-
திலக சங்கமம் - வளர்பிறை
http://i1146.photobucket.com/albums/...psde54486a.jpg
'
என்ன சொல்வது.. எப்படி துவங்குவது ... தெரியவில்லை..
டைட்டில் கார்டு தொடங்கி வணக்கம் வரை நடிகர் திலகம் சரோஜாதேவி இணையின் ஆளுமை...மறக்க முடியாத காவியம்... இதுவரை பார்க்காத ரசிகர்கள் நிச்சயம் இப்படத்தை மிஸ்பண்ணுகிறார்கள் என்று அடித்துச் சொல்வேன்... சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பார்த்தாலும் இப்போது மீண்டும் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்காதா என தவிக்கிறது மனசு..
நடிகர் திலகம் திரை இசைத் திலகம் இணை பல மறக்க வொண்ணா காவியங்களைத் தந்திருந்தாலும்,, வளர்பிறை தனியிடம் பெறுகிறது. கவியரசரின் பாடல் வரிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் டி.எம்.எஸ்.சின் குரலில்.
அத்தனை பாடல்களையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றாலும் பூஜ்ஜியத்துக்குள்ளோ ஒரு பாடல் தமிழ்த்திரையுலக வரலாற்றில் கவியரசருக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிய பாடல்.
http://music.raag.fm/Tamil/songs-114...rpirai-Various
முற்றும் கசந்தததென்று பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் -
அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்..
இறைவன் இருக்கின்றானா இல்லையா என்ற வாதத்தை அர்த்தமற்றதாக்கி விட்டு, அவனைப் புரிந்து கொள்ளும் வழிமுறையை சொல்லித்தரும் பாடல். ஏங்கும் மனதிற்கு, வாடும் நெஞ்சிற்கு, துன்பத்தில் அல்லலுறும் மனதிற்கு ஆறுதலாய் இறைவன் இருக்குமிடத்தைப் புரிந்து கொள்ளும் வழியை அருமையாக சொல்லித் தரும் வரிகள்... இறைவனை எங்கும் தேடாதீர்கள்,, உங்களைச் சுற்றி இருக்கும் ஏதாவது ஒன்றில் அவனைக் காணலாம் என்ற பொருளில் பாடல் வரிகள் அமைந்து, டி.எம்.எஸ்.சின் குரலில் ஆறுதலின் உணர்வை அப்படியே கொண்டு வரும் விந்தை..
திரை இசைத்திலகம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழ்த்திரையுலகை ஆண்டு கொண்டிருப்பார் தன் படைப்புகளின் மூலம்.
இவையனைத்தையும் தூக்கி சாப்பிடும் வண்ணம் தன் நடிப்பால் நம்மைக் கட்டிப்போட்டு விடுவார் நடிகர் திலகம்..
-
ராகவ் ஜி,
ஆம் சிவாஜி சரோஜாதேவியின் அருமையான நடிப்பு இந்த படத்தில் உண்டு என்று. பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை இன்னும்
-
ராஜேஷ்.. நீங்களுமா.. மிக்க நன்றி.. பயம் இன்னும் கூடுகிறது.. இன்னும் நன்றாக எழுதவேண்டுமென..
ராகவேந்திரர்.. வளர்பிறை..பூஜ்யத்துக்குள்ளே ஒரு அழகுப்பாடல்.. வளர்பிறை நான் பார்த்ததில்லை..ஊருக்குச் சென்றால் வாங்கவேண்டும்..
எனது அடுத்த போஸ்ட் என்னவாக்கும்..எதிர்பாராமல் பார்த்த நல்லபடம் ஒன்று அதிலும் திலக சங்கமமா இல்லையா எனத் தெரியவில்லை..பட் பாடல்கள் அழகு..
-
பட்டினத்தார் என்னவாக்கும் சொல்றார் (ஹாஆஆவ்.. யாருங்க அங்க கொட்டாவி விடறது..)
உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும்
அடுத்தடுத்து உரைத்ததே உரைத்தும்
கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்
வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரம்..அப்படிப்பட்ட வாழ்க்கையில் காலத்தை எப்படியெல்லாம் வீணாக்குகிறோம்..
மீண்டும் மீண்டும் அதே ஓமான் எக்ஸ்ப்ரஸ் பொங்கல் வடை, அல்லது சாதம் ரசம் குழம்பு காய்கறி.. வெய்ட் ஏறிவிட்டால் டயட்டுக்காண உணவு..
சின்னவயசில் ட்ராயர் கல்லூரியிலிருந்து கல்யாணம் வரை கல்யாணத்திலிருந்து வயதாவது வரை பேண்ட் ஷர்ட் டை.. வீட்டில் வயதை மறைக்க பெர்முடாஸ்.. வெளியில் ஊருக்குப் போய்க் கோவில் சென்றால் வேட்டி..இப்படித் திரும்பத் திரும்ப காரியங்கள்.. அழகான காட்சிகள் சோகமான காட்சிகள் என திரும்பத் திரும்ப வருகின்றன..அதே அழகு சோகம் அதுவும் கேட்கவும் செய்கிறோம்…
இப்படி வரப்ரசாதமாக நமக்குக் கடவுள் கொடுத்த நாட்களை எல்லாம் வீணாகக் கழித்துக் கொண்டிருக்கிறோமே என வருத்தப் படுகிறார் பட்டினத்தார்..
ம்ம் என்ன செய்ய..எப்படியாகிலும் உருப்படியாக எழுதிவிடுவோம் என்ற நம்பிக்கையில் தான் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்ட்ட்டிருக்க்கிறது… நீளமாக.
*
அவன் ஒரு பட்டாளத்தான்..யெஸ் மிலிட்டரி மேன்.. அவனுக்கும் பத்து தினங்கள் கிடைக்கின்றன விடுமுறை.. அவனது தாயாரைப் பார்த்து (ஆறு தினங்கள் ட்ராவல் ப்ளஸ் ஊருக்குப் போய்வர இரண்டு நாள் தாயாருடன் இரண்டு நாள் எனப் ப்ளான்) வரப் புறப்படுகிறான்..
புறப்படும் போது தன் சக ஜவான்களைப் பார்க்கிறான்.. ஒருவன் தன் காதலியைப் பார்த்து எனது பரிசைக் கொடு எனக் கொடுக்கிறான்..இன்னொருவன் என் மகனைப் பார்த்து நான் விரைவில் வருவேன் எனச் சொல் எனச் சொல்கிறான்..அவனது மேலதிகாரியோ ஆஸ்பத்திரியில்.. போய்ப் பார்த்தால் – தலைக்கட்டுடன் அந்த தலைக்கட்டு சொல்கிறார்..”எனது கல்லூரிக்காதலியாயிருந்து மனைவியான தேவியைப் பார்த்து அவளிடம் சொல்.. என் வாழ்க்கை காவியமாகவும் ஆகலாம் அல்லது சிறுகதையாகவும் முடியலாம் எனச் சொல்” “ நான் மறுபடி வருகிறேன் ஐயா” “ நான் இருந்தால் பார்க்கலாம்” என விரக்தியாய்ச் சிரிக்கிறார் மேலதிகாரி..
ரயிலில் ஏறும் போது அவனுக்கு இன்னொரு நண்பனின் நினைவு..போர்க்களத்தில் இந்த வீரனின் கைகளில் உயிர்விட்டவன் அவன்.. ஊருக்குப் போய் என் தங்கை ராதாவை கவனித்துக் கொள் – என்பது அவனுடைய கடைசி வார்த்தைகள்..
ஆச்சர்யமாக அவன் சென்று கொண்டிருந்த பாஸஞ்சர் ரயிலிலேயே (அந்தக்காலம்) ஒரு இளம் பெண் ஏறுகிறாள்..யாரோ ஒரு கயவனால் துரத்தைப்பட்டு.. அவளை ஆசுவாசப் படுத்திப் பேச்சுக் கொடுத்தால் அவளே தான் ராதா..அவனுடைய நண்பனின் தங்கை..
பின் என்ன.. அந்த ராணுவ இளைஞன் ராதாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு பின் மற்ற நண்பர்களைப் பார்த்து விட்டு பின் கடைசியில் தனது தாயிடம் போகும் போது கொஞ்சம் கஷ்டம் தான்..ஏனெனில் இரண்டு நாட்கள் எக்ஸ்ட்ராவாக வேறு இடங்களில் கழிந்துவிட தன் தாயிடம் இருக்கப்போவது அரை மணி நேரம் மட்டுமே – என உணர்ந்து அதையே அம்மாவிடம் சொல்கிறான்..
அம்மாவோ பரவாயில்லைடா அரைமணியாவது வந்தாயே.. சரி போய் வா ..அடுத்த முறை நெடு நாள் தங்கும் வண்ணம் வா.. எனச் சொல்லி வழியனுப்புகிறாள்..
இது தாயே உனக்காக படத்தின் கதை.. A ballad of a soldier என்ற ரஷ்யச் சிறுகதையைத் தழுவி எடுக்கப் பட்ட படமாம்..
இதைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.. ஏசு நாதர் பேசினார் என்ற பாட்டு மட்டும் கேட்டிருக்கிறேன்.. காலையில் பாடல் போடுவதற்குப் பார்த்த போதுதான் தேவிகா என்று சர்ப்ரைஸ்.. சரி படம் பார்க்கலாம் என யூட்யூபில் தேடினால் இன்னொரு சப்ரைஸ் சிவாஜிகணேசன்.சிவகுமார் படம் எனப் போட்டிருந்தது ...
படம் பார்க்க ஆரம்பித்தால் தான் தெரிந்தது ந.தி, பத்மினி, ஜெயலலிதா தேவிகா என எல்லாரும் கெளரவத் தோற்றம் சிவகுமார் புஷ்பலதா..வசந்தமாளிகையில் ந.தியின் அன்னையாக வருபவர் தான் இதில் சிவகுமாரின் அம்மா..(என நினைக்கிறேன்..)
நீட்டாக எடுக்கப் பட்ட படம்..எனக்கு மிகப் பிடித்திருந்தது..பாடல்கள்…ச்சோஸ்வீட்.. அதில் ந.தி பத்மினி பாட் நான் கேட்டிராத பார்த்திராத ஒன்று..இந்தியன் கப்பலேறிப் போயாச்சு ப் பாட்டின் முன்னோடி
மேலதிகாரியாக ஆஸ்பத்திரியில் ந.தி..உணர்ச்சிபொங்க சிவகுமாரிடம் தன் கதை சொல்வது அழகு..அந்த ஃப்ளாஷ்பேக்கில் ந.தி. பத்மினியின் இளமை ப்ளஸ் அசத்தல் நடிப்பு.. வெகு அழகு..
.
பழகு செந்தமிழ் அழகு மங்கை உன்
பருவம் காட்ட வேண்டும்..
https://youtu.be/SR3JqKEVnbk
ஏசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்..
அமைதிப்புறாவே அமைதிப்புறாவே அழைக்கின்றேன் உன்னை..
ஜெயலலிதா நடனத்தில்..
காவேரியில் தேம்ஸி நதி கலந்துவிட்டது
கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்துவிட்டது..
கோவைப்பழம் செர்ரியோடு கனிந்துவிட்டது
குவளைமலர் லில்லியோடு குவிந்துவிட்டது …வாவ்…
( நாகரீகம் மாறியதை எளிய வரிகளில் பாடல்..அழகுதான்)
வீடியோ கிடைக்கவில்லை.. அமைதிப்புறா கிடைத்தது..அது விஜயகுமாரி என விட்டுவிட்டேன்..!
பார்க்கவில்லை எனில் கண்டிப்பாக லெஷரில் பார்க்கவேண்டிய படம்..
வலையில் தேடியதில் ஏற்கெனவே இந்தப் படத்தைப்பற்றி வாசு சார் எழுதியிருக்கிறார் வெகு அழகாக.. ராகவேந்திரரும்தான்..
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post730220
ம்ம் அப்புறம் வாரேன்..:)
-
கல்நாயக் /ck - நான் (கல்நாயக்) தமாஷா சொன்னதை ஏன் இவ்வளவு சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டீர்கள் என்று நீங்கள் கேட்கலாம் - ஒரு விஷ பரீட்சை யை தெரிந்தும் எடுத்துக்கொள்ளலாமா என்று நீங்கள் கேட்பதும் புரிகின்றது . ஒரு சின்ன முயற்சி - 1000 கரங்கள் நீட்டி நம்மை தினமும் அரவணைக்கும் அந்த கதிரவனுக்கு இந்த ரவியின் ஒரு மிகச்சிறிய காணிக்கை . உங்கள் இருவருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள் -
1. உங்கள் திறமையை வைத்து என் பதிவுகளை எடை போடாதீர்கள் - உங்கள் கற்பனைக்கும் , திறமைக்கும் முன் என் பதிவுகள் எறும்பை விட சிறியவை .
2. என்னிடம் ரொம்பவும் எதிர்பார்க்காமல் ( சிங்கங்கள் நடமாடும் இடம் இது என்று எனக்குத்தெரியும் ) சாதரணமாக பதிவுகளை படிக்கவும் .
3. போடும் போதே , நீங்கள் ஏற்படுத்தும் நேப்பாள் நில நடுக்கத்திலும் , நெய்வேலி யிலிருந்து வரப்போகும் சுறாவளியிலும் , திலகத்தின் சங்கமத்திலும் என் பதிவுகள் காணாமலும் போகலாம் - மீண்டும் கதிரவனின் ஒளி எழும்பும் .
4. பாடல்களில் கதிரவனை பற்றி ஏதாவது ஒரு குறிப்பு இருக்கும் - பாடல்கள் நிலாவைப்போல ஆரம்பத்திலேயே ஆதவனை பற்றித்தான் ஆரம்பிக்கும் என்று அவசியம் இல்லை .
5. கதிரவனை பற்றி உங்களுக்கு உதிக்கின்ற நல்ல பாடல்களையும் கண்டிப்பாக பதிவிடவும் .
6. மறை முகமாக , என் பதிவுகள் உங்கள் பதிவுகளையும் இன்னும் அதிகமாக உயர்த்தும் - எப்படி என்று கேட்கிண்டீர்களா ? - தரத்தில் சுமாராக இருப்பதால் - நிலாவே தேவலை என்று பலர் நினைக்கத்தோன்றும் - இதற்காக உங்களிடம் இருந்து எந்த கமிஷன் யையும் நான் எதிர்பார்க்க மாட்டேன் .
7. ஒரே நாளில் ஒரு பதிவுக்கும் மேலே போட வாய்ப்பு உள்ளது - எல்லோரையும் அலெர்ட் பண்ணுவதும் உங்கள் கடமை .
8. எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் - உங்களைப்போல பிறவி கவிஞர் அல்ல தமிழில் ...
இனி என் பதிவுகள் உதயமாகும்
அன்புடன்
ரவி
-
Om ~ Japa kusuma-sankarsham kashyapeyam maha-dyutim
tamo-rim sarva-papa-ghnam pranato ' smi divakaram
I pray to the Sun, the day-maker, destroyer of
all sins, the enemy of darkness, of great
brilliance, the descendent of Kaashyapa, the
one who shines like the japaa flower.
Om Crimson red like a hybiscus flower, the Great Light shines onto the earth, removing all the darkness and eradicating sin. We bow down with devotion to that Shining Light. Om we bow down to the Sun, Light of Wisdom, Dispeller of Ignorance.
In Vedic astrology, the Sun is the principal of light, life and love, or true-will and perception. It is the most important factor for determining the spiritual life and potential of an individual. In represents the soul---the causal body or reincarnating entity---whose will is behind our fate. It is also the mind or the mental principal on a lower level as reason, discernment, clarity and illumination.
Surya is an important god in all religions especially in Hinduism. He is the chief graha or celestial body around which revolve all the astrological grahas. He is the supreme father whose chariot is made up of 12 wheels , each wheel corresponding to the seasons and which is pulled by 7 horses. They say that while six horses are seen , the seventh horse is unseen. it is the mysterious horse of intuitive wisdom whose presence is felt but which remains invisible. Let the sun god shower all His blessing to every one in this mayyam thread and brighten our lives better than BEST.
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 1.
சிங்கங்கள் நடமாடும் இந்த மதுர காண வனத்தில் , இந்த சுண்டலியின் முதல் பதிவு ( திருமணம் செய்துக்கொள்ளும் முன்பு நானும் ஒரு சிங்கமாகத்தான் இருந்தேன் என்பது வேறு விஷயம் ).
கதிரவனை வணங்கி , ஆரம்பிக்க இந்த பாடலைத்தவிர வேறு சிறப்பான பாடல் வேறு எந்த உலகத்திலும் கிடைக்குமா ? அகர முதல எழுத்தெல்லாம் என்று ஆரம்பித்து வைத்த அந்த கணேசனை வணங்கி விட்டு இந்த பாடலை பதிவிடுகிறேன் .
ஆயிரம் கரங்கள் நீட்டி - அணைக்கின்ற தாயே போற்றி !!
அருள் பொங்கும் முகத்தை காட்டி - இருள் நீக்கம்
தந்தாய் போற்றி !
தாயினும் பரிந்து சால சகலரை அணைப்பாய் போற்றி !!
தழைக்கும் ஓர் உயிர்களக்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய்
போற்றி !!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி !!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி !!
நானிலும் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி !!
"Aayiram Karangal Neeti
Anaikkindra Thaye Potri
Arul Pongum Mugathai Kaati
Irul Neekam Thanthai Potri
Thayinum parinthu Sala Sagalarai Anaippai Potri
Thazhaikkum Or Uyirkatkellam Thunakkaram Koduppai Potri
Thoorathey Neruppai Vaithu Saarathai Tharuvai Potri
Gnayire Nalamey Vazhga Nayagan Vadivey Potri
Naanilam Ulla Naal Mattum Potruvom Potri Potri"
https://youtu.be/xsCtzX-9TiU
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 2.
ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை -
ஆடி வா ஆடி வா ஆடி வா - அட பிறந்தவளே ஆடி வா - புகழ் தேட பிறந்தவளே பாடி வா --
அருமையான சூழ்நிலை - அழகான காதலர்கள் - அற்புதமான பாடல் - இளமை , இனிமை ததும்பும் பாடல் இதோ
https://youtu.be/P8d1U0w9J-4
-
ராகவேந்திரன் சார்,
என் வேண்டுகோளை ஏற்று திலக சங்கமத்தை மதுரகானங்கள் திரியிலும் சங்கமம் ஆக்கியதற்கு என் நன்றிகள் ஆயிரம்.
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன். அவன் இறைவன்.
பூஜ்யம் தாண்டி தன் நடிப்பு ராஜ்யத்தால் நடிப்பை இன்னதென்று இகமதில் புரிய வைத்துக் கொண்டிருப்பான் ஒருவன். அவன் நாம் வணங்கும் இறைவன்.
உண்மைதானே!
-
சி.க,
http://www.thehindu.com/multimedia/d...3_1908920e.jpg
அருமை. 'தாயே உனக்காக' கதை கலக்கல். நிஜமாகவே அருமையான மூவி. பச்சிளம் பாலகன் போன்று பால் வடியும் முகம் சூர்யா அப்பாவிற்கு.
http://s2.dmcdn.net/CyFV6/1280x720-TH3.jpg
//வசந்தமாளிகையில் ந.தியின் அன்னையாக வருபவர் தான் இதில் சிவகுமாரின் அம்மா..(என நினைக்கிறேன்..)//
கரெக்ட். சாந்தகுமாரி. 'சிவந்த மண்'ணிலும் அன்னை இவரே. அதை விட்டு விட்டு விட்டீர்களே!
http://s2.dmcdn.net/CyFTO/1280x720-1NC.jpg
''காவேரியில் தேம்ஸி நதி கலந்துவிட்டது//
மிக அபூர்வமான பாடலை நினைவு கூர்ந்து நெஞ்சாங்கூட்டில் குந்தி விட்டீர்கள்.
சீர்காழியின் தழுதழுத்த குரலில் 'கருநீல மலை மேலே தாய் இருந்தாள்' ஒரு உணர்ச்சிப் பிரவாகம். மெய் சிலிர்த்துவிடும்.
http://s2.dmcdn.net/CyFQU/1280x720-rmq.jpg
அதே போல பி.வசந்தாவின் 'ஏசுநாதர் பேசினால்' கற்கண்டு. அந்தக் குரலில் இருக்கும் வசியத்தை, வசீகரத்தை கவனித்தீர்களா?
சி.க,
http://i.ytimg.com/vi/uLAUC4nff6c/hqdefault.jpg
நிஜமாகவே அற்புத படத்தை நினைவூட்டி அடுத்த பாகத்தை தொடக்க ஸ்ட்ராங் பவுண்டேஷன் போட்டு விட்டீர்கள். என் மனமார்ந்த நன்றி. ரசித்து சுவைத்'தேன்'. இது போன்ற அபூர்வ பதிவுகளுக்கு என் நெஞ்சில் எப்போதும் தனி இடம் உண்டு.
'Ballad of a soldier' படத்திலிருந்து ஒரு காட்சி.
http://www.mattfind.com/12345673215-...458_942382.jpg
http://wfiles.brothersoft.com/b/ball...-1600x1200.jpg