Originally Posted by
makkal thilagam mgr
அன்பாய் திருத்தும் பண்பாளர் நம் அற்புத தலைவர்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் !
தவறு செய்தவர்களை தண்டிப்பதோடு உதவவும் செய்வார், நம் மக்கள் திலகம். சட்டப்படி தீர்ப்பளித்து விட்டு தர்மப்படி உதவும் குணமும் கொண்டவர் புரட்சித்தலைவர். இதற்கு உதாரணமாக ஒரு சிறு சம்பவம் :
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு முறை சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக, பள்ளமான பல இடங்களையும் மழை நீர் ஆக்கிரமித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வகையில், நம் மக்கள் தலைவர் குடியிருந்து வந்த ராமாபுரம் தோட்டமும் வெள்ளத்தால் சூழ்ந்தது. படகின் மூலம் சாலைக்கு வந்த முதல்வர் புரட்சித்தலைவர் " கன்னிமாரா " ஓட்டலில் தங்கினார். அப்போது, அந்த ஹோட்டலே தலைமை செயலகமாக இயங்கத் தொடங்கியது. அவ்விதம் இயங்கி வரும் வேளையில் வெள்ள நிவாரணப்பணிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஒரு அரசு அதிகாரி கையாடல் செய்ததின் பேரில் அரசுக்கு கெட்ட பெயரினையும் அவச் சொல்லையும் உருவாக்கி விட்டார்.
விஷயத்தை கேள்விப்பட்ட முதல்வர் புரட்சிதலைவர், அவ்வதிகாரியை உடனே பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.சற்று நேரத்துக்கெல்லாம் சம்பத்தப்பட்ட அதிகாரி நம் மன்னவனிடம் ஓடி வந்தார். அப்போது முதல்வருக்கு மதிய உணவு வருகிறது. பதட்டத்துடன் ஓடி வந்த அதிகாரியின் முகத்தைப் பார்த்தவர்,. அவரிடம் "சாப்பிட்டீங்களா " என்று கேட்க அவர் " சாப்பிட்டாச்சு " என்று பதில் கூற, பொய் சொல்கிறீர், நீங்கள் சாப்பிட வில்லை என உங்கள் முகம் சொல்கிறது என்று புரட்சித் தலைவர் அவர்கள் சொல்ல, அதிகாரி மெளனமாக நிற்கிறார்.
முதலில் நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறுகிறார் பொற்கால ஆட்சி தந்திட்ட நம் பொன்மனச்செம்மல் அவர்கள். எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டேன், அரசுக்கு என்னால் எவ்வளவு அவப்பெயர். அப்படிப்பட்ட இந்த துரோகியை சாப்பிட வேறு சொல்கிறீர்கள். உங்களது பெருந்தன்மை என்னை மேன்மேலும் தண்டிக்கிறது என்று அழுது புலம்பி சாப்பிடாமல் இருந்தார் அந்த அதிகாரி.
அதைக் கண்ட முதல்வர் புரட்சித்தலைவர் அவர்கள், இப்போது சாப்பிடப் போகிறீர்களா, இல்லையா ? என்று அதட்டலாக கேட்கவே, டைனிங் டேபிள் அருகே அவர் எதிரே உள்ள நாற்காலியில் உட்கார்ந்தவருக்கு, எவ்விதமான வெறுப்பையும் காட்டாமல்,தாயன்புடன் வழக்கமான பாணியில் பாணியில் அவருக்கு அது வையுங்கள் இதை வையுங்கள் என்றெல்லாம் அன்பு மிகுதியில் உணவினை பரிமாறச் செய்து திக்கு முக்காட செய்து விடுகிறார் நம் சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள்.
சாப்பிட்டு முடிந்தவுடன், தனது அறைக்குள் சென்று விடுகிறார் நம் இதய தெய்வம் அவர்கள். அவ்வதிகாரியும், கெஞ்சிக் கொண்டே பின் தொடர்கிறார். இரண்டு மாதத்துக்கு என் முகத்தில் விழிக்காதீர், போய் விடுங்கள் என்கின்றார் நம் மன்னவன்.
அவ்வதிகாரியோ, ஐயா, என் தாய் நோயில் துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறார், கல்லூரியில் படிக்கும் என் மகன், மகள்களின் செலவு, தாயின் வைத்திய செலவு, குடும்ப செலவு என ஒவ்வொன்றாக முதல்வரிடம் முதல்வரிடம் எடுத்துச் சொன்னார்.
உங்களை (அந்த அதிகாரியை) அப்போதே போகச் சொன்னேனே, போய் வாருங்கள் என்று சொன்னவர் அறைக் கதவை சாத்திக் கொண்டார் மக்கள் திலகம்.
அந்த அதிகாரியும் வேறு வழியின்றி, அது வரையில் அரசு காரில் பயணித்தவர் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு செல்கிறார். வீட்டிற்கு சென்ற சில மணி நேரத்தில் வேன் ஒன்று வாசலில் வந்து நிற்கிறது.
யார் வேன் ? எதற்காக நம் வீட்டு வாசலில் நிற்கிறது என்று நினைத்த மறு கணத்தில், முதல்வர் புரட்சித் தலைவரின் உதவியாளர், அதிகாரியின் வீட்டில் இறக்கி விட்டு வருமாறு, "அரிசி, பருப்பு, புளி, எண்ணெய், மிளகாய் என்று 2 மாதத்துக்கான அனைத்து மளிகை சாமான்களையும், ரொக்கம் ரூபாய் 3,000த்தை கொடுத்து விட்டு வருமாறு லோடுமேன் கூறியதை கேட்டு, ஆனந்தக் கண்ணீர் விட்டார் அந்த அரசு அதிகாரி.
அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பாணியில் தனக்கு பணி இடைநீக்கம் உத்தரவினை கொடுத்தாலும் அதற்கான சன்மானத்தையும் அளித்து விட்டாரே என மெய் சிலிர்த்துப் போனார். ================================================== ================================================== ======================
இங்கு தான் அனைவரின் உள்ளங்களிலும் நிற்கிறார், மனிதாபிமானத்துக்கு மறு பெயராய் திகழும் மக்கள் திலகம். .
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்