Originally Posted by
RAGHAVENDRA
அழகு பொம்மையாய் Fashion Showவில் Catwalk செய்வதைத் தவிர வேறொன்றும்ம செய்யத் தெரியாத Modelஐப் போல் பயன்படுத்தப் பட்டு வந்த சரோஜா தேவி என்ற மிகச் சிறந்த நடிகையின் திறமையை கல்யாணப் பரிசு படத்தில் ஸ்ரீதர் உலகறியச் செய்தார் என்றால் பாகப் பிரிவினை படம் அவருக்குள் இருந்த அந்த நடிப்புப் புலமையை மெருகேற்றியது என்றால் மிகையில்லை. அதற்குப் பிறகு நடிகர் திலகத்துடன் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தினார். இதில் சிகரம் வைத்தாற் போல அமைந்தது புதிய பறவை. சௌகார் ஜானகியின் நடிப்பில் புதிய பரிணாமத்தையும் இப்படம் வெளிக்கொணர்ந்தது. ஒவ்வொருவரும் தத்தம் பங்கினை மிகச் சிறப்பாக அளித்ததன் பலனே இந்த சிறப்பிற்குக் காரணம்.
ஒவ்வொரு ரசிகரின் டாப் 10 நடிகர் திலகத்தின் படங்களைப் பட்டியலிட்டால் அதில் நிச்சயம் புதிய பறவைக்கு இடம் உண்டு.