'வைஷாலி' சுபர்ணா ஆனந்த்
http://1.bp.blogspot.com/-JOsOT0PyMT...Y/s1600/14.JPG
http://cf2.imgobject.com/t/p/origina...vJnNJAVdpw.jpg
Printable View
சி.க சார்,
இப்போதைய படம் வேணுமா?:)
காற்றடிக்கும் திசையிலெல்லாம் மெல்லிசை மன்னரின் இசை பறக்கும் பாடலின் ஹிந்தி வடிவத்தைத் தந்து அசத்தி விட்டீர்கள் வாசு சார்
சிங்கார வேலனே தேவா பாடலை நினைவூட்டும் மனதை மயக்கும் மதுர கானம் வைஷாலி மலையாளப் படத்திலிருந்து...
http://www.youtube.com/watch?v=W-Nz6otLjNE
ரவி இசையில் வைஷாலி மலையாளத் திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் அசாதாரணமானவை. ஒவ்வொரு பாடலும் முதன் முறை கேட்கும் போதே மனசை என்னவோ செய்யும். குறிப்பாக சித்ரா பாடிய இந்தப் பாடல் நரம்புகளுக்குள் புகும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இந்து புஷ்பம் சூடி நில்கும் என்ற இப்பாடலை நீங்கள் கேட்கும் போது இதை நிச்சயம் உணர்வீர்கள்.
பாடலுக்காகவே இப்படத்தை வெளியான போது மூன்று முறை பார்த்தேன். படம் முடிந்த பின்னும் இப்படத்தின் இசை நம்மை எழுந்திருக்க விடாது.
http://www.youtube.com/watch?v=4V6LSLcPPps
சுசீலாம்மா, பாலா பாடிய அபூர்வ பாடல். மெல்லிசை மன்னர் இசையில். ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ப் பாடலுக்கு நடித்தது.// தாங்க்ஸ் வாசு சார்.பாட்டுக் கேட்டேன்..
இந்தப் படத்துல ஒரு ஜோக் உண்டு..
“டேய் இப்போப் போனாங்களே அந்த டீச்சர் எந்தக் கிளாஸ்ல் பாடம் எடுக்கறாங்க..”
“யாரு.. மஞ்சுளாக்காவயா கேக்கறீங்க..ஐய..அவங்க டீச்சர்லாம் இல்லை..ஆறாங்கிளாஸ் படிக்கறாங்க (எந்தக் கிளாஸ் மறந்து விட்டது)
//கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ// ரொம்ப நல்ல பாட்டு.. எப்போதும் நான்கேட்பது.. தாங்க்ஸ் க்ருஷ்ணாஜி..
89 என நினைவு.. நான் வேலை பார்த்த அலுவலகத்தில் சிவசங்கரி வந்திருந்தார்..அவர் வேலையாக..இடம் துபாய்.. தமிழ்ச்சங்க நண்பர் ஒருவருடன்.. அவர் எனக்குத் தெரிந்தவர்.. பாருங்க இந்தக் கால இளைஞர்களை..சார் பேரு கண்ணன்..ஆனா தமிழ்ச் சங்கத்துல எல்லாம்சேர்ந்துக்கலை.. “ என அவர் சிவசங்கரியிடம் சொல்ல – மிக பரபரப்பாய் வேலைக்கிடையே எதற்கோ அந்தப்பக்கம் சென்றிருந்த நான் கொஞ்சம் முறுவலித்து- எனக்குத் தமிழ் தான் மூச்சு அதை மற்றவர் மீது விடமாட்டேன் எனப் படபடத்து பை ங்க.. சொல்லி (கவிதை ஞானக்கூத்தனுடையது) என் அறைக்குச் சென்று விட்டேன்..
இரு நாட்கள் கடந்திருக்கும்.. மறுபடியும் எதற்கோ வந்த அவர் என்னறைக்கு வந்து கைகுலுக்கி போய்ட்டுவரேன் சொல்லிச் சென்றார்..உங்கள் சி-ஜெ படத்தைப்பார்த்ததும் இது நினைவுக்கு வந்தது.
.
வாசு சார் கொஞ்சம் கவலையாய்த் தான் இருந்தது. தாங்க்ஸ்...மதுண்ணா கிருஷ்ணாஜி அப்புறம் மற்ற ஊர் வாழும் நண்பர்கள் எல்லாரும் ஓகேயாக இருப்பார்கள் என நம்புகிறேன்..
வாருங்கள் ராகவேந்திரன் சார்.
கரெக்ட். உங்களை சந்தித்து ரொம்ப நாட்களானது போல உள்ளது. நலம்தானே!
வாசு சார்
ஜேசுதாஸ் பாடிய தமிழ்ப் பாடல்களைக் காட்டிலும் அவருடைய மலையாளப் பாடல்களே என்னை அதிகம் கவர்ந்தவை. குறிப்பாக 80களில் சில படங்களில் அவருடைய பாடல்களை இங்கு நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.
த்வனி திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலும் இனிமையானவை. குறிப்பாக இப்பாடலைச் சொல்ல வேண்டும். நீங்களே உணருங்கள்.
http://www.youtube.com/watch?v=EBvaZlcrn7Y
சிவசங்கரி இன்ட்ரெஸ்ட்டிங்.சி.க.சார்.
இந்தியத் திரையுலக இசை வரலாற்றில் தவறாமல் குறிப்பிடத்தக்க பாடல், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலும். என்னைக் குறிப்பாக மிகவும் ஈர்த்த பாடல் கோபிகா வசந்தம். ரவீந்திரன் இசையில் ஜேசுதாஸ் பாடியது.
http://www.youtube.com/watch?v=Ik5nrjQ22jg