http://i60.tinypic.com/qqbc41.jpg
Printable View
சகோதரர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு, தங்கள் அறிவுரையை சிரமேற்கொண்டு ஏற்கிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. தலைவரையும் அவரது பட வசூல்களையும் எதிர்தரப்பில் விமர்சிக்கும்போது பதில் தரவேண்டியது அவசியமாகிறது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது,
சிவாஜி கணேசன் அவர்கள் என் சாப்பாட்டில் மண் அள்ளிப் போடவில்லை. அதேபோல, எங்கள் வள்ளலுக்கும் மற்றவர்களை சாப்பிட வைத்துதான் பழக்கமே தவிர, யார் சாப்பாட்டிலும் மண்ணை அள்ளிப் போட்டவர் கிடையாது ( உங்கள் சாப்பாடு உட்பட) என்பது உலகம் அறிந்த உண்மை. நிதானமாக செயல்படும் நீங்களே கூட நான் ஏன் பிறந்தேன் படத்தைப் பற்றி மதுரை தங்கம் அவர்களிடம் நீங்கள் கேட்ட நிகழ்ச்சியை விவரிக்கும் போது, அவரை புரட்சித் தலைவர் ஒதுக்கி விட்டார் என்று கூறுவதும் மூன்று தமிழ் தோன்றியதும் பாடலை மு.க.முத்துவுக்கு எழுதியதற்காக காரில் திரும்பும்போது வாலியை புரட்சித் தலைவர் கோபித்துக் கொண்டார் என்று கூறுவதையும் தவிர்க்கலாமே. (அது வாலி எழுதிய புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட. பல சம்பவங்கள் பல புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அதையெல்லாம் மேற்கோள் காட்டுவது மன வருத்தத்தையே ஏற்படுத்தும்)
சிவாஜி கணேசன் அவர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. சொல்லப்போனால் எஸ்.வி.ரங்காராவ், பாலையா, எம்.ஆர்.ராதா, சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா , நாகையா போன்ற தமிழகத்தின் சிறந்த நடிகர்கள் வரிசையில் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் தனி இடம் உண்டு. நன்றி.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
நண்பரே ! இதுல சிங்கப்பூர் எங்கே இருக்குண்ணு கொஞ்சம் சொல்ல முடியுமா ?
அப்புறம் இது மாதிரி 'ஒரே' வார்த்தையை உபயோகப்படுத்துறதுக்கு முன்னால கொஞ்சம் யோசியுங்க தோழரே !
கொஞ்சம் நாளைக்கு முன்னால தான் கோடியில் ஒருவன் ரிலீஸ் ஆச்சு.
குறிப்பு : நானும் சிங்கப்பூருல தான் குப்பை கொட்டுறேன்.
போதும் என்று நினைத்தாலும் விட மாட்டீர்கள் போலிருக்கிறதே? நண்பர்களே.. மீண்டும் நாங்களாக ஆரம்பிக்காத நிலையில், பிரச்னைகளை கிளப்புவது நீங்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களின் வினாக்களுக்கும் கேலிகளுக்கும் எதிர்விளைவே இந்த பதில்...
கேள்வி கேட்க வந்திருக்கும் ஜோ அவர்களே, ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் மட்டும் ஓடியதன் மர்மம் என்ன? என்று ஏற்கனவே கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு நான் விளக்கமும் அளித்தேன். ஆனால், இப்படி கேள்வி கேட்பவர், முதலில் நான் நேற்று எழுப்பிய திரிசூலம் ரூ.2 கோடி வசூலித்தது என்று சொல்வதற்கான ஆதாரம் எங்கே? என்று கேட்டதற்கு, முதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு ஆயிரத்தில் ஒருவன் பற்றி கேள்வி கேளுங்கள்.
ஒரு காலத்தில் உங்கள் நடிகர் கதாநாயகராக இருந்திருக்கலாம். கடைசியில் அவர் மார்க்கெட் இழந்து துணை நடிகராகத்தான் படங்களில் தலைகாட்டினார். 1992ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஒரு படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகர் பட்டம் கிடைத்ததே. அது ஒன்றே போதுமே உங்கள் நடிகர் ஒரு துணை நடிகர்தான் என்பதற்கு? உடனே, எங்கள் தலைவர் சிறிய வேடத்தில் ஆரம்பத்தில் நடிக்கவில்லையா? என்று கேட்காதீர்கள். திறமையால் முன்னேறி கதாநாயகனாக உயர்ந்தவர் கடைசி வரை கதாநாயகனாக திகழ்ந்தார். ஆனால்,நீங்கள் வாழ்ந்து கெட்டவர்கள்.
ஆயிரத்தில் ஒருவன் பற்றி நீங்கள் செய்யும் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். 3 ஆண்டுகளுக்கு முன் உங்கள் தியேட்டரிலேயே ரிலீஸ் ஆகி ஒரு வாரம் தாக்குப்பிடிப்பதற்குள்ளாகவே தியேட்டரில் ஈயாடிய படத்தை, இப்போது உங்களைப் போலவே நாங்களும் ஆவலுடனும் உற்சாகத்துடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அது... சோகபார்ட் சொங்கித்துரை ஆவதை பார்க்க.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
சிங்கப்பூர் , ஒரே .. கேட்ட கேள்விக்கு பதில் இல்ல .. கையப்புடிச்சு இழுத்தியா பாணியில சம்பந்தம் இல்லாம ஏதாவது பேசுறது . சரி ..உங்களிடம் பதில் இல்லை என்று எடுத்துக்கொள்கிறேன் .
நீங்க பண்ணுற காமெடியைத் தான் கேட்கிறேன் .. மக்கள் திலகத்தின் மகத்துவம் எனக்குத் தெரியும் . அவரை என்றுமே நான் தூற்றியதில்லை ..அது பற்றி மற்றவரிடம் அறிவுரை வாங்கும் நிலையில் நான் இல்லை நண்பரே.
நான் எழுப்பிய திரிசூலம் ரூ.2 கோடி வசூல் பற்றிய கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை என்று புரிந்து கொண்டு விட்டோம். உண்மையை உங்கள் பதில் மூலம் உணர்த்தியதற்கு நன்றி ஜோ. எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும் என்று தர்மி பாணியில் வரும்போதுதான் அறிவுரை வழங்க வேண்டியுள்ளது. சரி பதில்தான் வேண்டாம். ரூ.2 கோடி வசூல் கேள்வியை அங்கே கேட்டு எங்களுக்கு தெரியப்படுத்துங்களேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சொன்னவரிடம் சொன்னது பற்றி கேள்வி கேட்பது தான் முறை .. நீங்க சொன்னதற்கு உங்களிடம் கேட்கிறேன் .. உங்கள் கேள்வியை யார் சொன்னார்களோ அவர்களிடம் கேளுங்கள் .. நான் யாருக்கும் எடுப்பு அல்ல . சரியாண்ணே!.
இப்போ நீங்க சொன்னது பற்றி நான் கேட்டதுக்கு .. அவன நிறுத்தச் சொல்லு ..நான் நிறுத்துறேன்னு அடம் பிடிக்காம தெளிவா சொல்லுங்க பார்ப்போம் .
1..2..3
நமது பெருமைமிகு பெரும் போற்றுதலுக்கு தகுதியான மக்கள்திலகம் புகழ் பாடும் திரியின் மூத்த உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு கட்டாயம் செவி சாய்க்க தான் முயற்சிக்கிறோம்...ஆனால் நம் சக தோழர்கள் ஒத்து வர மறுக்கும்போதுதான் விமர்சனங்கள் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளியே பாய்கிறது...நம் உறுப்பினர்களும் பதிலுக்கு,பதில் லாவணி பாட வேண்டியதில்லை! நாம் யாரையும் எதிரிகளாக நினைக்கவில்லை... மக்கள்திலகம் அவர்களின் சாதனைகள்,சரித்திரங்கள் - இவைகளுக்கு ----- சரிசமமான பிரமுகர்களிடம் -compare -செய்தால் தான் MGR -எனும் அற்புததின், அற்புத படைப்பின் புகழொளி பிரகாசிக்கும் என்பது கண் கூடு...அதுவும் நாங்கள் 1972-1973 ஆம் ஆண்டுகளிலேயே தாண்டி,கடந்து வந்து விட்டோம் -என்றால் அது மிகையாகாது!!!!!!
உங்கள் நண்பர்கள்தானே அவர்கள், தனிப்பட்ட பிரச்னையாக இருந்தால் கேள்வி கேட்டவரிடம் மட்டுமே கேட்பேன். ஆனால், இது உங்கள் அபிமான நடிகர் படத்தின் வசூல் பற்றிய பிரச்னை. ஒன்று அதற்கு பதில் கூறிவிட்டு கேள்வி கேளுங்கள். அல்லது திரிசூலம் படம் ரூ.2 கோடி வசூல் செய்யவில்லை என்பதை ஒப்புக் கொண்டுவிட்டு கேளுங்கள் சொல்கிறோம். சரியா...? உங்கள் நண்பர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வருவீர்கள் என்று பார்த்தால் அவர்களை கைகழுவி விட்டீர்களே? சரி போகட்டும்... சமாதானங்களை எதிர்பார்க்காமல் பதிலோடு உங்கள் நேர்மையையும் எதிர்பார்க்கிறேன். திருப்பியும் நொண்டிச்சாக்கு சொன்னால் லாவணி பாட விரும்பவில்லை ஜோ.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்