாடல் ஹம்மிங்க் செய்கிறது..
லலிதா ஸ்ரீ பற்றி எனக்கு நினைவில்லை க்ருஷ்ணா ஜி தகவலுக்கு நன்றி (சாயல் ஜெ.சி மாதிரி இல்லை)
-
ராஜேஷ் சார்,
இசையரசி மலையாளத்தில் பின்னி எடுத்த ஒரு பாடல்.
'தீர்த்தயாத்ரா' படத்தில்
'சந்த்ரகலாதரன்னு கண் குளிர்க்கான் தேவி' (மாணிக்க வீணையேந்தும் டைப்பில்)
கேட்க கேட்க அவ்வளவு சுகம். நிறுத்த மனமே வரலை.
http://www.youtube.com/watch?v=EZd73Zn43xE&feature=player_detailpage
-
அஹோ! வாரும் பிள்ளாய் கிருஷ்ணா அவர்களே! ஓம் லலிதாயஸ்ரீ நமஹ.:)
-
Mr Vasu JI
See the majectic walk of NT in the Ratha Pasam Song. Amazing.
Regards