-
11-1-2013
மக்கள் திலகம் நடித்த ரகசிய போலீஸ் 115
45 வது ஆண்டு நிறைவு நாள் . 11.1.1968.
Jamesbond பாணியில் வந்த புதுமையான படம் .
பறக்கும் பாவை -1966 படத்திற்கு பின் வந்த வண்ண படம் .
வித்தியாசமான போஸ்டர்ஸ் ஒட்டப்பட்ட படம் .
பந்துலு அவர்களுக்கு அன்றும் - இன்றும் வசூலை வாரி குவித்த வெற்றி படம் .
இனிமையான பாடல்கள்
புதுமையான சண்டை காட்சிகள்
மக்கள் திலகத்தின் சுறு சுறுப்பான நடிப்பு .
மெல்லிசை மன்னரின் நேர்த்தியான பின்னணி இசை
அருமையான ஒளிப்பதிவு - ராமமூர்த்தி
திருச்சி - சேலம் - நகரில் 100 நாட்கள் .
1968 - தமிழ் படங்கள் வசூல் சாதனை
1. குடியிருந்த கோயில்
2. ஒளிவிளக்கு
3. தில்லானா மோகனம்பாள்
4. ரகசிய போலீஸ் 115
5. பணமா பாசமா
-
இனிய நண்பர் ராமூர்த்தி
மக்கள் திலகம் பிறந்த நாள் போஸ்டர்ஸ் அணி வகுப்பு அமர்க்களம் . இன்னும் நாட்கள் நெருங்க நெருங்க வேலூர் மாவட்டம் அத்தனை படங்களும் திரிக்கு வந்து மக்கள் திலகத்தின் புகழை உலகமெங்கும் அறிய வைக்கும் என்பதில் சந்தேகமில்லை .
உங்களின் உழைப்புக்கு ஒரு சபாஷ்
-
இனிய நண்பர் ரவிச்சந்திரன் சார்
மக்கள் திலகம் பிறந்த நாள் அன்று கோவையில் ஆயிரத்தில் ஒருவன் வெளிவருவது மகிழ்ச்சி .
2013ல் பல்லாண்டு வாழ்க - ஆயிரத்தில் ஒருவன் என
இனிதான துவக்கம் .
ஆயிரத்தில் ஒருவன் போஸ்டர்ஸ் அருமை
-
-
-
-
-
Former president dr. Abhul kalam p.a about makkal thilagam
விழாவில் சிறப்புரையாற்றிய அப்துல் கலாமின் விஞ்ஞான ஆலோசகர் வி.பொன்ராஜ் உலகில் எந்த மூளைகளுக்கும் சளைத்தல்ல நமது இந்திய மாணவர்களின் மூளை என்று குறிப்பிட்டார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டுவாழ்க படத்தில் அவர் பாடும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் …. என்கிற பாடலில் இருந்துதான் திருக்குறளைத் தாம் கற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்ட அவர் ”எம்.ஜி.ஆர் தான் எனக்கு முதல் திருக்குறள் ஆசான்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “15 வயது என்பது மிகவும் முக்கியமான ஒரு பருவம். அது வரை எனது தாய் கிறிஸ்துவ நீதிக்கதைகளையும் எனது தந்தையார் ராமயாணம் –மகாபாரதக் கதைகளை போதித்து வந்திருந்தாலும், 15 வயதிற்குப் பிறகு நான் அவர்களைச் சாராமல் இருக்கத் தொடங்கிய பிறகு நான் எந்தத் தீயபழக்கங்களுக்கும் அடிமையாகிவிடாமல் என்னை நல்வழிப்படுத்தியது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான், அவர் நடித்த படங்கள் தான்” என்றார்.
-
Most of the images that I have posted yesterday are from MGR Fan Venkatesan, Olikirathu Urimaikural Editor B.S.Raju, MGR Devotees Venkat and T.Nagar Ramamurthy. Thanks to them.
-
Courtesy- chandru - malaimalar
பொன்மனச்செம்மல் எம். ஜி.ஆர். அவர்களுக்கு ஓர் தனி சிறப்பு உண்டு! அவரை புகழ்ந்து போற்றுபவர்கள் மட்டுமல்ல அவரை தூற்றுபவர்கள் கூட நன்மை அடைவார்கள்; அப்படி தூற்றியவர்கள் கூட எதிர்த்தவர்கள் உட்பட பிற்காலத்தில் அவரை போற்றி வணங்குவார்கள்; இதற்க்கு நிறைய உதாரணங்கள் உண்டு. அவ்வளவு என்? அவரது அரசியல் நேர் எதிரி கலைஞர். அவருடைய மகன் திரு ஸ்டாலினே புரட்சி தலைவர் எம். ஜி. ஆர். அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு இவ்வருடம் அவர் படத்துக்கு மாலை அணிவித்து இரு கரம் கூப்பி பல தி. மு. க. தொண்டர்களுடன் வணங்கினாரே..... போன வருடம் பல கோடி செலவில் உருவான புதிய சட்டசபை வளாகத்தை திறந்து வைத்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் அவர்கள் திருமதி சோனியா, கலைஞர் மற்றும் பல காங்கிரஸ் தி. மு. க. பிரமுகர்கள் எதிரிலேயே "இன்று இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பள்ளிகளில் பின் பற்றப்படும் மதிய உணவு திட்டத்துக்கு" காரணமாக விளங்குபவர் "அமரர் எம். ஜி. ஆர்" அவர்கள் என்று புகழாரம் சூடினாரே! அதை என்னவென்று சொல்வது? ஒரே வரியில் சொல்வதென்றால், எம். ஜி. ஆர் அவர்கள் "குற்றமில்லாத மனிதன், கோயில் இல்லாத இறைவன்" - அன்புடன் சந்ரு.