Russian Post:
http://i125.photobucket.com/albums/p...ps2wzqkt18.jpg
Coffee was served but MGR asked for Milk, the Vice Consul Mr.Ivanov gives milk to our Thalaivar.
http://mgrroop.blogspot.in/2008/08/m...o-tolstoy.html
Printable View
Russian Post:
http://i125.photobucket.com/albums/p...ps2wzqkt18.jpg
Coffee was served but MGR asked for Milk, the Vice Consul Mr.Ivanov gives milk to our Thalaivar.
http://mgrroop.blogspot.in/2008/08/m...o-tolstoy.html
இனிய நண்பர்கள் திரு .குமார், திரு சைலேஷ் , திரு லோகநாதன் , திரு கலைவேந்தன் , திரு தெனாலி ராஜன் , திரு ரூப்குமார் அவர்களின் இன்றைய பதிவுகள் எல்லாமே அருமை .
4.4.77ல் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் திலகம் பதிவி ஏற்ற தினமும் அவருடைய அம்பா சிடர் காரின் எண்ணும்
பொருத்தமாக இருப்பது தெரியும் .
1967-ம் ஆண்டு பரங்கிப்பேட்டை தொகுதியில் நின்று தலைவர் வென்றார் என்று கட்டுரையில் உள்ளது. அது பரங்கிப்பேட்டை அல்ல. பரங்கிமலை தொகுதி. 1980-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் என்று உள்ளது. 1980-தேர்தலில் அவர் வெற்றிபெற்ற தொகுதி மதுரை மேற்கு.
கடைசியாக, 1986-ல் அமெரிக்காவில் இருந்தபடியே இதே ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்றும் உள்ளது. அமெரிக்காவில் இருந்து ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தலைவர் சாதனை படைத்தது உண்மைதான். ஆனால், தேர்தல் நடந்த ஆண்டு 1986 அல்ல, 1984.
பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டபோது அதை வேண்டாம் என்று மறுத்ததற்கு குறிப்பான காரணம் அவர் தரப்பில் இருந்து வரவில்லை என்ற தகவல் தவறு. அப்போதைய சூழ்நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து பத்ம ஸ்ரீ விருதை தலைவர் மறுத்து விட்டார்.
வியாபார ரீதியாக அமைந்த ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக தலைவருக்கு எப்படி பாரத் விருது வழங்கப்படலாம்? என்று விமர்சனம் எழுந்ததற்காக அவர் பாரத் பட்டத்தை திருப்பி அளிக்கவில்லை. ‘‘நாங்கள்தான் பாரத் விருதை மத்திய அரசிடம் சொல்லி வாங்கிக் கொடுத்தோம்’’ என்று அப்போது திமுகவினர் கூறியதையடுத்து, பாரத் பட்டத்தை திருப்பி அனுப்பினார். எந்த பட்டத்துக்கும் பதவிக்கும் தலைவர் ஆசைப்பட்டதில்லை. யாரையும் விருது வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டதில்லை. கொண்ட கொள்கைக்காக பத்ம ஸ்ரீ பட்டத்தை மறுத்தவர் தலைவர்.
பாரத் பட்டத்தை திருப்பி அனுப்பியது குறித்து இந்த பத்திரிகையில் வந்துள்ளபடி‘‘விருதுகளும் பட்டங்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக ஒருமனதுடன் அனைவராலும் ஏற்கப்பட்டால்தான் அது அதற்குரிய மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெறும்’’ என்று தலைவர் விளக்கம் அளித்தது உண்மையே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
தின இதழ் பத்திரிகையில் மக்கள் திலகத்தின் பல தவறான செய்திகள் இடம்பெற்று வருவதை முன்னிட்டு திரியில் அந்த செய்திகளை பதிவிடுவது பற்றி பரிசீலனை செய்யவும் .
" தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்? "
" தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், 'கருணாநிதி, கருணாநிதி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்-தான். 'கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது’ என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.
இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், 'உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, 'நான் ஆண்டவன்தான்’ என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்துகொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்துகொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும். "
Again, we do not cut paper clipping etc to suit our requirements.
Thanks to Mr. Chandran Veerasamy, FB.
சகோதரர்கள் திரு. கலைவேந்தன் மற்றும் திரு. வினோத் அவர்கள் அறிவது,
இதற்கு முன்பு தின இதழில், அப்போது நம் புரட்சித்தலைவர் அவர்கள் முதல்வராக இருந்த பொழுது, மறைதிரு. நாகி ரெட்டி அவர்கள் பேரன் திருமணம் விஜயா சேஷ மஹாலில் நடைபெற்றது எனவும், அந்த திருமணத்துக்கு முன் நாள் இரவு கூட்டம் எல்லாம் கலைந்து சென்ற பின், நம் மக்கள் திலகம் அவர்கள் கலந்து கொண்டார் என்றும் தவறான செய்தி பிரசுரிக்கப்பட்டது.
மேலும், நடிகர் திரு. ஏ. வி. எம். ராஜன், நடிகர் திரு. விஜயகுமார், திரு. தேங்காய் சீனிவாசன் மற்றும் மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து சொந்தப்படம் எடுத்து ,நஷ்டம் அடைந்ததாகவும், அதற்கு நம் பொன்மனச்செம்மல் அவர்கள் அந்த நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் உதவி புரிந்ததாகவும் தொடர்ந்து வந்த இதழ்களில் பிரசுரமானது.
இவையனைத்தும் உண்மையல்ல என்று நானும், திரு. சைதை ராஜ்குமார் அவர்களும், அப்போதே தின இதழ் பத்திரிகை ஆசிரியர் குழுவிடம் தொலைபேசியில் மறுப்பு தெரிவித்தோம்.
உண்மையில் மேற்கூறிய திருமணம் சென்னை ராயப்பேட்டை whites road ல் உள்ள ஒரு காலி மைதானத்தில், பந்தல்கள் போடப்பட்டு திருமணம் நடந்தது என்றும், புரட்சித்தலைவர் அவர்கள் எப்போதுமே மக்களிடையே ஒன்றிப்போவதுதான் வழக்கமேயன்றி, அனைவரும் திருமண மண்டபத்தை விட்டு சென்ற பின், பின்னிரவு நேரத்தில், செல்லவில்லை என்றும் ஆணித்தரமாக எடுத்துரைத்தோம். அப்போதெல்லாம், விஜயா சேஷ மஹால் திருமண மண்டபம் இல்லை என்றும் தெரிவித்தோம்.
மேலும், மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களுக்கு, தொடர்ந்து படம் எடுக்க முடியாத நிலையில்தான் தலைவர் அவர்கள் உதவி புரிந்தார் எனவும், நடிகை சாவித்திரி அவர்களுக்கு உதவி புரிந்தது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதுதான் என்றும், விரிவாக எடுத்துக்கூறினோம்.
புரட்சித்தலைவருக்கு புகழ் சேர்க்கிறோம் என்று நினைத்து தவறான செய்திகள் இடம் பெறக்கூடாது என்ற எங்கள் கருத்தை அழுத்தமாக நாங்கள் வலியுறுத்தினோம்.
1956ம் ஆண்டில் "மதுரை வீரன்' காவியம் மட்டும்தான் வெள்ளி விழா கண்டது என்றும்,. அலிபாபாவும் 40 திருடர்களும், தாய்க்குப்பின் தாரம் போன்ற காவியங்கள் வெற்றிப்படங்களேயன்றி வெள்ளி விழா படங்கள் அல்ல என்பதையும் உறுதி செய்தோம்.
இது போன்ற செய்திகளில் ஏதாவது சந்தேகம் இருந்தால், எங்களைப்போன்ற எம். ஜி. ஆர். ரசிகர்களையும், பக்தர்களையும் தொடர்பு கொண்டு, விசாரித்து, உண்மை செய்திகளை எழுதுமாறும் கேட்டுக்கொண்டோம்.
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.
http://i160.photobucket.com/albums/t...ps4v9nlwri.jpg
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.
http://i160.photobucket.com/albums/t...pstljryzpr.jpg
கலைஞர் கருணாநிதி அவர்கள், நம் புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பித்தபோது, அந்த இயக்கத்தின் பெயரைக்கூட குறிப்பிட மாட்டார். அவரது கட்சியிலே, நடிகர்களை (புத்தூர் நடராஜன், குறிப்பிட்ட காலம் வரை எஸ். எஸ். ராஜேந்திரன் , பிந்தைய காலத்தில் டி. ராஜேந்தர்) வைத்துக்கொண்டே, நம் தலைவரின் இயக்கத்தை "நடிகர் கட்சி" என்று கேலி பேசினார். " ஒட்டு காங்கிரஸ் " என்று நையாண்டி புரிந்தார் (நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று 1980ல் தனது நிலையை மாற்றிக்கொண்டும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததும் தனிக்கதை) சத்த்சுனவு திட்டத்தை கேலி பேசிய திரு. கலைஞர் கருணாநிதி அவர்களே, பின்னர் 1989ல் அவரது ஆட்சி காலத்தில் அதை தொடர வேண்டிய தாயிற்று. புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள்தான், பிறகு வந்த ஆட்சியாளர்களால்,, சிற்சில மாற்றங்களுடன் தொடர்கிறது, என்பது எவராலும், மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.
அதிகார துஷ்பிரயோகம் செய்து, நம் மக்கள் திலகத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் வெளிவரக்கூடாது என்பதில், கண்ணும் கருத்துமாக இருந்தார். "நேற்று இன்று நாளை" காவியம் திரையரங்குகளில் ஓட விடாமல் செய்வதற்கு, தடைகள் பல, ஏற்பட காரணமாயிருந்தார். ஒரு காலத்தில், அப்படி காழ்ப்புணர்ச்சியுடன், அநாகரீகமாக நடந்து கொண்ட கலைஞர் கருணாநிதி அவர்களை, சட்டமன்றத்தில் மரியாதையுடன் நடத்தி, சபையின் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் காத்த, பெருந்தன்மையின் சிகரம் பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் வந்த நம் புரட்சித்தலைவருக்கு தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு தனிப்பெரும் சிறப்பிடமும், பெருமையும் உண்டு.
கலைஞர் கருணாநிதி அவர்களே வெட்கப்படும் அளவுக்கு, தமிழக சட்டமன்றத்தில், புரட்சித்தலைவர் காலத்தில், அவருக்கு மரியாதை தரப்பட்டது. அவ்வளவு ஏன், 15-08-1977 சுதந்திர தினத்தன்று, கோட்டையிலே தேசக்கொடியை ஏற்றி உரையாற்றுகையில், மாநில முதல்வர்களுக்கு, இந்த கொடியேற்றும் அதிகாரத்தை பெற்று தந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியிலே பகிரங்கமாக தமது நன்றியை தெரிவித்து கொண்டார்.
எனது தெய்வத்தின் தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பிறகு பெருந்தன்மை கொண்ட ஒரே தலைவர், நான் வணங்கும் தெய்வம், காலத்தை வென்ற காவிய நாயகன், புரட்சித்தலைவரே !
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.
http://i160.photobucket.com/albums/t...ps45hhzauy.jpg