-
இன்னொரு ஸ்பெஷல் சாங்க்… ( வாசு போட்டாச் இல்லீங்களே)
கண்ணாடி மேனியடி
தண்ணீரில் ஆடுதடி
கல்யாணம் ஆகும் முன்னே
கற்பனையில் நீந்துதடி..
கொடிமலர்..காஞ்ச் அண்ட் கோ… குளிக்கறதுக்குப்புடவையைக் கட்டிக்கொண்டு எக்ஸர்ஸைஸ் பண்ணறாங்க.. கொஞ்சம் பயம்மா இருக்கு..ஏதாவது நடந்துடுமோன்னு..
https://youtu.be/-SeCEd47iuY
-
அதே கொடிமலரில் இன்னொருதுள்ளல் பாட்டு.. ஓஓஒ..
காஞ்ச்..ஏவி.எம். ராஜன் ( நற நற..)
https://youtu.be/MXK4DdGsMW0
-
வாழ்க்கையில எப்போதுமே சுய நலம் முக்கியம்..அதான் ஃபர்ஸ்ட்.. அப்புறம் தான் மத்தவங்களுக்கு என்று ஏதோ ஒரு ஆன்றோர் சொல்லியிருக்கிறார்..
எனில்…எனக்காக இந்தப் பாட்டு..
தேவனைப் பற்றிப் பாடும் தேவதை.. தேவிகை..
பாவிகளே பாவிகளே உங்கள் பாதையைப் பாரு்ங்கள்.. (என்னையா..ம்ஹூம் இருக்காது!) :)
https://youtu.be/u0v9Ux2Lup8
-
Yesterday watched Savale Samali and when the famous scene which took place near the well my thought went to the
descritpion/analysis made by our Neyveliar about the NT's performance in that scene and today when casually viewing this
thread got a pleasant surprise of our beloved hubber Mr Neyveliar presence. Welcome back and do contribute here and our
god's thread as usual.
Regards
-
Courtesy: Tamil Hindu
தமிழ், இந்தி என்னும் மாறுபட்ட மொழிகள் வெளிப்படுத்திய ஒன்றுபட்ட உணர்வை இதுவரை இப்பகுதியில் கண்டோம். ஒரு சூழலை அல்லது தருணத்தை அணுகும் விதத்தில் இரு மொழிப் படைப்பாளிகளுக்கும் கணிசமான வேற்றுமைகளும் இருக்கின்றன.
அந்த வேற்றுமைகளின் அழகை இனிக் காண்போம். மேலெழுந்தவாறு பார்க்கும்போது எதிரெதிர் துருவ நிலைகளாகத் தோன்றினாலும் அடிநாதம் ஒன்றாக இருப்பதையும் உணர முடியும். அத்தகைய பாடல்களை இந்தப் பகுதியில் காண்போம்.
உலகத்தில் மாற்றம் ஒன்றுதான் மாறாத அம்சம் என்று சொல்லப்படுவதுண்டு. இந்த மாற்றத்தின் இயல்பை ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கே உரிய விதத்தில் அணுகுகிறார். “இயற்கை சக்திகளான, மலை, கடல் வானம் ஆகியவை எல்லாம் அப்படியே இருக்கும்போது மனிதனின் குணங்கள் மட்டும் வெகுவாக மாறிவிட்டதைப் பார்” என்று கூறுகிறது ஒரு தமிழ்ப் பாடல்.
“உலகத்தில் மனிதன் மட்டும் அல்ல, பகல்-இரவு, சூழ்நிலை, பருவம் ஆகிய இயற்கை எல்லாம் மாற்றத்துக்கு உட்பட்டவை. எனவே வீணாகக் கவலை கொள்ளாதே” என்று சொல்கிறது ஒரு இந்திப் பாடல். இந்த இரண்டு பாடல்களையும் பார்ப்போம்.
இந்திப் பாடல்:
திரைப்படம்: நயாசன்சார் (புதிய குடும்பம்) 1959-ல் வெளியான படம். பாடலாசிரியர்: ராஜேந்திரகிஷன்
பாடியவர்: ஹேமந்த்குமார். இசை: சித்ரகுப்த்.
பாடல்:
தின் ராத் பதல்த்தேஹைன்
ஹாலாத் பதல்த்தேஹைன்சாத்சாத்மௌசம் கீ
ஃபூல்அவுர் பாத் பதல்த்தேஹைன்
பொருள்:
பகல்-இரவு மாறுகிறது.
பக்கச் சூழல்கள் மாறுகின்றன.
பருவமும் அதன் பாதையும்
மலரும் மொட்டும் மாறுகின்றன.
எப்போதும் இருக்காது வெயில்
இருப்பதில்லை இருட்டும் எப்போதும்.
ஓர் இடத்தில் நிற்காது ஒருபோதும்
ஓடுகின்ற காலத்தின் கால்கள்.
எழுந்ததும் அழிந்ததுமாக எத்தனை ஊர்கள்
விழிகளில் விழுந்து இங்கே மாறின.
கடந்து போகும் இலையுதிர் காலம்
அடைவோம் உடனே வசந்த காலம்
இன்று தோன்றும் காய்ந்த கொடியே
எழிலுடன் நிற்கும் பூக்களுடன் நாளை
எவர்தான் கேட்பார் இயற்கையை நோக்கி
இரவுகள் இருக்கட்டும் இருள் இன்றி என
இந்த வாழ்க்கை ஒரு பாயும் நதி
இன்பம் துன்பம் இதில் ஓடும் புனல்
மலரைக் கொய்யும் மனதுடையோரே
குத்தும் முள்ளை முதலில் கொள்வீர்
எப்படி அறிவார் இன்பத்தின் மகிமை
தப்படி வைத்துத் துன்பத்தைத் தாண்டார்
பகல்-இரவு மாறுகின்றன.
பக்கச் சூழல்கள் மாறுகின்றன.
இதே கருத்தை மிக இனிமையான மெட்டில் கூறும் தமிழ்ப் பாடல் மிகவும் பிரபலம்.
திரைப்படம்: பாவ மன்னிப்பு (1961). பாடலாசிரியர்: கண்ணதாசன்.
பாடியவர்: டி.எம். சௌந்திரராஜன். இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி.
பாடல்:
வந்த நாள் முதள் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும்
சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
நிலை மாறினால் குணம் மாறுவார்-பொய்
நீதியும் நேர்மையும் பேசுவார் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவார்-அது
வேதம் விதியென்றோதுவார்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து விட்டானே
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.
-
எஸ்.வாசுதேவன் வாங்க :) அழகான பாடல் ஹிந்தி.. ட்ரான்ஸ்லேஷனும் அழகு.. ஆடியோ தான் கிடைச்சது யூட்யூப்ல
https://youtu.be/ncFAsqaa0Eg
வந்த நாள் முதல் - மறக்க முடியுமா ரஹீம் ந.தி. அண்ட் குழந்தை.. அது இப்போது என்னவாக இருக்கிறது..
https://youtu.be/Yhrp0_XgjdQ
*
கொஞ்சம் நான் எழுதிப்பார்க்கட்டா..
கருவறை தொடங்கிக் கல்லறை வரையில்
....காண்பது எல்லாம் சுழலாய்ச் சுழல்கள்
வருவது தெரியும் வாழ்வினில் என்றோ
...வகையுடன் முடிவோம் எனத்தெரி யாதே
பரிவுகள் பாசம் இளமையின் வேகம்
..பலதினம் கழிய முதுமையின் சோகம்
விரிவெனப் பார்க்கச் சுழற்சியாய் மாறும்
..வெளிறியே சிரிக்கும் வாழ்வதன் வேஷம்..
மாற்றங்கள் தான்கண்டான் மனிதன் அன்று
…மாறிவரும் வேகத்தின் தன்மை கண்டே
ஆற்றல்கள் அறிவினொளி என்றே எங்கும்
..அகத்தினிலே கொண்டுபல செயல்கள் செய்தான்
போற்றுதலாய்ப் பலவிஷயம் செய்யுங் காலம்
…போதாமல் கூடஒரு செயலும் செய்தான்
மாற்றமென மனத்துக்கண் மனிதப் பண்பை
…மாற்றிவிட்டே நடக்கின்றான் நடக்கின் றானே…
கொஞ்சம் ஒழுங்கா வந்திருக்கா :)
-
//கருவறை தொடங்கிக் கல்லறைவரையில்// இது கண்ணதாசன் எழுதிய கடைசிப் பாடலின் முதல் வரி..அதைக் கொஞ்சம் அவரிடமிருந்து வாங்கிவிட்டேன்..
-
நாளும் ஒரு அழகின் அலை
ஈகரையில் போட்ட பதில் பதிவை இங்கு இடுவதில் பெருமை அடைகிறேன் - உங்கள் திறமை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே - இருப்பினும் இந்த பதிவை இங்கு படிப்பவர்கள் கண்டிப்பாக ஈகரை சென்று அங்கும் மயங்க ஒரு வாய்ப்பு கிடைக்குமே என்ற ஒரே எண்ணத்தில் மீள் பதிவிடுகிறேன் .
அன்புள்ள ck
அருமை , அற்புதம் , ஆனந்தம் - இவைகளுக்கும் மேலே ஏதாவது வார்த்தை இருந்தால் , சாதாரண
நடையில் , இந்த பாமரனுக்கும் புரிகின்ற வகையில் சொல்ல முடியுமா ?
ஒன்று மட்டும் எனக்கு புரிகின்றது - உங்கள் முன்னோர்கள் கம்பனின் வழி வந்தவர்களாக இருக்க வேண்டும் - அதனால் வர்னைனைகளும் , கவிகளும் குற்றால அருவி போல உங்களுக்கு வருகின்றது - இல்லை என்றால் சின்ன வயதில் காளி உங்கள் நாவில் "ஓம் " என்று எழுதி இருக்க வேண்டும் ; அப்படியும் இல்லை என்றால் அந்த ஆதி சங்கரரே உங்கள் ஆத்மாவுடன் கலந்திருக்க வேண்டும் .
மிகவும் ரசிக்கின்றேன் - நிலா பதிவுகள் போடுவது மட்டும் அன்றி , அந்த நிலவையே , அம்மாவாசையில் வரவழைத்தவளை உங்களால் மட்டுமே இப்படி ரசித்து , அழகாக எழுத முடியும் -
அன்புடன்
ரவி
-
//மிகவும் ரசிக்கின்றேன் - நிலா பதிவுகள் போடுவது மட்டும் அன்றி , அந்த நிலவையே , அம்மாவாசையில் வரவழைத்தவளை உங்களால் மட்டுமே இப்படி ரசித்து , அழகாக எழுத முடியும் - // ரவி.. என்னங்க இது திடீர்னு.. ரொம்ப நன்றி :) கொஞ்சம் கூச்சமாக இருக்கிறதுங்க.. இன்னும் வெகு தூரம் போக வேண்டும்..உஙக்ளைப் போல ரசனை மிக்க நண்பர்களின் வாழ்த்துக்களும் பாரட்டும் இறையருளும் எனக்கு என்றும் துணை நிற்கும் என நம்புகிறேன்.. மிக்க நன்றி அகெய்ன்..
-
சி.க ரவியின் வாழ்த்தை நான் வழிமொழிகிறேன் ..