-
உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையில் மறக்க முடியாத அனுபவம் உண்டா?
எம்.ஜி.ஆரின் நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. நேரு, தாகூர் எழுதிய புத்தகங்களோடு எனது "கறுப்பு மலர்கள்' புத்தகத்தையும் வைத்திருந்தார். அதை என்னால் மறக்கமுடியாது. எனது புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு என்னை அழைத்து பாடல் எழுதச் சொன்னவர். எல்லாக் கவிஞர்கள் எழுதும் பாடல்களையும் அவர் பார்த்து சில திருத்தங்கள் செய்வார் என்று கூறுவார்கள். ஆனால் என்னுடைய பாடல்களை அவர் பார்த்துவிட்டு எம்.எஸ்.வி அண்ணனிடம் மெட்டு அமைக்கச் சொல்லுவார். "ஊருக்கு உழைப்பவன்' படத்தில் வரும் "இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்' என்ற என்னுடைய பாடலை எம்.எஸ்.வி ஏற்றுக்கொள்ள மறுத்தார். உடனே எம்.ஜி.ஆர் தலையிட்டு "காமராசன் எழுதியதை நீங்கள் மெட்டுப்போட வேண்டும்' என்று கட்டளையிட்டார். அதை இன்றும் என்னால் மறக்கவே முடியாது.
உங்கள் திரையுலகப் பயணம் எப்படி? யாரால் நடந்தது?
என்னுடைய திரையுலகப் பயணம் எம்.ஜி.ஆரால் தான் நடந்தது. அது எனது பாக்கியம். அதோடு ஆர்.எம். வீரப்பன் அண்ணன் பெயரையும் குறிப்பிடவேண்டும். எனது "கறுப்பு மலர்கள்' புத்தகத்தை எம்.ஜி.ஆரிடம் படிக்கக் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு திடீரென்று ஒருநாள் பாடல் எழுதச் சொன்னார். "கனவுகளே, ஆயிரம் கனவுகளே' என்ற எனது முதல் பாடல் எம்.ஜி.ஆருக்கு எழுதினேன். அதேபோல அண்ணன் ஆர்.எம். வீரப்பன் சத்யா மூவிஸின் எல்லா படங்களிலும் எனக்கு பாடல் எழுத வாய்ப்பளித்தார். அதை என்னால் என்றும் மறக்கமுடியாது.
நீங்கள் எழுதிய திரைப்பாடல்களில் உங்கள் மனதை அதிகம் கவர்ந்த பாடல்கள் எவை?
"இரவு பாடகன் ஒருவன் வந்தான்' என்ற பாடலும், "போய்வா நதி அலையே' என்ற பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். வெள்ளை ரோஜாவில் "ஓ! மானே, மானே' என்ற பாடலும், "உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது' என்ற "தங்க ரங்கன்' படத்தில் வரும் பாடலும் மிகவும் பிடித்த பாடல்களாகும்.
கவிஞர் நா காமராசன் நக்கீரன் நேர்காணலில் ஒரு பகுதி
-
கலியுக கண்ணன் என்ற திரைப்படம் 1974 இல் தேங்காய் ஸ்ரீனிவாசன் ,சௌகார் ஜானகி, நடித்து வெளிவந்த படம். படத்தில் தேங்காய் ஆரம்பத்தில் முதல் பாதியில் ஏழை சமையல் காரர் ஆகவும்,இரண்டாவது பாதியில் பெரும் பணக்கரார் ஆகவும் நடித்து இருப்பார்.ஓரளவு வெற்றியை பெற்றது . இதன் வெற்றியை தொடர்ந்து உடனே அதன் தொடர்ச்சியாக கரோட்டி கண்ணன் என்று ஒரு படம் எடுத்து தேங்காயை வைத்து கூத்து அடித்தனர். வீ குமார் இசை 1975 களில் வெளி வந்தது. ஒரு பாடல் பத்மப்ரியுடன் அவர் அடிக்கும் கொட்டம்
http://www.inbaminge.com/t/k/Karotti....html#ytplayer
-
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் சாருகேசி ராகதில் இடம் பெற்ற பல்வேறு திரைப்பட பாடல்களை இரண்டு தினங்களுக்கு முன் சக்கை சாறாக பிழிந்தோம் இன்று ஒரு பாடல் கிடைத்தது - இதை பற்றி அலசி விட்டோமா என்று நினைவு இல்லை
சாருகேசி ராகத்தில் P சுசீலா அம்மா பாடிய இந்தப் பாடல் மீண்டும் K V மகாதேவனின் இசையில் அவரது பாடல்கள் மனதை என்னவோ பண்ணுகிறது என்னும் கருத்திற்கு வலு சேர்கிறது. நளினமான பதிமினியின் நடன அசைவுகள் அற்புதம்.
திரைப் படம்: ராணி சம்யுக்தா (1962)
இசை: K.V. மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
ஹா ஹா ஹா
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
பார்வை குறுகுறுக்கும் மேனி பரபரக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
மறு கை மங்கை என்
முகம் தேடி அசைந்திருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
மறு கை மங்கை என்
முகம் தேடி அசைந்திருக்கும்
தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
இந்த தோகைக்கென்றே இதயம் திறந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
www.youtube.com/watch?v=L6yEmOHcZAc
-
நன்றி சகோதரர் கானா பிரபா
சினிமா உலகில் அதிக வெளிச்சம் படாத இயக்குனர் சின்னத்திரையில் சாதித்துக் காட்டுவது உண்டு. இவ்வகையான இயக்குநர்களில் முன்னோடி இயக்குநர் என்று இயக்குனர் சுந்தர் கே.விஜயனைக் குறிப்பிடலாம். இவரின் தந்தை புகழ்பெற்ற இயக்குநர் கே.விஜயன். தயாரிப்பாளர் நடிகர் கே.பாலாஜியின் பிற்கால திரைப்படங்கள் பெரும்பாலும் கே.விஜயனின் இயக்கத்திலேயே இருப்பதுண்டு. தந்தை வழியில் தனயன் சுந்தர் கே.விஜயனும் "ரேவதி" என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
சுந்தர் கே.விஜயன் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த படம் "என் அருகில் நீ இருந்தால்" அந்தப் படத்தின் பாடல்களைக் காட்சிகளைத் தவிர்த்து இசையை மட்டும் கேட்டுப் பாருங்கள். அருமையான இசைப் பெட்டகம் அது.
ரேவதி என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து சுந்தர் கே.விஜயன் இயக்கத்தில் வெளிவந்த படம் "வெளிச்சம்". இந்தப் படத்துக்கு இசை வழங்கிய மனோஜ் கியான் இரட்டையர்கள் அப்போது ஊமை விழிகள் திரைப்படத்தின் வாயிலாகப் பரவலாக அறிமுகமாகியிருந்தார்கள். இளையராஜா காலத்தில் சந்திரபோஸ் இற்கு அடுத்து அதிகம் அறியப்பட்ட இசையமைப்பளார்களாக எண்பதுகளின் இறுதியில் மனோஜ் கியான் இரட்டையர்களின் பங்களிப்பு சிறப்பானது. குறிப்பாக இவர்கள் இசையமைத்த "வெளிச்சம்" திரைப்படம் மற்றைய படங்களைப் போலப் பரவலாக அறியப்படாத படம் என்றாலும் என் பார்வையில் இந்தப் படத்துக்கு இவர்கள் தந்த இசை மற்றைய படங்களை விடத் தனித்துவமாக நிற்கும். குறிப்பாக இரண்டு பாடல்களில் ஒன்று "ஓ மை டியர் ஐ லவ் யூ" பாடலை டாக்டர் கல்யாண், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் குரல்களில் கேட்டுப்பாருங்கள் ஒரு பாடலில் இரண்டு விதமான தளங்களில் பயணப்படும் முக்கோணக் காதலை அழகாகக் கொடுத்திருக்கும்.
http://songs.shakthi.fm/ta/Velicham_...0My%20Dear.mp3
-
வெளிச்சம் படத்தில் வரும் "துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே" பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். அந்தக்காலத்துச் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம் வாயிலாக அறிமுகமான பாடலிது. கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் இளையராஜாவுக்குக் கொடுத்தது மட்டுமன்றி ரவீந்திரன் (உதாரணம் ஏழிசை கீதமே, பாடி அழைத்தேன்), சந்திரபோஸ் (சந்தோஷம் காணாத வாழ்வுண்டா) வரிசையில் மனோஜ் கியானுக்காகப் பாடிய பாடல்களைத் தேடிக் கேட்பதே சுகம். மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் இன் குரலுக்குக் கிடைத்த இன்னொரு பரிமாணம் துலங்கும்.
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே பாடலில் இழைத்திருக்கும் மெல்லிசையும், வைரமுத்துவின் அழகிய வரிகளும், ஜேசுதாஸ் இன் குரலும் சேர்ந்து கிட்டிய இந்த அழகிய பாடலை இரவு நேரத்தில் கேட்கும் போது அது தரும் சுகமே தனி.
http://songs.shakthi.fm/ta/Velicham_...i%20Thulli.mp3
http://upload.wikimedia.org/wikipedi...Velicham87.jpg
-
thanks tamil the hindu
திரைப்படங்களின் பார்வையில் நிலவு என்பது இதமான இயற்கையையும் தாண்டிய ஒரு முக்கிய உருவகமாகத் திகழ்கிறது. மகிழ்ச்சியான தருணங்களில் தன் காதலியை நிலவுடன் ஒப்பிட்டுப் பாடுவார்கள் நம் திரை நாயகர்கள்.
அதேபோல் காதலை விட்டுக் காததூரம் ஓட நேரிடும் சோகமான சமயங்களிலும் நிலவை அழைத்துத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவார்கள். இந்தக் கழிவிரக்க உணர்வு இந்தி, தமிழ்ப் படப் பாடல்களில் ஒரே விதத்தில் மிக அழகாக அமைந்திருப்பதைப் பாருங்கள்.
இந்தித் திரைப்பட ரசிகர்களே அதிகம் அறிந்திராத மஹிபால் –ரத்னமாலா ஜோடி நடித்து 1963-ம் ஆண்டு வெளிவந்த நாகஜோதி என்ற படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.
சர்தார் மல்லிக் இசை அமைத்த இப்பாடலை எழுதியவர் இந்தித் திரையுலகில் இலக்கிய வளத்துடன் பாடல் எழுதும் திறன்பெற்றவர் எனப் போற்றப்பட்ட பரத் வியாஸ் என்ற கவிஞர்.
சுவரொட்டிகள் உள்பட இப்படத்தின் அடையாளங்கள் எதுவுமே ஆவணப்படுத்தப்படாமல் மறைந்துவிட்டன. தற்போது எஞ்சியுள்ளது, சோக உணர்வைக்கூடச் சுகமாகக் கேட்க வைக்கும் சிறப்பான குரல் வளம் கொண்ட முகேஷ் பாடிய அதன் பாடல்கள் மட்டுமே.
சுன் சாந்த் மேரி யே தாஸ்த்தான்
மே கஹூம் துஜே யா கே நா கஹூம்
தேரி சாந்தினி தேரா பாஸ் ஹை
முஜே யே பத்தா மே கஹான் ரஹூம்
கிலி ரேன் மே தேக்கோ சேன் ஸே
பொருள்:
நிலவே கேள். என்னுடைய இந்தக் கதையை
உன்னிடம் சொல்லவா அல்லது வேண்டாமா (என மயங்குகிறேன்)
(நீ வசிப்பதற்கு) உன் சாந்தினி (நிலவின் இனிய அம்சம்) உன்னிடம் இருக்கிறது.
நான் எங்கே (அப்படி) வசிப்பது
என்று எனக்குச் சொல்
உற்றுப் பார்.
மலர்ந்துவிட்ட இந்த இரவில்
இந்த உலகம் முழுவதும் உறங்கிக்கொண்டிருக்கிறது.
உன்னுடைய நட்சத்திரங்களில் நிழலில் நான் மட்டும் அமைதியாக அழுதுகொண்டிருக்கிறேன்.
தனிமை என்ற தணல் என் தேகம் முழுவதும் பற்றியுள்ளது.
என்னால் இதைச் சகிக்க முடியுமா அல்லது
சகிக்க முடியாதா (தெரியவில்லை)
என் உள்ளத்தில் பதிந்துவிட்ட அந்த
(உன்) பார்வை ஒரு சூலம் போல உள்ளது
பூக்களைப் பூக்களால் அலங்கரிப்பது போல
என் உள்ளங்கையில்
(என்னில்) உன் முகத்தை அலங்கரித்தேன்
இப்படியே (என்னுள்) ஓடிக்கொண்டிருக்கும்
உன் நினைவு என்ற நதியில்
(இப்பொழுது) நான் பிரவாகிக்கவா இல்லை கூடாதா (எனத் தெரியவில்லை)
நிலவே கேள். என்னுடைய இந்தக் கதையை உன்னிடம் சொல்லவா
அல்லது வேண்டாமா (என மயங்குகிறேன்).
இந்தக் கழிவிரக்க உணர்வு சிறிதும் குறையாமல், தன்னை நாடும் பெண்ணின் காதலை ஏற்கத் தயங்கும் கதாநாயகன் பாடுவதாக அமைந்த தமிழ்ப் பாடல் அமரத்துவமான பாடல்களில் ஒன்றாக விளங்குகிறது.
http://tamil.thehindu.com/multimedia...i_2127154g.jpg
-
தமிழ்ப் பாடல்.
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
(நிலவே)
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
(நிலவே)
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...
கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசை அமைத்து ஜெமினி கணேசன் கே.ஆர். விஜயா நடித்த ராமு என்ற இப்படத்தின் இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கப்படுகிறது.
நல்ல மெட்டு, கருத்தாழமிக்க எளிய வரிகள் மனதை வருடும் பி.பி. ஸ்ரீநிவாஸ் குரல் ஆகியவற்றை உடைய இப்பாடல் தனக்கு விருப்பமான சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்று எனப் புகழ்பெற்ற பலர் தெரிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை பாடியவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.
ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு வந்த ராமு படத்துக்கு இசை அமைத்தது எம்.எஸ்.வி மட்டும்தான். அந்தப் பாடலில் விட்டு போன இன்னொரு சரண வரிகள் இதோ: "ஊமையின் கனவை யார் அறிவார்? என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்? மூடிய மேகம் கலைந்த பின்னே நீ பாட வந்தாயோ வெண்ணிலவே
-
அறுபதுகளில் புகழ்பெற்ற தென்னிந்தியக் கதாநாயகிகளில் ஒருவர் ராஜசுலோச்சனா. கடந்த ஆண்டு தனது 77 வயதில் சென்னையில் மறைந்தார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்த இவர் 1961-ல் வெளியான ‘நல்லவன் வாழ்வான்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி.
அண்ணா கதை, வசனத்தில் பி. நீலகண்டன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கதாநாயகி ராஜசுலோச்சனாவுக்கு கிளாப் அடிக்க வேண்டும் என்றொரு ஆசை.
எம்.ஜி.ஆர். நடித்த ஒரு ஷாட்டுக்குக் கிளாப் அடிக்கக் கற்றுக்கொடுத்தார் இயக்குநர். ஒருமுறைதான் மிகச் சரியாக அவர் கிளாப் அடித்தார். கிளாப் அடிக்கும் முன்பு எம்.ஜி.ஆர் வியப்பதைப் புகைப்படக்காரர் க்ளிக்கிவிட்டார்.
http://tamil.thehindu.com/multimedia...m_2127150f.jpg
-
இன்று பிறந்த நாள் காணும் இசை குயில் லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்
நன்றி மாலை மலர்
http://mmimages.maalaimalar.com/Arti...c_S_secvpf.gif
இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர். இவர் 1929ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இந்தூரில் பிறந்தார். இவரது தந்தை பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கரும் ஒரு பாடகர்தான். லதா மங்கேஷ்கர் தனது 13வது வயதில், அதாவது 1942ம் ஆண்டு தனது தந்தையை இழந்தார். அதன்பின்னர் தனது குடும்பத்தின் நெருங்கிய நண்பரான மாஸ்டர் வினாயக்கின் உதவியுடன், பாடகராகவும், நடிகையாகவும் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.
இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1948ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரையில் அதிக அளவில் பாடல்களை பாடியதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றார்.
இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படும் இவருக்கு, இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் லதாவும் ஒருவர். இதுதவிர பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே மற்றும் தேசிய விருதுகளும் இவரது பெருமையை பறைசாற்றுகின்றன.
முழு நேர பாடகியாக கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொண்ட லதா மங்கேஷ்கர், திருமணம் செய்துகொள்ளவில்லை. பாடகி ஆஷா போஸ்லே இவரது சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
-