-
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். நம் திரி மனிதப் புனிதர், நாடாண்ட புரட்சித்தலைவர், புரட்சிக்கடவுள் அவர்களின் பெயரால், தரம் குன்றாமல் சென்று கொண்டிருக்கிறது. எவரும் நெருங்க முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரார் மக்கள் திலகம் என்பதை திரையுலகம் மட்டுமல்ல, இந்த அகிலமே ஏற்றுக்கொண்ட ஒன்று. வெற்றி பெறுவதுமட்டுமல்லாது அந்த வெற்றியை இன்றைக்கும் தக்க வைத்துக்கொண்டிருப்பவர் இதய தெய்வம் எம்ஜிஆர் என்பதற்கு இன்றைக்கும் மங்காமல் ஒளி வீசும் அவர் புகழ் ஒன்றே அத்தாட்சி.
ஒரு படம் அல்ல.. இதய தெய்வத்தின் அனைத்து படங்களும் இடைவெளி இல்லாமல் வெளியிடப்பட்டு இன்றைக்கும் வசூலில் புரட்சி செய்து கொண்டிருக்கிறது. அன்றைக்கு 100 நாட்கள் நெருங்காத ஒரு தாய் மக்கள், கண்ணன் என் காதலன் போன்று இன்னும் பல படங்கள் கூட இன்றைக்கு 2 வாரங்களும் அதற்கு மேலும் ஓடி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய நிரந்தர வெற்றிக்கு சொந்தக்காரர் மக்கள் திலகம் என்பதை நாடறியும், அனைத்து ஏடுகளும் அறியும். எனவே, மற்றவர்கள் திரியில் உள்ள செய்திகளை இங்கே பிரசுரித்து, அதனால் ஏற்படும் சர்ச்சைகளை வளரவிட்டு திரியின் தரத்தை குறைக்க வேண்டாம்...மற்றவர்கள் மனதைப் புண்படுத்த நம் தலைவர் நமக்கு கற்றுத்தரவில்லை. எனவே இப்படிப்பட்ட வாதங்களைத் தவிர்க்க வேண்டுகிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
-
-
-
http://i61.tinypic.com/708hfs.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vanambaadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
-
-
-
-
-